கோத்திரம் என்பது ஜெனடிக்ஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:59 PM | Best Blogger Tips

 




நேற்று மாலை ஒரு நபரோடு பேசிக் கொண்டிருந்த போது, தங்களுக்கு கோத்திரம் தெரியாது அர்ச்சனை எவ்வாறு செய்வது ? என்றார். ஒன்றும் பிரச்சனை இல்லை "சிவ கோத்திரம்" என்று குறிப்பிடுங்கள் என்றேன்.


எதுக்கு சார் இந்த கோத்திரம் எல்லாம், எல்லாரும் சிவ கோத்திரம்னு சொல்லிடலாம் இல்ல ? எனக் கேட்டார். அவருக்கு கிட்டத்தட்ட ஒரு அரைமணி நேரம் அடியேன் விளக்கியதை சுருக்கமாய் கீழே.


கோத்திரம் என்பது ஜெனடிக்ஸ் சம்பந்தப்பட்டது. ஆகையால் அதை புரிந்து கொண்டால்தான் கோத்திரம் புரியும். நம்முடைய ஜீன் எனும் மரபணுதான் நம்முடைய அனைத்து செயல்பாடுகளையும் நிர்ணயிக்கிறது. நாம் நம் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் பெரும் தலா 23 குரோமோசோம்களும், இந்த மரபணுக்களின் அமைப்புதான். நம் உடல் உறுப்புகளில் உள்ள ஒவ்வொரு 'செல்'லும் எப்படி செயல்பட வேண்டும், எப்படி வளர வேண்டும் என உத்தரவுகளை இந்த மரபணுக்கள்தான் இடுகின்றன. சொல்லப் போனால் நம் உணர்வுகள், செயல்பாடுகள் அனைத்துமே மரபணு சார்ந்தவையே. இதை நவீன ஜெனட்டிக் ஆய்வுகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.



ஆமை குஞ்சுகளை எடுத்துக் கொள்ளுங்கள், தாய் மண்ணிற்குள் முட்டை இட்டு விட்டு கடலுக்குள் என்றோ சென்று விட்ட நிலையில், அந்த குஞ்சுகள் பொறிந்த உடன் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் கடலை நோக்கி பயனிக்கின்றன. இதுதான் ஜீன்களின் செயல்பாடு. ஒரு சிசுவின் உள்ளேயே எப்படி எப்படியெல்லாம் அது செயல்பட வேண்டும் எனும் மென்பொருள் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதுதான் ஜெனடிக்ஸ்.

உதாரனதிற்கு நாட்டு பசுக்களின் பால் 2 பாலையும், இறக்குமதி பசுக்களின் 1 பாலையும் குறிப்பிடலாம். எல்லா பாலும் ஒரே பால் அல்ல. ஆயிரக்கணக்கான வருடங்களாய் அந்த பசுக்கள் எப்படிப்பட்ட உணவை உண்டு எப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்தது என்பதை பொறுத்தே, அந்த பாலின் திறனும் உள்ளது. அதிக பாலை சுரக்க வேண்டும் என செயற்கை மரபணு மாற்றம் செய்து இறக்குமதி செய்யப்பட்ட பசுக்களில் இருந்து கிடைக்கும் 1 பாலினால்தான், சர்க்கரை நோய், மாரடைப்பு, ஆட்டிஸம் போன்ற குறைபாடுகள் பாரதத்தில் அதிகம் ஏற்படுகின்றன என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


நாட்டுப்பசுக்கள் மூலம் கிடைக்கும் 2 பாலினால் இந்த உபாதைகள் ஏற்படுவதில்லை என்கிறார்கள். ஆக ஒரு பாலிலேயே மரபணுக்களின் தரம் மிக முக்கியம்.


குதிரை ரேஸ்களில் கோடிக்கணக்கான டாலர்களுக்கு வாங்கப்படும் குதிரைகளின் வம்சத்தை நுட்பமாக ஆராய்வார்கள். அதன் முப்பாட்டன் குதிரை பரிசை வென்றிருந்தால், இதன் விலை அதிகமாக இருக்கும். விலை உயர்ந்த நாய்களை வாங்கும் போதும் இதே செயல்முறைதான். ஆக நம் முன்னோர்களின் செயல்பாடுகள் நம் குணாதீசியத்தையும், அறிவு மற்றும் செயல் திறனையும், உடலமைப்பையும் தீர்மானிக்கின்றன. அதனால்தான் யூதர்களாலும், பிராமணர்களாலும் வியத்தகு அறிவுத் திறனை வெளிப்படுத்த முடிகிறது. ஆயிரமாயிரம் வருடங்களாய் காடுகளில் ஓடித் திரியும் எத்தியோப்பியா மற்றும் கென்யர்களால், எத்தனை வசதிகளோடு பயிற்சி மேற்கொள்ளும் வெள்ளையர்களை மிஞ்சி மராத்தன் ஓட்டத்தில் வெல்ல முடிகிறது. பாரதத்தில் வர்ன ரீதியாக மக்களை பிரித்தது தனித்தன்மை மிக்க இந்த செயல்பாடுகளில் அவரவர் ஈடுபடத்தான்.


கோத்திரம் என்பது உங்கள் மரபணுவின் ஒரு அடையாளம். அனைத்து வர்ணத்திற்கும் கோத்திரம் இருந்தது. ஆனால் காலப் போக்கில் பல சாதிகள் அதை பல காரணங்களால் இழந்து விட்டன. மேலும் இரண்டு உயர்ந்த கோத்திரம் சேர்ந்து திருமணம் புரிவதால் இரண்டு உயர்ந்த மரபணு கலப்பு ஏற்பட்டு மிகச்சிறந்த குழந்தை உருவாகும். அதே வேளையில் ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்றார்கள். (நெருங்கிய உறவில் திருமணம் புரிந்தால் அங்கஹீனம் ஏற்படும் என்கிறது நவீன அறிவியல்)


மீண்டும் பசுக்களை உதாரணமாக பார்த்தால், அக்காலத்தில் ஜல்லிக்கட்டு நடத்தி, அதில் முதலிடம் பெறும் காளையைதான், பசுக்களோடு இணை சேர விட்டு மிகச்சிறந்த கன்றுகளை பெறுவார்கள். அது போலவே காளையை அடக்கும் வீரணுக்கு தங்கள் பெண்னை திருமணம் செய்து மிகச்சிறந்த வம்சத்தை பெறுவார்கள்.


அந்நியர்கள் உள்ளே புகுந்து நம் குலப் பெண்களை அடிமைப்படுத்தி, கட்டாயமாக மதமாற்றம் செய்து, குலநாசத்தை உண்டாக்கிட, சமூக சீரழிவு ஏற்பட்டது. அந்நியர்களின் ரத்தத்தில் வந்த கலப்பினங்கள்தான் இன்று சாதிக்கும், குலத்திற்கும், சமூக கட்டமைப்பிற்கும் மிகப்பெரும் எதிரிகளாக உள்ளன.


கோத்திரம் அறிந்து பெண் கொடு என்று சும்மாவா சொன்னார்கள் ? மேலும் இறக்குமதி மரபணுக்கள் என்றுமே கேடுதரும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆக,அந்நிய மரபணு உள்ள புகுந்து விடக்கூடாது என்பதற்கே காலம் காலமாய் கோத்திரங்கள் ஒரு அரணாக செயல்பட்டன.


பின் குறிப்பு : எப்படிப்பட்ட மரபணுவோடு நாம் பிறக்க வேண்டும் என்பதை கர்மா தீர்மானிக்கிறது என்பது தனிக்கதை.


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

நன்றி இணையம்