தமிழ்நாட்டின் அதிகம் அறியப்படாத 7 சுவாரஸ்யமான இடங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:26 AM | Best Blogger Tips
தமிழ்நாட்டின் அதிகம் அறியப்படாத 7 சுவாரஸ்யமான இடங்கள்! | 7 Lesser Known  Interesting tourist Places in Tamil Nadu
பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களைக்கொண்ட தனித்துவமான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகின்றது.
 
மிகப் பிரபலமான பல இடங்கள் இருந்தாலும், இன்னும் சில இடங்கள் பலருக்குத் தெரியாதவையாகவே இருக்கின்றன. 
 
அப்படிப்பட்ட சில இடங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்:
 
கொடைக்கானல் -
 
 வட்டக்கண்ணி நீச்சல் குளம்:
 Kodaikanal
பொதுவாகவே கொடைக்கானல் சுற்றுலா செல்லும் பயணிகள் பெரும்பாலும் இங்கே உள்ள வட்டக்கண்ணி நீச்சல் குளத்தைப் பார்வையிடுவதில்லை. வட்டக்கண்ணி நீச்சல் குளம் என்பது மலைகளின் நடுவே மறைந்திருக்கும் இயற்கை குளம். இது அற்புதமான இயற்கை சூழலுடன், பசுமையான காடுகளால் சூழப்பட்டு, ஓய்வு எடுத்துக் கொள்ள அமைதியான இடமாக அமைந்துள்ளது.
 
திருவண்ணாமலை - வந்தவாசி கோட்டை:

May be an image of temple
திருவண்ணாமலையில் உள்ள வந்தவாசி கோட்டை, தமிழகத்தில் அதிகம் பேசப்படாத இடங்களில் ஒன்று. இது பழைமையான கோட்டை மட்டுமன்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. இந்த பிரம்மாண்டமான கோட்டை பிரிட்டிஷ் காலத்திய போர்க்களமாக இருந்தது. இங்கு வருகை தருவதன் மூலம், பழங்கால போர்முறைகள் அதன் முக்கிய நிகழ்வுகள், வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும்.
 
திண்டுக்கல் - சிறுகுட்டு பாறை:
 திண்டுக்கலில் பார்க்கவேண்டிய மிக முக்கியமான இடங்கள் - மிஸ் பண்ணிடாதீங்க! -  தமிழ்நாடு
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுகுட்டு பாறை என்பது மிகவும் அழகான மற்றும் அமைதியான இடம் ஆகும். இது ஒரு கற்பாறையால் ஆன அமைப்பு. இந்த பாறைக்குள் பல சிறிய குகைகளும் அமைந்துள்ளன. இந்த இடத்தை பார்க்கச் செல்பவர்களுக்கு, இங்கு இருக்கும் இயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் குகைகள் மூலம் ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தைப் பெறலாம்.
 
நாகப்பட்டினம் - கோடிக்கரை கடலோரக் காடு:
 தீக்கதிர் - கோடியக்கரை சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக பறவைகள்
நாகப்பட்டினம் அருகில் இருக்கும் கோடிக்கரை கடலோரக் காடு என்பது மிகக் குறைவாகவே பார்வையாளர்களால் பார்க்கப்படும் இடமாக உள்ளது. இது பல்வேறு வகையான விலங்குகள், பறவைகளைக் கொண்ட ஒரு விலங்கியல் பூங்கா. இங்கு வரும் சுற்றுலாவாசிகளுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த இடம் கண்கவர் விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
நாமக்கல் - கொல்லிமலை:
 namakkal district news : namma falls attracts tourists in Kolli hills |  கொல்லிமலை போனா இந்த சூப்பர் அருவிய மிஸ் பண்ணாதீங்க..
சேலத்தில் அமைந்துள்ள கொல்லி மலை, சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்க்கப்படாத இடமாகும். இங்கு பல அழகான நீர்வீழ்ச்சிகள், பழைமையான கோயில்கள் மற்றும் மர்மமான குகைகள் உள்ளன. குறிப்பாக, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி மிகப் பிரபலமானது. சமீப காலமாகத்தான் இந்த இடத்தைப் பற்றிய தகவல்களும் இயற்கை காட்சிகள் குறித்த விவரங்களும் மக்களிடையே பேசப்பட்டு வருகின்றன.
 
மதுரை - மாங்குளம் கோயில்:
 May be an image of temple and monument
மதுரையில் உள்ள மாங்குளம் கோயில், பழமையான தமிழரின் கலை மற்றும் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக நிற்கிறது. மதுரையின் பரபரப்பான சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அமைதியான இடமாக இந்த மாங்குளம் கோவில்அமையப்பெற்றுள்ளது. பக்தி உணர்வுடன் கூடிய ஒரு ஆன்மிக சுற்றுலாவிற்குச் சிறந்த இடமாக இது விளங்குகின்றது.
 
கன்னியாகுமரி - திருப்பரப்பு நீர்வீழ்ச்சி:
 May be an image of 4 people and Iguazú Falls
கன்னியாகுமரியில் உள்ள திருப்பரப்பு நீர்வீழ்ச்சி என்பது மிகக் குறைவான சுற்றுலா பயணிகளால் பார்க்கப்படும் ஒரு இடமாகும். இங்கு நீரின் கொட்டும் சத்தம் மற்றும் அதன் அழகான தோற்றம், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது. இதன் அருகில் சில பழைமையான கோயில்களும் உள்ளன.
 கன்னியாகுமரி மாவட்டத்தின் குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் 'திற்பரப்பு  நீர்வீழ்ச்சி'... படங்கள் - ரா.ராம்குமார் - Vikatan
இப்படிப்பட்ட மறைந்திருக்கும் அல்லது அதிகம் அறியப்படாத இடங்களை சென்று பார்ப்பது நமக்கு ஒரு புதிய மற்றும் வித்தியாசமான சுற்றுலா அனுபவத்தைத் தரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. போவோமா.

❤️❤️❤️தந்தை❤️❤️❤️..... காலத்தால் மீண்டும்.......❤️❤️❤️❤️❤️❤️❤️🙏✍🏼🌹🙏✍🏼🌹🙏✍🏼🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 12:38 PM | Best Blogger Tips

 Father's day painting - The Brilliant Brushes✨ - Paintings & Prints, People  & Figures, Other People & Figures, Other - ArtPal

என் அம்மா எப்போதும் எங்களிடம் கூறுவார்:
 
தந்தை வீட்டிற்கு வரும்போது சிரித்த முகத்துடன் எதிர் கொள்ளுங்கள்
 
ஏனெனில் வெளி உலகம் உங்கள் தந்தையை வெறுப்பேற்றி அலைகழிக்கச் செய்கிறது.
 Father's Day Easy Painting/Father's Day Painting Ideas, 52% OFF
தாய் தந்தை வித்தியாசம்???
 
தாய் 9 மாதங்கள்
தன் வயிற்றில் சுமக்கிறாள்...
 
வாழ்நாள் முழுவதும் தந்தை தன் தோளில் உங்களை சுமக்கிறார்.. (நீங்கள் உணரமாட்டீர்கள்)
 
அம்மா உங்களை பசிக்காமல் பார்த்துக் கொள்கிறாள்...
 
நீங்கள் பட்டினி கிடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் தந்தை கற்பிக்கிறார்.. (உங்களுக்குப் புரிவதில்லை)
 Father and Son Acrylic Painting|Step-by-Step Painting|Correa Art - YouTube
அம்மா உங்களை மார்பில் சுமக்கிறாள்.
அவரை நீங்கள் பார்க்க முடியும்..
 
தந்தை உங்களை தன் முதுகில் சுமந்து செல்கிறார்.. (அவரை நீங்கள் பார்க்க முடியாது)
 May be an image of 1 person and text
தாயின் அன்பு, அது நீங்கள் பிறந்ததிலிருந்தே உங்களுக்குத் தெரியும்...
 
தந்தையின் அன்பு
அது நீங்கள் தந்தையாகும்போது தான் உங்களுக்குத் தெரியும்.. (பொறுமையுடன் இருங்கள்)
 
ஒரு தாய்... விலைமதிப்பற்றவள்
 May be a black-and-white image of 1 person


காலத்தால் மீண்டும் வழங்க இயலாத சொத்து.

 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, smiling and mountain 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹


 
🙏✍🏼🌹

குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ....

மணக்கால் அய்யம்பேட்டை | 9:46 AM | Best Blogger Tips

 குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம் ..!!❤️❤️❤️உறவுகளின் முக்கியத்துவம்❤️❤️❤️ - YouTube

🌷  தாய் ....இருந்தால் துன்பம் இல்லை.

🌷 
தந்தை...இருந்தால் தவிப்பு இல்லை.

🌷 
தங்கை... இருந்தால் தனிமை இல்லை.

🌷 
தாத்தா... இருந்தால் தயக்கம் இல்லை.

🌷 
பாட்டி.... இருந்தால் பயம் இல்லை.

🌷 
அக்கா....இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்.

🌷 
அண்ணன்....இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு.
உறவுகளே சொர்க்கம்... | Tamil News Relationships are heaven
🌷  தம்பி... இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்.

🌷 
மனைவி...இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்.

🌷 
மகள்.... இருந்தால் மழலை பருவம் தெரியும்.

🌷 
மகன்.... இருந்தால் மான்புமிக்க வம்சம் நிலைக்கும்.

🌷 
மண்ணில் இறக்க போகிறோமே தவிர..

🌷 
மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை....

🌷  வாழும் போது
பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம் .

🌷 
குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்...

🌷 
அதை சொர்க்கமாக்குவதும்  ,
நரகமாக்குவதும்
 
நம் கையில் தான் உள்ளது...
படித்ததில் பிடித்தது ! 

நன்றி !

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, smiling and tree 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹


"ஓம்" என்ற உணர்வும், அதன் சூட்சுமங்களும்...

மணக்கால் அய்யம்பேட்டை | 10:48 AM | Best Blogger Tips

May be a doodle

"ஓம்" என்ற உணர்வும், அதன் சூட்சுமங்களும்...
***********************************************************
"ஓம்" என்ற ஒலியே நமக்குள்ளே உயிராய் இருக்கின்றது இதுதான் சித்தர்களின் கருத்து. இதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம் இன்று சித்தர்களின் குரல் வாயிலாக....
பிராணன் எனும் மூச்சுக் காற்றானது நமது உடலை மட்டுமே ஜீவிக்கும் படியான சக்தியாக இருக்கின்றது இதைத்தான் நாம் உயிர் என்கின்றோம். உடலில் உயிர் மட்டும் இருந்தால் போதாது அதில் உணர்வும் இருந்தால் மட்டுமே அது உயிர் என்று ஆக முடியும். உணர்வு இல்லாவிட்டால் உயிர் இருந்தும் இந்த உடலானது வெறும் ஜடமாக தான் இருக்க வேண்டியதாய் இருக்கும்.
 
அப்படியானால்,
 
இந்த உடல் ஜடம் என்ற நிலையை விட்டு உயிர் என்ற நிலையைப் பெற வேண்டும் அல்லவா...? அந்த உணர்வை அதாவது இன்னதாக பிறந்து இருக்கின்றாய் என்ற அறிவை எல்லா உயிர்களுக்கும் எது தருகின்றது என்றால்,
இந்த பிரபஞ்சம் எனும் பெரும் வெட்ட வெளியில் எங்கும் வியாபித்து கொண்டிருக்கின்ற காற்றான சக்தியில் உணர்வாக கலந்து இருக்கின்ற "ஓம்" என்ற பிரணவ சப்தமே அனைத்து உயிர்களுக்கும் உணர்வெனும் சக்தியைத் தந்து அதுவே சூட்சுமமாய் உயிராகவும் இருக்கின்றது.
சித்தர்களின் குரல். - ஓம்/om/ॐ/aum/ओं/唵 = அ+உ+ம் அவ்வும் உவ்வும் மவ்வும் :  நமது உடலாகிய பிண்டத்தில் அ + உ + ம் = ஓம் ஓம் என்பது பிரணவ மந்திரமாகும் ...
"ஓம்" என்ற பிரணவமே நமக்குள்ளே உணர்வாகவும் சூட்சம உயிராகவும் இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டாலும் அதை உணர்ந்து கொள்ள வேண்டுமல்லவா அதற்கும் ஒரு முகாந்திரம் இருக்கின்றது.
அது எப்படியென்றால்,
 
காற்று நமது சுவாசமாக உள்ளே செல்லும் பொழுது ஸோ என்ற சப்தமாய் உள்ளே பிரவேசிக்கிறதும்
அதே சுவாசம் வெளியே வரும்
பொழுது ஹம் எனும் சப்தமாய் வெளியில் பிரவேசிக்கிறது
 
இந்த சப்தம் எதிலிருந்து உண்டாகின்றது எனில்,
காற்றிலே உணர்வாய் கலந்திருக்கும் ஓம் எனும் சொரூபமே இந்த சப்தத்தை உண்டாகின்ற சக்தியாய் இருக்கின்றது
 
இதை தெரிந்து கொள்வது எப்படி எனில்,
நமது மூச்சிலே ஸோ என்கின்ற சப்தமாய் சுவாசம் உள்ளே செல்கின்றது அதுவே வெளியே வருகின்ற பொழுது ஹம் எனும் சத்தமாய் வெளியேறுகிறது இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்
 
இப்போது ஒரு பயிற்சி முறையை பார்ப்போம்
ஸோ.........................................என்ற 
 
சப்தத்தை நீளமாக உச்சரித்துப் பாருங்கள்
ஸோ ....என்ற சப்தம்
 
ஓ....... என்ற
ஒலியாய் மாறிவிடும்
அதைப்போல
 
ஹம்.........................................என்ற
சப்தத்தை நீளமாக உச்சரித்துப் பாருங்கள்
ஹம்.......என்ற சப்தம்
ம்........என்ற
 
ஒலியாய் மாறிவிடும்
ஆக
ஸோ. என்ற சப்தத்தில்
ஓ.... என்ற ஒளியே நிலையானதாக இருக்கின்றது
அதைப்போல
 Ongarakudil ஓங்காரக்குடில் / Sri Agathiar Sanmarka Sangam - Sri Lanka -  அவ்வும் உவ்வும் மவ்வும் : நமது உடலாகிய பிண்டத்தில் அ + உ + ம் = ஓம் நமது  மூக்குத் துவாரத்தின் ...
ஹம்..... என்ற சப்தத்தில்
ம்..... என்ற ஒளியே நிலையானதாக இருக்கின்றது
நிலையாக இருக்கின்ற இந்த சப்தங்களின் ஒலியை இணைத்தால் அது ஓம் என்ற பிரணவமாக மாறிவிடுகிறது
ஓம் என்ற ஒலியே ஸோ ஹம் என்ற சப்தங்களாக மாறி எங்கும் எப்பொழுதும் எல்லா ஜீவனுக்குள்ளும உயிரான ஒரு பொருளை இருக்கின்றது
 
அதாவது
 
ஓம் என்ற சூட்சமமான பொருளே எங்கும் எதிலும் உயிராய் இருக்கின்றது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நமக்கு புலனாகின்றது
உயிராய் இறைவன் உனக்குள்ளேயே இருக்கின்றான் என்று ஞானம் பெற்றவர்கள் உபதேசம் செய்வதற்கு இதுதான் மூல காரணம்
காற்றிலே சூட்சுமமாய் உலாவுகின்ற ஓம் எனும் மறைபொருளை எவரொருவர் உணர்கின்றாரோ அவர்களின் அறிவானது விருத்தியாகி பேரறிவு என்ற நிலையை பெற்று விடுகிறது.
 
இதைத்தான் ஞானிகள் ஞானம் என்று சொல்லியிருக்கின்றார்கள். ஞானம் என்பது எல்லோருக்கும் கிடைக்குமா என்ற கேள்வியும் சந்தேகமும் எப்பொழுதும் வேண்டாம். நீ எதுவாக இருக்க நினைக்கிறாயோ
 
அதுவாகவே மாறி விடுவாய். இதுவே கேள்வி என்ற அச்சத்திற்கும் குழப்பம் என்ற சந்தேகத்திற்கும் பதில்
தேடினால் கிடைக்காதது ஒன்றுமில்லை......

 


🌷 🌷🌷 🌷 May be an image of 1 person and smiling  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹