எலுமிச்சைப்பழமும்,அவற்றின் தத்துவமும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:28 | Best Blogger Tips

மனித வாழ்வில் எலுமிச்சைப்பழம் ஒரு இன்றியமையாத பழம் ஆகும்.வாழ்க்கையில் நமக்கு பல வழிகளில் பயன்படுகிறது.பெரிய மனிதர்களுக்கும்,சான்றோர்களுக்கும் எலுமிச்சைப்பழம் கொடுத்து வரவேற்பது பெரிய கவுரமாக மதிக்கபடுகின்றது ஏன் தெரியுமா?

எந்த ஒரு பழமும் அதன் பருவத்தின் ஒவ்வொரு நிலைகளிலும், ஒவ்வொரு சுவை இருக்கும்.உதாரணமாக மாம்பழம் பிஞ்சு பருவத்தில் துவர்க்கும்,காய் பருவத்தில் புளிக்கும்,பழத்தில் இனிக்கும்.ஆனால் எலுமிச்சை பிஞ்சு பருவத்திலும் புளிக்கும்,காய் பருவத்திலும் புளிக்கும்,பழத்திலும் புளிக்கும்.

அது போல் மனிதர்களாகிய நாம் வாழ்வின் எந்த நிலையிலும் உயர்ந்தாலும்,தாழ்ந்தாலும் நம்முடைய குணத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது என்பதை உணர்த்தவும்,உணர்ந்து கொள்ளவும் தெய்வத்திற்கும்,பெரிய மனிதர்களுக்கும்,சான்றோர்களுக்கும் எலுமிச்சைப்பழம் வழங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

உதாரண கதை:
ஒரு முனிவர் தனது சீடர்களுடன் ஆற்றில் குளித்துகொண்டிருந்தார்.ஆற்றில் தேள் ஒன்று உயிருக்குபோராடியபடியே தத்தளித்து கொண்டிருந்தது.முனிவர் அவற்றை காப்பாற்றும் எண்ணத்துடன் கையில் எடுக்கும்பொழுது நறுக்கென்று கடித்துவிட்டது வலியை பொறுத்துகொண்டே கரையில் விட்டார்.

மீண்டும் அது ஆற்றில் விழுந்துவிட்டது,மீண்டும் எடுத்து கரையில்விடும்பொழுதும் அவரை கடித்து விட்டது.மீண்டும் தேள் ஆற்றில் விழுந்துவிட்டது,மீண்டும் முனிவர் தேளை காப்பாற்ற போனார்,இந்த நிகழ்வை கவனித்துக்கொண்டிருந்த சீடர்கள்,சுவாமி நீங்கள் ஒவ்வொரு தடவை தேளை காப்பாற்ற முயலும்போது, அந்த தேள் உங்களை காயப்படுத்துகின்றது,ஆனால் அதை பொருட்படுத்தாமல்,தேளை மீண்டும்,மீண்டும் காப்பாற்ற முயலுகின்றீர்கள் ஏன் என வினவினர்.அதற்கு அவர்,கடிப்பது(கொட்டுவது)அதனுடைய குணம்,காப்பாற்றுவது என்னுடைய குணம் எனக்கூறினார்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
எலுமிச்சைப்பழமும்,அவற்றின் தத்துவமும்;
-------------------------------------------------------------