பிரசவம் ஆனா பெண்களுக்கு அதிக பால் சுரக்க பயன் படும் பூண்டு..!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:52 PM | Best Blogger Tips


கைவைத்தியத்துக்கு சிறந்தது பூண்டு. அதன் மருத்துவக்குணங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாலும், நாம் அதை எளிதில் மறந்து விடுவோம்.அதனால்தான் என்னவோ நம் முன்னோர்கள் சமையலில் பூண்டை அதிகம் பயன்படுத்த சொல்லி இருகின்றனர்

பிரசவம் ஆனா பெண்களுக்கு பொதுவாக குழ‌ந்தை பெ‌ற்ற பெ‌ண்க‌ள் ‌தினமு‌ம் ச‌த்தான அதே சமய‌ம் உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் உணவை தே‌ர்வு செ‌ய்து உ‌ண்ண வே‌ண்டு‌ம். குழ‌ந்தை‌க்கு பா‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதா‌ல் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உதவு‌ம் உணவுகளையு‌ம் அ‌திகமாக உ‌ண்ண வே‌ண்டு‌ம்.
அதனால் தான் குழந்தை பிறந்த பின்பு பால் அதிகம் சுரக்க கூடிய உணவு வகைகளை சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவார்கள்.

பால் அதகம் சுரக்க உதவுவதில் தலையான ஒன்று பூண்டு .எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப்பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

சுறா போ‌ன்ற ‌மீ‌ன்களுட‌ன் அ‌திகமாக பூ‌ண்டை போ‌ட்டு பு‌ட்டு செ‌ய்து ‌பி‌ள்ளை பெ‌ற்றவ‌ர்களு‌க்கு‌த் தருவா‌ர்க‌ள். இதுவு‌ம் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

இதனா‌ல்தா‌ன் ‌பி‌ள்ளை பெ‌‌ற்ற பெ‌ண்களு‌க்கு தலை‌க்கு ஊ‌ற்று‌ம் போது ந‌ல்லெ‌ண்ணையை‌க் கா‌ய்‌ச்‌சி அ‌தி‌ல் பூ‌ண்டு போ‌ட்டு அ‌ந்த எ‌ண்ணெயை தே‌ய்‌த்து உட‌ல் முழுவது‌ம் மசா‌ஜ் செ‌ய்‌கி‌ன்றன‌ர்.பூ‌ண்டி‌ற்கு இ‌த்தகைய மரு‌த்துவ குண‌ம் இரு‌ப்பதா‌ல் ‌பி‌ள்ளை பெ‌ற்ற பெ‌ண்க‌ள் பூ‌ண்டினை ஏராளமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது.

வாயு தொல்லை இருப்பின் பாலுடன் பூண்டை நன்கு வேக வைத்து நக்கு மசித்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கிவிடும்.நீங்க பூண்டை பயன் படுத்த தவங்களா இருந்தால் இன்றிலிருந்து பூண்டை பயன்படுத்துங்க

மருத்துவக் குணங்கள்:

குரல் தெளிவு, உடற்சக்தி, சிறு நீரகம் ஜீரணம் மேம்படும்.
கொழுப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவசியம் பூண்டுச் சாறை குடிக்க வேண்டும்.

இருதய அடைப்பு விலகும், மூட்டுவலி, முடக்கு வாதம் சரியாகும்.
பூண்டு சாறை தெளித்தால் அந்த இடத்திற்கு பாம்புகள் வராது.
குடல் பூச்சிகள், ஆஸ்துமா, மூக்கடைப்பு விலகும், பக்க வாதம் சரியாகும்.


நம்முடைய சமையலறையில் இருக்கும் மருத்துவ உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியப்பங்கு வகிப்பது வெள்ளைப் பூண்டு. தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் கண்டிப்பாக பூண்டுக்கு இடம் உண்டு. மருத்துவ குணம் வாய்ந்த பூண்டின் மகத்துவத்தை இங்கே பார்ப்போம்.

* பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.

* பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம.

* பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.

* வெள்ளைப்பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும்.

* பூண்டை சாப்பிட்டவுடன் கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும்.

* சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்த சூப் கொடுங்கள்.

* வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம்.

*இருதயத்தை இதமாகக் காப்பது பூண்டுச் சாறு. எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைக்கும். குரல் வளம் தரும். பசித்தன்மை, கூட்டி பசியின்மையை விரட்டும்.

'டீன் ஏஜ்' பெண்ணுக்கு பிடித்த அப்பாவா நீங்கள்?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:15 PM | Best Blogger Tips




பதின் பருவம் என்பது பலவித குழப்பங்களைக் கொண்டது. இந்த காலகட்டத்தை உடைய பெண் குழந்தைகள் தங்களின் உடல் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களினால் பலவித சிக்கல்களை சந்திக்கின்றனர். பதின்பருவ பிள்ளைகளின் கோபத்திற்கும், எரிச்சலுக்கும் அர்த்தம் புரியாமல் பெற்றோர்கள் தவித்துதான் போகின்றனர்

Description: http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/424573_281755045226121_100001748841680_630468_828056958_n.jpg

டீன் ஏஜ் பருவ காலக்கட்டத்தில் பெண் குழந்தைகள் வேகமாக வளர்கின்றனர் இவ்வளர்ச்சி உடல், அறிவு மற்றும் உணர்வு ரீதியானது. இந்த வயதில் பெண் பெரியவள் ஆகிவிடுகிறாள். இந்த சூழ்நிலையில் தந்தைபெண் உறவு என்பது சற்று சிரமமான சிக்கலை ஏற்படுத்தும். தந்தையர்கள் தங்களின் பெண்களை குழந்தையாகவே பாவித்துக்கொண்டு ஆளுமையைத் திணிப்பது பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
மகளை புரிந்து கொள்ளுங்கள்

எந்தப் பெண் குழந்தையும் சிறிய வயதில் அப்பா செல்லமாக இருப்பார்கள். இந்த பாசவலையில் பழகிப்போன அப்பா, திடீரென டீன் ஏஜ்ஜில் மகள் தன்னைவிட்டு விலகத் தொடங்குவதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாதுதான்.

தாய் - மகள் முறை என்பது அப்பா - மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது. தாயுடன் ஒட்டுதலாக இருக்கும் மகள் தன்னிடம் விலகி இருக்கிறாளே என்ற ஆதங்கம் எந்த ஒரு தகப்பனுக்கும் ஏற்படத்தான் செய்யும். இந்த சூழ்நிலையில் "என் விருப்பப்படிதான் நடப்பேன்! எனக்கு என்ன பிடிக்குமோ அதை தான் செய்வேன்! எனக்கு எதை படிக்க வேண்டும் என்று தோணுகிறதோ அதைத்தான் படிப்பேன்' என்று அவள் அடம்பிடிக்கும் போது, குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனையும் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில் நடக்கின்ற நிகழ்வுகளின் விளைவுகள் நிச்சயம் குடும்பத்தையும் கலங்கடித்துவிடத்தான் செய்யும்.

எனவே, ஒரு டீன்ஏஜ் மகளுக்கு அப்பாவாக இருக்கும் ஒருத்தர் தன்னுடைய அதிகாரத்தை தளர்த்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு அப்பா என்ற ஸ்தானத்திலிருந்து கீழ் இறங்கி தோழனாக நடந்து கொள்ள வேண்டும்.

அறிவுரைகள் வேண்டாம்

டீன் ஏஜ்ஜில் இருக்கும் மகள் அம்மாவைத் தவிர ஏறக்குறைய எல்லா உறவுமுறையினரிடமிருந்தும் தனித்து இருக்கவே விரும்புவாள்.அதை அப்பா என்பவர் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து அறிவுரைகள், சொல்வதும், அதை செய்; இதை செய்யாதே என அதிகாரம் செய்யும் போதும் அது அவர்களின் மனதை, தன்னம்பிக்கையை, அவர்களுக்குண்டான ஆளுமையை தகர்க்கின்றன. எனவே பதின் பருவ காலக்கட்டத்தில் உங்கள் மகளுக்காக சில விஷயங்களை விட்டுத்தான் கொடுக்க வேண்டியிருக்கும். தந்தையர் தங்களின் அணுகு முறையை மாற்றித்தான் கொள்ள வேண்டும்.

சந்தேகம் வேண்டாமே

பதின் பருவத்தில் பெண்கள் தன்னுடைய அந்தரங்க விஷயங்களை கட்டிக் காப்பவளாகவும், அதை வெளியில் சொல்ல விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். உடல் வளர்ச்சி மாற்றம், மனதில் எழும் மனவெழுச்சிகளுக்கு அர்த்தம் புரியாமல் இத்தகைய நிலையில் இதை வெளிப்படுத்தாமல் இருக்க, தனிமையை தேடுவாள். அப்பாவிடம் விலகி இருப்பதையே விரும்புவாள். அதே சமயம் விலகி இருக்கவும் ஆசைப்படும் அவள் அப்பாவின் பாசத்திற்காகவும் ஏங்கிக்கொண்டிருப்பாள்.

மகளின் குழப்பங்களையும், சந்தேகங்களையும், மனபோராட்டங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். உடலிலும் மனதிலும் எழும் மாற்றங்கள் குறித்து அவளுக்கு நல்ல தோழமையோடு இருந்து அறிவுறுத்தல் வேண்டும்.

அதை விடுத்து அவள் எங்கே போகிறாள்? யாரோடு பேசுகிறாள் என்றெல்லாம் துப்பறிய தொடங்கினால் பெற்றோர் மீது கோபப்பட ஆரம்பித்துவிடுவாள்.

பக்குவமாக கையாளுங்கள்

நல்லது, கெட்டதுகளை அன்புடன் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களின் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, அதே சமயம் அவர்களின் நடவடிக்கைகளில் மேற்பார்வையிட்டு, எந்த விஷயத்தையும் எதிர்க்கொள்ள வேண்டிய மன பக்குவத்தை அவர்களுக்குத் தேவைப்படும் போது தந்து, வழிகாட்டுதலோடு இருந்தால், மகள் அப்பா உறவுமுறை குழப்பத்தை ஏற்படுத்தாது. அச்சத்தை உருவாக்காது.

குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமான தலைமுறை இடைவெளியை மேலும் நீட்டிவிடும் வேளையை இன்றை அவசர உலகமும், மேற்கத்திய பழக்கங்களும், அதிவேக தகவல் தொழில் நுட்பங்களும் கச்சிதமாக செய்து வருகின்றன. இந்த சூழலில் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் சில சமயங்களில் பிடிக்காதவர்களாகிவிடுகின்றனர். எனவே, அப்பாக்கள் குடும்பத்தில் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்தும் செயலை மிக புத்திசாலித்தனமாக கையாள வேண்டும்.

பதின் பருவத்தில் முக்கிய மான மாற்றம் மொட்டு விடும் பாலியல் உணர்வு. இந்த இனம் புரியாத உணர்வை அவர்கள் முழுவதும் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவார்கள். இதை கூர்ந்து கவனிக்கும் அப்பாக்கள் சட்டென்று அறிவுரைகளை அள்ளிவிடத்தான் நினைப்பார்கள். ஆனால், அப்படி செய்துவிடாதீர்கள்.

இந்த சூழ்நிலையில் அப்பா என்பவர் மகளுக்கு ரொம்ப அனுசரனையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அனைத்திற்கும் ஒரு பொது வரையறைகளை வைத்துக் கொண்டு, பதின் பருவ மகளிடம் அன்பாக நடந்து கொண்டால் எந்த அப்பாவுக்கும் பெண்ணைப் பிடிக்கும். எல்லாப் பெண்களுக்கும் அப்பாவையும் பிடிக்கும்.
 ( நெட்டில் சுட்டது)