இந்த அரசு கொண்டுவந்த வேளான்மை சட்டங்களின் 3
பிரிவு அதாவது பஞ்சாப் சீக்கிய விவசாயிகள் எதிர்க்கும் அந்த சட்டம் ரத்து
செய்யபடுவதாக மோடி தெரிவித்துள்ளார்
இது குருநாணக் ஜெயந்தி அன்று சீக்கியர்களுக்கு
மோடி தெரிவித்திருக்கும் நற்செய்தி, அதுவும் சரியாக இந்திரா பிறந்த நாளில்
சொல்லி காங்கிரஸ் போல் பாஜக பிடிவாத சர்வாதிகார ஆட்சி அல்ல, ராணுவத்தை அனுப்பி சர்வாதிகாரமாக
நசுக்கும் கட்சி இது அல்ல என நிரூபித்திருக்கின்றார் மோடி
அவருக்கு வாழ்த்துக்கள், இது பஞ்சாபியரிடையே பாஜகவினை
வளர்க்கும் இனி அம்ரீந்தர்சிங் பாஜகவுக்கு வரவும் தடை இராது
மோடி வீரசிவாஜியின் சாயல் , அந்த மோடிஜி சிவாஜிக்கு அவர் குரு
தாதாஜி சொன்ன அந்த வார்த்தைகளை மெய்பித்திருக்கின்றார்
"சிவாஜி ஆட்சியில் ஆயிரம் சிக்கல் வரும், சில விட்டுகொடுப்புகளை செய்யாமல்
அரசியல் இல்லை. எல்லா விஷயமும் வெற்றிபெறும் என எண்ணாதே அது நடக்காது
சில விவகாரங்களில் விட்டு கொடுத்தல் அவசியம், குடிகளிடம் வீண் வதந்தியும் பதற்றமும்
பரவி நாட்டில் குழப்பம் நிலவுமானால் நீ பின்வாங்க தயங்காதே, சில இடங்களில் பின்வாங்குவது
ஆட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது
உன் பிடிவாதத்தையும் விடாத போராட்டத்தையும்
எதிரியிடம்தான் காட்ட வேண்டும், சொந்த மக்களிடம் விட்டு கொடுக்கவும்
இறங்கி செல்லவும் தயங்காதே, அவர்களுக்காகத்தான் நீ ஆளுகின்றாய்
என்பதை மறக்காதே"
மோடி மிக சரியாக மிக நிதானமாக மிக சரியான
காரணத்தை மிக சரியான நேரம் செய்திருக்கின்றார்
இது விவசாய பொருட்களை விற்பனை செய்யும்
வியாபாரிகள், மண்டி முதலாளிகள் போராட்டத்தின் வெற்றி என
சொல்லமுடியாது, சில விஷயங்களை அனுபவிக்கட்டும் என சொல்லி
அவர்கள் போக்கிலே சென்று திருப்பி எடுக்க வேண்டும் அது ஒரு ராஜதந்திரம்
இனி அவர்களாக வரும்வரை விட்டுவிடலாம்
குருநாணக் பிறந்த நாளில் சுமார் 16 மாத
பிரச்சினையினை முடிவுக்கு கொண்டுவந்திருக்கின்றார் மோடி,
ரத்தமின்றி யுத்தமின்றி பொற்கோவில் சம்பவமின்றி அமைதியாய் பிரச்சினையினை முடித்திருக்கும் அந்த தெய்வமகனுக்கு வாழ்த்துக்கள்
நன்றி இணையம்