பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் அழுகையை நிறுத்தவும், அவர்களின் மனதில் தைரியத்தை வளர்க்கும் சில வழிமுறைகளையும்,கோவை அரசு கல்லூரி உளவியல் பேராசிரியர் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார். பள்ளிக்கூடங்கள் திறந்து மூன்று வாரங்களுக்கும் மேலாக ஆன நிலையில் பலரது குழந்தை தினமும் அழுது கொண்டே பள்ளிக்கு செல்கிறது. பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடிக்கிறது.
கோவை அரசு கலைக்கல்லூரி உளவியல்(சைகாலஜி)பேராசிரியர் செல்வராஜூ கூறியதாவது : குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் அழுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மனோதத்துவ காரணங்களே முக்கியமாகும். சிறு குழந்தைகளுக்கு உணவுக்கு அடுத்த முக்கிய தேவை காப்புணர்ச்சியாகும். வீட்டில் பெற்றோருடன் பாதுகாப்பாக இருக்கிறோம் என்னும் உணர்வே காப்புணர்ச்சி ஆகும்.சிறு குழந்தைகளுக்கு தங்கள் வீட்டிலும், சுற்றுப்புறத்தலும் இவ்வுணர்ச்சி ஏற்படுதல் அவசியம். முதன்முதலில் குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிந்து பள்ளிக்கு செல்லும்போது இக்காப்புணர்ச்சி சிறிது பாதிக்கப்படலாம். இது எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி இருக்காது.சற்று அதிக பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளே பள்ளிக்கு நீண்ட நாட்கள் அழுது கொண்டே செல்லும். தீவிர பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகள் மனதில் காரணமற்ற கிலி உருவாகி, பள்ளிக்கு செல்வதை தவிர்க்க முயற்சிக்கும். இக்குழந்தைகள் அடம்பிடித்தல், தூங்கி எழுவதில் காலதாமிப்பை ஏற்படுத்தும். மேலும், இவர்களுக்கு பரந்த வெளியிடங்களை கண்டு இனம்புரியாத பயம் ஏற்படும். பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை பார்த்து கூட பயம் ஏற்படலாம். இதற்கு "அகோரபோபியா' என்று பெயர்.சில குழந்தைகள் சிறிய குடும்ப சூழ்நிலையில் பிறந்து வளர்ந்திருக்கும். இக்குழந்தைகள் கூட்டத்தைப் பார்த்தவுடன் மனதில் பயம் ஏற்பட்டு விடும். பள்ளிக்கூடத்திலும், வகுப்பறைகளிலும் காணப்படும் மாணவர் கூட்டத்தை பார்த்தாலே மனதில் பயம் தோன்றிவிடும். இந்த வகை பயத்துக்கு "டைமோபோபியா' என்று பெயர்.
இதேபோல் ஒரு சில குழந்தைகள் கூட்டுக் குடும்ப சூழ்நிலையில் பிறந்து, பெரிய வீட்டில் விளையாடி மகிழ்ந்து வளர்ந்திருக்கும். இத்தகைய குழந்தைகள் நெருக்கமான சூழலில், சிறிய வகுப்பறைகளை பார்க்கும் போது கூட மனதில் பயம் தோன்றி விடும். இந்த வகை பயத்துக்கு "கிளஸ்ட்ரோபோபியா' எனப் பெயர்.இதுபோன்ற பயம் தோன்றும் போது, சிறு குழந்தைகள் அழும். அந்த இடத்தில் இருந்து விலகி ஓடத்துவங்கும். சில வேளைகளில் எதுவும் செய்யத்தோன்றாமல் செயலற்று ஒரே இடத்தில் நிற்பது உண்டு. மேலும், பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்த பின்னர். மாலையில் குழந்தை அழுவதற்கு காரணம் பரபரப்பான பள்ளிசூழ்நிலை முடிந்து, வீட்டுக்கு வந்தவுடன் அமைதியான சூழ்நிலையில் அதன் மனதில் பயம் தோன்ற ஆரம்பிப்பது தான்.இவர்களிடம் ஏற்படும் தீவிர பயம் சில சமயம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். உடல்நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு ஆகியன ஏற்படலாம். இவற்றை தவிர்க்க குழந்தைகளிடம் பயத்தை குறைக்க பெற்றோரும், ஆசிரியர்களும் ஆவன செய்ய வேண்டும்.இப்பிரச்னைகளை தீர்க்க சில வழிகள்: தொடக்கத்தில் இருந்த பள்ளிக்கூடம் செல்வதை கட்டாயமாக்க வேண்டும். குழந்தை அழுகிறதே என ஓரிரு நாட்கள் விடுமுறை எடுப்பதை தவிர்த்து விட வேண்டும். சிறிது நாட்களில் பழக்கத்தின் காரணமாக குழந்தைகளுக்கு பயம் தானாக குறைந்து விடும்.அழும் குழந்தைகளை ஆசிரியர் தன் அருகில் அமர வைத்து, பாதுகாப்புணர்வை அளிக்க வேண்டும். அன்புடன் கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். ஓரிரு வாரங்கள் பெற்றோர் பொறுமையுடன் குழந்தைகளை கையாள வேண்டும். மற்ற குழந்தைகளின் தைரியமான நடத்தைகளை காண்பித்து விளக்க வேண்டும். பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வராமல், பள்ளி பூங்காவில் சிறிது நேரம் விளையாட வைக்கலாம். இதனால் குழந்தைகளின் பயம் வெகுவாக குறைந்து, அவர்களின் மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் வளரும். இவ்வாறு உளவியல் பேராசிரியர் செல்வராஜூ தெரிவித்துள்ளார்.

நன்றி தினமலர் நாளிதழ்

![அனைவரும் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலம்!
பிச்சாவரம் அலையாத்தி(மாங்குரோவ்) காடுகள்!
பிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது.பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது.[1]
இவ்வூரில் அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும்.
பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வலசையாக வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான (சிற்றினங்கள்) பறவைகள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது
அலையாத்திக் காடு (அல்லது சதுப்புநிலக் காடு, mangrove) என்பது கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் உவர் நீரில் வளரும் மரங்களும் புதர்ச்செடிகளும் உள்ள காடு. இக்காட்டிலுள்ள மரங்கள் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால் இக்காடுகள் அலையாத்திக் காடுகள் எனப்படுகின்றன. நிலமும் கடலும் சேரும் பகுதிகள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும் சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அலையாத்திக் காடுகள் எனப்படுபவை இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இக்காடுகள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
வேறு பெயர்கள்
ஆங்கிலத்தில் இவை மாங்குரோவ் காடுகள் எனப்படுகின்றன. மலாய், எசுப்பானியம், போர்ச், சுவிசு மொழிகள் இணைந்த சிறுமரங்கள் எனப்பொருள்படும் மாங்கு என்ற சொல்லில் இருந்தே மாங்குரோவ் காடுகள் என்ற பெயர் ஏற்பட்டது.
இக்காடுகளுக்கு வெள்ளக்காடு என்றொரு பெயரும் உண்டு.
முல்லையும் மருதமும் நெய்தலும் சந்திக்கின்ற திணை மயக்கமாக சதுப்புநில வனங்கள் திகழ்கின்றன. கண்டல் மரங்கள் இருக்கும் சதுப்பு நிலப்பகுதியை கண்டல் காடுகள் எனவும் சதுப்பளக் காடுகள் எனவும் கூறலாம்.
இந்தியாவில் அலையாத்திக் காடுகள்
கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடு. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகள் ஆகும். கோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள் - இவை தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/s403x403/1003088_577896688927331_1554875184_n.jpg)