பயனுள்ள அழகுக் குறிப்புக்கள்………..

மணக்கால் அய்யம்பேட்டை | 2:08 PM | Best Blogger Tips
பயனுள்ள அழகுக் குறிப்புக்கள்………..

* சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உறைத்து பூசி வந்தால், முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும்.

* முருங்கைப் பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும்.

* வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும்.

* அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடல் அழகும் முக அழகும் கூடும்.

* மரிக்கொழுந்து இலையையும் சில ஆவாரை இலைகளையும் சம அளவு எடுத்து அரைத்து தலையில் தடவி வந்தால்,செம்பட்டை முடி கருமையாக மாறும்.

* கணினி, வெல்டிங், வெயில் இவற்றில் வேலை செய்பவர்கள் பலருக்கு கண்கள் தக்காளிப் பழம் போல் சிவந்து காணப்பட்டால், வைத்தியம் வேறு ஒன்றுமில்லை. தக்காளிதான். தினம் இரண்டு தக்காளி வீதம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், பத்து நாட்களில் பறந்துபோய்விடும், கண்களின் சிவப்பு.

* சிறிதளவு பப்பாளிப் பழத்தை நன்றாக மசித்து வெடிப்பு வந்த பகுதிகளில் தடவி விடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், கால்களிலுள்ள வெடிப்பு மறைந்துவிடும்.

* வெள்ளை மிளகை ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ) பசும்பாலில் அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

* ஒரு நாளைக்கு 10 அல்லது 12 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், ( அதாவது நினைத்தபோதெல்லாம் தண்ணீர் குடிப்பதை பழக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். ) உதட்டில் வெடிப்பு வராது. காலையில் எழுந்தவுடனும், மாலையிலும் கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்று வந்தாலும் உதட்டில் வெடிப்பைப் பார்க்க முடியாது.