பொறுமையைவிட மேலான

மணக்கால் அய்யம்பேட்டை | 12:39 PM | Best Blogger Tips

 



நமக்கு தீமை செய்தவர்களை பழி வாங்க வேண்டும் என்று நினைக்காமல் அவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம் படைத்தவர்களுக்கு, இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப் பார்க்காது என்று அண்மையில் வந்த ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது...

 

மனிதர்களின் மனதிற்கும், உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்...

 

இருநூறு பேர் பங்கேற்ற அந்த ஆய்வில் நூறு பேரிடம் உங்களுக்கு கெடுதல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்...?, அவரை எப்படி பழி வாங்குவது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது...

 

மீதமுள்ள நூறு பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித்து மறந்து விடுவது போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது...

 

ஐந்து நிமிடம் கழித்து அதே நிகழ்வுகளை மீண்டும் நினைத்து பார்க்க வைத்து அவர்களது குருதியோட்டம் (ரத்த அழுத்தம்) சோதனை செய்யப்பட்டது...

 

நண்பரின் தவறுக்கு ஆத்திரப்பட்ட நூறு பேரின் குருதியோட்டம் மிக அதிகமாக வேகமாக பாய்ந்தது...

 


மறப்போம், மன்னிப்போம் என்ற மன்னிக்கும் குணம் கொண்ட நூறு பேரின் குருதியோட்டம் சீராக இருந்ததும் தெரிய வந்தது...

 

இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த குழுவின் தலைமை பேராசிரியர் டாக்டர் பிரிட்டா லார்சன்,

 

மன்னிக்கும் மனம் இல்லாதவர்களின் குருதியோட்டம் ஆத்திரப்படும்போது மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பைச் சந்திக்கிறது.

 

அதனால், அவர்கள் இரத்தக் கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம்.

 

அதேநேரம் மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதய துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு  குருதியோட்டம் அதிகரித்து அது வலுவடைந்ததும் சோதனையில் தெரிந்தது...

 

இது நீண்ட கால அடிப்படையில் அவர்களது ஒட்டு மொத்த உடல் நலனுக்கு நன்மை தரும்'' என்று கூறியுள்ளார்...

 


இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளியாகும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது...

 

இதைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ''எண்ணம் போல் வாழ்வு'' என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்...

 

மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும்...

 

மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும்போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது...

 

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளை விடும்...!

 

மன்னிப்பு!, வாழ்க்கையை உருவாக்குகிறது.. மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது...!

 

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள். மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்...!!

 

வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம். எனவே!, நமக்கு தீமை செய்தவர்களுக்கும் கூட நன்மையே நினையுங்கள். நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்...!!!

 

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

 நன்றி இணையம்

பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்...!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:34 PM | Best Blogger Tips

 




🦜 இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை.


🦜 இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை.


🦜 தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன.


🦜 மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும், தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை.



🦜 இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.


🦜 தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை. 


🦜 தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை.


🦜 நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது.


🦜 தன் குழந்தைகளுக்கு பரிபூரணமான அன்பை கொடுத்து வளர்க்கின்றன.



🦜 கடுமையான உழைப்பாளிகளாக இருப்பதால், இதயம், கல்லீரல், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை.


🦜 இயற்கைக்கு எதிராக ஒருபோதும் செயலாற்றுவதில்லை. தனது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இயற்கையிலிருந்து பெற்று கொள்கின்றன.



🦜 தனது கூடு மற்றும் சுற்று சூழல்களை அனுசரனையோடு பாதுகாக்கின்றன.


🦜 ஒருபோதும் தனது மொழியினை மாற்றி வேற்று மொழி கலந்து பேசுவதில்லை.



🦜 இதில் சில படிப்பினைகளையாவது நாம் பாடமாக எடுத்துக்கொண்டால் வாழ்வு சிறப்பது திண்ணம்.

😊😊

நன்றி இணையம்

தியாக வாழ்க்கை வாழ்ந்த நீதிமான்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:08 PM | Best Blogger Tips

 



கண்ணில்பட்ட பதிவு



உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மெகர் சந்த் மகாஜன் டார்ஜிலிங் சுற்றுலா போனார். அங்கே அவர் கார் ஓட்டிச் சென்றபோது போக்குவரத்து விதியை மீறினார்.

தவறை ஏற்று அபராதம் கட்டுவதாகச் சொன்ன மகாஜன், மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போய் நின்றார்.

``உங்கள் பெயர் என்ன?'' என்று மாஜிஸ்திரேட் கேட்க... ``மகாஜன்'' என்றார்.

'``என்ன வேலை பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டபோது, ``சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கிறேன்'' என்று தயங்காமல் சொன்னார்.

உடனே அந்த மாஜிஸ்திரேட்

``மை லார்டு'' எனப் பதறி எழுந்து மகாஜனை வணங்கினார்.

``உட்காருங்கள். உங்கள் டூட்டியைச் செய்யுங்கள்'' என்றார் மகாஜன்.

``முதல்முறை தவறு செய்கிறவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு உண்டு.

அதனால், உங்களை விடுவிக்கிறேன்'' என்றார் அந்த மாஜிஸ்திரேட்.

மகாஜன் வெளியில் வந்தார்!

மெகர் சந்த் மகாஜன்

* சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.சத்தியதேவ் ஒரு நாள்கூட விடுமுறை எடுத்ததே இல்லை.

அவர் மகனுக்கு வீட்டில் வைத்துத்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட்டது. அந்தத் திருமணத்துக்காக வந்த, சக நீதிபதிகள் எல்லாம் அரை நாள் விடுமுறை போட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், சத்தியதேவ் தன் மகனின் திருமணம் முடிந்த கையோடு கோர்ட்டுக்குக் கிளம்பிப் போனார்.

அவருக்குத் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு வாய்க்கவில்லை.

தலைமை நீதிபதி 6 வாரத்துக்கு மேல் விடுமுறை எடுத்தால்

`பொறுப்பு தலைமை நீதிபதிநியமிக்கப்படுவது வழக்கம்.



அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ஆனந்த், பொறுப்பு தலைமை நீதிபதியாக சத்தியதேவ் சில காலம் இருக்க வேண்டும் என்பதற்காகவே

6 வாரம் விடுமுறை எடுத்தார்.

அந்த அளவுக்கு மதிக்கப்பட்டவர் சத்தியதேவ்!

* குரு பிரசன்ன சிங்.

மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர்.

``பள்ளி ஆவணத்தில் சொல்லப்பட்ட வயதுக்கும் உண்மையான வயதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உண்மையான வயது அடிப்படையில் எனக்கு ரிட்டையர்மென்ட் தேதி வந்துவிட்டது.

அதனால், ஓய்வு பெறுகிறேன்'' எனச் சொல்லிக் கிளம்பிவிட்டார்.

குரு பிரசன்ன சிங் உண்மையை மறைத்திருந்தால் கூடுதலாக ஒன்றரை ஆண்டு இருந்து,

பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகி இருப்பார். மனசாட்சிக்குப் பயந்து நேர்மையோடு நடந்துகொண்ட புண்ணியவான்!

* நீதிபதி கே.பி.சுப்பிரமணியம் தந்தை கே.எஸ்.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார்.

சென்னை சென்ட்ரல் அருகே அவர் ஓட்டி வந்த கார் சிக்னலைத் தாண்டி வந்துவிட்டது.

அந்தக் காரை மடக்கி அருகில் இருந்த நடமாடும் நீதிமன்றத்தில் பழனிசாமியை நிறுத்தினார்கள்.

இவரைப் பார்த்ததும் மாஜிஸ்திரேட் அரண்டு போனார். ``அபராதம் கட்டத் தேவையில்லை'' என மாஜிஸ்திரேட் சொல்லியும்

பத்து ரூபாய் அபராதத்தைக் கட்டிவிட்டுத்தான் போனார் நீதிபதி பழனிசாமி.

* மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியின் தியாகம் இது!

ஒரு வழக்குக்குத் தீர்ப்பு தேதி குறித்துவிட்டார் அந்த நீதிபதி.

அன்றைய தினம் கோர்ட்டுக்கு வந்த நீதிபதியின் முன் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். `

`என்ன விவரம்?'' என்று அவர் கேட்க... ``இன்று எங்களது வழக்குக்குத் தீர்ப்புச் சொல்வதாகச் சொல்லி இருந்தீர்கள்'' என்று

வழக்கறிஞர்கள் சொன்னார்கள்.

உடனே கேஸ் கட்டை எடுத்துப் பார்த்தவர். ``இதோ வருகிறேன்'' எனச் சொல்லி அறைக்குப் போனார். தன் மறதிக்கான தண்டனையாக,

ராஜினாமா கடிதத்தை எழுதித் தந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்.

* சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுப்பிரமணியம்.

அவர் முன்பு வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கின் ஆவணங்களை அவரிடம் நீட்டியபோது அதைப் படிக்கச் சிரமப்பட்டார்

சுப்பிரமணியம்.

இன்னொரு கண்ணாடியை மாற்றிப் போட்டுப் படிக்க முயன்றும் முடியவில்லை.

பெஞ்ச் கிளார்க்கிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். படித்துக் காட்டப்பட்டது. வழக்கறிஞரும் அதைப் படித்தார்.

என்ன நினைத்தாரோ உடனே சேம்பருக்குப் போன சுப்பிரமணியம்,

ஆளுநருக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். ஆம். `கண் பார்வை மங்கிய பிறகு பணியில் இருப்பதில் அர்த்தம் இல்லைஎனப் பதவியை உதறியவர் சுப்பிரமணியம்.

- இப்படி தியாக வாழ்க்கை வாழ்ந்த நீதிமான்கள் நிறைய பேர் நீதித்துறையில் நிரம்பியிருக்கிறார்கள்.

அன்றும் இருந்தார்கள்.

இன்றும் இருக்கிறார்கள்.

ஜனாதிபதிக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய பதவி.


நன்றி இணையம்