அத்தி

மணக்கால் அய்யம்பேட்டை | 6:18 PM | Best Blogger Tips

மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

1. அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

2. அத்திப் பாலை மூட்டுவலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.

3. முருங்கை விதை, பூனைக்காலி விதை, நலப்பனைக் கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

4. அத்திப் பட்டை, நாவல் பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்துவர பெரும்பாடு, சீதபேதி, இரத்தப்பேதி ஆகியவை தீரும்.

5. அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக் கடுப்பு, மூலவாயு, இரத்த மூலம், மூலக்கிராணி (வயிற்றுப் போக்கு) தீரும்.

6. அத்திப்பழத்தை உலர்த்தி இடித்துப் பொடி செய்து 1 தேக்கரண்டி காலை, மாலை பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும். இரத்தம் பெருகும்.

7. அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர் காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.

அதிமதுரம்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:17 PM | Best Blogger Tips

மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீல நிறப் பூக்களையும் உடைய சிறு செடியினம். மருத்துவப் பயனாகும் தண்டு உலர்ந்த நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சளி இருமல் ஆகியவற்றுக்கான மருந்தாகப் பயன்படுகிறது. புண்ணழுகல் ஆற்றுதல், சளியகற்றுதல், வெப்பகற்றல், பித்தநீர் பெருக்கல், எரிச்சலூட்டல், குருதிப்போக்கு அடக்கல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. 1 அல்லது 2 கிராம் அதிமதுரப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை, தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி தீரும். இருமல், மூலம், தொண்டை கரகரப்பு, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும். 2. அதிமதுரப் பொடி, சந்தனத்தூள் சமன் கலந்து 1 கிராம் அளவாகப் பாலில் கொடுத்து வர இரத்த வாந்தி நிற்கும். அக உறுப்புகளில் புண் ஆறும்.

அசோகு

மணக்கால் அய்யம்பேட்டை | 6:15 PM | Best Blogger Tips

நீண்ட கூட்டிலைகளையும் செந்நிற மலர்களையும் உடைய செங்குத்தாக நெடிதுயர்ந்து வளரும் மரம். அழகு தரும் மரமாக வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பதுண்டு. தமிழ்நாட்டில் மலைப்பாங்கான இடங்களில் காணப்படுகின்றன. பட்டை, பூ ஆகியவை மருத்துவப் பயனுடையவை.சதை நரம்பு ஆகியவற்றின் வீக்கம் அகற்றியாகவும், கருப்பைக் குற்றங்களை நீக்கும் மருந்தாகவும் செயற்படும்.

1. 100 கிராம் மரப்பட்டையைச் சிதைத்து 400 மி.லி நீரிலிட்டு 100 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி 100 மி.லி பாலில் கலந்து நாள் தோறும் 2 அல்லது 3 வேளை பருகிவர பெரும்பாடு, வெட்டை, மூலம், கட்டிகள், வயிற்றுக்கடுப்பு ஆகியவை தீரும்.

2. மரப்பட்டை 40 கிராம், மாதுளம் வேர்ப்பட்டை 20 கிராம் பச்சையாகச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 1 நாள் ஊறவைத்து வடிகட்டி 30 மி.லி அளவாக 3, 4 வேளை தினமும் சாப்பிட்டு வர 1 வாரத்தில் எவ்வளவு நாளான பெரும்பாடும் தீரும். காரம், புளி நீங்கலாகச் சாப்பிடவும்.

3. அசோகு பூ, மாம்பருப்பு சமனளவு பொடி செய்து 3 சிட்டிகை, பாலில் கொள்ளச் சீதப்பேதி, இரத்தப்பேதி தீரும்.

4. அசோகுப் பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு சமனளவு பொடி செய்து 3 சிட்டிகை, காலை, மாலையாக வெந்நீரில் கொள்ளக் கருச்சிதைவு, வயிற்று வலி, கர்ப்பச் சூலை, வாயுத்தொல்லை நீங்கும். 100, 120 நாள்கள் சாப்பிடப் பெண் மலடு தீரும்.

அக்கரகாரம்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:13 PM | Best Blogger Tips

மலைப்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து வளரும் சிறு செடியினம். இதன் வேர் மருத்துவப் பயனுடையது. உலர்ந்த வேர் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். தொண்டையில் நோய்த்தொற்று மூச்சுக்குழல் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்து. உமிழ்நீர்ப் பெருக்குதல், பட்ட இடத்தில் எரிச்சலூட்டுதல், நாடி நடையை மிகுத்து வெப்ப மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.

1. ஒரு துண்டு வேரை மெதுவாக நீண்ட நேரம் மென்று விழுங்க பல்வலி, அண்ணாக்குத் தூறு அழற்சி, தொண்டைக் கம்மல், நாக்கு அசைக்கமுடியாமை, நீர்வேட்கை ஆகியவை தீரும்.

2. உலர்ந்த வேரைப் பொடியாக்கி நாசியில் உறிஞ்ச வலிப்பினால் ஏற்பட்ட நரம்புப் பிடிப்பு தீரும்.

3. 30 கிராம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீரிலிட்டு 250 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய்கொப்பளித்து வர பல்வலி நீங்கிப் பல்லாட்டம் குறையும். வாய் தொண்டை ஆகியவற்றில் உள்ள புண்கள் -ஆறும்.

உடல் பலம் பெற்று வாழ்வில் நலம் பெற சில ஆலோசனைகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:12 PM | Best Blogger Tips

* உடல் மெலிந்து காணப்படுவோர் குண்டாக வேண்டுமானால், வேப்பம்பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து காலையில் பருகி வந்தால் சிறுகச்சிறுக உடல் மெலிவு நீங்கி உடல் குண்டாகத் தொடங்கும்.

* பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும்.

* முருங்கை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால்கள் உடல் அசதிகள் நீங்கும். உடலில் பலமும் ஏறும். உடலைத் தேற்றும் நல்ல உணவாகும்.

* அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து, சிறிது தண்ணீர் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து, காலை மாலை என நீண்ட நாட்கள் சாப்பிட்டு வர உடலில் பலம் ஏறும்.

* வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரி சிறங்கை அகற்றும் மேலும் அஜீரணத்தை போக்கும்.

* வேப்பம்பூ, நிலவேம்பு ஒரு அவின்ஸ் எடுத்து இரண்டையும் நன்றாக நசுக்கி அதில் 1 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைத்து விட்டு, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர பலஹீனங்களும் காய்ச்சலுக்கு பின் உண்டாகும் பலஹீனங்களும் சரியாகிவிடும்.

* அரிசி தவிட்டுடன் பனை வெல்லத்தை கலந்து சிறு உருண்டை செய்து வாயில் போட்டு சாப்பிட்டால் உடல் நல்ல பலன் பெறும். கல்யாணபூசணி சாறு 1 டம்ளர் எடுத்து அதில் பனை வெல்லத்தைப் போட்டுக் கலக்கி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் உடம்பில் ஏற்படும் தளர்ச்சி களைப்பு, மூளச்சோர்வு அத்தனையும் சரியாகிவிடும்.

* நீண்ட நாள் வியாதியில் வாடுவோருக்கு ஆரஞ்சுபழ ரசமும், ஆரஞ்சு தோல் சேர்த்து நீரும், தக்காளிபழ ரசமும் மூன்றும் சமமாக கலந்து குடித்தால் சீக்கிரத்தில் ரத்தம் அபிவிருத்தி அடைகிறது. நல்ல பலத்தையும் சுறுசுறுப்பையும் பெறலாம்.
 
நன்றி பல் சுவை கதம்பம்

அகத்தி

மணக்கால் அய்யம்பேட்டை | 5:57 PM | Best Blogger Tips

வெற்றிலைக் கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறுமென்மரவகை. தமிழ் நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும்.

1. கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, டீ, இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

2. அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநீர்) குடித்துவர, சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.

3. இலைச்சாறும் நெல்லெண்ணெயும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழுங்கு விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி (அகத்தித் தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

டென்டல் கேரிஸ் Toothpaste

மணக்கால் அய்யம்பேட்டை | 5:49 PM | Best Blogger Tips

பள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும்போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது. ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப்பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பற்சிதைவைத் தடுப்பதற்காகத்தான் இந்த ரசாயனம் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைகள் இதை உட்கொள்ளும்போது, உடல்நலத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இது செயல்படுகிறது. பற்பசைகளில் மட்டுமல்லாது, சில பகுதிகளில் குடி நீரிலும் ப்ளோரைடு அதிகம் கலந்துள்ளது. இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, ...பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. ப்ளோரைடு சம்பந்தமான நோய்களால் இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனராம். பற்சிதைவை குணப்படுத்த ப்ளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தும் மக்கள், அதைத் தவிர்த்து விட வேண்டும்.

உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்தைப் போதுமான அளவு சேர்த்துக் கொண்டால் பல் நோய் தலை காட்டாது என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ப்ளோரைடுதான் அதிகம் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதன் விளைவுகள் உடம்பு செல்களை பாதிக்கும். கழுத்து, முதுகெலும்பு, முட்டி, இடுப்பெலும்பு, கை கால்களில் உள்ள இணைப்பு எலும்புகளையும் பாதிக்கும். ப்ளோரைடு அதிகளவு உள்ள பேஸ்ட்டுக்களை உபயோகிப்பதால் தோல் புற்றுநோய் கூட வருவதாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தேநீர், கோழி சூப், எலும்பு உணவு, மீன், பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் ப்ளோரைடு கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், ப்ளோரைடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

திருவாரூர் மாவட்டம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:39 PM | Best Blogger Tips
பண்டைய தமிழ்நாட்டின் பகுதியாகிய சோழ மண்டலத்தின் ஒருபகுதியே திருவாரூர் வட்டமாகும். கரிகாலன் கி.பி. 50 முதல் 95 வரை ஆண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கரிகாலனுக்கும் முற்பட்ட புராண காலச் சோழர்களான முசுகுந்தன் , புறாவுக்காக தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி, கன்றுக்காக மகனைக் கொன்ற மனுநீதிகண்ட சோழன் மூவரும் வாழ்ந்த இடமாக கூறப்படும் இடம் திருவாரூர் ஆகம்.
திருவாரூர் புகைப்படங்கள் - ராஜகோபாலசுவாமி கோயில், மன்னார்குடி சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து ஊர்களுள் இதுவும் ஒன்று. (மற்ற ஊர்கள்: காவிரிப்பூம்பட்டினம், உறையூர், செய்ஞலுர், கருவூர்).

பழமையான தஞ்சாவூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்தவகையில் உருவான மாவட்டம். இசை மற்றும் கலை, இலக்கியத் துறைகளில் சாதனை படைத்தவர்களின் பூர்வீக பூமி. குடவாசல், திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி மற்றும் வலங்கைமான் ஆகிய ஏழு வட்டங்களை உள்ளடக்கியது. பத்து வட்டார வளர்ச்சிப் பிரிவுகளும் இங்குள்ளன. இம்மாவட்டத்தில் விவசாயமே முதன்மையான தொழில்.

திருவாரூர் மாவட்டத்தின் பிற முக்கிய இடங்கள்,

தியாகராஜ சுவாமி கோயில்:

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/93/Tiruvarur_temple,_tank,_car.jpg/250px-Tiruvarur_temple,_tank,_car.jpg சோழர் காலம் மிளிரும் தியாகராஜ சுவாமி கோயில் பிரம்மாண்டமானது. கோயிலின் எதிரே உள்ள திருக்குளமான கமலாலயம் நீர்ப்பரப்பு கடல் போல தளும்பும். வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் தேரோட்டம் புகழ்பெற்ற திருவிழா. இக்கோயிலில் கொண்டாடப்படும் பங்குனி உத்திரப் பெருவிழா, தெப்ப உற்சவத்துடன் முடிவுறும். மூன்று நாட்கள் தொடர்ச்சியாகத் தெப்பம் குளத்தைச் சுற்றிவரும். மின்னொளி பட்டு நீர் பளபளக்கும் அழகைப் பார்த்துகொண்டே இருக்கலாம். மற்றொரு சிறப்பும் பெருமையும் திருவாரூருக்கு உண்டு. இங்குதான் இசை மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமளா சாஸ்திரிகள் பிறந்தார்கள்.

பறவைகள் சரணாலயம்:

ஏரிக்கரைகளில் .... நீர்ப்பரப்பில் பல வண்ணங்களில் பறவைகளைப் பார்த்து ரசிப்பது சுக அனபவம். திருத்துறைப்பூண்டி வட்டம் உதயமார்த்தாண்டபுரத்திலும், மன்னார்குடியை அடுத்த வடுவூரிலும் பறவைகள் சரணாலயம் இருக்கின்றன. திருத்துறைப் பூண்டியிலிருந்து 20கி.மீ. பயணித்தால் உதயமார்த்தாண்டபுரத்தை அடையலாம். தஞ்சாவூரிலிருந்து வடுவூர் 23 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஜாம்பவனோடை தர்கா:

இஸ்லாமியர்களின் புனிதத் தலம். வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் நினைவில் வைத்து முஸ்லிம்கள் வழி படுகிறார்கள். தெய்வீகம் ததும்பும் இடம். திருத்துறைப் பூண்டியலிருந்து 25 கி.மீ. தொலைவைக் கடந்தால் தர்காவை தரிசிக்கலாம்.

ஆலங்குடி சிவன்கோயில்:

ஆலங்குடி என்றதும் குருபகவான் ஞாபகத்துக்கு வருவார். திருவாரூரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சிவன்கோயிலில் நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவான் சிறப்பிக்கப்படுகிறார். பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கும் திருக்கோயில். மனிதர்களின் மனக்கவலை போக்கும் தலமாகப் பக்தர்களால் வணங்கப்படுகிறது

கூத்தனூர்:

கல்வியின் கடவுள் கலைமகள். கலைவடிவான கலைமகள் கூத்தனூரில் கோயில் கொண்டுள்ளார். திருவாரூரிலிருந்து 22 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

முத்துப்பேட்டை அலையாத்திவனம்:

நீங்கள் பார்த்தே தீரவேண்டிய காயல்காடு. இது முத்துப்பேட்டையில் அமைந்துள்ளது. எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இந்த அலையாத்தி வனத்திற்கு வந்து இளைப்பாறுகின்றனர்.இங்குள்ள காயலில் (உப்பங்கழியில்) 73 வகையான மீன்கள் வாழ்கின்றன. 120 சதுர கி.மீ. கொண்ட இந்த நீர்ப்பரப்பில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏராளமான நீர்ப்பறவை இனங்கள் கூடுகின்றன. இந்தப் பறவைகளின் கூட்டணி, பரவசத்தின் அணிவகுப்பு.

முத்துப்பேட்டை தர்கா:

மிகப் பழமையான தர்கா. இதன் உண்மையான பெயர், ஹக்கீம் ஷேக்கு தாவூத் கமீல் ஒலியுல்லா தர்கா. முத்துப்பேட்டை நகரில் அமைந்துள்ளது. இது மராட்டியர் கட்டடக் கலைப்பாணியில் உருவாக்கப்பட்டது. இந்தத் தர்காவில் உள்ள சமாதியின் நீளம் 40 அடிகள்.

கோதண்டராமர் கோயில்:

உள்ளூர் பக்தர்களின் மனங்களில் குடியிருக்கும் கோயில் கோதண்டராமர் கோயில். திருத்துறைப் பூண்டி வட்டம் தில்லை வளாகத்தில் அமைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பிரபலமான ஆலயம் இது.

எண்கண் முருகன் கோயில்:

எண்கண் முருகன் இருக்க வேதனை இல்லை என்ற சொல்வழக்கு இருக்கிறது. திருவாரூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள இந்தச் சிற்றூரிலுள்ள முருகன் கோயில், ஆன்மீக சிறப்புப் பெற்றது. முருக பக்தர்கள் நாடும் திருத்தலம்.

ராஜகோபால சுவாமி கோயில்:

மன்னார்குடியில் அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி கோயில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு நிகழும் வெண்ணைத் தாழி திருவிழாவைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வருடந்தோறும் இத்திருக்கோயிலில் பங்குனித் திருவிழா நடைபெறும். திருவாரூர் மாவட்டத்தின் மிக முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று.

தலையாலங்காடு:

தலையாலங்கானம் என்பது இவ்வூரேயாகும். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பெரும் போர்க்களம் இதுவே. நெடுநெல்வாடையும் மதுரைக் காஞ்சியும் இவ்வூரில் நிகழ்ந்த போர் வெற்றியைப் புகழ்கின்றன. இவ்வூர் குடவாசலிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது. பெருவேளூர், திருக்கரவீரம் என்ற பாடல்பெற்றத் தலமும் தலையாலங்காட்டுக்கு அருகே உள்ளன.

வலங்கைமான்:

கும்பகோணத்திற்கு தெற்கே 10 கி.மீ. தொலைவில் ஆற்றின் கரையில் உள்ளது. இவ்வூர்க் கோயிலில் சிவபெருமானின் வலதுகையில் மான் இருப்பதால், வலங்கைமான் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கிறது.

கணிணியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தெரிந்து

மணக்கால் அய்யம்பேட்டை | 5:14 PM | Best Blogger Tips

ஏதாவது .comஎனமுடியும் தளம்போகவேண்டுமா? like www.yahoo.com , just type yahoo in address bar and hit ctrl + enter

ஏதாவது .netஎனமுடியும் தளம்போகவேண்டுமா? like www.yahoo.net , just type yahoo in address bar and hit Shift + Enter

ஏதாவது .orgஎனமுடியும் தளம்போகவேண்டுமா? like www.yahoo.org , just type yahoo in address bar and hit ctrl + shift + Enter

Ctrl-லை அழுத்தியவாறே + அழுத்தினால் எழுத்துரு பெரிதாகிக்கொண்டேவரும்.தெரியுமா?

Ctrl-லை அழுத்தியவாறே - அழுத்தினால் எழுத்துரு சிறிதாகிக்கொண்டேவரும்.தெரியுமோ?

Ctrl -லை அழுத்தியவாறே a அழுத்தினால் அதுஅனைத்தையும் தெரிவு செய்யும்

Ctrl -லை அழுத்தியவாறே c அழுத்தினால் அதுதெரிவு செய்தவற்றை காப்பி செய்யும்

Ctrl -லை அழுத்தியவாறே x அழுத்தினால் அதுதெரிவு செய்தவற்றை கட்செய்யும்

Ctrl -லை அழுத்தியவாறே v அழுத்தினால் அதுமேலேநீங்கள் தெரிவு செய்தவற்றை பேஸ்ட் செய்யும்

Ctrl -லை அழுத்தியவாறே ESC அழுத்தினால் Start menu திறக்கப்படும்.

Alt - அழுத்தியவாறே F4 அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ளவிண்டோ மூடப்படும்.

WINDOWS KEY -ஐஅழுத்தியவாறே D அழுத்தினால் உங்கள் முன்னால் உள்ளஎல்லா விண்டோஸ்களும் மினிமைஸ் செய்யப்பட்டு டெஸ்க் டாப்மட்டுமே தெரியும்.

WINDOWS KEY -ஐஅழுத்தியவாறே F அழுத்தினால் Find files திறக்கும்.

F3 அழுத்தினால் Find திறக்கும்.

F5 அழுத்தினால் refresh ஆகும்.

Alt - அழுத்தியவாறே tab அழுத்தினால் திறக்கப்பட்டிருக்கும் அப்ளிகேசன் விண்டோஸ்களிடையே உலாவரலாம்.

shift - அழுத்திக்கொண்டு down or up key அழுத்தினால் அதுகுறிப்பிட்ட வரிகளை மட்டும் தெரிவு செய்யும்.

shift -ஐஅழுத்திக்கொண்டு page down or page up அழுத்தினால் அதுகுறிப்பிட்ட முழுபக்கங்களையும் தெரிவு செய்யும்.

Tab -ஐதட்டுவது 8 spacesதட்டுவதற்கு சமானமாகும்.

Start->run -ல்

... (மூன்று புள்ளிகள் டைப்பினால்) My Computer திறக்கப்படும்

.. (இரண்டு புள்ளிகள் டைப்பினால்) Documents and settings folder திறக்கப்படும்

. (ஒருபுள்ளி டைப்பினால்) User Profile திறக்கப்படும்

WINDOWS KEY -ஐதட்டி அப்புறம் L-வைதட்டினால் உங்கள் கணிணி லாக்ஆகிவிடும்.
WINDOWS KEY -ஐதட்டி அப்புறம் U-வைதட்டினால் உங்கள் கணிணி ஷட்டவுன் செய்யவாவென கேட்கும்

நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:31 PM | Best Blogger Tips

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும்.

தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம்,

ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும்.

நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.

நமது மூளை 80% நீரால் ஆனது.

நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள் 31 நிமிடங்கள்

மூளை 10 நிமிடங்கள்

கால்கள் 4 மணி நேரம்

தசைகள் 5 நாட்கள்

இதயம் சில நிமிடங்கள்

என்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:58 PM | Best Blogger Tips

சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், ரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ஆலோக்டின்பி எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.

தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்ந்தவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.

பொதுவாக் 40 வயதைக் கடந்து விட்டாலே மூட்டு வலி, கை,கால் வலி ஏற்படுவது பெரிதும் வாடிக்கையாகி விட்டது. அதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு கால் மூட்டில் இருக்கும் திரவம் குறைவதால், நடப்பதே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதாகி விட்டது.

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க் உதவும்.இது உலகின் அபூர்வ சாகாவரம் பெற்ற சோற்றுக் கற்றாழை மூலிகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
மேலும் எலும்புகளுக்குத் தேவைப்படும் சுண்ணாம்புச் சத்தையும் (கால்ஷியம்) அலோசன் ஹெல்த் டிரிங்க் அளித்து மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.

மஞ்சள் காமாலை நோய்க்கும் சோற்றுக் கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

கண்நோய், கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை, மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும், தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம், வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி, சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து, ஈரப்பதம் அளிக்கும்.

இத்தகைய கற்றாழை இளம் தலைமுறையின் இனிய தோழி தானே! வீட்டிற்கொரு கற்றாழை வளர்ப்போம்.

அவரை

மணக்கால் அய்யம்பேட்டை | 1:56 PM | Best Blogger Tips

தமிழகமெங்கும் உணவுக்காகப் பயிரிடப்பெறும் கொடிவகை. இலை, பிஞ்சு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. விதை முதிர்ந்த காய்களை உண்ணாதிருத்தலே நலம்.

இலை குடல் வாயு அகற்றும் தன்மையுடையது. பிஞ்சு தாது வெப்பு அகற்றும்.

1. அவரை இலைச்சாறு 10 மி.லி. தயிருடன் கலந்து காலையில் கொடுத்துவர கிராணி, மூலக்கடுப்பு எரிச்சல் ஆகியவை தீரும்.

2. இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடிகலந்தோ, சுண்ணாம்பு விளக்கெண்ணெய் கலந்தோ புண்களில் பூசிவர ஆறும்.

3. இலைச் சாற்றை சிறு துண்டுத்துணியில் நனைத்து நெற்றியில் போட்டுவர தலைவலி, தலைப்பாரம் நீங்கும்.

4. விதை முற்றாத அவரைப்பிஞ்சைச் சமைத்துண்பது திரிதோடம், புண், காய்ச்சல், கண்ணோய் உள்ள நோயாளர்க்கும் மருந்துண்போர்க்கும் பத்திய உணவாகும்.

முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:38 PM | Best Blogger Tips

பெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது. வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

* மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

* பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.

* சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.

* கஸ்தூரிமஞ்சள்தூள் ,சிறுபயறுத்தூள் இரண்டையும் சம அளவு கலந்து,தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போலாக்கி காலை, இரவு என 2 முறை முகத்தில் தேய்த்து 1/2 மணிநேரம் கழித்து கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வரவும். முடி கொட்டிவிடும்

வயிற்றில் புண்ணா...?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:59 PM | Best Blogger Tips

வயிற்றுப்புண் இருவகையில் ஏற்படுகிறது. அவை உணவு முறை, மன அழுத்தம்: உணவு முறையில் மாறுபாடு கொண்டவர்களில் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு வயிறுதான். நேரம் கடந்த உணவு, அதிக பட்டினி, எளிதில் ஜீரணமாக உணவு, அதிக உணவு போன்ற காரணங்களால் வயிற்றில் புண் உண்டாகிறது. அதுபோல் மன அழுத்தம், மன எரிச்சல், அதிக கோபம், பயம், வெறுப்பு இவைகளாலும் வயிற்றில் புண் உண்டாகிறது. மலச்சிக்கல், அஜீரணக் கோளாறும் வயிற்றில் உள்ள அபாய வாயுவை சீற்றமடையச் செய்து வயிற்றுப்புண்ணை உண்டாக்குகிறது.

* அதுபோல் மனம் சம்பந்தப்பட்ட காரணங்களால் இயல்புக்கு மாறாக சுரப்பிகள் அதிகம் நீரைச் சுரந்து வயிற்றுப் பாதிப்பை உருவாக்குகிறது.

* உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

* அதிக சூடான பானங்களை, குடிக்கக்கூடாது. அதுபோல் வேகமாகவும் அருந்தக்கூடாது.

* சூடான உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது.

* அதிக குளிரூட்டப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

* புளி, காரம் இவற்றை கண்டிப்பாக குறைத்துக்கொள்ள வேண்டும்.

* மது, போதை, புகை போன்றவை இரைப்பையை பாதித்து, குடல்களில் புண்களையும் உண்டாக்கும்.

* எளிதில் ஜீரணமாகாத உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

* பசித்த பின் உணவு அருந்த வேண்டும். அதிகமாக உணவு அருந்தக்கூடாது.

* அதிகமாக புளித்துப்போன உணவுகளைச் சாப்பிட வேண்டாம். இரவில் புளித்த தயிர், மோர் கெடுதலை ஏற்படுத்தும்.

* கோபம், டென்சன், எரிச்சல், அதிக பயம் இவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும்.

* தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்­ணீராவது குடிக்க வேண்டும்.

மேற்கண்ட நடைமுறைகளை சரியாக கடைப்பிடித்து வந்தால் வயிற்றுப்புண் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்.