இரண்டு மனமும் ஒன்றா?’

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:56 | Best Blogger Tips

 


உலகமகா பணக்காரர், கம்ப்யூட்டர்

உலகின் பேரரசன் பில்கேட்ஸிடம் ஒருவர் கேட்கிறார். உங்களை விடவும் பணக்காரர் எவராவது இருக்கிறாரா?”

அவரிடமிருந்து உடனே பதில் வருகிறது.

ஆம். ஒருவர் இருக்கிறார்.

கேள்வி கேட்டவருக்கு ஆச்சரியம்.

யார் அவர், நான் கேள்விப்பட்டதே

இல்லையே?

பில்கேட்ஸ் தன்னுடைய கதையை ஃபிளாஷ் பேக்காக சொல்ல ஆரம்பித்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வேலையிலிருந்து திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்.


நியூயார்க் நகர விமான நிலையத்தில் நாளிதழ்களில் .,

என்னவெல்லாம் தலைப்புச்செய்தி வந்திருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நாளிதழை வாங்க ஆசைப்பட்டேன்.

என்னிடம் அதற்குரிய சில்லறை இல்லாததால் வாங்கவில்லை.

அதை கவனித்துக் கொண்டிருந்தான் பேப்பர் விற்கும் கருப்பினச் சிறுவன்.

அவன் உடனே நான் வாங்க விரும்பிய நாளிதழை என்னிடம் கொடுத்தான்.

என்னிடம் சில்லறை இல்லையே?’ என்றேன்.

உங்களுக்கு என் அன்பளிப்புஎன்று புன்னகையோடு சொன்னான்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழிந்து மீண்டும் அதே விமான நிலையம். மீண்டும் அதே கதை, என்னிடம் சில்லறை இல்லை.

இம்முறையும் அதே சிறுவன்,


உங்களுக்கு என் அன்பளிப்புஎன்று அதே புன்னகையோடு பேப்பரைக் கொடுத்தான்.

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிய நிலையில்,

நீங்களெல்லாம் குறிப்பிடும் வகையில் நான் உலகின் மிகப்பெரிய பணக்காரன் ஆகிவிட்டேன்.

எனக்கு திடீரென அந்த சிறுவனை காண வேண்டும் என்று ஆவல் வந்தது.

என் சக்திக்கு உட்பட்ட எல்லா

வகையிலும் அவனை வலைவீசித்

தேடினேன்.

ஒன்றரை மாத பெரும் தேடலுக்குப் பிறகு அவனைச் சந்தித்தேன்.

அவனைக் கண்டதுமே கேட்டேன். ‘என்னைத் தெரிகிறதா?’

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பில்கேட்ஸ்தானே?’ என்றான் அவன்.

இருபது வருடங்களுக்கு முன்பு அவன் எனக்கு இரண்டு நாளிதழ்களை அன்பளிப்பாக கொடுத்ததை நினைவூட்டினேன்.

அதற்கு கைமாறாக நான் ஏதாவது செய்யவேண்டும் என்பதால் அவன் என்ன கேட்கிறானோ அதை கொடுப்பதாக வாக்களித்தேன்.

அதே புன்னகையோடு அவன் சொன்னான்.

உங்களால் நான் கொடுத்த அன்பளிப்புக்கு ஈடு செய்யவே முடியாது.

எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது.

நான் பில்கேட்ஸ். உலகின் பெரும்

பணக்காரன். என்னால் முடியாதது

எதுவுமே இல்லை.

என்ன வேண்டுமோ கேள்.’அவன் சொன்னான்.

நான் ஏழையாய் இருந்தபோதே உங்களுக்கு உதவக்கூடிய மனம் எனக்கு இருந்தது.

நீங்களோ பணம் வந்த பிறகுதான் எனக்கு உதவ நினைக்கிறீர்கள். இரண்டு மனமும் ஒன்றா?’

அந்த நொடியில் அந்த கருப்பின இளைஞன்தான் உலகின் மிகப்பெரும் பணக்காரன் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டது

 

நன்றி இணையம்