பெண்களுக்கான இயற்கை மருத்துவ குறிப்புகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:18 PM | Best Blogger Tips

http://mmimages.maalaimalar.com/Articles/2011/Dec/6764c9f0-a587-49a1-b669-da26ed785694_S_secvpf.gif

இடுப்பு பிடிப்பு
இடுப்புப் பிடித்துக்கொண்டால் உட்காருவதற்கும், எலும்புவதற்கும் கஷ்டமாக இருக்கும். முருங்கைக் கீரையுடன் உப்பைச் சேர்த்து சாறு எடுத்து இடுப்பில் நன்றாகத் தேய்த்தால் இடுப்பு பிடிப்பு விட்டுப் போகும். மூன்று வேலை இதைச் செய்தால் நல்ல குணம் தெரியும்.

வயிற்றுப் பூச்சி
குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் சரியாக சாப்பிட மாட்டார்கள். பூச்சிகளை வெளியேற்ற வேப்பிலையை இடித்துச் சாறு எடுத்து அத்துடன் தேன் கலந்து வேளைக்கு ஒரு ஸ்பூன் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறிவிடும்.

சீதபேதி குணமாக
பசும்பாலை சுண்டக் காய்ச்சி அதில் மூன்று ஸ்பூன் கசகசாவை அரைத்துக் கலந்து மீண்டும் கொதிக்கவிட வேண்டும். இதில் 50 கிராம் நெய் சேர்த்து மூன்று வேலை சாப்பிட்டால் சீதபேதி நின்றுவிடும்.

தலைவலி
இஞ்சிச் சாறு 25 மில்லியுடன் 250 மில்லி பால் கலந்து அடுப்பில் வைத்து நன்றாகத் காய்ச்ச வேண்டும். இதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும். தலைவலிக்கான அறிகுறி இருக்கும் போதே இதைச் சாப்பிடுவதால் முன்கூட்டியே தலைவலி வராமல் தடுக்கலாம்.

வயிற்றுப் போக்கு
வசம்பைத் தீயில் சுட்டு கரியாக்கி தாய்ப்பாலில் இழைத்து குழந்தைகளின் நாக்கில் தடவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு நிற்கும்.

பித்த வெடிப்பு
கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புக்கு கொஞ்சம் விளக்கெண்ணெய் எடுத்துக் கொண்டு அத்துடன் சுண்ணாம்பைச் செர்த்துகுழைக்க வேண்டும். பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் குணமாகி விடும்.

உடல் சூடு தணிய
அதிமதுரம் 25 கிராம் எடுத்துக்கொண்டு வெந்நீர் விட்டு அரைத்துத் தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட உடல் சூடும் தணிந்து விடும். தொடர்ந்து மூன்று நாட்கள் இதை உட்கொள்ள வேண்டும்.

குமட்டல், வாந்தி
1. குமட்டல், வாந்தி, மயக்கம், மசக்கை, குழந்தைகள் வாந்தி இவைகளுக்கு எலுமிச்சப்பழச் சாரும் தேனும் சம அளவு கலந்து சாப்பிட்டால் குணம் காணலாம்.

2. குழந்தைகளுக்கும் 2 கரண்டி சாறு 2 தேன் கலந்து அருந்த வாந்தி நிற்கும்.

3. மசக்கைக்கு 15, 20 நாள் தினம் கொடுக்க மசக்கை நீங்கி உணவருந்தி கர்ப்பிணிகள் உடல் தேறலாம்.

தேன் மருத்துவம்
1. அதிக எடை கொண்டவர்கள் எலுமிச்சை பழச்சாரில் தேன் கலந்து அடிக்கடி குடித்தால் எடை குறையவும்
ஆரோக்கியம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

2. உங்கள் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டதாக இருந்தால், லேசான சுடுநீரில் தேன் கலந்து கொடுத்து தூங்க வையுங்கள். இது குழந்தைகளுக்கு நல்லது.

3. ஒரு துண்டு இஞ்சியை இடித்து தேனில் போட்டு தினமும் பிழிந்து சாப்பிட்டால், குண்டு உடல் குறையும்.

தாய்ப்பால்
1. பசலைக் கீரையைச் சுத்தம் செய்து கைப்பிடி அளவு எடுத்துக் கழுவி அம்மியில்வைத்து அரைத்து ஒரு டம்ளர் பசுவின் பாலில் கலந்து காலையில் மட்டும் ஐந்து நாள் குடித்தால் தாய்ப் பால் சுரக்கும்.

2. சீரகத்தையும், வெல்லத்தையும் சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் பால் பெருகும்.

பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, வாயு உபாதை.
வயிறு வலிக்கு- வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும். இல்லைவெந்தயத்தை வறுத்து பொடிசெய்து ஒரு டம்ளர் மோரில் அரை தேக்கரண்டி வீதம் கலந்து குடிக்கவும்.

வாயு உபாதை- சுக்கு, சோம்பு, வெல்லம் மூன்றையும் கலந்து சாப்பிடவும்.

கடும்சளி இருமலுக்கு- அரை தேக்கரண்டி மிளகாய் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் மிளகு,மஞ்சள்பொடி, கட்கண்டுடன் சேர்த்து வடிகட்டி குடிக்கவும்.

Thanks to FB Karthikeyan Mathan

நட்சத்திர பொதுபலன்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:14 PM | Best Blogger Tips

நட்சத்திரங்களுக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குணம், வலிமை, பெருமை இருக்கிறது. ஆனால் ஒரு ஜாதகரின் செல்வச் சிறப்பு, குண நலன்கள் ஆகியவற்றை நட்சத்திரத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு முடிவு செய்துவிடக்கூடாது.

ஜாதகரின் சிறப்பையும், பெருமையையும், பலன்களையும் நட்சத்திரம், லக்னம் மற்ற கிரகங்களின் தன்மைகள் முதலியவற்றை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். நட்சத்திரங்களின் வலிமை, சிறப்பு முதலியவை பொதுவானதே தவிர தனிப்பட்டது அல்ல.

1. அசுவினியில் பிறந்தவர் கடுமையாக உழைக்கக் கூடியவர். எடுத்துக்கொண்ட வேலையைச் செய்து முடிக்கும் திறமை உடையவர்.

2. பரணி: பெற்றோருக்கு அடங்கி நடப்பார். புகழுடன் விளங்குவார்.

3. கிருத்திகை: திறமையான பேச்சாளர். அதிக முயற்சியின்றியே ஒரு காரியத்தைச் செய்து முடிப்பார்.

4. ரோகினி : தயாள குணம் படைத்தவர். மற்றவர்களுக்கு உதவக் கூடியவர்.

5. மிருகசீரிஷம்: புத்தி சமர்த்தியமுள்ளவர். சுறுசுறுப்பாக எதையும் செய்வார்.

6. திருவாதிரை: பெருந்தன்மையானவர். பணத்தைப் பணம் என்று நினைக்காதவர் .

7. புனர்பூசம்: துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர். விரோதியிடம் கூட அன்பு காட்டுவார்.

8. பூசம்: வாதத் திறமை மிக்கவர். அவர் தொழிலும் வாய் மூலம் பொருளீட்டுவதாகவே இருக்கும்.

9. ஆயில்யம்; எதிரியைக் கண்டு பயப்படமாட்டார். பதவிக்காக எதையும் கொடுக்கத் தயாராக இருப்பார்.

10. மகம்; அடிக்கடி பயணத்தில் பிரியமாக இருப்பார். வீட்டில் விட வெளியிலேயே இவர் மகிழ்ச்சியுடன் பொழுதைப் போக்குவார்.

11. பூரம்; கவிதைகள் புனைவதில் வல்லவர். கற்பனை உலகில் உலாவுபவர்.வெற்றிகளை சந்திக்கக்கூடியவர்.

12. உத்திரம்: சிறிய வயதிலேயே போராட்டங்களை சந்தித்தாலும்,பிறபகுதியில் சுகமுடன் வாழ்வார்.

13. ஹஸ்தம்: பெரியோர்கள், ஆசிரியர் ஆகியோரிடம் பயபக்தியுடன் இருப்பார்.

14. சித்திரை; முன்கோபி. அவரை அடைந்தவரைக் காப்பாற்றத் தயங்காதவர்.

15.சுவாதி:இயற்கயிலேயே ஞானம் கொண்டவர்.நியாயம் பேசுபவர்.நேர்மையான எண்னம் கொண்டவர்.

16. விசாகம்: நேர்மையாளர். நீதிக்குத் தலை வணங்குவார். நீதிபதியாகவும் பதவி வகிக்கத் தகுந்தவர்.

17. அனுஷம்; புகழுக்காக அரும்பாடு படுவார். இவர் செல்வத்தைத் தேடி அலையமாட்டார். இவரைத் தேடி பொன்னும் மணியும் வந்து சேரும்.

18. கேட்டை: ஏற்றமும் இறக்கமும் இவர் வாழ்க்கையில் மிகச் சாதாரணமாக இருக்கும். துன்பம் வந்து பொது இடிந்துபோய் உட்கார்ந்து விடமாட்டார்.

19. மூலம்: இயற்கை ஞானம் கொண்டவர்.போராட்டமான வாழ்வு கிடைக்கும்,நம்ப்[இக்கை துரோகங்களை சந்திப்பார்.நல்ல வாழ்வுடன் பின் வாழ்வில் இருப்பார்.

20. பூராடம்: சிறுவயதிலேயே கஷ்டங்களை அனுபவித்தாலும் பிற்பகுதியில் சிறப்ப்பாக வாழ்வார். இளம் வயதில் காதல் வசப்படுவார்.

21. உத்திராடம்: உற்றார் உறவினருக்கு உதவிபுரிபவர். தன ஸ்நலனைவிடப் பிறர் மகிழ்ச்சியையே பெரிதாக நினைப்பார்.

22. திருவோணம்: மகிழ்ச்சியுடன் இருப்பார். மனம் தளரமாட்டார். சொத்து சுகம் இழந்தாலும் நேர்மை தவறமாட்டார்.

23. அவிட்டம்: இலட்சியத்திற்காக உயிரையும் தியாகம் செய்யத் தயங்காதவர் மானத்தை உயிரினும் மேலாக நினைப்பார்.

24. சதயம்: பொய் பேசாதவர். உயிர்ருக்கு அஞ்சி, தகாத வழியில் போகமாட்டார்.

25. பூரட்டாதி: தன்னைபோலவே எல்லோரும் நியாயமாக இருக்கவேண்டும் என நினைப்பவர். சிறு தவறையும் பொறுக்க மாட்டார்.

26. உத்திரட்டாதி: கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார். விரோதிகளையும் நண்பர்களாக்கும் சிறந்த பண்பாளர்.

27. ரேவதி: சொந்த புத்தியை கொண்டு நடக்கக் கூடியவர்.எதிரிக்கும் உதவும் மனப்பாங்கு உடையவர்.வெளிநாட்டு யோகம் உண்டு.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

சளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:12 PM | Best Blogger Tips

சளித்தொல்லை நீங்க சிறந்த மருந்து இயற்கை மருந்து;-

* எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

* கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.

* கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும். அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல்
தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

* அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும். ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.* எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

* கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து சாப்பிடலாம். சளி, இருமல், தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.

* கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும். அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல்
தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

* அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும். ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
Thanks to FB Karthikeyan Mathan

உலகப் பொன்மொழிகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:08 PM | Best Blogger Tips

1. அன்பின் சக்தி

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும். அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
- இறைவன்

2. அன்பு மயமாக இருங்கள்

அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது. புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார்
- ஓஷோ ரஜனீஷ்

3. மனஉரம் வேண்டும்

கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில் எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடுவான். அவனைத் தனியாகப் போரிடச் சொன்னால் கண்டிப்பாகத் தோற்றுவிடுவான். ஒவ்வொறு தனிமனிதனும் குறிக்கோளை அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும்.
- ஜார்ஜ் எலியட்

4. யோசனை கூறும் தகுதி

யார் யார் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் நமக்கு அறியும் ஆலோசனைகளையும் புகட்ட உரிமை உள்ளவர்களே.
- ஜார்ஜ் எலியட்

5. உறுதி

மனிதன் எதை உறுதியாக நினைக்கிறானோ அதுவாகவே அவன் மாறிவிடுவான்.
- இறைவன்

6. உதவி கிடைக்க

நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.
- ஸ்ரீ அன்னை
உலகப் பொன்மொழிகள் :-

1. அன்பின் சக்தி

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும். அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
 - புனித பைபிள் கொரிந்தியர் 1:13 

2. அன்பு மயமாக இருங்கள்

அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது. புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார்
- ஓஷோ ரஜனீஷ் 

3. மனஉரம் வேண்டும்

கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில் எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடுவான். அவனைத் தனியாகப் போரிடச் சொன்னால் கண்டிப்பாகத் தோற்றுவிடுவான். ஒவ்வொறு தனிமனிதனும் குறிக்கோளை அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும்.
- ஜார்ஜ் எலியட் 

4. யோசனை கூறும் தகுதி

யார் யார் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் நமக்கு அறியும் ஆலோசனைகளையும் புகட்ட உரிமை உள்ளவர்களே.
- ஜார்ஜ் எலியட் 

5. உறுதி

மனிதன் எதை உறுதியாக நினைக்கிறானோ அதுவாகவே அவன் மாறிவிடுவான்.
- புனித பைபிள்

6. உதவி கிடைக்க

நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.
- ஸ்ரீ அன்னை

வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல் !

மணக்கால் அய்யம்பேட்டை | 3:43 PM | Best Blogger Tips
வெளியேற்றலுக்குப் பதிலாக அமுக்கி வைத்தல்

நாம் உண்ணும் உணவு இரத்தமாக மாறி உடலுக்கு வேண்டிய ஊட்டத்தைக் கொடுக்கிறது. உண்ணும் எல்லாப் பொருள்களுமே இரத்தமாக மாறி விடுவதில்லை. உடம்பில் ஊறும் சொ¢மானச் சுரப்பு நீர்களும், புளிமங்களும் அன்னக் குழம்புடன் சேர்ந்து பின்னர், அன்னரசமாகவும் அதிலிருந்து உறிஞ்சப்பட்ட சாரம் இரத்தமாகவும் மாறுகிறது. எஞ்சிய பொருள்கள் வேண்டாதவையாக பெருங்குடல் வழியாக வெளித்தள்ளப்படுகின்றன. இப்பொருள்கள் ஐவகை மலங்களாக அதாவது கா¢யமிலவாயு, வியர்வை, சிறுநீர், மலம், கபம் என வெவ்வேறு உறுப்புகளினால் வெளியேற்றப்படுகின்றன. இந்த வேலை அவ்வப்போது நடைபெற்றால் பரவாயில்லை. ஆனால், நாகா£க 
வாழ்வில் ஈடுபட்ட மனிதர்கள் பலர் இதனைக் காலாகாலத்தில் செய்வதில்லை. தடைபட்ட மலம் உள்ளே தங்கி நிற்கின்றது. உடலுள் உறையும் பிராணசக்தி காலங்கடந்து உடம்பில் நிற்கும் கழிவுப்பொருள்களை வெளித்தள்ளும் இயக்கமே நோய் எனப்படுகிறதென்று இயற்கை மருத்துவர்கள் நம்புகின்றார்கள்.

ஆதலால்தான் இவர்கள் நோயை நண்பனாகக் கருதுகின்றார்கள். நோய்க்கு இவர்கள் பயப்படுவதில்லை. தோன்றும் அறிகுறிகளைக் கண்டு அஞ்சுவதில்லை. காரணங்களைக் கண்டுகொண்டு அந்நியப் பொருள்கள் அதாவது உடற்கட்டுமானத்துக்க வேண்டாத உள்ளேயுள்ள பொருள்களை வெளியேற்ற உதவுகின்றனர்.

நவீனமுறை பயின்ற மருத்துவர்கள் எளிய இயற்கை மருத்துவச் சிகிச்சைகளைக் கையானாது அறிகுறிகளையே நோய் என்று நினைத்து அவற்றிற்குப் பா¢காரம் காண முயலுகின்றனர். அவர்கள் கையாளும் பா¢காரங்கள் மலத்தை வெளியேற்றாமல் உள்ளே அமுக்கி வைக்கவே செய்கின்றன. இதனை நவீன மருத்துவர்கள் ஒப்புக் 
கொள்வதில்லை. தங்களுடைய மருத்துவமும் மலத்தை வெளியேற்றவே செய்கிறதென்று கூறுகின்றனர்.

ஆனால் உண்மை என்ன?

சளி, இருமல், கோழை முதலிய நோய்க்குறிகள் நீங்க, சாப்பிடும் மருந்துகள் ஒவ்வொன்றிலும் அபின், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கலந்திருப்பது வெள்ளிடைமலை. இவை மலத்தை நீக்குவதற்குப் பதிலாக மலம்தோன்றும் இடங்களிலுள்ள ஜவ்வு படலத்தையும் நரம்புகளையும் தளரச்செய்து செயலற்றவைகளாக்கி, ஸ்தம்பிக்க வைத்து விடுகின்றன. உடனடியாகக் குணம் இருப்பது போல் தோன்றுகின்றது. உண்மையில் நடப்பது வெளித்தள்ளும் ஆற்றல் குறைந்து, மருந்தின் வேகத்தால் மலங்கள் உள்ளொடுக்கி உயிரணுக்களிடையே பதுங்கிக் கொள்கின்றன. இதே போல் பாதரசம், ஈயம், லவங்கம், துத்தநாகம் போன்ற மருந்துகளிலுள்ள விஷம் உள்ளுடம்பிலுள்ள இயக்கங்களைத் தடைசெய்து அல்லது மிகவேகமாகத் தூண்டி மல வெளியேற்றலுக்குத் தடையாகவே வேலை செய்கின்றன. இத்தகைய சிகிச்சைகள் நடைபெறும் பொழுதெல்லாம் தற்காலிகச் சுகம் கிடைப்பினும், மருந்தின் விஷமும் மலத்தின் விஷமும் கலந்து புதிய புதிய நோய்களாக உருவெடுகின்றன.

ஆஸ்த்மா, இதயநோய், புற்றுநோய், கண்டமாலை, மேகநோய், நமட்டுச்சொறி முதலியவை தோன்றி மனிதர்களை அல்லற்படுத்துகின்றன. இத்தகைய நோய்களை நவீன மூலமும் குணப்படுத்த முயலுகிறது. ஆனால் இவை உருமாறி மறுபடியும் மறுபடியும் வந்து தொலைகின்றன. டாக்டர்களைக் கேட்டால் "ஆமாம், இவையெல்லாம் தீராத நோய்கள் புதிய மருந்துகளைக் கண்டு பிடித்துத்தான் இவைகளைப் போக்க முடியும். இவைகளுக்கு நடைமுறையில் உள்ள மருந்துகளை உட்கொண்டு காலங்கடத்துங்கள்" என்று சமாதானப்படுத்துகின்றனர். நீரழிவு நோயைக் குணப்படுத்த முடியாது ஆனால் நாள்தோறும் இன்சுலின் ஊசிபோட்டு எப்படியோ வாழலாம் என்ற ஆறுதல் கிடைக்கின்றது. அறுவையின் மூலமாகவோ அல்லது சுட்டுப்பொசுக்குவதன் மூலமாகவோ புற்றுநோயிலிருந்து தற்காலிகமாகத் தப்பலாம். அதை அறவே ஒழிக்க இதுவரை பா¢காரம் காணமுடியவில்லை என்கின்றனர். இதே கதைதான் ஆஸ்த்மா, க்ஷயம், மூலம், பெளந்திரம் போன்ற தீராத நோய்களுக்கும் இவைகளுக்குப் பெயரே தீராத நோய்கள் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடித்துள்ள 4000-க்கும் மேற்பட்ட நோய்களில் 60 சதவிகித நோய்கள் டாக்டர்களால் அதாவது நவீன மருந்துகளால் உண்டானவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இவான் இலிச் என்ற பேரறிஞர் Medical Mnemisis அதாவது "வைத்தியச் சாபத்தீடு" என்ற ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டுள்ளார்.

இயற்கை மருத்துவர்கள் நோயின் அறிகுறிகளுக்கு மருத்துவம் செய்யாமல் உடம்பிலுள்ள பிராணசக்தியை அதிகப்படுத்தி மலத்தை வெளியேற்றும் தந்திரங்களைக் கையாளுகின்றனர். உடம்பில் போதுமான பிராணசக்தி அதாவது உயிராற்றல் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் தானியங்கி இயந்திரம். அதற்கு ஒரு வாய்ப்புகொடுத்தால் தானே சூழ்நிலையுடனும் இயற்கையுடனும் சமநிலை எய்தும் ஆற்றல் பெறும். எண்ணங்களின் கோளாறுகளினாலோ, உணவென்று வேண்டாதவைகளை ருசி கருதி உட்கொள்வதினாலோ உண்டாகும் துன்பங்களை அறிவறிந்து மாற்றி அமைத்துக் கொண்டால் இப்போது நடைபெறுகின்ற வேண்டாத வேலைகள் பலவற்றை இல்லாமலே செய்து விடலாம்.

கோடானகோடி ரூபாய்கள் செலவிட்டு ஆராய்ச்சியாளர்களைத் தயார் செய்து மருந்தகங்களின் மூலம் புதுப்புது மருந்துகளைக் கண்டுபிடித்து உற்பத்தி செய்து அவற்றிற்கு சந்தை தேட முயற்சிக்கும் வேலைகளின் பெரும்பகுதியைக் குறைத்து, அதனால் எஞ்சும் ஆற்றலையும், வேறு பல வசதிகளையும் ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். இதனால் நவீன மருத்துவம் தவறானது படாதது என்ற அர்த்தமில்லை. அறிவியல் துறை வளர்ச்சியை உள்ளறிவுகொண்டு உகந்த அளவு பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாம் உண்ணும் உணவு இரத்தமாக மாறி உடலுக்கு வேண்டிய ஊட்டத்தைக் கொடுக்கிறது. உண்ணும் எல்லாப் பொருள்களுமே இரத்தமாக மாறி விடுவதில்லை. உடம்பில் ஊறும் சொ¢மானச் சுரப்பு நீர்களும், புளிமங்களும் அன்னக் குழம்புடன் சேர்ந்து பின்னர், அன்னரசமாகவும் அதிலிருந்து உறிஞ்சப்பட்ட சாரம் இரத்தமாகவும் மாறுகிறது. எஞ்சிய பொருள்கள் வேண்டாதவையாக பெருங்குடல் வழியாக வெளித்தள்ளப்படுகின்றன. இப்பொருள்கள் ஐவகை மலங்களாக அதாவது கா¢யமிலவாயு, வியர்வை, சிறுநீர், மலம், கபம் என வெவ்வேறு உறுப்புகளினால் வெளியேற்றப்படுகின்றன. இந்த வேலை அவ்வப்போது நடைபெற்றால் பரவாயில்லை. ஆனால், நாகா£ 
வாழ்வில் ஈடுபட்ட மனிதர்கள் பலர் இதனைக் காலாகாலத்தில் செய்வதில்லை. தடைபட்ட மலம் உள்ளே தங்கி நிற்கின்றது. உடலுள் உறையும் பிராணசக்தி காலங்கடந்து உடம்பில் நிற்கும் கழிவுப்பொருள்களை வெளித்தள்ளும் இயக்கமே நோய் எனப்படுகிறதென்று இயற்கை மருத்துவர்கள் நம்புகின்றார்கள்.

ஆதலால்தான் இவர்கள் நோயை நண்பனாகக் கருதுகின்றார்கள். நோய்க்கு இவர்கள் பயப்படுவதில்லை. தோன்றும் அறிகுறிகளைக் கண்டு அஞ்சுவதில்லை. காரணங்களைக் கண்டுகொண்டு அந்நியப் பொருள்கள் அதாவது உடற்கட்டுமானத்துக்க வேண்டாத உள்ளேயுள்ள பொருள்களை வெளியேற்ற உதவுகின்றனர்.

நவீனமுறை பயின்ற மருத்துவர்கள் எளிய இயற்கை மருத்துவச் சிகிச்சைகளைக் கையானாது அறிகுறிகளையே நோய் என்று நினைத்து அவற்றிற்குப் பா¢காரம் காண முயலுகின்றனர். அவர்கள் கையாளும் பா¢காரங்கள் மலத்தை வெளியேற்றாமல் உள்ளே அமுக்கி வைக்கவே செய்கின்றன. இதனை நவீன மருத்துவர்கள் ஒப்புக் 
கொள்வதில்லை. தங்களுடைய மருத்துவமும் மலத்தை வெளியேற்றவே செய்கிறதென்று கூறுகின்றனர்.

ஆனால் உண்மை என்ன?

சளி, இருமல், கோழை முதலிய நோய்க்குறிகள் நீங்க, சாப்பிடும் மருந்துகள் ஒவ்வொன்றிலும் அபின், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கலந்திருப்பது வெள்ளிடைமலை. இவை மலத்தை நீக்குவதற்குப் பதிலாக மலம்தோன்றும் இடங்களிலுள்ள ஜவ்வு படலத்தையும் நரம்புகளையும் தளரச்செய்து செயலற்றவைகளாக்கி, ஸ்தம்பிக்க வைத்து விடுகின்றன. உடனடியாகக் குணம் இருப்பது போல் தோன்றுகின்றது. உண்மையில் நடப்பது வெளித்தள்ளும் ஆற்றல் குறைந்து, மருந்தின் வேகத்தால் மலங்கள் உள்ளொடுக்கி உயிரணுக்களிடையே பதுங்கிக் கொள்கின்றன. இதே போல் பாதரசம், ஈயம், லவங்கம், துத்தநாகம் போன்ற மருந்துகளிலுள்ள விஷம் உள்ளுடம்பிலுள்ள இயக்கங்களைத் தடைசெய்து அல்லது மிகவேகமாகத் தூண்டி மல வெளியேற்றலுக்குத் தடையாகவே வேலை செய்கின்றன. இத்தகைய சிகிச்சைகள் நடைபெறும் பொழுதெல்லாம் தற்காலிகச் சுகம் கிடைப்பினும், மருந்தின் விஷமும் மலத்தின் விஷமும் கலந்து புதிய புதிய நோய்களாக உருவெடுகின்றன.

ஆஸ்த்மா, இதயநோய், புற்றுநோய், கண்டமாலை, மேகநோய், நமட்டுச்சொறி முதலியவை தோன்றி மனிதர்களை அல்லற்படுத்துகின்றன. இத்தகைய நோய்களை நவீன மூலமும் குணப்படுத்த முயலுகிறது. ஆனால் இவை உருமாறி மறுபடியும் மறுபடியும் வந்து தொலைகின்றன. டாக்டர்களைக் கேட்டால் "ஆமாம், இவையெல்லாம் தீராத நோய்கள் புதிய மருந்துகளைக் கண்டு பிடித்துத்தான் இவைகளைப் போக்க முடியும். இவைகளுக்கு நடைமுறையில் உள்ள மருந்துகளை உட்கொண்டு காலங்கடத்துங்கள்" என்று சமாதானப்படுத்துகின்றனர். நீரழிவு நோயைக் குணப்படுத்த முடியாது ஆனால் நாள்தோறும் இன்சுலின் ஊசிபோட்டு எப்படியோ வாழலாம் என்ற ஆறுதல் கிடைக்கின்றது. அறுவையின் மூலமாகவோ அல்லது சுட்டுப்பொசுக்குவதன் மூலமாகவோ புற்றுநோயிலிருந்து தற்காலிகமாகத் தப்பலாம். அதை அறவே ஒழிக்க இதுவரை பா¢காரம் காணமுடியவில்லை என்கின்றனர். இதே கதைதான் ஆஸ்த்மா, க்ஷயம், மூலம், பெளந்திரம் போன்ற தீராத நோய்களுக்கும் இவைகளுக்குப் பெயரே தீராத நோய்கள் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடித்துள்ள 4000-க்கும் மேற்பட்ட நோய்களில் 60 சதவிகித நோய்கள் டாக்டர்களால் அதாவது நவீன மருந்துகளால் உண்டானவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இவான் இலிச் என்ற பேரறிஞர் Medical Mnemisis அதாவது "வைத்தியச் சாபத்தீடு" என்ற ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டுள்ளார்.

இயற்கை மருத்துவர்கள் நோயின் அறிகுறிகளுக்கு மருத்துவம் செய்யாமல் உடம்பிலுள்ள பிராணசக்தியை அதிகப்படுத்தி மலத்தை வெளியேற்றும் தந்திரங்களைக் கையாளுகின்றனர். உடம்பில் போதுமான பிராணசக்தி அதாவது உயிராற்றல் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் தானியங்கி இயந்திரம். அதற்கு ஒரு வாய்ப்புகொடுத்தால் தானே சூழ்நிலையுடனும் இயற்கையுடனும் சமநிலை எய்தும் ஆற்றல் பெறும். எண்ணங்களின் கோளாறுகளினாலோ, உணவென்று வேண்டாதவைகளை ருசி கருதி உட்கொள்வதினாலோ உண்டாகும் துன்பங்களை அறிவறிந்து மாற்றி அமைத்துக் கொண்டால் இப்போது நடைபெறுகின்ற வேண்டாத வேலைகள் பலவற்றை இல்லாமலே செய்து விடலாம்.

கோடானகோடி ரூபாய்கள் செலவிட்டு ஆராய்ச்சியாளர்களைத் தயார் செய்து மருந்தகங்களின் மூலம் புதுப்புது மருந்துகளைக் கண்டுபிடித்து உற்பத்தி செய்து அவற்றிற்கு சந்தை தேட முயற்சிக்கும் வேலைகளின் பெரும்பகுதியைக் குறைத்து, அதனால் எஞ்சும் ஆற்றலையும், வேறு பல வசதிகளையும் ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். இதனால் நவீன மருத்துவம் தவறானது படாதது என்ற அர்த்தமில்லை. அறிவியல் துறை வளர்ச்சியை உள்ளறிவுகொண்டு உகந்த அளவு பயன்படுத்திக்கொள்ளலாம்.

நன்றி அரசியல் கலாட்டா