பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியின் சாதனைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:50 | Best Blogger Tips
Image may contain: 3 people, people smiling, people standing and text


பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியின் சாதனைகள் கீழே தெளிவாக தந்துள்ளேன்

பிரதமர் மோடி அவர்களின் 69 வது பிறந்தநாளான செப்டம்பர்17ம் தேதி பாரத பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் நடந்துள்ள சாதனைகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வோம்

=====================================

1)
அனைவருக்கும் வீடு திட்டம் வாயிலாக வீடுகட்டும் அனைவருக்கும் 2லட்சம் இலவசமாக வழங்க படுகிறது , வங்கியில் வீடு கட்ட அல்லது வீடு வாங்க 2லட்சத்து 65ஆயிரம் மானியம் மோடி அவர்களின் மத்தியரசு தருகிறது

2) ஸ்வாட்ச் பாரத் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை திட்டம் வாயிலாக 12ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்க படுகிறது

3)உஜ்ஜவாலா யோஜனா திட்டம் இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்கி கேஸ் அடுப்பு வழங்கப்பட்டு வருகிறது

4)கேஸ் மானியம்
இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் அரபுநாடுகளில் கேஸ் விலையை சிலிண்டர் 1000 ரூபாய்க்கு மேல் உயர்த்திய போதும், மக்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் கேஸ் மானியம் 515 ரூபாய் கொடுத்து கேஸ் சிலிண்டர் மக்களுக்கு 485 ரூபாய் குறைந்த விலையில் கொடுத்து வருகிறது

5)லட்சக்கணக்கான விலையில் விற்பனை செய்யப்பட்ட உயிர் காக்கும் cardiac Stents and knee replacement Implants மிக குறைந்த விலையில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது.

6)அத்தனை மாவட்டங்களிலும் மலிவு விலையில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

7)அரசு பணியில் உள்ள பெண்கள் பேறுகால விடுப்பு மூன்று மாதத்தில் இருந்து ஆறரை மாதமாக நீட்டிப்பு சம்பளத்தோடு கூடிய விடுப்பு வழங்கி வருகிறார்கள்

8)காங்கிரஸ் அமல்படுத்திய 17வகையான மறைமுகமாக பலமுனை வரிகளை ஒழித்து GST ஒரு முனை வரி ஆக்கியது

9)காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எண்ணெய் 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய் வரை கடுமையாக விலை உயர்வு பெற்று விற்பனை செய்ததை ஒழித்து விலைவாசி கட்டுப்படுத்த GST கொண்டு வந்த பிறகு எண்ணெய் விலை 50 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டது ..

10)இதேபோன்று பருப்பு விலை 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய்க்கு மேல் போனது தற்போது மோடி ஆட்சியில் பருப்பு விலை 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய்க்குள் விலை குறைக்கப்பட்டது

11)திடீரென்று நடக்கும் அகால மரணங்களால் நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு பேருதவியாக மாதம் ஒரு ரூபாய்க்கு இரண்டு லட்சம் விபத்து காப்பீடுதினம் ஒரு ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு இரண்டு லட்சம்
12)மருத்துவ காப்பீடு
ஆயுஷ்மான் பாரத் திட்டம் வாயிலாக உலகத்திலேயே அதிகமான மக்கள் பயன்பெறும் அதிக ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு

13) மதமாற்றம் செய்ய அன்னிய கைக்கூலியாக செயல்படும் கொள்ளை கூட்ட பல ஆயிரம் போலி NGO அமைப்புகளுக்கு தடை

14) மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த 2014க்கு பிறகு மத கலவரம் இல்லை,

15) மோடி 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரவாதிகள் குண்டுகள் வைத்து அப்பாவி மக்களை படுகொலை செய்ய முடியவில்லை

16)அனைத்து மக்களுக்கும் ஜன்தான் வங்கி கணக்கு,
பிரதமர் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் வாயிலாக குறுகிய காலத்தில் 31 கோடி வங்கி கணக்குகள் ஆரம்பித்து கின்னஸ் சாதனை நிகழ்ந்தது

17)புதிதாக துவங்கிய வங்கி கணக்கில் 82 ஆயிரம் கோடி டெபாசிட் மக்கள் செய்து சாதனையாக சேமிப்பு செய்யும் பழக்கம் உருவாக்க பட்டுள்ளது

18)தனிப்பட்ட கடன் வட்டி 14.25% சதவீதத்திலிருந்து 9.76% சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது

19)அஞ்சல் துறை வாரியாக
பொன்மகள் சேமிப்பு திட்டம்
பொன்மகன் சேமிப்பு திட்டம் போன்ற புதிய சேமிப்பு வாயிலாக குழந்தைகளுக்கு சிறப்பான திட்டம் கொண்டு வரப்பட்டது

20)ஆதார் எண் மூலமாக மூன்றரை கோடி போலி கேஸ் இணைப்புகள் கண்டறியப்பட்டு அதனால் ஏற்பட்ட 50ஆயிரம் கோடி இழப்பு தடுக்கப்பட்டது

21)டிஜிட்டல் இந்தியா திட்டம் வாயிலாக பணம் இல்லாத டிஜிட்டல் முறை வழி செலவு 207.98டிரில்லியன்கள் ஆக சாதனை நடத்தி காட்டி உள்ளது

22) பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வஙுகி கணக்கு துவங்கி அவரவர் வங்கி கணக்கில் மத்தியரசு ஊக்க தொகை, உதவிதொகை, ஸ்பெஷல் காலர்ஷிப் ஆகியவற்றை மாணவர்கள் வங்கி கணக்கிலேயே நேரடியாக சென்றடைய நேர்மையான அரசு நிர்வாகம் நடக்க நடவடிக்கை

23)மீன்வளம் காக்க மீன் வளர்ப்பு மானியம்

24) தோட்டக்கலை வளர்க்க விவசாயிகளுக்கு மானியம்

25) இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ரசாயனம் உரங்களை தடுக்க தொடர்ந்து முயற்சித்து மானியம் தருகிறது

26)விவசாயிகள் நலன் பாதுகாக்க விவசாய இடு பொருள் 75%வரை மானியம் விவசாய கருவிகளுக்கு 50% மானியம் வழங்கி வருகிறார்கள்

27)விவசாயிகள் பண்ணை குட்டை அமைக்க 2லட்சம் வரை மானியம் தரப்படுகிறது

28)விவசாயிகளுக்கு 1.5 மடங்கு MSP அதிகரிப்பு.

29)விவசாயிகளுக்கு உண்மையில் பயிர் விளைவித்து பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு உரிய பயிர் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது
(
போலி விவசாயிகள் கடனுக்கு தள்ளுபடி இல்லை )

30) மத்தியரசு வேலைவாய்ப்பு உருவாக்க தொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

31) மின்சாரம் உற்பத்தியில் உலகின் மூன்றாவது நாடாக உயர்த்தி இந்தியாவில் மின்வெட்டு இல்லாமல் பாதுகாத்தது

32) சுதந்திரமடைந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக 1 கோடி குடும்பங்களுடன் 19,000 கிராமங்களில் மின்சாரம் கிடைத்தது. இந்த திட்டத்தை நிறைவேற்றிட 1000 நாட்களில் திட்டமிடப்பட்டது ஆனால் காலக்கெடுவிற்கு முந்தைய நாள் 2 நாட்களுக்கு முன்னதாகவே 998 இந்த திட்டம் நிறைவேற்றி சாதனை.

33) காங்கிரஸ் ஆட்சியில் கபடநாடக அரசியலில் சிக்கி தவித்த
காவேரி பிரச்சினையை தீர்வுகாண காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டது

34) ஜல்லிக்கட்டு விளையாட்டை தடுக்க அன்னிய கைக்கூலி மத மாற்று கும்பல்கள் சதியை முறியடித்து தமிழ் இந்துக்கள் தெய்வீக பாரம்பரிய விளையாட்டை காப்பாற்றியது

35) இந்தியா சீனா எல்லை பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசம் ஆற்றின் குறுக்கே பாலம்

36) விண்வெளி துறை நவீனத்துவ படுத்தி 4 செயற்கைக்கோள் விடப்பட்டுள்ளது

37) வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்களை காப்பாற்ற மிகச்சிறப்பாக செயல்படும் வெளியுறவு துறை

38)வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு அந்த அந்த நாட்டிற்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று
உரிய சம்பளம்
உயிர் பாதுகாப்பு
ஆயுள் காப்பீடு இழப்பு தொகை
விபத்து காப்பீடு இழப்பு தொகை
சம்பந்தமாக ஒவ்வொரு நாட்டிலும் ஒப்பந்தம் போட்டு நமது இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

39)வெளிநாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்க பிரதமர் மோடி இதுவரை முயற்சி செய்து பல நபர்கள் மீட்டுள்ளார்.

40) இலங்கையில் காங்கிரஸ் ஆட்சி துணையுடன்தான் ஒன்னரை லட்சம் தமிழர்களை கொன்றனர்
மோடி ஆட்சியில் தமிழர்களுக்கு ஆதரவாக பாதுகாப்பாக உள்ளார்கள்

41)இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்க்கை முன்னேற்றம் மேம்படுத்தும் நடவடிக்கையை பிரதமர் இலங்கையில் நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உணவு மருத்துவ வசதி இதையெல்லாம் உடனடியாக செய்தார்.

42)தமிழர்களுக்கு ஒரு லட்சம் குடியிருப்பு வீடுகளையும் இலவசமாக கட்டி தந்துள்ளார்.
பள்ளிக்கூடங்கள் கட்டி தந்துள்ளார்
மருத்துவமனைகள் கட்டி தந்துள்ளார்
மேலும்

43)இலங்கை அரசுக்கு இந்திய அரசு கடுமையாக கட்டுபாடு உருவாக்கி தமிழர்களின் உயிருக்கும்
தமிழர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு
உரிய உத்தரவாதம் உருவாக்கியவர் நமது பிரதமர் மோடி அவர்கள் தான்.

44) காங்கிரஸ் ஆட்சியில் 1600 இந்திய மீனவர்கள் கொலை செய்த இலங்கை கடற்படை அட்டூழியம் அடக்கி வைத்து மோடி ஆட்சியில் ஒரு மீனவர்களை கூட இலங்கை கடற்படை கொல்லவில்லை

45) இலங்கையில் 5 பேரை துக்குதண்டனையில் இருந்து காப்பாற்றியது

46) 2014க்கு பிறகு எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது

47) ராணுவம் நவீனத்துவப்படுத்தப்பட்டு நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது,

48) உலக வல்லரசாக உள்ள அமெரிக்காவின் டாலர் வர்த்தக முறையை இந்திய ரூபாய் முறைக்கு மாற்ற நடவடிக்கை
49) டாலர் இல்லாமல் நமது ரூபாய் மதிப்பில் கச்சா எண்ணெய் இறக்குமதி,

50) உலகெங்கும் உள்ள நாடுகளுடன் நட்புறவு,

51) வரலாற்றில் 70 வருடங்களுக்கு பிறகு இஸ்ரேல் சென்ற இந்திய பிரதமர் மோடி
2017
ல் இஸ்ரேலுடனான ஏற்றுமதி 3,100 கோடி டாலர்..

51) வெளிநாட்டு தொழில் முதலீட்டை இந்தியாவில் தொழில் தொடங்கியது

52) ரயில்வே துறை நவீனத்துவ படுத்தி அதிவேக ரயில் கொண்டு வரப்பட்டது, இரட்டை ரயில் பாதை நாடுமுழுவதும் அமைத்து கொண்டு வர பணிகள் தொடர்ந்து நடக்கிறது

53) சூரிய மின்சக்தியை அதிகரித்திட மானியம் தருகிறது

54) உள்நாட்டு நதி நீர் வழி போக்குவரத்து யமுனா நதியில் கொண்டு வரப்பட்டது அத போன்று நாடுமுழுவதும் நதி நீர் வழி போக்குவரத்து கொண்டு வர பணிகள் தொடர்ந்து நடக்கிறது

55) தேசிய நதி நீர் இணைப்பு தொடர்ந்து முன்னோட்ட பணிகள் நடக்கிறது

56) மருத்துவ கல்லூரியில் கோடியில் ஏலம் விடப்பட்டு வந்த மருத்துவ சீட் முறையினால், மதிப்பெண் குறைவாக எடுத்த பணக்காரர்கள் கோடி ரூபாய் கொடுத்து மருத்துவ சீட் வாங்கி அறிவற்ற மருத்துவர்கள் உருவாவதை தடுக்கவும், மதிப்பெண்கள் அதிகமாக வாங்கிய ஏழை மாணவ மாணவிகளுக்கு பணம் இல்லாத காரணத்தால் மருத்துவ சீட் கிடைக்காத அவல நிலையை ஒழித்திடவும் NEET தேர்வு கொண்டு வந்தது.

57) சீனா பாகிஸ்தான் போன்ற எதிரி நாடுகள் பயத்தில் இருப்பதற்கு மோடி அவர்களின் கம்பீரமான அரசே காரணம்

58)காங்கிரஸ் ஆட்சியில் அருணாசல பிரதசேத்தை ஆக்கிரமித்த சீனா மோடி ஆட்சியில் வெளியேறி கூட்டு ராணுவப்பயிற்சி நடத்துகிறது.

58) இதுவரை இந்திய வரலாற்றில் காங்கிரஸ் ஆட்சியில் லட்சக்கணக்கான கோடி கடன்களை உலக வங்கியிலிருந்து கடன்களை வாங்கி வாங்கி தான் ஆட்சி செய்து இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் மூன்று லட்சம் கடனில் பிறக்கும் நிலையில் அறுபது ஆண்டுகள் அவல ஆட்சியை ஒழித்து 2014க்கு பிறகு மோடி ஆட்சியில் வெளி நாடுகளில் உலக வங்கியில் ஒரு ரூபாய் கூட கடன்களை வாங்காமல் ஆட்சி செய்கிறார்கள், அதோடு குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் வாங்கிய கட்சிகளை வட்டியும் முதலும் அடைத்து வருகிறார்கள்

59) காங்ரஸ் ஆட்சியில் நாற்பது வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த சென்னை ICF தொழிற்சாலையை திறந்து சர்வதேச அளவிற்கு உயர்த்தியது.

60) Demonetization நடவடிக்கையை தொடர்ந்து பழைய 500, 1000 ரூபாய் ஒழித்து அனைவரின் பணத்தையும் வங்கி கணக்கிலே நேரடியாக கொண்டு வந்த பிறகு வரி செலுத்தி வருபவர்கள் எண்ணிக்கை (3,91,00,000) கோடியில் இருந்து (6,84,00,000) கோடி நபர்களாக உயர்த்தி வரிஏய்ப்பு செய்தவர்கள் 3 கோடி நபர்களை வரி கட்ட வைத்து நாட்டின் வருவாய் அதிகரித்தது

61) சட்ட பூர்வமாக 99% பணத்தை வங்கி கணக்கில் மீட்டு கொண்டு வந்தது.

62) பாஜக மோடி ஆட்சியில் பணவீக்கம் 4.64% சதவிகிதம் மட்டுமே காங்கிரஸ் மன்மோகன்சிங் காலத்தில் 13.6% இருந்தது.

63) பாஜக ஆட்சியில் பட்ஜெட் நிதி பற்றாக்குறை 2%, மட்டுமே.
காங்கிரஸ் மன்மோகன் சிங் காலத்தில் இது 8%சதவீதத்தை விட அதிகமாக இருந்தது.

64)பிரம மந்திரி கிராமப்புற சாலை இணைப்பு திட்டம் வாயிலாக குக்கிராமத்தில் இருந்து அருமையான முதன்மை சாலை வரை இணைப்பு தரமான தார் சாலைகள் பல ஆயிரம் கிராமத்தில் போடப்பட்டுள்ளது
ஒரு நாளைக்கு ஊரக பகுதியில் சாலைகள் அமைக்கும் வேகம் 134 கி.மீட்டர் வேகத்தில் நடை பெறுகிறது

65) நாளொன்றுக்கு 44கிமீ தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் காலத்தில் அது ஒரு நாளைக்கு 32 கி.மீ.

66) முத்ரா வங்கி திட்டத்தில் 19கோடி இந்தியர்கள் கடன் வாங்கியுள்ளனர்.

67) வங்கியில் பிரதம மந்திரி திட்டம் வாயிலாக கடன்களை எளிதாக பெற்று தொழில் தொடங்க முடிகின்ற காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் 5கோடி நபர்கள் வீதம் கடந்த பாஜக ஆட்சியின் நான்கு ஆண்டுகளில் 20கோடி நபர்கள் சுய வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது

68) வங்கி கடன்களை எளிதாக வாங்கி தொழில் தொடங்க முடிகின்ற காரணத்தால் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 7.2% உயர்வு.

69) இந்தியாவின் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகத்தை எளிதாக்கப்பட்டது

70) ஜான் தண் யோஜனா திட்டம் வாயிலாக ஜீரோ பேலன்ஸில் மக்களுக்கு வங்கிக் கணக்குகளை தொடங்க வைத்து அரசாங்கத்தின் மானியங்கள் இடையில் அரசியல்வாதி அதிகாரிகள் லஞ்சம் இல்லாமல் நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் மானியம் வந்து அடைகிறது

71) பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி ராணுவ அறுவை சிகிச்சை செய்து அடக்கி ஒடுக்கியது

72) இந்தியாவில் உள்நாட்டு தீவிரவாதிகள் மாவோயிஸ்ட்டுகள் நக்சல் மற்றும் இதர பயங்கரவாதம் நசுக்கப்பட்டுள்ளது..

73) திறன் இந்தியா திட்டம் வாயிலாக
இந்தியாவில் தயாரியுங்கள் திட்டப்படி, எலக்ட்ரானிக்ஸ் துறையில் சிறப்பான சாதனை படைக்கப்பட்டு உள்ளது. 2014ல், இந்தியாவில், இரண்டு மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது, இந்த எண்ணிக்கை, 120 ஆக அதிகரித்துள்ளது.

74) தொலை தொடர்பு துறையின் விற்றுமுதல், 2014ல், 19 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது; இந்தாண்டு மார்ச் முடிவில், இது, 1.20லட்சம் கோடி ரூபாயாக 6 மடங்கு அதிகரித்து சாதனை படைத்துள்ளது

75)வெளிநாட்டு முதலீடு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் முதலீடு செய்வது இந்தியாவில் தொழில்துறையைத் தொடங்குவதற்கு Mi (redmi), ஆப்பிள் போன்ற பெரிய மின்னணு நிறுவனங்களை இந்தியாவில் தயாரிப்பு தொழிற்சாலை உருவாக்கியது.
மொபைல் போன்களை இறக்குமதி செய்வதற்கு பதில், தயாரிப்பதில், பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். விரைவில், மொபைல் போன் துறையில், உள்நாட்டு தேவையில், 96 சதவீதம், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என எதிர் பார்க்கப் படுகிறது.இவ்வாறு அவர்கூறினார்.

76)செல்போன் விலை
அன்று காங்கிரஸ் ஆட்சியில் 3G Samsung Cell 15 ஆயிரம் ரூபாய்க்கு க்குமேல் விற்றது
இன்று பாஜக மோடி அவர்களின் ஆட்சியில் 4G Samsung Cell 8 ஆயிரம் ரூபாய்க்கு விலை குறைந்துவிட்டது.

77)காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கு 360
இன்று பாஜக மோடி ஆட்சியில் 30 ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கு 115 ரூபாய்

78)தலித் தலைவர் ஜனாதிபதி :
தமிழக திருமாவளவன் போன்றவர்கள் பாஜக பிராமணர்கள் ஆதிக்கம் நிறைந்த கட்சி இவர்கள் ஒரு தாழ்த்தப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் தருவார்களா? அப்படி இவர்கள் இந்தியாவின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியில் தலித் நபரை நியமிப்பார்களா? என்று பேசினார் ஆனால் இவர் பேச்சு எல்லாம் மோடி காதுகளில் விழ வாய்ப்பு இல்லை அதற்கு முன்பே பிரதமர் மோடி அவர்கள் தலித் குடிமகன் இந்திய குடியரசு தலைவர் வேட்பாளர் ஆக்கி ஜனாதிபதி ஆக்கினார் என்பது மிகப்பெரிய சாதனை

79)முப்படைகளின் ராணுவம் அமைச்சராக இந்திய பாதுகாப்பு தமிழகத்தின் பெண்மணி நிர்மலா சீத்தாராம் அவர்களிடம் கொடுத்து மகளிருக்கு பெருமை சேர்த்தது

80)விளையாட்டு துறை அமைச்சராக ஒரு ஒலிம்பிக் வீரரை நியமித்தார்கள்

81)ஆசிய விளையாட்டு போட்டிகளில் அதிக எண்ணிகையில் பதக்கம் பெற்றது (Securing highest medals in Asian Games)

82) இந்திய அஞ்சல் துறையை காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கியதை மீட்டு நவீன படுத்தினார்கள்
Indian Postal Payment Bank
எல்லாம் அறிமுகம் செய்து சாதனை

83) முத்தலாக் முறையை ஒழிக்க நடவடிக்கை செய்து இஸ்லாமிய பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி உருவாக்க பட்டது (Trying to ban triple தள)

84)தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்த 1.43 கோடி போலி ரேசன் அட்டைகளை governance மூலம் கண்டு அறிந்தது (Deleting 1.43 crore fake cards from Tamil Nadu through e. governance

85)ஆதார் மற்றும் PAN இணைப்பு திட்டம் மூலம் சட்ட ரீதியாக இல்லாத போலி கம்பெனிகளின் லைசன்ஸ் கட் பண்ணியது (Detecting thousands of crores of illegal trade due to linking of Aadhaar and PAN)

86)காதி ஊழியர்களுக்கு மானியம் வழங்கியது (Providing subsidy to employees of Khadhi industry and saving Rs 150 crore)

87)காங்கிரஸ் ஆட்சியில் சீரழிந்து நஷ்டத்தில் இயங்கிய
ஏர் இந்தியா நிறுவனத்தை லாபகரம் ஆக்கியது (Making Air India profitable)

88)இந்தியாவின் யோகா கலையை
உலக யோகா தினம் ஆக்கியது மூலம் யோகா பெருமை உலகறிய செய்ததது (World Yoga Day)

89)குழந்தை கற்பழிப்புக்கு மரண தண்டனை (Death penalty for the rapists of children)

90)அசுத்தமாக பாழடைந்து கிடந்த
கங்கை நதி சுத்தப் படுத்தியது (Cleansing Ganga river)

91) AIIMS மருத்துவ மனைகள் அமைக்க பட்டு வருகிறது (Establishing AIIMS medical college throughout India)

92)Providing visa to several countries

93)ஜப்பானுடன் தொழில் நுட்ப மேம்பட்ட உறவு (Improving bonds with Japan)

94)Nuclear agreements with Russia, Japan, Canada, France

95)புள்ளட் ரயில் திட்டம் (Bullet train project)

96)ஜவுளி விலைவாசியை பாருங்கள்:
அன்று காங்கிரஸ் ஆட்சியில் ஒரு மீட்டர் ஜீன்ஸ் துணி விலை 600 ரூபாய்,
இன்று மோடி ஆட்சியில் ஒரு மீட்டர் ஜீன்ஸ் துணியின் விலை 400 ரூபாய் தான்

97)சாலை அமைப்பு தீவிரம்!
மத்திய அமைச்சகங்களில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை, கடந்த சில
ஆண்டுகளில் சிறப்பான சாதனைகளை படைத்து வருகிறது. இத்துறையில், 2014ம் ஆண்டில், 4,000 கி.மீ., துார சாலைகள் நிர் மானிக்கப்பட்டன. 2018, பிப்ரவரி வரையிலான ஒரு ஆண்டில், 9,000 கி.மீ., துார சாலை நிர்மாணிக்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது.

98)டில்லியை சுற்றி, 'எக்ஸ்பிரஸ் வே' அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. டில்லி - மீரட் இடையே, 'எக்ஸ்பிரஸ் வே' அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இரு சாலைகளும், ஏப்ரலில், பிரதமர்,நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப் பட்டுள்ளது.

99) தொலை தொடர்பில் அசுர வளர்ச்சி:
மத்திய தொலைதொடர்பு துறை இணை அமைச்சர், மனோஜ் சின்ஹா தலைமையில், பாரத் நெட் என்ற பெயரில், கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின் றன.கடந்த, 2014, ஜூனில், இணையதள பயன்பாட்டு அடர்த்தி, 75%சதவீதமாக இருந்தது. இது, 2017, செப்டம்பரில், 94 சதவீதமாக அதிகரித்துள்ளது.

100) தொலைதொடர்பு துறையில்; 2015ம் ஆண்டில், 22 லட்சம் வேலை வாய்ப்புகள் தந்தது;
2017
ம் ஆண்டில், 40 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு தந்தது.

101) தேசிய பங்குச்சந்தை புள்ளியை 15000 லிருந்து 36000 ஆகவும் மும்பை பங்கு சந்தையை 5000லிருந்து 15000 ஆக உயர்த்தியது.

102) இந்தியா சுதந்திரம் அடைந்து 2000 ஆண்டுகள் வரை 2% சதவிகித வளர்ச்சி மட்டுமே அடைந்து இருந்து அதை சீர்படுத்தி வாஜ்பாய் அவர்களின் பாஜக அரசு 4% சதவீத வளர்ச்சியாக ஆக்கியது மீண்டும் கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடையவில்லை தற்போது 2014 க்கு பிறகு பிரதமர் மோடி அவர்களின் துரிதமான நடவடிக்கையால் 8% சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது என்று உலக வங்கி அறிக்கை தந்தது. என்பது சாதாரணமான பொதுமக்கள் அறிந்து கொள்ளாத மிகப்பெரிய சாதனை ஆகும்

103) இந்திய பொருளாதார வளர்ச்சி மோடி பிரதமர் ஆனபிறகு 2,60,000 கோடி டாலர் பொருளாதார வளர்ச்சி அடைந்து உலக அளவில் பொருளாதாரத்தில் 6வது இடத்தில் உயர்ந்துள்ளது என்று உலக வங்கி 2018 ஜூன் மாதம் அறிவிப்பு செய்தது. இதேபோன்று நிலை நீடித்தால் 10, லட்சம் கோடி டாலர் மதிப்பு பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைந்து உலகின் மூன்றாவது நாடக உயரும் என உலக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்

104) இந்திய அரசியல் வரலாற்றில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்யாத அரசே கிடையாது ஆனால் 2014க்கு பிறகு மோடி ஆட்சியில் ஊழல் இல்லாமல் சாதனை ஆட்சி நடக்கிறது. இதை சீர்குலைக்கும் முயற்சியில் ரபேல் விமான ஒப்பந்தம் ஊழல் என்று காங்கிரஸ் மிகப்பெரிய பொய்யான செய்தியை பரப்பி வந்தது இதற்கு சம்மட்டி அடி போல் உச்சநீதிமன்றம் ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடக்கவில்லை என்று தீர்ப்பு கூறிவிட்டது. ...

105)மன் மோகன் ஆட்சியில் நூறு நாள் வேலை.. 100ரூபாய்கள் மட்டுமே சம்பளம்..தான் அன்று எவ்வளவு விலைவாசியை பாருங்கள் இன்று மோடி ஆட்சியில் நூற்றிஐம்பது நாள் வேலை.. 200ரூபாய்கள் சம்பளம்.

106)அன்று காங்கிரஸ் ஆட்சியில் சாதாரண கொத்தனார் சம்பளம் 350 ரூபாய்கள் தான்
இன்று மோடி ஆட்சியில் 750 ரூபாய்கள்

107)அரசு ஊழியர்களுக்கு 50% முதல் 100% சம்பளம் பே'கமிஷன் உயர்த்தி உள்ளது.

108)இப்படி எல்லாம் சாதாரணமான தொழிலாளர் முதல் அரசு ஊழியர்கள் வரை சம்பளம் இரண்டு மடங்காக உயர்வு அடைந்து உள்ள நிலையில்
பணம் வரவு அதிகம் ஆனால் விலைவாசிகளும் இரண்டு மடங்காக ஏறவேண்டும்மே? ஆனால் ஏறவில்லையே!!

109) பாஜக அரசின் பிரதமர் மோடி அவர்களின் சிறந்த பொருளாதார கொள்கை மற்றும் சிறந்த நிர்வாக செயல்படுகளால் சம்பளம் உயர்வு அதிகரித்த போதும் பொருட்கள் விலைவாசியும் குறைந்து இருக்கிறது
என்றால் இது பொற்கால ஆட்சிதானே...

110)உலக வல்லரசு தலைவர்கள் எல்லாம் மதிக்க கூடிய ஒரே பிரதமர் மோடி அவர்கள்தான்

அதனால் இந்தியன் என்றால் தலைநிமிர்ந்து நடக்க வைத்த எங்கள் பிரதமர் மோடி அவர்களின் ஆட்சி
பொற்கால ஆட்சி தான் என்று கர்வத்தோடு நெஞ்சம் நிமிர்த்தி
என்னால் முடிந்த விளக்கம் தந்து உள்ளேன்.

===============================
கடந்த நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு
மோடி அவர்களின் ஆட்சியில் நடந்துள்ள சாதனைகளை எனக்கு தெரிந்த தகவல்களையும்,

எனக்கு தெரியாத தகவல்களை துறை ரீதியாக தேடி எடுத்தும் வாட்ஸ்ஆப்பில் கொஞ்சம் கொஞ்சமாக மூன்று இரவுகள் டைப் செய்து அதை ஒரே பதிவாக இணைத்து கடந்த 14-12-2018ம் தேதி எனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன்

அதை தான் தற்போது மீள் பதிவாக போட்டு உள்ளேன்
இந்த பதிவு படம் கூட மொபைல் ஆப் வழியாக நானே ஏதோ எனக்கு வந்த வரை டிசைன் செய்தேன்
சாதாரண சக சாமான்ய மனிதராக எனக்கு தெரிந்த என் ஞாபகத்தில் உள்ள மோடி அவர்களின் ஆட்சியில் நடந்துள்ள சாதனைகளை எழுதி உள்ளேன்
இன்னும் ஏராளமான சாதனைகளை பிரதமர் மோடி ஆட்சியில் நடத்தி உள்ளார்கள்,

அதெல்லாம் மக்கள மத்தியில் தெரியவில்லை என்பது தான் தமிழகத்தில் பாஜகவின் பின்னடைவுக்கு காரணம்
பிரதமர் மோடி அவர்களின் சாதனைகள் என்னென்ன என்று தமிழக பாஜகவின் தலைமை பிரதமர் மோடி அவர்களின் 69 வது பிறந்தநாளான செப்டம்பர்17ம் தேதி இதற்கான பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்....

Thanks to 
Image may contain: 1 person, close-up
சிவ.பரமசிவம்
Siva Paramasivam
திருவாரூர்