வித்தை_காட்டும்_இந்தியா.

மணக்கால் அய்யம்பேட்டை | 3:00 PM | Best Blogger Tips

 



ஆச்சரியத்தில் உலக நாடுகள்.

வான் வெளியை இனி

#இந்தியர்கள்_ஆளப்போகிறார்கள் என்கிற அதிர்ச்சியில் முனுமுனுக்கவே தொடங்கி விட்டனர் உலக வல்லரசு நாடுகள்.

ஆமாம் நிஜத்தில் அப்படி ஒரு தருணத்தில் தான் #இந்தியா_முன்னேறி_வருகிறது. தற்போது இங்கு பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா கண்காட்சி அப்பட்டமாக அதனை உறுதி செய்து இருக்கிறது.

அப்படி என்ன தான் நடக்கிறது என்பவர்களுக்காக...

உலகின் வல்லரசு நாடுகள், பாதுகாப்பிற்கு ஏராளமான பொருட் செலவு செய்து புதுப்புது தாக்குதல் ஆயுதங்களை உருவாக்கி, உற்பத்தி செய்யும் திறன் பெற்றதாக வளர்ச்சி கண்டு இருக்கிறார்கள்.

இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை முதல் அதிவேகத்தில் இயங்கும் தாக்குதல் விமானங்கள் வரை ஏராளமான வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் இந்த துறைகளை திட்டமிட்டே, வளர்ச்சி பெறாமல் இருக்க பலவழிகளில் முட்டுக் கட்டை போட்டு இருந்தார்கள் கடந்த ஆட்சி காலத்தில். கிட்டத்தட்ட 1977 பிறகு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஆரம்பித்து திட்டமிடல் பிரிவுகள் வரை முழுமையாக முடக்கும் வகையில் பார்த்துக் கொண்டார்கள். அந்த நிதிகளை மடைமாற்றி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டது இந்தியா.

இந்த நிலை முற்று முழுதாக மாற்றப்பட்டது. தேவைகளுக்கான தயாரிப்பு என்கிற தாரக மந்திரம் புகுத்தப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி என்பதே கோட்பாடு என்றார்கள் ஆட்சிக்கு வந்தவர்கள். இதற்காக ஆயுத விற்பனை செய்யவும் முடிவு எட்டப்பட்டது.

ஆடி போய் விட்டனர் உலக ராணுவ ஆயுத வர்த்தகர்கள். ஆம் இவை அங்கு பெரும்பாலும் தனியார் வசம் உள்ள வணிகம்.

பார்த்தார் பாரத பிரதமர்.

ஆராய்ச்சி அரசாங்கத்திற்கு. உற்பத்தி உள்நாட்டு வர்த்தகர்களுக்கு என்றார். இதற்காக தனி இலாகா இயங்க ஆரம்பித்து, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. உலக தரத்திலான உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்தப்பட்டது.


பலன் தர தொடங்கி விட்டது தற்போது. இது என்ன பிரமாதம் என்பவர்களுக்கு....... உலக ஆயுத தளவாட உற்பத்தி மற்றும் விற்பனை விநியோகம் இந்தியாவின் பங்கு 0.5% மாத்திரமே.

உலகில் இரண்டாவது பெரிய ஜனத்தொகை மிகுந்த நாட்டில் உள் நாட்டு உற்பத்தி 1% கீழே.

பிறகு பொருளாதார வளர்ச்சி என்பது எங்கனம் சாத்தியம். இதில் தான் மாற்றம் ஏற்படுத்திட இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.

வெற்றி பெற்றார்களா???????

விஷயங்களை சொல்கிறோம் ஒவ்வொன்றாக, முடிவினை நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இந்தியா தனது வான் வெளி பாதுகாப்பிற்கு இது நாள் வரை, அதாவது கடந்த காலங்களில் ரஷ்யாவிடம் பெற்ற தயாரிப்பு சாதனங்களையே பெரும் அளவு சார்ந்திருந்தது. அதனால் ரஷ்ய போர் விமானங்களையே பயன் படுத்தும் சூழ்நிலை உருவானது.

இதிலும் பிரதானமாக இரண்டு உண்டு.

#சுகோய் மற்றும் #மிக்.

இவை பெரும்பாலும் வாங்கப்படும் போது மூன்றாவது மற்றும் இரண்டாம் தலைமுறை விமானங்கள்.

இதனை காட்டிலும் மிகவும் மேம்பட்ட ரகங்கள் தற்போது தயாரிக்க பட்டுவிட்டது. உதாரணமாக நாம் பயன்படுத்தும் ரஷ்ய தயாரிப்பு விமான மதிப்பு சுமார் 700 கோடி ரூபாய் என்றால் 4.5 மற்றும் 5 ஆம் தலைமுறை அமெரிக்க தயாரிப்பு F35 11,000 கோடி ரூபாய். B52 ஒன்றின் விலை 15,000 கோடிகளுக்கு மேல்.

வித்தியாசம் புரிந்து இருக்கும் உங்களுக்கு.

இங்கு தான் ஒரு காரியத்தை செய்தது இந்தியா. ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவுக்கு கடந்த காலத்தில் விற்பனை செய்யப்பட்ட சுகோய் su 27 mki மற்றும் su 29 ஆகிய விமானங்களின் டெம்ப்ளேட்டுகளை விலை கொடுத்து வாங்கி கொண்டது. அதாவது கட்டுமானத்தில் மேம்பாடுகளை செய்து கொள்ள இந்த ரக விமானத்தின் மீதான உரிமையை வாங்கியது. அதிநவீன மற்றும் புதிய மின்னணு உபகரணங்களை பொருந்தி அதன் ஆயுட்காலத்தை சுமார் 15 வருடங்களுக்கு நீடித்து விட்டது.

அதாவது இவை உற்பத்தி செய்து நமக்கு வழங்கிய ரஷ்யாவிலேயே இவ்வளவு மேம்பட்ட ரகம் இல்லை. இதனை பார்த்த ரஷ்யா, தங்களுடைய விமானங்களுக்கு இத்தகைய மேம்பாடுகள் செய்து தர தற்போது கெஞ்சி கொண்டு இருக்கிறார்கள்.

தற்போது பாவனையில் உள்ள இந்த விமானம் 4.5 வது தலைமுறை விமானங்களுக்கு ஈடாக உள்ளது. விமானங்களின் ஆயுட் காலம் முடிவடையும் போது அதனை மாற்றீடு செய்ய நமது சொந்த தயாரிப்பு விமான ரகங்கள் வந்து விடும். இதற்கு இவர்கள் செலவு செய்த தொகை மிக மிக சொற்பம். இப்படியாக 176 விமானங்களை ஓசை படாமல் மாற்றம் செய்து விட்டனர் நமது இந்திய ராணுவ தொழில்நுட்ப பிரிவினர்.

அடுத்ததாக பிரெஞ்சு தயாரிப்பு மிராஜ் 2000 நம்மிடம் பயன் பாட்டில் இருக்கிறது. இதன் மேம்பட்ட ரகம் தான் ரஃபேல். இவை 4.5 வது தலைமுறை விமானங்கள். இதன் சிறப்பம்சம் அதிக எடையுடன் அதி வேகமாக செல்லும் திறன் கொண்ட போர் விமானங்கள். இவைகள் தாக்குதல் மற்றும் கண்காணிப்பு கில்லாடிகள் என்பார்கள். இதனை வாங்கிய காரணமே இந்திய சீன எல்லை பகுதியின் பூகோள அமைப்பு தான்.

தற்போது இந்தியாவிலேயே தயாரிக்க பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்து விட்டனர். வரும் காலங்களில் ரஃபேல் விமானங்களின் முழு கட்டுப்பாடுகளும், கட்டமைப்புகளும் இந்தியாவிற்கு விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள் பிரெஞ்சு தயாரிப்பு நிறுவனம்.

சூட்டிகையாக இத்தகைய நடவடிக்கைகளால் இந்திய விமானப் படை அதி உச்ச செயல்திறன் கொண்டதாக குறுகிய காலத்தில் மேம்பாடு அடைந்திருக்கிறது.

இது இப்படி என்றால்....... உலகின் அடுத்த கட்ட நகர்வாக ஆளில்லா தாக்குதல் விமானங்கள் கோலோச்சும் காலம் வந்த கொண்டு இருக்கிறது.

இதனை மிக சரியாக கணித்த நாடு இந்தியா தான்.

முதலில் கண்காணிப்பிற்காக ட்ரோன்களை உருவாக்கிய நாடு இஸ்ரேல். இதில் அதிக உயரத்தில் அதிக தூரத்தில் பறக்கும் வண்ணம் மேம்படுத்தியது அமெரிக்கா. இவைகளை கொண்டு வான் தாக்குதல் நடத்த ஆராய்ச்சி செய்து வந்த நிலையில் துருக்கி ஆளில்லா சிறிய அளவில் வான் தாக்குதல் விமானங்கள் அதிக அளவில் தயாரித்து வெற்றிக்கண்டது.

சீனா இந்த வகை ஆளில்லா விமானங்களை கண்டறிந்து தாக்குதல் நடத்த ரேடார்களை உருவாக்கும் ஆராய்ச்சி செய்து வரும் நிலையில்.......

இந்தியா சத்தம் இல்லாமல் ஆளில்லா ஸ்டெல்த் வகை தாக்குதல் விமானங்களை உற்பத்தி செய்து அசத்தி விட்டது. கிட்டத்தட்ட நமது தேஜஸ் விமான ரகத்தில் இருக்கும் இவைகள் உலகின் அதி நவீன தொழில் நுட்பம்., செயல் திறன் கொண்டதாக நிரூபித்து காட்டியிருக்கிறார்கள் இந்திய HAL நிறுவனத்தார்.

ஒரே சமயத்தில் 36 இலக்குகளை தானியங்கி முறையில் குறிவைக்கும். ஒரே நேரத்தில் இந்த ரக 45 விமானங்கள் கூட்டாக இணைந்து செயல்பட முடியும். #வாரியர் என்று பெயரிடப்பட்ட இவைகள் நமது இலகு ரக தேஜஸ் விமானத்தோடு இணைந்து பறக்கும் திறன் பெற்றதாக, இணைந்தே தாக்குதல் இலக்குகளை தேர்ந்தெடுக்கவும், எவ்விதமான இடைமறித்தலுக்கு சிக்காமலும் செயல் படும் திறன் பெற்றதாக இருக்கிறது.

இது போன்ற ஒன்று உலக அளவில் இதுவே முதலாவது விமான ரகம்.

இப்படி சொல்லலாம் புரிந்து கொள்ள வசதியாக......

அமெரிக்க லாகீட் மார்டீன் தயாரிப்பு F35 மற்றும் அதி உச்ச செயல்திறன் கொண்டதான F22 ரக விமானங்கள் பறக்கும் போது ஒன்றுடன் ஒன்று தகவல் பரிமாற்றத்தை நாம் தான் ஏற்படுத்த வேண்டும். இதற்காக வேறோர் விமானம் கூடவே பறக்க வேண்டும்.

ஆனால் நமது இந்திய தயாரிப்பு இந்த ரக விமானங்கள் கூட்டாக பறக்கும் தருணங்களில் தானாகவே இணைந்து செயல்பட முடியும், தானியங்கி முறையில் இணைந்து கொள்ளும். தவிர தரையில் உள்ளவர்களும் இலக்குகளை தேர்ந்தெடுக்கவும் முடியும்.

இதற்காக செயற்கை நுண்ணறிவு திறன் மற்றும் தொழில்நுட்ப பண்புகளை கொண்டதாக வடிவமைப்பு செய்து அசத்தி இருக்கிறார்கள். உலகிலேயே ஸ்டேல்த் (stealth) தொழில்நுட்ப ட்ரோன்கள் தற்போதைக்கு இவைதான்.

இதன் தரவுகளை இடை மறிக்க முடியாது. ஆப்டிகல் டிரைவ் மற்றும் சென்சார் கொண்டது. CATS எனும் காம்பேக்ட் ஏர் டீம்மிங் சிஸ்டம் பொறிமுனைக் கீழ் இயங்குகிறது. மிகப் பெரிய விமானங்களில் கொண்டு செல்ல முடியும். தாக்குதல் நடத்தி விட்டு மீண்டும் வந்து விமானத்தோடு தானாகவே வந்து இணைந்து கொள்ளும் செயல் திறன் கொண்டதாக இருக்கிறது. நமது இலகு ரக தேஜஸ் விமானத்தோடு கூடவே தனித்தனியாகவும் பறக்கும். மிகப் பெரிய விமானங்களை இடை மறித்து தாக்குதல் நடத்த முடியும்.

சிறிய அளவிலான தாக்குதல் ட்ரோன்களை தாக்கி அழிக்கவும் இதனால் முடியும். இந்திய வான் படைக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்கிறார்கள் பார்த்த அனைவரும். நாளை 5 ஆம் தேதி வரை கண்காட்சியில் வைக்கப்பட்டு இருக்கும். வேண்டுமானால் ஒரு நடை வந்த பாருங்கள்.

இந்திய ராணுவ தொழில்நுட்ப துறையினரின் ஓர் துளி மாத்திரமே காட்சி படுத்தப்பட்டு இருக்கிறது. இனி வரும் காலங்களில் மிக பெரிய திடலும் போதாது போகலாம்.

பார்த்து விட்டு சொல்லுங்கள் இந்திய வான் படையின் வலிமை எத்தகையது என்று........ யார் கண்டது

உங்களுக்குள்ளும் #அபிநந்தன் எட்டிப் பார்க்க கூடும்.

 


நன்றி இணையம்