முடக்கு வாதம் இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:07 PM | Best Blogger Tips

முடக்கு வாதம் இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க...

இன்றைய காலத்தில் எந்த ஒரு நோயும் விரைவில் உடலை தாக்குகிறது. அதிலும் சில நேரங்களில் அதிகமாக குனிந்து நிமிர்ந்து வேலை செய்து விட்டால், ஆங்காங்கு வலிகள் ஏற்படும். இதற்கு உடலில் உள்ள எலும்புகளுக்கு போதிய சத்துக்கள் இல்லை என்பது அர்த்தம். ஆகவே உண்ணும் உணவில் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்பது நல்லது. அதிலும் சிலருக்கு மூட்டுகள் மட்டும் அதிக வலியுடன் இருக்
கும். அவ்வாறு வலி ஏற்பட்டால், எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலையில் இருக்கும். அப்படி உங்களுக்கு நீண்ட நாட்கள் வலி இருந்தால், முடக்கு வாதம் (Rheumatoid Arthritis) உள்ளது என்று அர்த்தம்.

முடக்கு வாதம் என்பது நாள்பட்ட மூட்டுவலி. அதாவது இந்த நோய் வந்தால் பெரும்பாலும் வளையக்கூடிய மூட்டுகளில் உள்ள சதைப் பகுதி மற்றும் திசுக்களை பாதித்து, அதன் செயல்பாடுகளை குறைத்துவிடும். அதிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களை விட, மூன்று மடங்கு அதிகமாக பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் இந்த முடக்கு வாதம் நுரையீரல், இதயத்தை சுற்றியிருக்கும் பெரிகார்டியம், நுரையீரலைச் சுற்றியுள்ள ப்ளியூரா, கண்ணின் வெள்ளை பகுதியான ஸ்கிளிரா போன்ற இடங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் இந்த முடக்கு வாதத்தை சரிசெய்ய நிறைய சிகிச்சைகள் உள்ளன.

சரி, இப்போது அந்த முடக்கு வாதம் எந்தெந்த இடங்களை எல்லாம், தாக்குமென்று பார்ப்போமா!!!

முழங்கால்கள்

முழங்கால்களில் வீக்கம் ஏற்பட்டால் நடக்கவே முடியாது. இவை அடிக்கடி ஏற்படுவதற்கு அந்த இடத்தில் உள்ள மூட்டுகளுக்கான திரவம் அதிக அளவில் சுரப்பதால் வீக்கம் ஏற்பட்டு, கடுமையான வலி வருகிறது. அதிலும் இது அடிக்கடி முட்டியில் இடித்தாலோ அல்லது முட்டிக்கால் போடுவதால், அதிகம் ஏற்படுகிறது.

தோள்பட்டை மற்றும் முழங்கை

எப்போதும் முடக்கு வாதத்தில் பாதிக்கப்படும் இடங்களில் முக்கியமான ஒரு பகுதி தான் தோள்பட்டை. இந்த வலி ஏற்பட்டால், எந்த ஒரு பொருளையும் தூக்க முடியாது. எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது. ஏன் கையை கூட அசைக்க முடியாத நிலையில் நீண்ட நாட்கள் வலி ஏற்படும்.

கண்கள்

முடக்கு வாதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் பெரும்பாலும் வறட்சியுடன் காணப்படும். மேலும் மற்ற கண் பிரச்சனைகளான கருவிழியில் வீக்கம் அல்லது கண்ணின் வெள்ளை பகுதிக்கு செல்லும் இரத்த குழாய்களில் வீக்கம் போன்றவையும் இதற்கு காரணங்களாகின்றன. அந்த வீக்கம் கண்களில் சிவப்பு நிறத்தில் வீக்கத்துடன் காணப்படும்.

கழுத்து மற்றும் தாடை

சில நேரங்களில் கழுத்து நிறைய வலியுடன் இருக்கும். இவ்வாறு வலியானது நீண்ட நாட்கள் ஏற்பட்டால், கழுத்துடன் இணைந்துள்ள தாடையிலும் வலி ஏற்படும்.

நுரையீரல் மற்றும் இதயம்

இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்பட்டால், சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, அவையே அனீமியாவை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு சரியான இரத்த ஓட்டமில்லாமல், அதைச் சுற்றியுள்ள பகுதியில் வீக்கம், இதய நோய் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இந்த முடக்கு வாதம் வந்தால், உடல் எடை குறைந்துவிடும்.

கைகள் மற்றும் மணிக்கட்டு

முடக்கு வாதம் கைகள் மற்றும் மணிக்கட்டுகளில் கூட அதிகம் ஏற்படும். அதிலும் அந்த வலி வந்தால், கை விரல்களை சரியாக மடக்கவோ, கைகளை சுழற்றவோ முடியாது. அதிலும் இது ஏற்படுவதற்கு கைகள் எப்போதும் ஒரே நிலையில் நீண்ட நேரம் இருந்தால், சரியான இரத்த ஓட்டம் இல்லாமல், அந்த இடத்தில் புண் அல்லது வீக்கம் போன்றவை ஏற்படும்.

பாதம் மற்றும் கணுக்கால்

இந்த நோய் வந்தால், முதலில் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்று தான் பாதம் மற்றும் கணுக்கால். இந்த இடத்தை தான் முதலில் முடக்கு வாதம் தாக்கும். இவை வந்தால், அதிக வலியுடன், நடக்கக்கூட முடியாமல் இருக்கும்.
—