விவசாயிகளையும், விவசாயத்தையும் அடுத்த கட்டத்திற்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 9:18 AM | Best Blogger Tips

 


இந்த வேளாண் சட்டம் என்பது தீவிரமாக ஆராய்ந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம்..!

 

இந்த சட்டத்தால் மண்டி புரோக்கர்களுக்கு பலத்த  அடி....

 


விவசாயிகள் என்ற பெயரில் கோடிகள் சம்பாதிக்கும் மண்டி புரோக்கர்கள் போராட்டம் செய்தார்கள்....

 

நரேந்திரமோதிஜி தீவிர ஆராய்ந்தது கொண்டு வந்த சட்டத்தை அவ்வளவு சீக்கிரம் வாபஸ் வாங்க மாட்டார் ஏனென்றால் உண்மையான விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட சட்டம் அது.....

 

இது கண்டிப்பாக வாபஸ் வாங்கியது போன்று தெரியவில்லை. அவர்கள் வாயாலே அந்த சட்டம் வேண்டும் என்று கூற வைக்கும் திட்டமாக இருக்கும் என்று தான் கருதுகிறேன்....

 

பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி க்குள் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக எதிர்ப்பாளர்கள் கூக்குரலிட்டு கொண்டே இருந்தார்கள்...

 

பொறுமையாக இருந்த மத்திய அரசு திடீரென பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி க்குள் கொண்டு வருவதற்கான ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டத்தை கூட்டியது....

 

அந்த கூட்டத்தில் முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்தது திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ...

 

அன்றோடு ஜிஎஸ்டி யில் பெட்ரோல் டீசல் விலையை கொண்டு வர  வேண்டும் என்ற போலி கூக்குரல் நின்றது....

 

அடுத்து பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு நரேந்திரமோதி ஜியும் மத்திய அரசும் தான் காரணம் என்று அதே கும்பல் மீண்டும் கூக்குரல் இட்டது...

 

சில நாட்களில் மத்திய அரசு திடீரென தீபாவளிக்கு முதல்நாள் தங்களது வரியான எக்ஸைஸ் வரியை பெட்ரோலுக்கு 10 ரூபாயும் டீஸலுக்கு 5 ரூபாயும் குறைத்தது. அதோடு மாநில அரசுகளையும் அவர்களின் வாட் வரியை குறைக்கும்படி வலியுறுத்தியது. 

 

அதன் பின்னர் உடனடியாக பாஜக ஆளும் மாநிலங்கள் பெட்ரோல் டீசல் விலையை அதிரடியாக குறைத்தது...

 

திமுக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்கள் குறைக்கவில்லை.. கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா குறைக்க முடியாது என்று கூறியது...

 

தமிழகத்தில் திமுக இது தொடர்பான பேச்சுகளில் நவ ஓட்டைகளையும் அடைத்துக் கொண்டுவிட்டது.

 

இப்பொது பெட்ரோல் டீசல் விலையை பற்றி யாரும் வாய் திறப்பதுதில்லை ....

 

அது போன்று தான் இதுவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.....

 

அவர்கள் வாயால் அல்லது உண்மையான விவசாயிகள்  வேளாண் சட்டம் வேண்டும் என்று கூற வைக்கும் திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்த தயாரான பிறகே இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பார் என்று நினைக்கிறேன்......

 

கண்டிப்பாக மண்டி புரோக்கர்களுக்கு அடி பணிய மாட்டார் நரேந்திரமோதிஜி..!


நன்றி இணையம்

வேளான் சட்டம் வாபஸ் என்பது மோடியின் தோல்வியா?

மணக்கால் அய்யம்பேட்டை | 9:18 AM | Best Blogger Tips

 



ஃபேஸ்புக்கில் இருப்பவர்களில் 5% கூட இதன் அர்த்தமும் தெரியாது அதன் இடைத்தரகர்கள் வலியும் தெரியாது என்பது எதார்த்தம்.  முதலில் அவர்கள் விவசாயிகளாகவே இருக்க மாட்டார்கள், அல்லது அவர்களுக்கு அந்த அனுபவம் இருந்திருக்காது. அதனால் மோடிக்கு ஒரு பின்னடைவு என்று தான் சார்ந்த கட்சி எனும் கண்ணாடி மாட்டிக்கொண்டு  வெற்றியாக பார்ப்பவர்கள் ஒருபுறம். அதை அவர்கள்  பெரும் வெற்றியாக கொண்டாடி, அதை வைத்துக்கொண்டு மோடி மீது இருந்த தீராத வெறுப்பை காட்டி பெரும் தோல்வி என்று ஒரு புறம் வர்ணிக்க, இது என் கௌரவ குறைச்சல், அவரைவிட அதை ஆதரித்த எனது நிலைக்கு ஏற்பட்ட மானபங்கம் என்ற நிலையில் மோடியின் மீது கோபம் கொண்டாலும் அதை வேறு வழியில் சமாளிக்க மறுபுறம் அவரின் ஆதரவாளர்கள் முயல்வதும் மனிதனின் இயல்பு. ஏனெனில் நாம் எல்லாம் சாதாரண வறட்டு கௌரவத்திற்கு நம்மை அறியாமல் அடிமையானவர்களே! அதனால்தான் நம்மை காலம் காலமாக எமோஷனலாக பிரித்து, நம்மை எளிதாக அரசியல்வாதிகள் இன்றும் ஆழ்கிறார்கள், இன்னும் ஆழ்வார்கள்.

 


இதை எப்படி பார்ப்பது? இதன் அர்த்தம் என்ன? ஒரு விவசாயியின் மகனாக என் அனுபவத்தில் நடந்ததை எழுதுகிறேன்!

 

இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் இது ஏற்கனவே இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு சற்றேரக்குறைய இது போன்ற சட்டம் நடைமுறையில் கொண்டு வந்து விட்டார்கள். அதை செய்த முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதுவும் என் நினைவு சரியாக இருப்பின் இதை கொண்டு வந்தது திமுகதான். அப்படி இருக்க அதையே இன்று மோடி செய்ததால் எதிர்க்கிறார்கள் என்று சிரிப்பதா? அழுவதா? என்றால் இது என்ன பெரிய விஷயம் நாங்கள் முந்தைய ஆட்சியில் கையெழுத்து போட்டதையே இந்த ஆட்சியில் எதிர் கட்சியாக எதிர்த்து போராடும் அவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல! இதை எல்லாம் கட்சியின் ஆதரவாளர்கள் ஒரு போதும் பார்க்க போவதில்லை, அடிமைத்தனம் கண்களை மறைப்பதால்.

 

எங்கள் பள்ளி பருவத்தில், பருத்தி, புகையிலை போன்ற குறிப்பாக பணப்பயிரை விற்க வேண்டுமெனில் லைசென்ஸ் பெற்ற ஒரு சில இடைத்தரகர்களே பக்கத்தில் இருக்கும் தாராபுரத்தில் இருப்பார்கள். கம்பு, சோளம், நெல் போன்றவற்றிக்கும் பிரச்சினை உண்டு என்றாலும், அது எல்லாம் விவசாயிகளுக்குள் பண்ட மாற்று முறையில் கொடுத்து வாங்கி கொள்வதால் அதற்கு பெரும் பிரச்சினை எங்கள் ஊரில் இருந்தது இல்லை. இந்த இடைத்தரகர்களுக்கு எங்களுக்கும் தலை முறை தலைமுறையாக ஒரு வகையான புரிதல் (கடன்தான்) இருக்கும். அதனால் வேறு வழி இல்லாமல் அடிமாட்டு விலைக்கு அவர்களிடம் மட்டுமே கொடுக்க முடியும்.  அதுவும் விளைவிக்கும்போது அல்லது தேவைப்படும்போது எங்களுக்கு அரசு கொடுக்கும் விவசாய பயிர் கடன் எல்லாம் குறித்த காலத்தில் கிடைக்காது. அதனால் அந்த இடைத்தரகர்களிடம்தான் வட்டிக்கு கடன் வாங்குவோம். அதற்கு 100 க்கு 4 லிருந்து 2 வரை வட்டி காலத்திற்கு ஏற்ப கொடுக்க வேண்டும். அப்படி நாம் கடன் வாங்கி விட்டால் நாம் வேறு மண்டியில் அந்த பொருளை விற்க அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அது அவர்களுக்குள் உள்ள புரிதல். பெரும்பாலும் அந்த மண்டிகள் ஒரு உறவை சேர்ந்தவர்களானதாகவே இருக்கும்

 

உதாரணமாக பருத்தி விற்க வேண்டுமெனில் அவர்களிடம் போய் முதலில் சொல்லிவைக்க வேண்டும். அவர்களிடம் இருந்து பஞ்சு போட சாக்கு பைகளை முதலில் வாங்கவேண்டும். ஆனால் அதைக்கூட கேட்கும் நேரத்தில் கொடுக்க மாட்டார்கள். அதனால் களத்தில் கிடக்கும் பருத்தி காய்ந்து எடை ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே போகும். எடை குறையத்தான் சாக்கை வைத்துக்கொண்டே இல்லை என்று சொல்கிறான் என்று அவர்கள் சூட்சுமம் பற்றி என் தாத்தா சொல்வார். அப்படி மண்டிக்கு நடையாய நடந்து சென்று கெஞ்சாத குறையாக கேட்க வேண்டும், ஏனெனில் அப்போது போன் எல்லாம் இல்லை. சில நேரங்களில் அதற்கு சிறு விவசாயிகளுக்கு ரெகமெண்டெஷன் வேறு தேவைப்படுவதுண்டு.

 

இது எல்லாம் முடிந்து சாக்கு கிடைத்து வண்டியில் பஞ்சை ஏற்றிக்கொண்டு சென்று அவர்கள் குடோனில் சேர்க்க வேண்டும். அப்போது எடை பார்க்க ராத்தல் மெஷின் என்று சொல்வார்கள், அதில் நாம் ஏற்கனவே களத்தில் போட்டு பார்த்த எடையை விட குறைவாக வரும். சண்டை போட்டுத்தான் வித்தியாசத்தை குறைக்க வேண்டும். பல சிறு விவசாயிகளிடம் அந்த ராத்தல் கூட இல்லை என்றால் அவர்கள் ஏமாற்றி சொல்லுவதே முடிவான எடையாகிவிடும்.

 

இது எல்லாம் முடிந்து கடைசியில் கணக்கு பார்த்தால் அவர் கொடுத்த கடனுக்கு வட்டி குட்டி போட்டு வாங்கிய கடனைக்கூட கட்ட  முடியாமல் போகும். பிறகு என்ன, அதை வைத்துத்தான் பெரிய பிளான் போட்டிருப்போம், எனவே வேறு வழியில்லாமல் மீண்டும் கெஞ்சி கடன் வாங்க வேண்டும். ஏனெனில் நமக்கு வேறு வழியே இல்லை, அவர்களைத்தவிர வேறு யாரிடமும் விற்க முடியாது. இப்படியே கடன் கொடுத்து வட்டி என்ற கணக்கில் அட்டையாக விவசாயியின் ரத்தத்தை அந்த காலத்திலேயே உறிஞ்சினார்கள் என்றால் அரசியல் வியாதிகளால் இந்த மண்டிக்காரர்களுடன் கூட்டணி வைத்து ஆளப்படும் இன்று எப்படி இருக்கும்?

 

இப்படி அந்த இடைத்தரகர்கள் செய்த அட்டூழியங்கள் மிக மோசமானவை. அவற்றை தமிழக அரசு நீக்கி, அரசு சார்ந்த விற்பனை சாவடிகளை கொண்டுவந்தபின் அட்டூழியங்கள் பெருமளவில் குறைந்து போய் விட்டது. இன்று கூட இது போன்ற இடைத்தரகர்கள் இங்கு உண்டு, ஆனால் கூட்டுறவு மண்டிகள் இருப்பதால் அவர்கள் கட்டுப்பாடு வெகுவாக குறைந்துள்ளது.

 

இந்த இடைத்தரகர்கள் மூலம் மட்டும் விற்கும் அடிமைத்தனம் இன்றும் பஞ்சாப், ஹரியானா, மஹாராஷ்டிரா போன்று வெகு சில மாநிலங்களில் மட்டுமே உள்ளது. இவர்கள் மூலம் கோடிக்கணக்கான கமிஷன் அரசியல் வாதிகளுக்கு போவதால் இதை அவர்களும் சேர்ந்து கடுமையாக எதிர்க்கிறார்கள்.

 

அப்படி இருக்க விவசாயி இதற்கு எதிராக ஏன் போராடவில்லை?

 

விவசாயிகள்தான் ஏற்கனவே கடன் வாங்கி அவர்களிட அடிமையாக உள்ளார்களே, அதை மீறி அரசுக்கு ஆதரவாக போராட போனால் அவர்களிடம் உள்ள குண்டர்கள் மூலம் கடனை உடனே கொடுக்கச்சொல்லி கட்டாயப்படுத்துவார்கள். அப்போது ஒரு விவசாயிக்கு உதவ இன்னொரு விவசாயி வர முடியாது. அப்படியே வரும் விவசாயிகள் இப்படி மாசக்கணக்கில் எல்லாம் போராட முடியாது. ஏனெனில் கால்நடைகளை பார்க்க வேண்டும், பயிருக்கு நீர் பாய்ச்ச, பால் கறக்க என்று நேரம் தவறாமல் செய்தே ஆக வேண்டியது அவன் விதி. அது மட்டுமல்ல விவசாயிகளிடம் ஒற்றுமை என்பதெல்லால் ஒரு காசுக்கு கூட கிடையாது. அரசாங்கமும் கமிஷன் கொடுக்கும் மண்டிகள் கைவசம் இருப்பதால், அவர் மீறி போலீஸில் புகார் கொடுத்தால், நம் மீதே நாலு வழக்கில போட்டு உள்ளே வைத்துவிடுவார்கள், அவ்வளவு செல்வாக்கு அவர்களுக்கு.

 

இது எல்லாம் விவசாயிக்கே புரியாத புதிராக இருக்கும்போது விவசாய தினத்தன்று ஃபேஸ்புக்கில் அல்லது வாட்சப்பில் வாழ்த்தும் நமக்கா புரியப்போகிறது?

 

இந்த அவலங்கள் எல்லாம் தன் மகனோ, மகளோ படக்கூடாது என்பதற்குத்தான் ஆடு மாடுகளை, தோட்டத்தை விற்று எங்களை எல்லாம் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினார்கள் எங்கள் பெற்றோர்கள். அந்த கஷ்டம் இப்போது என் குழந்தைகளுக்கே தெரியாதபோது விவசாயத்திற்கு தொடர்பே இல்லாதவர்களுக்கா புரியப்போகிறது?!

 

எனவே இது மோடியின் தோல்வி என்பதை அரசியல் கட்சிகள் கூறலாம், ஆனால் மேற்சொன்ன மாநில விவசாயிகளின் மிக மோசமான தோல்வி என்பதை விட விதி என்பதே சாலப்பொருந்தும்.

 

இதில் மோடி அரசியல் செய்ய வில்லையா? ஆம் இன்று பஞ்சாபில் கூட்டணிக்காக அம்ரீந்தர் சிங்கின் அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்று அரசியல் இருப்பதை மறைக்க முடியாது. ஆனால் இது மோடியால் மாற்ற முடியாதது அல்ல, சமயம் சாதகமாக இல்லாததால் தள்ளிப்போகிறது என்பதே என் நம்பிக்கை! அது இதை ஒரு விவசாயியின் மகனாக எதிர்த்து போராட முடியாத என் இயலாமையின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

 

விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே வழி சரியானவர்களை தேர்தலில் தேர்ந்தெடுப்பதே! அது முடியாமல் போனால் விடியாத விடியலை நோக்கி காத்திருக்கும் விவசாயிகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

குறிப்பு: அனுபவம் கொண்ட விவசாயிகள் உங்கள் அனுபவங்களை பகிருங்கள். அது மற்றவர்களுக்கு புரிய வைக்க உதவும்! 

 


🐶

Thanks to Indhea


நாதுராம்விநாயக்கோட்சே

மணக்கால் அய்யம்பேட்டை | 1:02 PM | Best Blogger Tips



நாதுராம்விநாயக்கோட்சே.

இன்று நவம்பர் 15 கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள்.

 

இன்றளவும்

காத்திருக்கும் தேசபக்ததனின் ஹஸ்தி.

 

ஓர் இந்தியனின் ....... இந்துக்களின் ஆன்மா.

 

  பிறப்பு யாருக்கும் தெரியாமல் போகலாம். ஆனால் இறப்பு சரித்திரமாக  இருக்கவேண்டும். அந்த சரித்திரம் உன்னதமான விஷயத்தை கொண்டு இருக்க வேண்டும் அல்லது உன்னத விஷயத்தை தாங்கி பிடித்த வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

 

இப்படி பாடம் சொன்ன வாத்தியார் தான் நாதுராம் விநாயக் கோட்சே. ஆம் இவர் பள்ளியில் வகுப்பாசியராக சுவைபட, பொருள் பட சொல்லிக்கொடுப்பதில் வல்லவர்.அப்படி தான் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். அனைவரிடமும் மென்மையாக பழக கூடியவராக இருந்திருக்கிறார்.

 


1910 ஆம் ஆண்டு பூனே அருகில் உள்ள பாராமதியில் விநாயக் வாமனராவ் கோட்சே, லக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் இவர்.

 

#நாதூராம் என்பதே ஒர் பட்டப்பெயர் தான். நம்ம ஊர் பெருமாள் பிச்சை என்பது போல.

 

அவரின் பெற்றோர்களுக்கு பல குழந்தைகள் பிறந்து இறந்து சமயத்தில் அடுத்தாக பிறக்கும் குழந்தைக்கு மூக்கு குத்தி நேர்ச்சை செய்வதாக வேண்டி பிறந்த குழந்தை ஆணாக இவர் பிறந்தார். ஆனாலுமே கூட வேண்டிக்கொண்டது போல் இவருக்கு மூக்கு குத்தப்பட்டு சுமார் 9 வயது வரை மூக்குத்தி அணிவித்து இருந்தனர் அவரது பெற்றோர். பின்னாளில் மூக்குத்தி அகற்றப்பட்ட பின்னரும் அந்த ஓட்டை மறையாமல் இருந்து வந்தது. அதனால் தான் அந்த மூக்கு ஓட்டையை, நாசி துவாரத்தை அடையாளப் படுத்தும் பட்டப் பெயர் நாதூராம்.

 

பல சமயங்களில் பல இடங்களில் இதன் பொருட்டு கிண்டல் கேலி பேசிய சம்பவம் நடந்துள்ளது.

 

ஆனாலும் ஆசிரியராக திறம் பட பாடம் நடத்துபவர் என்று பெயர் எடுத்தார். எந்த சூழ்நிலையிலும் அதிர்ந்து பேசாமல் சாத்வீகமாக அதே சமயம் தீர்க்கமாக கருத்துக்களை முன் வைத்து ஆழமாக பேசக்கூடியவர் என்று பெயர் எடுத்து இருந்தார்.  அமைதியான பயந்த சுபாவம் கொண்டவராக இருந்திருக்கிறார். இவர் பிறப்பால் ஒரு பிராமணர். ஆம் நாதூராம் விநாயக் கோட்சே  பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.

 

அதனால் காந்தி வேதத்தை குறித்து தவறான கண்ணோட்டம் கொண்ட நபராக தவறான பல கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவதாக இவருக்கு சொந்த அபிப்ராயம் இருந்திருக்கிறது. போதாகுறைக்கு  இந்துக்கள் படும் அல்லல்களுக்கு இவரது தவறான போதனைகள் தான் காரணம் என்று திடமாக சொல்லி வந்திருக்கிறார். வர்ணாசிரம தர்மத்தை குறித்து தவறான பிரச்சாரம் செய்து வேதத்தை தவறு சொல்லி புதிதாக தான் ஒரு குலத்தை உண்டு பண்ணி இருப்பதாக சொன்னார் காந்தி. அதற்கு #ஹரிஜன் என்று பெயர் கொடுத்திருந்தார்.

 

இதனை எல்லாம் பொறுக்க மாட்டாமல் அவரிடம் கேள்வி கேட்க..... காந்தியோ அதனை உதாசீனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.,

 

ஆதலால் அவரை திருத்துவதை காட்டிலும் கொல்வதே சரி என்று முடிவுக்கு வருகிறார்கள் பலரும் அன்றைய நாளில். காரணம் காந்தி முஸ்லிம்கள் மீது காட்டிய கரிசனம்....  இன்றைய தேதி காந்தியை எந்த ஒரு இஸ்லாமியரும் மதித்ததில்லை என்பது வேறு விஷயம்.

 

🔥காந்தியை கொல்ல துடித்த, அல்லது கொல்ல முயற்சி செய்த பலருள் இவர் மாத்திரமே அத்திட்டத்தை தனித்து நிறைவேற்றி இருந்தார். .

 

💥🍀சுதந்திரம் வேண்டி போராடிய ஆரம்ப காலத்தில் இருந்தே முஸ்லிம் மக்கள் பெரிதாக இதில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தனர், பின்னர் காங்கிரஸ் கட்சியின் குளறுபடிகளால் தங்களுக்கு என்று தனியாக ஒரு தேசம் வேண்டும், இந்துக்கள் தங்களை தங்கள் நாட்டில் 🍀🔥 (((((நன்கு கவனியுங்கள், இந்தியா இந்துக்களின் தேசம் என்பது முஸ்லிம் லீகின் அன்றைய வாதம்)))))) நிம்மதியாக வாழ விட மாட்டார்கள் என்று கலகக் குரல் உயர்த்தினார்கள்.

 

இஃது பெரிய அளவில் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் சுபாஷ் சந்திர போஸை தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தில் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட பொறுப்பில் இருந்த கிட்டத்தட்ட 13 பேர் வாக்கு அளித்து சுபாஷ் சந்திர போஸை தேர்ந்தெடுத்து இருந்தனர். எதிராக அதாவது போஸை எதிர்த்து போட்டியிட்ட நேருவிற்கு இரண்டு வாக்குகள் மாத்திரமே பதிவாகி இருந்தது. ஆனாலும் காந்தியின் சமரச முயற்சிக்கு பின்னர் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறு தேர்ந்தெடுக்க அவர் சொன்ன காரணம் முஸ்லிம் மக்கள் நம்மோடு இணைந்து செயல்பட நேரு தான் சரியான தேர்வாக இருக்கும், சுபாஷ் சந்திர போஸ் அல்ல என்பது அவரின் அன்றைய அரசியல் பார்வை.

 

இதுவே காங்கிரஸ் கட்சியில் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது, போஸ் கட்சியை விட்டே வெளியேறினார். இஃது நேரு செய்த மிகத் தந்திரமான நடவடிக்கை என்று சொன்னவர்களும் உண்டு. எப்படி நேரு தன் பிறந்த நாள் நவம்பர் 14 ஆம் தேதியை, குழந்தைகள் தினம் என்று சொல்லி கொண்டாட வைத்தாரோ ........ அதுபோலவே தான் இதுவும்....

 

காந்தியை பொருத்தமட்டில் உணர்ச்சி பிழம்பாக நின்ற இந்துக்கள் இந்திய தேசத்தின் பால் கொண்ட பற்றின் காரணமாக இது நாள் வரை பலவிதங்களில் பதம் பார்த்த முஸ்லிம் மக்களை ஏதேனும் செய்து விடுவார்கள் என்று மனப்பூர்வமாக நம்பினார். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தினரின் எண்ணவோட்டம் வேறு மாதிரி இருந்தது. தாங்கள் தான் வாள் முனையில் இந்த தேசத்தை வென்று ஆட்சி செய்து வருகிறோம், தங்களிடம் இருந்து பெறப்பட்ட ராஜியங்களை சுதந்திரத்திற்கு பிறகு தங்களிடமே அதாவது தங்கள் சமூகத்தவரிடமே ஒப்படைக்க வேண்டும், அது தானே நியாயம் என்று பேச ஆரம்பித்து விட்டனர்.

 

இஃது கல்கத்தாவில் எதிரொலித்தது #நவக்காளி விழா சமயத்தில். பல அக்கிரமங்கள் நடந்தது, பலர் மாண்டனர். காந்தி வந்தார்

ஒரு வார்த்தை கண்டனம் இல்லை. மாறாக அவர்களை, இஸ்லாமியர்களை மன்னித்து விட சொன்னார். கொந்தளித்து போனார்கள் இந்துக்கள். அவர்களின் இழப்பு அப்படி பட்டது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார். தலையில் அடித்துக் கொள்ளாத குறை அன்றிலிருந்த பலருக்கும்.

 

அடுத்ததாக பிரிவினை ஏற்பட்டு பாகிஸ்தான் உருவானது. சொத்தை பிரிப்பது போல் இந்திய கஜானாவை திறந்து ரூபாய் 30,00,000 லட்சம் பாகிஸ்தானுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றார்.பலரும் எதிர்த்தனர். சிறுக சிறுக தரலாம், தவிர நமக்கும் அத்தியாவசிய செலவினங்கள் இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார், சட்டை செய்ய வில்லை மனிதர்.

ஆனால் பின்னாளில் அந்த தொகையை கொண்டு தான் காஷ்மீர் பகுதியில் பழங்குடி மக்களை தூண்டி இன்று வரை பிரச்சினையாக காஷ்மீர் தத்தளிக்கும் சம்பவங்கள் வரிசையாக நடந்தது.

 

🔥காந்தியின் பல செயல்பாடுகள் ஒரு தலை பட்சமாக, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இருந்தாக பல சர்ச்சைக்கள் எழுந்தது.  அவரின் அரசியல் கண்ணோட்டம் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பதாக பல கண்டன குரல்கள் வலுத்துள்ளது அந்நாளில். எவையெல்லாம் சொல்லி தேசத்தை கூறுப்போட்டனரோ அவை அனைத்தும் பின்னாளில் பாகிஸ்தானில் நிறைவேற்றினர் என்கிறது சரித்திரம். பிரிவினையின் போது பாகிஸ்தான் வசம் பகுதியில் 27% இந்துக்கள் மற்றும் 3.2%பேர் வரை மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் வசித்து வந்த நிலையில் இன்று 2.9%பேர் மாத்திரமே மொத்தத்தில் மாற்று மதத்தினர் அங்கு வசித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 27+3.2=30.2% சதவீதத்தில் வெறும் 2.9%மாத்திரமே உள்ளனர். இதில் இந்துக்களின் நிலை?????

 

ஆனால் இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் அன்றைய இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 8.7% இருந்தவர்கள் இன்று 31% உயர்ந்துள்ளனர்.

 

கோட்சே குறித்தான இன்றைய தலைமுறையினர் பார்வை வேறு. அவரை RSS காரர் என்றும் இந்து மத வாதி என்றும் தவறான அபிப்ராயம் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

 

சரி விஷயத்திற்கு வருவோம்.

காந்தியின் அகிம்சை வழி மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறை மிகவும் முரண்பாடுகளை கொண்டது.

 

இதற்கு சாட்சியாக காந்தியின் சத்திய சோதனை இருக்கிறது. இன்றும் கூட அந்த புத்தகத்தின் பல பக்கங்கள் அடல்ட்ஸ் ஒன்லி ரகம் என்கிறார்கள் பலரும். மனிதர்  65 வயதில் நம்மூர் கமல் ஹாசன் இந்நாளில் செய்யும் பல லீலைகளை அந்நாளில் பரிசோதனை என்று பெயர் கொடுத்து செயல் படுத்தியவர். இதற்கு இன்றளவும் அந்த புத்தகமே சாட்சி...

 

காந்தியை சுட்ட பின்பு கோட்சே அந்த இடத்திலேயே துப்பாக்கியை திருப்பி பிடித்துக் கொண்டு அசையாமல் நின்று கொண்டு இருந்திருக்கிறார்.

பலரும் இதனை அவர் தற்கொலை செய்து கொள்ள உத்தேசித்து இருந்தார் என்றனர். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு அங்கு இருந்த வேறு யார் மீது துப்பாக்கி குண்டுகள் வெடித்து விட கூடாது என்பதற்காக அப்படி செய்ததாக சொன்னார்.

 

🍀⭕நாதூராம் விநாயக் கோட்சே மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற சமயத்தில் அவரின் வாதம் இந்திய நீதித்துறை வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஒன்று.

 

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் பல குளறுபடிகள் நடந்தது. காந்தி உடலில் நான்கு குண்டுகள் இருந்தது என்பவர்கள் உண்டு. நாதூராம் பயன்படுத்திய துப்பாக்கியில் இருந்து இரண்டு தோட்டாக்கள் மாத்திரமே அவர் உடலில் கண்டெடுக்கப்பட்டது என்பவரும் உண்டு. இல்லை இல்லை துப்பாக்கியில் இருந்து மூன்று முறை சுட்டார் என்று நேரில் பார்த்தவர்களின் சாட்சியாக பதிவுகள் சொல்கிறது.

 

இது போக காந்தி சுடப்பட்டு கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் உயிருடன் இருந்திருக்கிறார். பிரேத பரிசோதனை அறிக்கையில் இதனை உறுதி செய்து இருக்கிறார்கள். பத்து நிமிட நேர தொலைவில் மருத்துவமணை அருகில் இருந்தும் அங்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வில்லை. இது ஏன் என்று யாராலும் விளக்கம் சொல்ல முடியவில்லை. இப்படியாக பல மர்ம முடிச்சுகள் இந்நிகழ்வில் இன்றளவும் விடை தெரியாத மர்மங்களாகவே இருக்கிறது. இதற்கு ஆதாரமாக பல பத்திரிகைகளில் வந்த செய்திகள், நீதிமன்ற வழக்கில் தாக்கல் செய்த ஆவணங்கள் உள்ளன. கைப்பற்றிய துப்பாக்கி யாருடையது என்றோ, அதில் மீதம் இருந்த குண்டுகள் குறித்த பதிவுகளோ காணக் கிடைக்க வில்லை.

 

 

🧲ஆனால் நாதூராம் விநாயக் கோட்சே தனது வாக்குமூலத்தில் மிக தெளிவாக தாம் செய்த செயலுக்கு உச்ச பட்ச தண்டனையை தரும் படி நீதிமன்றத்தில் பேசி இருக்கிறார். தான் அவரை கொல்ல வேண்டும் எவ்வளவு பிரயத்னம் செய்தேனோ அந்த அளவிற்கு இந்த செயலுக்கு தண்டனை கொடுக்கும் படியும், மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் படியாக அது இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார். எனது நோக்கம் சரி என்றாலுமே கூட எனது செயல் தவறு என்று பேசியுள்ளார். ஒரு தேர்ந்த ஆசிரியர் போல் இவர் நீதிமன்றத்தில் பாடம் எடுத்தவர் என்று பதிவு செய்து இருக்கிறார்கள்.

 

 அநேகமாக ஒரு கொலைக்குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இந்த அளவிற்கு நேர்மையாக நேர்த்தியாக தனக்கு தண்டனை தரச் சொல்லி விவாதங்களை முன் வைத்தது நீதிமன்ற வரலாற்றில் நடந்தது இல்லை.

 

அதனாலேயே அவரது கடைசி ஆசை என்ன என்று கேட்டு அதனை நிறைவேற்ற நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்திருந்தது. இவரும் தன்னை தன் குல வழக்கப்படி தகனம் செய்து அந்த ஹஸ்தியை பரந்த விரிந்த அகண்ட பாரதம் உருவாக்கும் சமயத்தில் மூன்றாக பிரித்து அங்குள்ள ஜீவநதிகளில் கரைக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன் வைத்திருக்கிறார். அதன் பொருட்டு அவரது ஹஸ்தி இன்றளவும் அரசு சார்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 

ஒரு சகாப்தம் நிப்சத்தமாக முடிந்தது அவ்வளவே. ஆனால் ஒன்று மாத்திரம் நிச்சயமான உண்மை, சுடப்பட்ட சமயத்தில் காந்தி ஹேராம் என்று சொல்லி இருக்க வாய்ப்பில்லை. அதுபோலவே உடனடியாக அவர் சாகவும் இல்லை.

 


   ஜெய் ஹிந்த்.

நன்றி இணையம்

சமஸ்கிருதம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:23 PM | Best Blogger Tips

 







பற்றிய இந்த 20 உண்மைகளை அறிந்த பிறகு நீங்கள் இந்தியன் என்பதில் பெருமை கொள்வீர்கள்

 

எந்த இந்தியனையும் தலை நிமிர்த்தும் சமஸ்கிருதம் பற்றி சில உண்மைகள்

 

சமஸ்கிருதம் அனைத்து மொழிகளுக்கும் தாயாக கருதப்படுகிறது.

 

சமஸ்கிருதம் ′′ உத்தர்காண்ட் ′′ இன் ஆட்சிமொழி

 

இஸ்லாமிய படையெடுப்பு என்ற குறுக்கீடுக்கு முன் சமஸ்கிருதம் இந்தியாவின் தேசிய மொழியாக இருந்தது.

 

நாசாவின் கருத்துப்படி, சமஸ்கிருதம் பூமியில் பேசப்படும் மிக ′′ தெளிவான மொழி ′′ ஆகும்.

 




உலகில் எந்த மொழியையும் விட சமஸ்கிருதத்தில் அதிக வார்த்தைகள் உள்ளன.

 

தற்போது சமஸ்கிருத அகராதியில் ' 102 பில்லியன் 78 கோடியே 50 லட்சம் வார்த்தைகள்

 

சமஸ்கிருதம் எந்த பாடத்திற்கும் ஒரு ′′ அற்புதமான புதையல் ′′ ஆகும். 

யானைக்கு சமஸ்கிருதத்தில் 100 க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பது போல 

 

நாசாவில் சமஸ்கிருதத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ′′ 60,000 கையேடுகளை நாசாவில் வைத்துள்ளது. இதில் நாசா ஆராய்ச்சி செய்கிறது.

 

ஜூலை, 1987 ல் கணினி மென்பொருட்கள் உருவாக்க சமஸ்கிருதம் ′′ சிறந்த மொழியாக ′′ கருதப்பட்டது - ஃபோர்பார்ஸ் இதழ்

 

சமஸ்கிருதத்தில் வேறு எந்த மொழியையும் ஒப்பிடும்போது, குறைந்த வார்த்தைகளில் வாக்கியம் நிறைவடைகிறது.

 

உலகின் ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே, நாக்கின் எல்லா தசைகளை பேசுவதில் பயன்படுத்துகிறது.

 

அமெரிக்க இந்து பல்கலைக்கழகத்தின் படி சமஸ்கிருதத்தில் பேசுபவர் BP, நீரிழிவு, கொலஸ்ட்ரால் முதலியவற்றிலிருந்து விடுவிக்கப்படுவார்.

சமஸ்கிருதத்தில் பேசுவது, மனித உடலின் ′′ நரம்பியல் ′′ எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்,

ஒரு நபரின் உடல் நேர்மறையான உணர்வுடன் சுறுசுறுப்பாக மாறுகிறது.

 

சமஸ்கிருதம் ′′ ஸ்பீச் தெரபி ′′ செறிவு மேம்படுத்துதலும் உதவியாக உள்ளது

 

கர்நாடக ′′ மூதூர் கிராம ′′ மக்கள் சமஸ்கிருதத்தில் மட்டுமே பேசுகிறார்கள்.

 

சுதர்மா", சமஸ்கிருதத்தின் முதல் நாளிதழ்...1970 ல் தொடங்கியது

ஆன்லைன் பதிப்பு ′′ இன்றும் கிடைக்கிறது.

 

ஜெர்மனியில் அதிக அளவில் சமஸ்கிருத ஆசிரியர்கள் தேவை உள்ளது.

Germany ஜெர்மனியின் 14 பல்கலைக்கழகங்களில் ′′ சமஸ்கிருதம் ′′ கற்பிக்கப்படுகிறது. 

 

நாசா விஞ்ஞானிகளின் படி, விண்வெளி பயணிகளுக்கு ஆங்கிலத்தில் செய்தி அனுப்பிய போது... அந்த செய்தி வார்த்தைகள் இடம் மாறியதால் தலைகீழாக மாறியது. இதனால் அந்த செய்தியின் அர்த்தம் மாற்றப்பட்டது.

அவர்கள் பல மொழிகளை பயன்படுத்தினார்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் இதே பிரச்சனைதான் வருகிறது.

கடைசியில் சமஸ்கிருதத்தில் செய்தி அனுப்பினார் ஏனென்றால் சமஸ்கிருத வார்த்தைகள் திருப்பினாலும் பொருள் மாறுவதில்லை. அதாவது

 

अहम् विद्यालयं गच्छामि।

विद्यालयं  गच्छामि अहम्।

गच्छामिअहम् विद्यालयं ।

 

மூன்று விதமாக எழுதப்பட்ட வாக்கியங்களின் அர்த்தத்திற்கும் வித்தியாசம் இல்லை.

 

கணித வினாக்களை கணினியால் தீர்க்கும் முறை என்றால் அல்காரிதம், ′′ சமஸ்கிருதத்தில் ′′ ஆங்கிலத்தில் அல்ல என்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள்.

 

நாசா விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட 6 வது மற்றும் 7 வது தலைமுறையின் சூப்பர் கம்ப்யூட்டர்கள், 2034 இல்  சமஸ்கிருத மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும்,

 

சமஸ்கிருதம் கற்பது மனதை கூர்மையாக்குகிறது மற்றும் நினைவுகளின் சக்தி அதிகரிக்கிறது.

அதனால்தான் லண்டன் மற்றும் அயர்லாந்தின் பல பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.

 

இந்த நேரத்தில் உலகின் 17 க்கும் மேற்பட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களில் இருந்து குறைந்தது ஒரு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப கல்வி பாடங்களில் சமஸ்கிருதம் படிக்கப்படுகிறது.

 

தூற்றுவோர்   தூற்றினாலும்

உண்மைகள் என்றும் நீண்ட நாட்கள் உறங்காது இது தான் உண்மை தன்மையின் உண்மை



முதலி 

நன்றி இணையம்