காத்திருப்பு தவிர்க்க இயலாதது எனும்போது

மணக்கால் அய்யம்பேட்டை | 12:44 PM | Best Blogger Tips
Image result for waiting bus image tamilnadu

காத்திருத்தல் தெரியுமோ? பஸ், ரயில், விமானம், காதலன், காதலி, குழாயில் தண்ணீர், மின்சாரம் என்று - விரும்புகிறோமோ இல்லையோ - நாம் வாழ்க்கையில் எதற்காவது காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்படிக் காத்திருக்கும் போது, என்னவோ காலங்காலமாய்க் காத்திருப்பது போன்று ஓர் உணர்வும் ஆயாசமும் எரிச்சலும் ஏற்படுவதை உணர்ந்திருக்கிறீர்களா?
Image result for waiting doctor image tamilnadu
பஸ்ஸிற்காகக் காத்திருந்தால் அந்த பஸ் வரவே வராது போலிருக்கும். மருத்துவர் அறையில் காத்திருந்தால் நம்மைத் தவிர நமக்குப் பிறகு வந்தவர்களையெல்லாம் அந்த நர்ஸ் முதலில் அழைப்பது போலிருக்கும்.

சரி பஸ்தான் லேட்டாகிறதே; அந்த எதிர்கடையில் ஒரு டீ குடித்துவிட்டு வரலாம் என்று சென்றிருப்பீர்கள்; சரியாக அப்பொழுதுதான் பஸ் வந்து சேரும். குடித்தும் குடிக்காமலும் அரக்கப் பரக்க ஓடிவர வேண்டியதுதான்.

தவிர,

ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல்,..ஒரு மனிதர்,.. பொருத்தமான உத்தியோகம்,... அனைத்தும் பொருந்திப்போகும் வாழ்க்கைத் துணை..., என்று காத்திருப்புப் பட்டியல் நீளம். இவையெல்லாம் வந்தடைய நீண்ட காலமாகலாம், அல்லது சில வராமலேயே போகலாம்.

ஆனால் இவற்றிற்காக அல்லது இவற்றில் ஏதோ ஒன்றிற்காக நாம் காத்திருக்கும்போது. அந்தத் தாமதத்தினால் மனம் பாதிப்படைகிறது. அதன் எதிர்வினை, எரிச்சல், கோபம் என்று வெளிப்பட்டு மேலும் இழுத்துப் போட்டுக் கொள்ளும் அவஸ்தை.

எனவே, காத்திருப்பு தவிர்க்க இயலாதது எனும்போது ஏன் மனதை வருத்திக் கொள்ள வேண்டும்? ”உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணாஎன்று இருக்கும் மகிழ்ச்சியையும் ஏன் தொலைக்க வேண்டும்?

சரி - அதற்கு என்ன செய்வது?

*காத்திருக்கும் நேரத்தில் வாழுங்கள்.*

அப்படியென்றால்?

காத்திருக்கும்போது ஸ்தம்பித்து நின்றுவிடாமல் மற்ற உபயோகமான வேலைகளைச் செய்ய வேண்டுமாம். நிகழ்காலத் தருணத்தைத் தொலைக்காமல் ஆக்கபூர்வ வேலையொன்றில் ஈடுபடும்போது மனதை அது அவஸ்தையிலிருந்து திசை திருப்ப உதவிடும் என்கிறார்கள்.

மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு ஒரு விஷயத்திற்குக் காத்திருக்காமல் நடைபெறவேண்டிய அடுத்த வேலைகளை இயல்பாய்த் தொடருவது உத்தமம். வாசிக்க வாய்ப்பில்லாமல் இருக்கும் சுவாரஸ்யப் புத்தகத்தைக் கையுடன் எடுத்துச் சென்றிருந்தால் மருத்துவருக்காகக் காத்திருக்கும் நேரத்தில் படிக்க ஆரம்பியுங்கள் போதும். நேரம் சுருங்கிப்போய் நீங்கள் உடனே உள்ளே அழைக்கப்பட்டிருப்பீர்கள்.

பொருத்தமான வேலை கதவைத் தட்டி வந்தால்தான் ஆச்சு என்று அடம்பிடித்துக் கொண்டு வீட்டில் சோபாவில் குந்திக் கொண்டிருக்காமல், அத்தகைய வேலைக்கு முயன்று கொண்டே வேறு உத்தியோகம் பார்க்கலாம். இல்லை அப்பா சம்பாதித்து வைத்தது ஏகத்துக்கும் இருக்கிறது, உட்கார்ந்து சாப்பிட்டால் கரையாது என்ற பொருளாதாரத் தன்னிறைவு இருந்தால், ஏதாவது பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸியை அழைத்து உங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை கண்டுபிடிக்கச சொல்லி அதை மெருகூட்டி வெளிப்படுத்துங்கள். நல்லதொரு சிற்பி, தொழிலதிபர், என்று யாராவது வெளிப்படுவர்.

காத்திருக்கும் ஒரு செயலிலிருந்து உங்களது அடிமைத்தளையை நீக்கிக் கொண்டு வேறு அலுவலில் ஈடுபட்டால் நிகழ்காலத் தருணம் எளிதாகி மனம் சாந்தியடையும். 



நன்றி இணையம்

எல்லாம் மனதில் இருக்கிறது

மணக்கால் அய்யம்பேட்டை | 12:31 PM | Best Blogger Tips
Image result for auto driver smile image

பணம் மட்டுமே மன மகிழ்வன்று. ஏகப்பட்ட பணம், செல்வம், வசதி என்று அனைத்தும் இருந்தும் மன உளைச்சலுடன் வாழ்பவர்கள் பலர்; அடுத்த வேளை உணவு கேள்விக்குறியாய் உள்ள நிலையிலும் மகிழ்வுடன் வாழ்பவர்களும் பலர்.

ஒரு தொழில் அதிபருக்கு அவரது பிஸினஸில் முக்கியப் பிரச்சனை. அவசரமான மீட்டிங்கிற்காகத் தலைநகருக்குச் சென்றிருந்தார். ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்க ஏற்பாடாகி இருந்தது. 
Image result for auto driver image sleep dream
பிரச்சனையின் மன உளைச்சலாலும் மறுநாள் நடக்கவிருந்த மீட்டிங்கின் சிந்தனையாலும் பலவித குழப்பத்தில் இரவு தூக்கம் வராமல் தம் அறையில் உலாவிக்கொண்டிருந்தவர் சன்னலருகே வந்து நகரை நோட்டமிட கீழே இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் கண்ணில்பட்டது. அங்கே ஓர் ஆட்டோ ஓட்டுநர் சுகமாய்த் தூங்கிக் கொண்டிருந்தார். தூக்கத்தில் நல்ல கனவு போலிருக்கிறது. அவரது முகமெல்லாம் புன்னகை. பர்க்கப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது தொழில் அதிபருக்கு.

மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பும்போது அந்த ஸ்டாண்டில் அதே டிரைவர் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை அணுகித் தமது சந்தேகத்தைக் கேட்டார்.

அதெப்படி, சாலை இரைச்சல், கொசுத் தொல்லை, பண வசதி குறைவான தொழில் என்றிருக்கும்போது ஆனந்தமாய் உன்னால் தூங்க முடிகிறது? கனவில் என்ன நடிகையா? தூங்கும் முகத்தில் சிரிப்பையும் பார்த்தேன்.

ஓ அதுவா ஸார்? இந்த மாதிரிப் பெரிய ஹோட்டலில் என் வசதிக்குத் தங்க முடியுமா? கனவில் நான் இந்த ஹோட்டலில் தங்கியிருப்பது போலவும் அதோ போகிறானே அந்தச் சிப்பந்தி எனக்குப் பணிவிடை செய்வது போலவும் அடிக்கடி கனவு வரும். மத்தபடி தினமும் சம்பாதிக்கிற பணத்துல சந்தோஷமா இருக்கேன் ஸார்.

எல்லாம் மனதில் இருக்கிறது.

நன்றி இணையம்


காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் குடியரசு தினத்தன்று இந்திய தேசிய கோடி ஏற்றுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:24 PM | Best Blogger Tips
Image may contain: 2 people

1992 ஆம் ஆண்டு காஷ்மீரில் பயங்கர வாதிகள் ஒரு எச்சரிக்கை விடுத்தார்கள்..தாய்ப்பால் குடித்த இந்தியனாக இருந்தால் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் குடியரசு தினத்தன்று இந்திய தேசிய கோடி ஏற்றுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார்கள் பயங்கர வாதிகள்.....

அன்று பாஜகவின் அகில இந்திய தலைவராக இருந்தவர் டாக்டர்.முரளி மனோகர் ஜோஷி. அந்த சவாலை ஏற்றார். 

நாடு முழுவதும் பாஜக வின் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஜனவரி 24 ஆம் தேதி ஜம்முவின் கூடினார்கள்...

கூடிய அத்தனை லட்சம் பேரும் அவரவர் மாவட்டத்திலேயே ஒரு படிவத்தில் கையெழுத்து போட்டுவிட்டு தான் வந்தார்கள்...அந்த படிவத்தின் வாசகங்கள் என்ன தெரியுமா ?

" எனக்கு காஷ்மீர் பிரச்சனை என்ன என்று நன்றாக தெரியும்.அங்கே பயங்கரவாதிகள் மூலம் என்னுடைய உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று தெரிந்தே நான் ஸ்ரீநகருக்கு தேசிய கோடி ஏற்றும் உன்னதமான நிகழ்ச்சிக்கு செல்கிறேன்" என்று படிவத்தின் வாசகம்..

அதிலே கையெழுத்து இட்டுவிட்டு உயிருக்கு ஆபத்து என்ற போதும் கூடிய கூட்டம் பல லட்சம்..

26 ஜனவரி 1992 சொல்லிய படியே காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரின் லால் சோக் மைதானத்தில் பயங்கரவாதிகளின் ராக்கெட் லாஞ்சர்ஸ் பரந்த நிலையிலும் நம் பாரத நாட்டின் பெருமைக்குரிய தேசிய கோடியை ஏறி பயங்கரவாதிகளின் மிரட்டலை முறியடித்தார்....

இந்த "ஒற்றுமை யாத்திரையும்" பொறுப்பாளராக இருந்து வெற்றிகரமாக நடத்தியவர் அன்றைய அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர்
"நரேந்திர மோடிஜி"

கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி 1992 ஸ்ரீநகர் லாலசோக் மைதானத்தில் பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கிடையே நமது பெருமை மிக்க தேசியக்கொடியை தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஏற்றிய பொது எடுத்தது...
பயங்கரவாதிகளுக்கு தண்ணி கட்டிய எங்கள் தலைவர் கட்டுமரங்களையும் கள்ள தோணிகளையும் பார்த்து கவலை படுவார்...?

பாரத் மாதாகி ஜெய்.

நன்றி இணையம்


மணக்கால் அய்யம்பேட்டை | 10:49 AM | Best Blogger Tips
Image result for pon manickavel

இந்திய நீதித்துறை வரலாற்றில்
இதுவரை இடம்பெறாத புதிய தீர்ப்பை
சென்னை உயர் நீதிமன்றம்
வழங்கியுள்ளது.

யார் இந்த I. G. திரு.பொன்மாணிக்கவேல் ?
நீதிமன்ற தீர்ப்பு

நிச்சயம் இவரை சிறப்பிக்க 
வழங்கப்பட்டது அல்ல;

ஒரு நாட்டின் கலாச்சாரம், வரலாறு அழிக்கப்படுகின்ற போது,

நீதி தேவதையின் கண்கள்
திறக்கப்பட்டுள்ளன:

மக்களால், மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு
மக்களுக்குத் தீங்கு
விளைவிக்கப்படும் போது,

நீதி தேவன் கண்கள்
திறக்கப்பட்டுள்ளன;

"Coloured exercise " அரசு செய்ததாக
தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

உள்நோக்குடன், சட்ட நுட்பம் புரியாமல்
அல்லது புரிந்தும் அதை மீற நினைத்த
அரசுக்கு சாட்டையடியாய் தீர்ப்பு வரிகள்:

மிருகபலம் உள்ள அரசு இயந்திரம்
ஒரு அரசு ஊழியன் மீது ஏன் இவ்வளவு
ஆக்ரோசமான தாக்குதல் ?

கொள்ளை அடிக்கப்பட்ட சிலைகளை மீட்டதற்கா?
கொள்ளைக்காரர்களைக் கம்பி எண்ண வைத்தமைக்கா?

தமிழர் கலாச்சார சின்னங்கள் அழிவைத்
தடுத்ததற்கா ?

தமிழர்கள் ஏகோபித்த ஆதரவை அள்ளி
வழங்கியதற்கா?

ஏன்? ஏன்? ஏன்?

நீதி தேவன் மயக்கம் , அல்ல
நீதி தேவன் முழக்கம், இது !

நீதி நிலைக்கட்டும் !


நன்றி இணையம்