விவசாயிகளையும், விவசாயத்தையும் அடுத்த கட்டத்திற்கு

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:18 | Best Blogger Tips

 


இந்த வேளாண் சட்டம் என்பது தீவிரமாக ஆராய்ந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம்..!

 

இந்த சட்டத்தால் மண்டி புரோக்கர்களுக்கு பலத்த  அடி....

 


விவசாயிகள் என்ற பெயரில் கோடிகள் சம்பாதிக்கும் மண்டி புரோக்கர்கள் போராட்டம் செய்தார்கள்....

 

நரேந்திரமோதிஜி தீவிர ஆராய்ந்தது கொண்டு வந்த சட்டத்தை அவ்வளவு சீக்கிரம் வாபஸ் வாங்க மாட்டார் ஏனென்றால் உண்மையான விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட சட்டம் அது.....

 

இது கண்டிப்பாக வாபஸ் வாங்கியது போன்று தெரியவில்லை. அவர்கள் வாயாலே அந்த சட்டம் வேண்டும் என்று கூற வைக்கும் திட்டமாக இருக்கும் என்று தான் கருதுகிறேன்....

 

பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி க்குள் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக எதிர்ப்பாளர்கள் கூக்குரலிட்டு கொண்டே இருந்தார்கள்...

 

பொறுமையாக இருந்த மத்திய அரசு திடீரென பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி க்குள் கொண்டு வருவதற்கான ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டத்தை கூட்டியது....

 

அந்த கூட்டத்தில் முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்தது திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ...

 

அன்றோடு ஜிஎஸ்டி யில் பெட்ரோல் டீசல் விலையை கொண்டு வர  வேண்டும் என்ற போலி கூக்குரல் நின்றது....

 

அடுத்து பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு நரேந்திரமோதி ஜியும் மத்திய அரசும் தான் காரணம் என்று அதே கும்பல் மீண்டும் கூக்குரல் இட்டது...

 

சில நாட்களில் மத்திய அரசு திடீரென தீபாவளிக்கு முதல்நாள் தங்களது வரியான எக்ஸைஸ் வரியை பெட்ரோலுக்கு 10 ரூபாயும் டீஸலுக்கு 5 ரூபாயும் குறைத்தது. அதோடு மாநில அரசுகளையும் அவர்களின் வாட் வரியை குறைக்கும்படி வலியுறுத்தியது. 

 

அதன் பின்னர் உடனடியாக பாஜக ஆளும் மாநிலங்கள் பெட்ரோல் டீசல் விலையை அதிரடியாக குறைத்தது...

 

திமுக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்கள் குறைக்கவில்லை.. கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா குறைக்க முடியாது என்று கூறியது...

 

தமிழகத்தில் திமுக இது தொடர்பான பேச்சுகளில் நவ ஓட்டைகளையும் அடைத்துக் கொண்டுவிட்டது.

 

இப்பொது பெட்ரோல் டீசல் விலையை பற்றி யாரும் வாய் திறப்பதுதில்லை ....

 

அது போன்று தான் இதுவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.....

 

அவர்கள் வாயால் அல்லது உண்மையான விவசாயிகள்  வேளாண் சட்டம் வேண்டும் என்று கூற வைக்கும் திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்த தயாரான பிறகே இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பார் என்று நினைக்கிறேன்......

 

கண்டிப்பாக மண்டி புரோக்கர்களுக்கு அடி பணிய மாட்டார் நரேந்திரமோதிஜி..!


நன்றி இணையம்