துபாய் வானில் வித்தை காட்டிய இந்திய தேஜாஸ்.

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:33 | Best Blogger Tips



ஆர்வத்தை அடக்க முடியாமல் பாகிஸ்தானிய விமான ஓட்டிகள் அருகில் வந்து தேஜாஸ் விமானங்களையும் அதன் காக்பிட் வடிவமைப்புகளையும் பார்த்து கொண்டு இருந்திருக்கிறார்கள்.

இது கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். இந்த சர்ச்சை கூட நம் பக்கத்தில் இருந்து அல்ல..... அவர்கள் தேசத்தில்...... எப்படி இந்திய தேஜாஸ் விமானங்களை பார்வையிடலாம் ஆர்வத்தை வெளிப்படுத்தலாம்...... என்று சீனா வேறு எகிறியதாக தகவல்கள் உண்டு.

 

போதாக்குறைக்கு ரஷ்ய தயாரிப்பு ஒற்றை இஞ்சின் இலகு ரக ஐந்தாம் தலைமுறை விமானங்களான செக்மேட்டையும் பதம் பார்த்து இருக்கிறது நம் தேஜாஸ் விமானங்கள். இத்தனைக்கும் நமது விமானம் நான்காம் தலைமுறை விமானங்களாகவே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

 

ஆனால் செயல்திறனில் இரட்டை இஞ்சின் சக்தி கொண்ட ரஃபேல் விமானங்களுக்கு இணையாக செயல்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இன்றைய தேதியில் உலக அளவில் ஒற்றை இஞ்சின் கொண்ட இலகு ரக போர் விமானங்களில் நமது தேஜாஸ் விமானங்கள் தான் முன்னணியில் இருப்பதாகவும் அவர்கள் தீர்மானமாக சொல்கிறார்கள்.

 

ஆரம்பத்தில் ரஷ்ய தயாரிப்பு சுகோய் சூ 75 விமானம், செக்மேட் என்கிற பெயரில் ஒற்றை இஞ்சின் கொண்ட இலகு ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக அதாவது ஸ்டெல்த் தொழில்நுட்ப பண்புகளை கொண்ட விமானமாக காட்சி படுத்தியது.

 

இதனை எப்படியும் இந்தியாவின் தலையில் கட்டிவிட பிரம்ம பிரயத்தனங்களை எல்லாம் செய்து பார்த்தது ரஷ்யா. முன் எப்போதும் இல்லாத வகையில் அவர்களின் விளம்பரங்களிலும் கூட இந்திய விமானப் படை விமானி ஒருவர் இந்த ரக விமானங்களை இயக்க ஆர்வமுடன் காத்துக் கொண்டு இருப்பதாக காதில் பூ சுற்ற பார்த்தார்கள்.

 

இந்தியா உட்பட உலக நாடுகள் எதுவும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. இந்த நிலையில் அந்த ரக விமானங்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு இருப்பதாக ரஷ்ய காட்டிக்கொண்டது.... ஆனால் அவர்கள் செய்த விளம்பர செலவு கூட திரும்பாது போல் தெரிகிறது தற்போது. இதில் என்ன தமாஷ் என்றால்.... இந்த ரகத்திலான விமானத்தை காட்சி படுத்தப்பட்ட பின்னர் இந்திய தேஜாஸ் விமானங்களுக்கு மதிப்பு உயர்ந்து பல நாடுகளில் இருந்து எல்லாம் ஆர்டர் வந்த வண்ணம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரஷ்யர்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றன.

 

வருடத்திற்கு 21 விமானங்களை தயாரிக்க முடியும் என்கிற சூழ்நிலையில்..... தற்சமயம் கைவசம் 145 விமானங்களுக்கான ஆர்டர் குவிந்துள்ளது என்கிறார்கள். சூடான், எகிப்து முதல் மலேசியா வியட்நாம் வரை விமானங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்

 

எப்படியும் துபாய் வான் கண்காட்சி மூலமாக ஐக்கிய அரபு நாடுகளில் ரஷ்யர்கள் தனது செக் மேட்டை தள்ளிவிட தலைகீழாக நின்று கொண்டு இருக்கிறார்கள். இது ஐந்தாவது தலைமுறை விமானங்கள் என்கிறார்கள்...... அமெரிக்க லாக்ஹீட் மார்டீன் நிறுவன தயாரிப்பு F35 இணையானது என்கிறார்கள்....

ஸ்டெல்த் தொழில்நுட்ப பண்புகள் கொண்ட ஒற்றை இஞ்சின் இலகு ரக போர் விமானம் என்கிறார்கள்.... ஆனால் யாரும் மசிந்த பாடில்லை என்பது தான் இதில் உள்ள சுவாரஸ்யமான அம்சம்.

 

அப்படி குட்டிக்கரணம் அடித்து வரும் ரஷ்யாவிடம் நாங்கள் வாங்கிக்கொள்ளலாமா என்று ஒரு நாடு கேட்டிருந்தது. யார் என்று திரும்பி பார்த்த ரஷ்யா தயாரிப்பு நிறுவனம் பின்னங்கால் பிடறியில் பட காத தூரம் ஓடியிருக்கிறார்கள்.

அப்படி கேட்டது வேறு யாரும் இல்லை...... நம் பிரதி பண்ணும் நவீன கால புத்தரான சீனா தான்.

 

வேண்டவே வேண்டாம்....

பிழைக்க விடுங்கள் எங்களை என்று அந்த ரஷ்ய தயாரிப்பு நிறுவனம் சீனாவிடம் மன்றாடாத குறை தான்.

 

பத்து.. இருபது என ஆர்டர் கொடுப்பார்கள்....... சரியாக வேலை செய்கிறாதா என்று சோதித்துப் பார்க்க சாம்பிள் கேட்பார்கள்..... எண்ணி இருபதே நாளில் புத்தம் புதிய பெயரில் இதே விமானம் அச்சு அசலாக சீனாவின் வான் எல்லையில் பறந்துக் கொண்டு இருக்கும்..... மறந்து விடுமா ரஷ்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு..... மிக்கியோன் தயாரிப்பு மிக் ரக விமானங்களுக்கு சந்தை சரிந்ததே இந்த விதத்தில் தான். சீனாவின் சரித்திரம் அத்தகையது.

 

பாகிஸ்தானிய JF-17, சீனா JC 11 இப்படி எல்லாமே மிக் ரக விமானங்கள் தான்.

 

ஆக மொத்தத்தில் இந்திய தயாரிப்பு தேஜாஸ் விமானங்கள் ஆகாயத்தில் பறந்து தன் அசாத்திய திறமையில் வித்தை காட்டி அசத்திக் கொண்டு சீனா ரஷ்யாவிடம் விமானங்களை வாங்கிக் கொள்ளவதாக சொல்லி ரஷ்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அச்சமூட்டி கலங்கடித்திருக்கிறது.

 

இந்திய தயாரிப்பு இலகுரக போர் விமானங்களுக்கே இந்த அளவு எதிர்பார்ப்பு என்றால் வரவிருக்கும் AMCA சீரீஸ் விமானங்களுக்கு...... MMRCA விமான ரகங்களுக்கு...... ஐந்தாம் தலைமுறை விமானங்களுக்கு..... ஆறாம் தலைமுறை ஆளில்லா மற்றும் விமானி இயக்கும் விமான ரகங்களுக்கு....... மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பை இந்திய போர் விமான சந்தை உலக அளவில் ஏற்படுத்தி விட்டது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

 

இது வரவிருக்கும் நாட்களில் இந்தியா மிகப்பெரிய ஆளுமையையும்.... ஆகப் பெரிய ஆயுத சந்தையையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் என்கிறார்கள் அவர்கள். இதன் மதிப்பு மாத்திரமே ஐந்து ட்ரில்லியன் டாலர்கள். சரியாக சொன்னால் ஐந்து, ஐந்து லட்சம் கோடிகள்.

 

💓 ஜெய் ஹிந்த்.



நன்றி இணையம்