சஞ்சீவி மலையும் - ஆடிட்டர் ........

மணக்கால் அய்யம்பேட்டை | 11:53 PM | Best Blogger Tips

நான் நண்பரது வீட்டு 

விழாவிற்கு சென்றிருந்தபோது
ஒரு ஆடிட்டரும் வந்திருந்தார். அவரது வேடிக்கையான பேச்சில் மயங்கி அவரைச் சுற்றி ஒரு கூட்டமே இருந்தது .

நானும் அருகில் சென்று கவனித்தேன். அவர் சொன்ன செய்திகளையே இங்கு தருகிறேன் .


“…. எங்க புரஃபெஷன் ஒரு பவர்ஃபுல்லானது. எங்களால்

ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் . 

வேடிக்கைக்காக எங்கள் வட்டத்தில் உலவும் ஒரு கதையைச் சொல்கிறேன்

கேளுங்கள் .

இராமாயணத்தில் இந்திரஜித்தின் பாணத்தால் அடிபட்டுக் கிடக்கிறான் இலட்சுமணன் . 


அவனைக் காப்பாற்ற சஞ்சீவி

மூலிகையைக் கொண்டு வரும்படிக்கு அனுமன் பணிக்கப்படுகிறான் . 

அனுமன் சஞ்சீவி மூலிகையைத் 

தேடித் தேடி சலித்துப்போய் சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துக்
கொண்டு வருகிறான் . 

இலட்சுமணன் பிழைத்துக் 

கொள்கிறான். யுத்தம் முடிகிறது. அனைவரும் அயோத்திக்குத்
திரும்புகின்றனர் .

அயோத்தி திரும்பிய அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்ததற்கான பயணப் படிக்கு விண்ணப்பிக்கிறார் .

ஆனால் , அவரது பயணப்படி மறுக்கப்படுகிறது .

காரணமாக ஆடிட்டர்/அக்கவுண்டண்ட் சுட்டிக் காட்டிய விபரம் :


1. அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வரும் பயணத்திற்கு

முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை .

2. அனுமன் ஒரு 4th Grade Officer . 

எனவே அவருக்கு வான் வழிப்பயண அனுமதி இல்லை .

3. அனுமன் சஞ்சீவி பர்வதத்துடன் அனுமன் வந்தது excess luggage .

Excess luggage is not allowed .

மேற்கண்ட காரணங்களுக்காக அனுமனின் பயணப்படி மறுக்கப்

படுகிறது என்று எழுதிய ,

ஆடிட்டர்/அக்கவுண்டண்டின் குறிப்பைப்

படித்த அயோத்தி மன்னன் உடனே அனுமனை வரச் சொல்கிறார் .

அனுமனிடன் இது குறித்துச் சொல்ல அனுமனும் கவலை கொள்கிறார்.


“எஜமானே, நீங்கள் இட்ட பணியை செய்யத்தானே பயணிக்கப்பட்டேன் 




அதற்குக்கூட பயணப்படி கிடையாதா "


எனப் புலம்பிய அனுமனைத்

தேற்றிய ராமன் , கோப்பில் ,

‘please re examine ‘ என எழுதி

அரண்மனை ஆடிட்டர்/அக்கவுண்டண்டுக்குத் திருப்பி அனுப்புகிறார் .

கூடவே அனுமனுக்கு ஆடிட்டர்/அக்கவுண்டண்டை நேரில் ஒருமுறை

சந்திக்கும்படியும் அறிவுறுத்துகிறார் .

கவலையுடன் சென்ற அனுமன் 

ஆடிட்டர்/அக்கவுண்டண்ட்டிடம் சென்று
பேசிப் பார்க்கிறார். ஆனால் பயணப்படி கிட்டுவதாக இல்லை . 

இறுதியில்அனுமன்,

” இதோ பார் இந்த பயணப்படியை 
நீ எனக்கு கிடைக்கும்படி
செய்தாயானால் உனக்கு நான் அதில் 20 சதவீதம் பங்களிக்கிறேன்”
என்று சொன்னவுடன் ,

சற்று யோசித்தபிறகு, “சரி நீ போ..உனது பயணப்படி உனக்கு கிடைக்கும்..” என்று பதில் வந்தது .


அதன் பிறகு இரண்டே நாளில் அனுமனின் பயணப்படி sanction

ஆகி அவருக்கு கிடைத்தது . ஆச்சரியத்துடன் அனுமன் அந்தக் 

கோப்பை பார்த்தபோது அதே ஆடிட்டர் அவர் எழுப்பிய query களுக்கு அவரே

clarification எழுதி பயணப்படியை sanction செய்திருந்தார் .

அந்த clarifications :


1. அனுமன் அயோத்தி மன்னனாகிய பரதனின் அனுமதியைப்

பெறாவிட்டாலும் தற்போதைய மன்னனாகிய இராமனின் அனுமதியைப்
பெற்றே பயணித்ததால் அவரது பயணம் அனுமதிக்கப்பட்ட பயணமாகிறது .

2. அனுமன் 4TH GRADE OFFICER என்றாலும் அவசர நிமித்தம்

காரணமாக பயணித்ததால் அவருக்கு வான்வழிப் பயணத்திற்கான
அனுமதி அளிக்கப் படுகிறது .

3. அனுமன் சஞ்சீவி வேரைக் கொண்டுவரப் பயணித்தாலும் தவறான

வேரைக் கொண்டு வந்திருந்தால் மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கும் .

எனவே சஞ்சீவ மலையைக் கொண்டுவந்ததினால் இந்த அதிகப்படியான பயணமும் செலவும் மிச்சமாவதால் இந்த EXCESS LUGGAGE அனுமதிக்கப்படுகிறது…”


என்று கதையை நண்பர் 

சொல்லிக் கொண்டு செல்ல கூடியிருந்தோரெல்லாம் சிரித்து மாய்ந்தனர்.

இங்கே நிறைய விதிகளும் அதில் ஓட்டைகளும் உள்ளன . தப்பு செய்துவிட்டு தப்பிக்க நிறைய வழிகள் இருக்கின்றன .





நன்றி

அன்புடன் 
குரும்பூர் S. ராம்குமார்

*#பணக்கார நாடு.* தமிழ்நாடு

மணக்கால் அய்யம்பேட்டை | 5:49 PM | Best Blogger Tips



சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

#சுமார்40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் #தஞ்சை பெரிய கோவிலும், #கங்கை கொண்ட சோழபுரம்தான்.

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 ல் நிறுவப்பட்டது.

தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் #தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் #மாலிக்கபூரின் முஸ்லிம் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, #500யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். 
ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.

உலகிலேயே ஒரே சீராக #80இலட்சம் ஏக்கர் விளை நிலம் #காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் #மூன்று போகச் சாகுபடிக்குக் #காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன் படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 

அசுவசாஸ்திரம் என்ற குதிரைப் பராமரிப்பு நூல் எழுதப்பட்டது. முதன் முதலில் குதிரைகளுக்கு #லாடம் அடிக்கும் முறையைக் கண்டு பிடித்தவர்கள் #தமிழர்களே!


ஏழுமலையானும் சோழர்களும் 
என்ற நூலில் இருந்து...
இந்து தர்மமும்..
         இந்து கோவில்களும்..

#ஏன் #கோவிலை #கட்டினார்கள்?

ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???

கோயில் பிராமணர்களுக்கு மட்டும் தட்டு காசு கிடைக்க வழி செய்யும் வியாபார ஸ்தலமா ???

பாரத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விசாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை காட்டினார்கள் ???

கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????
🤔🤔🤔🤔🤔

உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ???

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.

இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.

நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம், 

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 

ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 

இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிரைவு வாழ்க்கை. 

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.

உயிருள்ள ஒருவர்,எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம். 

அனைத்து சமூகமும் ஒரே முகமாக ஹிந்து என்ற ஒரு குடையின் கீழ், தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை நமக்கு அளித்ததே ஹிந்து தர்மமும், ஹிந்து  கோயில்கள் மட்டும்தான்.

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது



நன்றி இணையம்

கொரோனா🙏 ... ஆக்க சக்தியா இல்லை ..... ....???

மணக்கால் அய்யம்பேட்டை | 2:55 PM | Best Blogger Tips

 இந்த கற்பனை பதிவு யார் உருவாக்கியது என்று தெரியவில்லை...
ஆனால்
என் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிறது என்பதால் நண்பர்களுக்கு பகிர்வு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்..

_________________________
*மனிதர்களுக்கு என் அன்பு மடல்!*!! 
------------------------------
நான் கொரோனா  பேசுகிறேன்  -----------------------------🎙🎙🎙🎙🎙🎙----

உங்களை அழிப்பது எப்போதும்
 என் நோக்கமல்ல, 

விஞ்ஞானம் வளர்ந்து விட்டது, 

தொழில் நுட்பம் தலை சிறந்து விளங்குகிறது, 

மருத்துவம் மகத்தான நிலையை அடைந்து விட்டது,   
ஆகவே

இயற்கையை விட மனித இனமே உயர்ந்தது என்கிற உங்களின் அகந்தையை அழிப்பதே 
என் நோக்கம் !!! 

*எண்ணற்ற போர் விமானங்களை தயாரித்தீர்கள்* 

எத்தனையோ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கினீீர்கள், 

*அதில் ஏதேனும் ஒன்றை ஏவியாவது என்னை கொன்று விடுங்கள் பார்க்கலாம்*!!! 

*அணுகுண்டு வைத்திருக்கும்*
 நாடு நாங்கள், 
யாரை வேண்டுமானாலும்
 அழித்துக் விடுவோம் 
என்று கர்வத்தோடு பேசி திரிந்தீர்களே!!! 

ஆயிரம் அணுகுண்டை வீசியாவது 
இப்பொது என்னை அழித்து காட்டுங்கள் பார்க்கலாம்!!! 

 *சாதியின் பெயரை சொல்லி உங்களை நீங்களே பிரித்து வைத்தீர்கள்* 
*
ஆனால் உலகையே ஆண்ட
 பிரிட்டிஷ் நாட்டின் இளவரசனையும்
ஒரு வேளை சோற்றுக்கே 
வழி இல்லாத பாமரனையும்
 நான் சமமாய் நடத்துகிறேன் .... 

ஆகவே 
உங்களை விட 
நான் மேன்மையானவனே!!! 

என்னை இகழ உங்களுக்கு 
ஒரு தகுதியும் இல்லை...

*மதங்களின் பெயரை சொல்லி உங்களை நீங்களே கொன்று குவித்தீர்கள்*, 

மதத்தின் பெயரை சொல்லி
 பிழைப்பை நடத்தும் 
யாரேனும் ஒருவரை 
இப்போது அழைத்து

என்னை மறைய செய்யுங்கள் பார்க்கலாம்!!! 

இனியேனும் இது போன்ற
 மனித வைரஸ்களிடம் 
மாட்டிக் கொள்ளாமல் 
சுய அறிவோடு இருங்கள்...

*இந்த பூமியில் உள்ள உங்கள் அனைவருக்கும்* *நான் அளித்திருக்கும் அன்பு பரிசு தான்*
இந்த ""தனிமை" 

அதில் சிறிது காலம் 
வாழ்ந்து பாருங்கள்!!!

 ஜாதி,  மதம்,  ஏழை,  பணக்காரன் என்கிற ஏற்றத் தாழ்வுகளை துறந்து மனிதத்தை உணர்ந்து 
புதிய சிந்தனைகளோடு 
வெளியே வாருங்கள் ... 

*அப்போது நான் உங்களை விட்டு நிரந்தரமாய் விடை பெற்றிருப்பேன்*!!!

*இப்படிக்கு,* 

கொரோனா🙏



உயர்ந்த மாமனிதர் HCL சிவ் நாடார் அவர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:44 AM | Best Blogger Tips

HCL - சிவ் நாடார்.
ஐந்து நிமிட எனர்ஜி கதை !...

ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும் உலக பணக்காரர்கள் வரிசையில் தவறாமல் இடம் பெறும் ஒரு தமிழ் பெயர் சிவ் நாடார். 

இந்த ஆண்டும் உலகின் முதல் நூறு பில்லினியர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கிறது இந்தத் தமிழரின் பெயர்.  ஒரு தமிழர் இவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதில் அவரின் பெருமை இல்லை. அந்தப் பணத்தைக் கொண்டு அவர் செய்யும் நல்ல விஷயங்களில்தான் அவரது பெருமையே இருக்கிறது. 

ஆம். தூத்துக்குடியில் மூலை பொழில் கிராமத்தில் பிறந்து தமிழ் வழி கல்வி பெற்று மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், கோவை கல்லூரியிலும் 
PSG college of Technology BE-EEE 1962-67 ஆண்டு பட்டப்படிப்பை முடித்த சிவ் நாடார் உலகின் டாப் பில்லினியர்களில் ஒருவர். 

சிவ் நாடார் அவர்களை வீட்டில் கண்ணன் என்றே அழைப்பார்கள். எனது அப்பாவின் சகோதரி மகன் என்பதால் கண்ணத்தான் என்றுதான் நாங்கள் அழைப்போம்.

சிவ் நாடாரின் தந்தை சிவ சுப்பிரமணிய நாடார் நீதிபதியாகப் பணியாற்றியவர். நாடார் சமுதாயத்தின் முதல் வழக்குரைஞரான சிவந்தி ஆதித்தன்-கனகம் அம்மாள் அவர்களின் பேரன் இவர். 

இவரது தந்தை சிவ சுப்ரமணிய நாடார் மிடுக்கான ஒரு அதி நேர்மையான நீதிபதி. பிரதமர் நேரு ஒரு முறை சென்னை வந்திருக்கும் போது தன்னை வந்து பார்க்க வருமாறு சொல்லி அனுப்பினார்.
உடனே சிவ சுப்ரமணிய ஆதித்தன் அவர்கள் நேரு எதற்கு என்னை அழைக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.
வர முடியாது என்று சொல்லி விடுங்கள் என்று சொல்லி தேசத்தின் நீதியை பிரதமரிடமே நிரூபித்துக் காட்டியவர்.

என்னதான் செல்வ வளமுள்ள குடும்பத்தில் பிறந்தாலும், அப்போதைய செல்வந்தர்களின் பிள்ளைகள் போல இவர் ஊட்டியிலோ கொடைக்கானலிலோ கான்வென்டில் படித்தவர் அல்ல. தனது ஊரின் அருகில் தனது தாயார் பிறந்த ஊர் காயாமொழி அரசு பள்ளியில் படித்தவர். 

இவரது தந்தை நீதிபதி சிவ சுப்ரமணிய ஆதித்தன் நீதிமானாக இருந்ததாலும்,
ஒன்பது பிள்ளைகளுக்கு தந்தை என்பதாலும் பிள்ளைகளுக்கு பணம் சேமித்து வைக்காமல் காலமாகி விட்டார். அதனால் எனது அத்தை சிரம்ப்பட நேர்ந்தது.

கல்விக்கு இவரது தாய் மாமா தினத்தந்தி சி.பா.ஆதித்தனாரிடம் தனக்கு மிகவும் பிடித்த ஒரு நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்தார். சி.பா.ஆதித்தனார் உடன் பிறந்த தன் சகோதரியின் மகன் என்றும் பாராமல் பணம் சும்மா கொடுப்பது நான்.
நான் சொல்லும் இடத்தில் படி. அங்கெல்லாம் என்னால் படிக்க வைக்க என்னால் முடிலாது என்று தன் வழக்கமான கெத்தை குடும்பத்தில் பயன் படுத்தி விட்டார்.

உடனே சிவ் நாடார் அவர்கள் தனது மாமா சி.பா.ஆதித்தனார் அவர்களிடம் சொன்ன பதில்...

"பணம் உங்களிடம் உயர்வாகவும் எங்களிடம் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் உங்களை விட உங்கள் காலத்தில் நான் பெரிய பணக்காரனாகி காட்டுகிறேன் என்று சவால் விட்டு விட்டு டெல்லி சென்றவர் இப்போது அம்பானிக் குடும்பத்தை அடுத்து எட்டும் தூரத்தில் உள்ளார்.

இவரது உடன் பிறந்த  மூத்தவரில் ஒருவர்தான் காலம் சென்ற நீதிபதி பிரதாப்சிங் அவர்கள். இவரது கல்விக்கு துணை புரிந்து உதவியவர் இவரது சகோதரியின் கணவர் நரசிம்மன் IAS.

டெல்லி சென்றார்.
அங்கு மல்ஹோத்ரா,ஆதித்யா போன்ற குடும்ப பெயர்கள் இருப்பவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு மரியாதை இருந்தது. அப்படி தன்னிடம் குடும்ப பெயர் இல்லாததால் நாடார் என்பதையே தன் குடும்ப பெயராக மாற்றிக் கொண்டார்.

வணிகத்துக்குப் பேர் போன சமூகத்தில் பிறந்திருந்தாலும் வழக்கமான வணிகத்தை அவர் தேர்வு செய்யவில்லை.

இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே அப்பொழுது வெகு சிலர் மட்டுமே செய்து கொண்டிருந்த தொழிலைத் தேர்ந்தெடுத்து அதில் இறங்கி வென்றவர்.இந்த விஷயங்கள்தான் சிவ் நாடாரை பலரிடமிருந்து வேறு படுத்துகின்றன.

சிவ் நாடார் தன் கல்லூரிப் படிப்பை முடித்த பின் டி.சி.எம். (DCM) நிறுவனத்தில் சுமார் எட்டு ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார். 

போதுமான அனுபவங்களைப் பெற்ற பிறகு சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக 'மைக்ரோகாம்ப்' என்ற பெயரில் டெலி டிஜிட்டல் கால்குலேட்டர்கள் விற்கும் சிறு நிறுவனத்தைத் தொடங்கினார். 

அது ஓரளவு வெற்றி பெற, 1976ஆம் ஆண்டு எச்.சி.எல். (HCL) கணினி நிறுவனத்தை நிறுவினார். முதலில் எலக்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார். வெளிநாடுகளிலிருந்து கணினி உதிரி பாகங்கள் இறக்குமதி, சிங்கப்பூரில் கணினி வன்பொருள் விற்பகம், புதிய வடிவமைப்பிலான மடிக்கணினிகள் என கணினி விற்பனையில் பல பரிமாணங்களிலும் இயங்கினார்.  

கணினித் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் கணினித் துறைக்குச் சாதகமாக அமைந்தன. இந்த மாற்றங்களை எல்லாம் தனது ஏற்றத்திற்கு  நன்கு பயன் படுத்திக் கொண்டார் சிவ் நாடார். 

அப்போது அமைந்த ஜனதா கட்சி ஆட்சியில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் தொழில்துறை அமைச்சராக வந்து எடுத்த நடவடிக்கைகள் இந்திய தொழில் முனைவோருக்கு மிகுந்த உத்வேகமாக அமைந்தது. அந்நிய தொழில் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் குறைக்கப்பட்டு இந்தியர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். அந்த வாய்ப்பையும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் சிவ் நாடார்.

இப்படி, ஹெச்.சி.எல் நிறுவனம் லாபம் தரும் ஒரு பெரும் நிறுவனமாக உயர்ந்து வந்த நிலையில் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தன் அம்மாவிடம் ''அம்மா இந்த பணத்தையெல்லாம் வைத்து நான் என்ன செய்யட்டும்'' என்று கேட்ட அவரிடம் ''இல்லாதவர்க்கு நல்லது செய்யப்பா'' என்ற கூறிய தனது அன்பு அம்மாவிடம் இருந்துதான் தன் ஈகைப் பண்பை வளர்த்துக் கொண்டேன் என்று மெய் சிலிர்க்கிறார் சிவ் நாடார். 

2016க்குப் பின் மட்டுமே 650 கோடியை ஏழை மாணவர்களின் கல்விக்காக செல்வழித்துள்ளார் என்றால் யோசித்துக் கொள்ளுங்கள். எந்தவொரு சர்வதேச நிறுவனமும் தனக்கென வரும் லாபத்தில் சமுதாய பணிக்கென ஒரு பங்களிப்பை கொடுக்க வேண்டும். சிஎஸ்ஆர் CSR Funding என்ற பெயரில் இதைக் கட்டாயமாக்கி இருக்கிறது அரசு. 

அதற்காக, ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அங்கு பேருந்து நிலையம், நிழற்குடை, சாலை தடுப்புகள், தண்ணீர் தொட்டிகள் என வாங்கி வைத்து அனைத்திலும் தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பதித்து அதையும் விளம்பரமாக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில், "தான் படிக்க பணம் இல்லாமல் போன அந்த கல்விதான் ஒரு மனிதனுக்கு உண்மையான வளர்ச்சியாக இருக்கும்" என்று கூறி தமிழகத்தில் SSN பொறியியல் கல்லூரியையும் உத்திர பிரதேசத்தில் வித்யாஞான் பள்ளியையும் தொடங்கி லாப நோக்கமில்லாது, எளிய மாணவர்களின் வாழ்க்கையை மாற்றி வருகிறார். உத்திர பிரதேசத்தில் சிவ் நாடார் யுனிவர்சிட்டி என்று ஒரு பல்கலைகழகமும் உள்ளது.இந்த யுனிவர்சிட்டிக்கு 1000 ஏக்கர் நிலமும், வித்யாஞான் பள்ளிகளுக்கு நிலம் அனைத்தும் தொடங்குவதற்கு அனுமதி அளித்து உத்திரப்பிரதேச அரசு இலவசமாக கொடுத்தது. 
தமிழ்நாட்டில் இது நடக்குமா?.

உத்திர பிரதேசத்தில் இவர் நடத்தும் வித்யாஞான் பள்ளியை கண்டு அகில உலகமே வியக்கிறது.காரணம் அவர் குழந்தைகளை தேர்வு செய்யும் பாணி.

* உத்திர பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டத்திற்கும் ஒரு வித்யாஞான் பள்ளி.
* இந்த பள்ளியில் படிக்க எந்த ஒரு கட்டணமும் இல்லை.
* வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இங்கு படிக்க அனுமதி.பணம் படைத்தவர்களுக்கு இங்கு அனுமதி இல்லை.
* இவர்கள் வைக்கும் தேர்வில் 93% மதிப்பெண் பெற்றால்தான் இடம் கிடைக்கும்.முதல் மந்திரி சிபாரிசுக்காக கூட இங்கே மதிப்பெண் குறைந்தவர்களுக்கு இடம் கிடையாது.
* எல்லோரும் இங்கேயே தங்கிதான் படிக்க வேண்டும்.அதற்கும் 10 பைசா கட்டணம் கிடையாது.தரமான உணவுக்கும் பணம் இல்லை.
*படித்து முடித்த அத்தனை பேருக்கும் தனது நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்களை வேலை வாங்கும் அதிகார வேலை.
* கஷ்டமான குடும்பத்தில் பிறப்பவர்கள் தன் குடும்ப சுமையால் தன்னை போல மேலே போக இயலாமல் சிரம்ப் பட கூடாது என்பதே சிவ் நாடார் அவர்களின் நோக்கம்.

இந்த இரண்டு கல்வி நிறுவனங்களும் சாதாரணமானவை அல்ல. SSN கல்லூரி அண்ணா பல்கலைக்கழக தர வரிசையில் எப்பொழுதுமே முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பது. வித்யாஞான் பள்ளி உலகத் தரத்தில் செயல்படுவது. அரசு பள்ளியில் நன்றாகப் படித்த, படிக்கும் ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயரிய கல்வியைக் கொடுத்து அவர்களின் வாழ்க்கையை மாற்றி வருகின்றன இந்த இரண்டு கல்வி நிறுவனங்களும். ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் அரசு பள்ளி மாணவர்கள் SSN கல்லூரியில் இலவசமாகப் பயின்று பெருநிறுவனங்களில் பணிக்குச் செல்கின்றனர்.

இந்தியா மென்பொருள் துறையில் மிகப் பெரிய இடத்தைப் பெற்றிருக்கும் நாடு. உலகப் பெரு நிறுவனங்களில் இந்தியர்கள் உயர் பதவிகளில் இருக்கின்றனர். ஆனால், கணினி வன்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட முதன்மை இந்திய நிறுவனங்களில் ஒன்று சிவ் நாடாரின் HCL நிறுவனம். தன்னைச் சுற்றி ஏற்படும் மாற்றங்களையெல்லாம் உணர்ந்து, அதை தொழிலுக்குப் பயன் படுத்தி அதில் முன்னணி இடத்தைப் பெற்றார். தொடர்ந்து வெற்றியின் ஓட்டத்திலேயே இருந்த பொழுதும் தன்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் யோசித்து அதற்கான உண்மையை கண்டறிந்து உதவிகளையும் செய்கிறார். வரும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது, வந்த வருவாயை தேவையுள்ளோருக்கு சரியான முறையில் கொடுத்தது என இரண்டு வழிகளிலுமே தாய் மொழி வழி படித்த இந்தத் தமிழர் நமக்கெல்லாம் நல்ல மோட்டிவேஷன் மட்டும் அல்ல. உலகமே இவரிடம் கற்க வேண்டியது ஏராளம்.

இவரது கொள்கையில் உறுதியான கொள்கைகள் சில எனக்கு மிகவும் பிடிக்கும்.

* பணத்திற்காக இயற்கை அழிவுத் தொழிலை செய்ய மாட்டார்.
* அரசை ஏமாற்றி உதவி பெற மாட்டார்.
* 100% வரியை ஏமாற்றாமல் கட்டுபவர். இரண்டாம் தர வர்த்தகமே செய்ய மாட்டார்.
* ஷேர் மார்கெட் மோசடி செய்ய மாட்டார்.
* பிரதமர்களை பார்க்க வரிசையில் போய் நிற்காமல் பிரதமரை தன் நேர்மையை மெச்ச வைத்து அவரேயே அழைக்கவும் வைப்பார்.

சில ஆண்டுக்கு முன் மூலைப்பொழில் கிராமத்திற்கு எங்களை அழைத்தார்.என் வயதான தாயார் மற்றும் குடும்பத்தோடு சென்றேன். அப்போது மதிய உணவுக்குப் பின், முந்தைய நாள் இரவு நிகழ்ச்சியின் காரணத்தால் ஒரு ஓய்வு என் அம்மாவுக்கு தேவைப்பட்டது.
அங்கு அதிக அறை இல்லை. அதனால் நான் அருகில் உள்ள காயாமொழிக்கு என் அம்மாவை அழைத்து செல்ல தயார் ஆனேன். மாலை 5 மணிக்கு திரும்ப இங்குதான் வர வேண்டும்.

அம்மாவை அழைத்துச் செல்வதை கண்ட அவர் அத்தையை எங்கேயப்பா சிரமப்பட்டு அழைத்துச் செல்கிறாய் என்றார் அத்தான் சிவ் நாடார். காயாமொழி அழைத்து போய் விட்டு சாயுங்காலம் வருகிறோம் என்றேன். 

அத்தை என் அறையில் இருக்கட்டும் என்றார். அறையில் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்.நீங்கள் ஓய்வு எடுங்கள் என்றேன்.

உனக்கு இது அம்மாடா.
நீ பிறப்பதற்கு முன்பே என் அத்தை இது.
அத்தை மடியில் நான் படுத்து உறங்கியதை நான் மறக்கவில்லை என்று ஊஞ்சலில் என் வயதான அம்மாவை தூக்கி வைத்துக் கொண்டார்.
நீ போய் விட்டு மாலை வா.நான் என் அத்தையை பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

மறுநாள் காயாமொழியில் எங்கள் வீடு கருணாநிலையம் வந்து திண்ணையில் அமர்ந்தார். எங்கள் வீடே அத்தனை பேரும் பிறந்த பண்ணை வீடு. 

என் அம்மா பிறந்த வீடு.என் அம்மாவின் மூச்சுக் காற்று இங்குதான் உள்ளது என்றது ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வு அல்ல. யார் தன் பெற்றோரை தன் மூச்சாக மதிக்கிறாரே அவரே உலகம் போற்றும் தலைவர் ஆக இயலும் என்பதற்கு திரு. சிவ் நாடார் அவர்களும் ஓர் உதாரணம். 

உழைக்காமலும்,நற்செயல் புரியாதவர்களையும்,யாசகம் கேட்பவர்களையும் இவருக்கு அறவே பிடிக்காது.

திருப்பதி பெருமாளின் அதி தீவிர பக்தர்.

இவருக்கு காஞ்சி காமாட்சி கோவில் பிடித்த கோவில்.இவர் இங்கு அம்பாளைக் காண போய் இருக்கும் போது கும்பாபிஷேகம் நடக்காமல் இக் கோவிலின் நிலை கண்டு மன வேதனை பட்டார். அப்போது அங்கு உள்ளவர்களிடம் இது பற்றி கேட்க கும்பாபிஷேகம் செய்ய 30 கோடி வேண்டும். பலர் உதவி செய்வதாக சொல்லி உள்ளனர்.ஆனால் நடக்கவில்லை என்றனர். உடனே கும்பாபிஷேகம் செய்து என் வாழ்நாள் காலம் வரையில் பராமரிக்க எனது ஆட்களையும் இங்கே வர வைக்கிறேன் என்று 40 கோடி ஒதுக்கி சொன்னதை அப்படியே நடைமுறையில் செய்து வருகிறார். அம்பாள் கரை படியாமல் சேர்த்த பணத்தில் தனக்கு கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்று விரும்பி எண்ணி இருக்கிறாள் போலும்.

எனக்கு தெரிந்த வரை இந்திய அரசு மனித வள மேம்பாட்டுத் துறையில் உள்ள கல்வி மேம்பாட்டுக்கு இவருடைய ஆலோசனையை பெற்று அதை செயல் படுத்துவது மிக அவசியம்.

தடம் மாறும் நாடார் சமுதாய மக்களுக்கு எனது அன்பான சிந்தனை வேண்டுகோள்...

படைத்த சாதிக்கு பெயர் வேண்டுமானால் பிறர் போற்ற வாழ்ந்து காட்டுங்கள்.

பொய்யான பழி செய்யும் அரசியலுக்கும்,தூண்டி விடும் சாதி கூட்டத்திற்கும்,அடியாள் வேலைக்கு அழைக்கும் சமுதாய துரோகிகளுக்கும்,அற்ப சந்தோஷம் தருவதாக ஏமாற்றுபவர்களிடமும் தலை வணங்காதீர்கள்.

ஆங்கிலேய சூழ்ச்சி வழியில் அடுத்தவனிடம் பணத்திற்காக பல்லிழித்து ஏங்கி நின்று கொண்டு, 
அடுத்தவர்களிடம் பொய் சொல்லி தான் பிறந்த மதத்தையே சீரழித்து, பிறரை ஏமாற்றிக் கெஞ்சி பிழைக்கும் மோசமான தொழிலை விட்டு விட்டு, அடிமையாக யாசகத்தை பெற்று காணும் இடங்களில் எல்லாம் மதக் கூடங்கள் அமைத்து,
நோய் தீரும் என ஆசை காட்டி, அபயம் கேட்டு வந்தவரை தவறாக வழி காட்டி,அவர்கள் குடும்பத்தை சிதைத்து,
அந்நிய நாட்டுப் பணத்தை வரவழைத்து அதையும் மோசடி செய்து நாட்டுக்கும்,வீட்டுக்கும்,நம் முன்னோர்களின் பாரம்பரியத்திற்கும் பயன் படாமல் போலியாக உழல்வது ஒரு பெருமையானதொரு நல் வாழ்க்கையா?. 

அல்லது

ஒரு நாடார் என்று வெட்டி கெத்து காட்டாமல் எவரையும் நாடாது, எவரையும் ஏமாற்றால்,இயற்கையை மாசு படுத்தாமல்,எந்த அதிகாரத்தையும் எதிர் பார்க்காமல் பாமரனின் கல்விக்கும், நேர்மையான தொழிலுக்கும் தன்னை நாட வைத்து இப்படிதான் வாழ்வேன் என்று கொண்ட கொள்கையில் உறுதியாக நேர் வழியாக வாழ்ந்த சிவ் நாடார் போன்றவர்கள் வாழ்வது பெருமையான வாழ்க்கையா?.

உங்களை மனக் கஷ்டம் ஏற்படுவதற்காக இதை நான் நிச்சயம் சொல்லவில்லை.
சற்று பொருமையாய் சிந்தித்து உயரவே.

ஒரு சமுதாயத்திற்கு தற்போதெல்லாம் அதிக ரோல் மாடல் தலைவர்கள் உருவாவதே இல்லை. அந்த நிலை கட்டாயமாக மாறி பல நல்லவர்கள் இனி உருவாக வேண்டும்.

இறைவன் எந்த சாதியில் ஒருவனை படைக்கிறானோ அந்த சாதி பெருமை பட அவன் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுவே நம் முன்னோர்கள் நமக்கு சொல்லித் தந்த விதி.

நாலு பேர் உயர்வதற்கு நம் பராக்கிரமத்தை காட்டணுமே தவிர நம்மை முடக்குவதற்கு தரும் பிச்சை பிரியாணிக்கும், குவாட்டருக்கும்,
பண நோட்டுக்கும்,பெண்ணுக்கும் மதி மயங்கி இழிவாக மதி கெட்டு வாழ்வது ஒரு நல் வாழ்க்கையா?!.

திரு.கலைமோகன் அவர்கள் நக்கீரனில் எழுதி இருந்ததில் எனக்கு தெரிந்த உண்மைகளையும் இதில் இணைத்து உள்ளேன்.

தமிழகத்திலும் இப்படி தொடங்குங்களேன் என்றேன். 

என்னை வாழ வைத்தது உத்திரபிரதேசம்.
அதனால் அங்கு மனதாற செய்தேன். தமிழக அரசியல் வேறு மாதிரி உள்ளது என்றார். 

திரு. சிவ் நாடார் முறைகேடாக பணம் சேர்க்காத என் அத்தான் என்பதில் வாழ்வில் இமாலயப் பெருமை அடைகிறேன்.

இவரது சுய சரிதை புத்தகத்தில் தனது மாமாவான என் அப்பா தியாகி S.T.ஆதித்தனார் அவர்களை மிக உயர்வாக எழுதி உள்ளார்.

எல்லோருக்கும் விழிப்புணர்வான மன நிலை வர தயவுடன் பகிருங்கள்.



நன்றி இணையம்

வேப்பம்பூ அதிசயம்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:18 AM | Best Blogger Tips
பங்குனி அதிசயம்..!!

பங்குனி மாசத்து அதிசயம்..? அப்படி என்ன சார் அதிசயம்... பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..? இருக்கு...சார்.. இருக்கு.

வேப்பம் பூ... சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்... அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை... ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்... மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி மாதத்தில்...

இந்த வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம்.. வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும்.. இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை   சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்..

 பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்..

இந்த வேப்பம்பூ ,  ஒரிஜினல் மலைத்தேன்  , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால்  போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான்  இதன் விஷேஷமே..

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன்.. என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்... நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் ஓடிப்போகும்தானே..?

கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி...என்பதெல்லாம் தாண்டி "சுகரு "க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி... நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..

இது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்... பங்குனியில் ரொம்ப அதிகம் ..

எப்படி சாப்பிட ..? ஈ.ஸி.. அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி ... வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவைன்னா ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு... தட்ஸ் ஆல்..

இல்லைன்னா பச்சடி, ரசம் , அவியல்னு ஆயிரம் மெனு "நெட்"டுல இருக்கு.. படிங்க.... எப்படியாச்சும்  சாப்பிடுங்க...

நம்ம பெரியவங்க , இதை நாம சாப்பிட வேண்டும் .. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..

இந்த ஆண்டிலிருந்து பயங்கரமான ஆஸ்பத்திரி செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம்  பங்குனியில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்க பாஸு....

சொடுக்கு போடற தூரத்துல சுகாதாரம் ...என்ன ..?  லேசா  மெனக்கெடனும்.. அம்புட்டு தான்....


நன்றி இணையம்

வரமா? சாபமா? இந்த 21 நாட்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:32 PM | Best Blogger Tips
 என் கருத்து!

What's in a title? When it comes to 'Doctor,' more than you might ...

படுத்ததும் விடிந்து விட்ட நாட்களை எண்ணி எத்துணை நாள் வருந்தி இருப்போம். விடிந்தும்விடியாமலும் எழுந்து வந்து அடுப்பங்கரையில்  சமைத்துக் கொண்டு இருந்திருப்போம். காலை உணவைக் கூட கால நேரம் தெரியாமல் சாப்பிட்டு தொலைத்திருப்போம். அவதியாகவே கார்ஃ பைக்பேருந்து என ஏதாவது ஒன்றில் விடிந்தும் விடியாத கனவுகளோடு பயணப்பட்டுக் கொண்டு இருந்திருப்போம். கூட்ட நெரிசல் டிராபிக் ஜாம் என அனுதினமும் ஏதாவது ஒன்றிற்காய் காத்துக்கிடந்திருப்போம். எதிர்பாராத விபத்துதிடீர் மரணம் என எதாவது ஒன்றில் மனம் உடைந்து போய் இருப்போம். வேலை முடிந்ததும் வீட்டை நோக்கி ஓடி கொண்டிருப்போம் . குழந்தை,  குடும்பம் பெற்றோர் என கால்கள் ஓய்வு கொள்ளும். இரவு உணவு மீண்டும் வேலை என ஓடிக் கொண்டே இருந்திருக்கும். நீங்களே நினைத்தாலும் கூட கனவிலும் கிடைக்காத வாய்ப்பை காலம் கொடுத்து இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
பெண்கள் - BBC News தமிழ்
அலாரம் வைத்து எழுந்து கொள்ளத் தேவையில்லை,
காலை சூரியன் வந்த பின்பும் அவதி இன்றி அமர்ந்து இருக்கிறோம். சாலைகளில் புகை கக்கும் வாகனம் இல்லை. பகல் வேளையில் நிசப்தம் நிறைந்த சாலைகளை கண்களால் பார்க்க முடிகிறது. அடிதடி வெட்டு குத்து குறைந்து இருக்கிறது. மதுக்கடை மூடிக் கிடைக்கிறது. நகைக் கடைகள் பூட்டியே இருக்கிறது. ஜவுளிக்கடை விளம்பரங்களே செய்வதில்லை. நிரம்பி வடியும் மாநகரப் பேருந்துகள் இல்லை. படியில் தொங்கிப் பயணம் செய்ய யாரும் இல்லை. தெருவெல்லாம் சுத்தமாய் கிடக்கிறது. சாக்கடைகள் தூர்வாரப் பட்டுக்கொண்டே இருக்கிறது. அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைக்கிறார்கள். அடுத்தவன் பொருள் மேல் ஆசை வருவதில்லை.  எது வேண்டும் என்றாலும் வீட்டிலேயே சமைத்து உண்கிறோம். தேவை இல்லாமல் எதையும் வீணடிப்பது இல்லை. 


காவல் துறையை மதிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம். மருத்துவரை தெய்வமாய் பார்க்க முடிந்திருக்கிறது. 
சர்வதேச செவிலியர் தினம்

செவிலியரை சகோதரியாய் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். சுற்றி இருப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறோம். சுத்தமாக இருக்கப் பழகி இருக்கிறோம்.
சிட்டுக்குருவி கூடு கட்டினால் ...
சிட்டு்குருவி சுதந்திரமாய் சுற்றித் திரிகின்றன. பறவைகள் சப்தம் பலமாய் கேட்க முடிகிறது. பொழுது சாயும் போது எந்த இரைச்சலும் இல்லை. நீ எப்படி வருவயோ என்ற பயம் உன் குடும்பத்திற்கு இல்லை. போதை தேடி யாரும் செல்வதே இல்லை. சிகரெட் தீர்ந்தும் தேடி அலைய மனமில்லை.

தெருவில் எட்சில் துப்ப யோசிக்கிறோம். வெளிநாட்டில் இருந்து வந்ததை வெளியில் சொல்ல யோசிக்கிறோம். அகந்தை அழிந்து போய் இருக்கிறது. தான் என்ற கர்வம் தளர்ந்து போய் விட்டது. சிறுவயது நியாபகங்களை அசை போட துவங்கி இருக்கிறோம். தொட்டதிற்கு எல்லாம் மருத்துவமனை போவதை நிறுத்தி இருக்கிறோம். சிரிக்க கற்றுக் கொண்டு இருக்கிறோம். சிந்திக்க பழகி இருக்கிறோம். மற்றவர்கள் வழி புரிந்து இருக்கிறது. மனது நோகாமல் பேச பழகி இருக்கிறோம்.

இது மட்டும் போதாதுஅப்பாவோடு மனம் விட்டுப் பேசுங்கள். அம்மாவின் மடியில் தலை சாய்ந்து உறங்குங்கள். பிள்ளைகளின் தேவை அறிந்து சொல்லிக் கொடுங்கள். மனைவியின் மனதிற்கு நெருக்கமாக இருங்கள்.கணவரின் கைகளை பிடித்து நம்பிக்கை கொடுங்கள். பிரிந்த நண்பர்களின் நம்பர்களை தேடி எடுங்கள். மன்னிப்பு கேட்க நினைத்தவர்களிடம் கேட்டு விடுங்கள். யாரையாவது மன்னிக்க நினைத்தால் மன்னித்தும் விடுங்கள்.

ஒருவேளை இந்த 21 நாட்களோடு உலகம் அழிந்து போவதாய் இருந்தால் உறவுகளை எப்படி நேசித்து இருப்பீர்களோஅப்படி நேசித்து பாருங்கள். பக்கத்து வீட்டுக்காரரிடம் பகை தெரியாது.எதிர் வீட்டுகாரரின் ஏமாற்றம் புலப்படாது. எல்லோரும் நிம்மதியாக இருக்கட்டும் என்று மனம் நினைக்கும். வஞ்சம் தோன்றாது. வாழ வேண்டும் என்ற ஆசை நீண்டு இருக்கும் . வாழ்ந்து காட்ட வாய்ப்பு கிடைத்தது என்று மனம் சொல்லும். மீண்டும் தொடங்குங்கள் எங்கு எந்த தவறை செய்தீர்களோஅதை திருத்திக் கொள்ளுங்கள். வீட்டில் இருப்பதற்கு வெறுப்பாக உள்ளதென்று புலம்பாதிருங்கள்வீடே இல்லாதவர்களை நினைத்து பெருமை கொள்ளுங்கள். 
21 நாட்கள் முழு ஊரடங்கை ...
நீங்கள் யரென்பதை உங்களுக்கே உணர்த்துவதற்காக ஒரு வைரஸ் தேவைப்பட்டு இருக்கிறது. உங்களை யாரும் தனித்து நிற்கச் சொல்லவில்லை. தற்காத்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறார்கள். வாழ நினைத்தால் வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க்கை எல்லோருக்கும் ரி ஸ்டார்ட் ஆப்ஷன் யை கொடுப்பதில்லை. இப்போ சொல்லுங்க இது வரமாசாபமா?

வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே ! 



நன்றி இணையம்

என் கருத்து
வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே !