*நேருவின் மருமுகம்...*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:08 AM | Best Blogger Tips
Image result for நேருவின்

*தயவுசெய்து முழுதும் படியுங்கள்*
📌 லண்டனில் வாழ்ந்த தன்னுடைய (கள்ள?) காதலிக்கு நித்தமும் காதல் கடிதம் வரைந்து, அதனை தனி ஏர்இந்தியா விமானத்தில் அனுப்பிய மைனர் யார்?
📌 தன்னுடைய வெளிநாட்டுக் காதலியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மரியாதை செலுத்த மலர்வளையம் தாங்கி இந்திய நாட்டின் இராணுவக் கப்பல்களை அனுப்பிவைத்த 'தேசபக்தர்' யார்?
📌 பாகிஸ்தானுக்கு 85,800 சதுர கிலோமீட்டர்களையும், சீனாவுக்கு 37244 சதுர கிலோமீட்டர்களையும் தாரைவார்த்த இந்தியாவின் 'தேசபக்த பிரதமர்' யார்?
📌 ஹைதராபாத்தை கட்டுப்பாட்டில் வைத்துதிருந்த பாகிஸ்த்தான் ஆதரவு ரசாக்கார் படைகள் மீது துணிச்சலாக ராணுவ நடவடிக்கை எடுக்காமல் பிரச்னையை ஐநா- விற்கு கொண்டு போய், அதை இன்னொரு காஷ்மீர் ஆக்க முயற்சி செய்த தேசபக்த பிரதமர் யார்?
📌 ஸ்வதந்திரய வீர சவர்க்கர் முதலிய தேசபக்தர்கள் 13 ஆண்டுகள் காலாபானி என்ற வெஞ்சிறையில் சிறையில் கொடுமையை அனுபவித்து வந்தபோது, பைவ் ஸ்டார் வசதியுடன் 3 வருடம் சொகுசாக பாட்மிட்டன், தோட்டம் வளர்ப்பு மற்றும் சமையல் என்று சிறப்பு கவனிப்பு யாருக்கு கிடைத்தது?
📌 கல்வியால் நான் ஆங்கிலேயன், எண்ணத்தால் நான் சர்வதேசன், பண்பாட்டால் நான் ஒரு இஸ்லாமியன் ஆனால் நான் ஒரு இந்துவாக தவறிப் பிறந்துவிட்டேன். அது ஒரு விபத்து என்று கூறிய தலைவர் யார்?
📌 சரோஜினி நாயுடுவின் மகள் பத்மஜா நாயுடு அவர்களுடன் மேய்ந்து குலாவிவிட்டுப் பின்னர் அந்தப்பெண்மணியை மேற்கு வங்கத்தின் ஆளுனராக நியமனம் செய்தது எந்த பிரதமர்?
📌 பாபாசாகேப் அம்பேத்கர் இங்கே அரசியலமைப்பு சட்டத்தை எழுதித் தொகுத்துக் கொண்டிருந்தபோது, தன்னுடைய காதலி ப்ரான்ஸுவா குந்தர்ருக்கு - உன்னுடைய கடிதத்தை தொடும்போது உன்னுடைய கைகளை தொடுவது போல் உணர்கிறேன் என்று சொன்னது யார்?
📌 15க்கு 13 மாகாணங்களின் காங்கிரஸ் தலைவர்கள் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அபரிமிதமான ஆதரவு கொடுத்தும், தானே பிரதமர் ஆகவேண்டும் என்று அடம்பிடித்து பிரதமர் ஆனது யார்?
📌 சுதந்திரம் பெற்றவுடன் நேபாளம், பலுசிஸ்தான் முதலிய நாடுகள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தபோது அதனை வேண்டாமென நிராகரித்த கூறு கெட்ட பிரதமர் யார்?
📌 சொன்னதைச் செய்யாவிட்டால் நேதாஜி பற்றிய உண்மைகளை வெளியிட்டுவிடுவோம் என்று ரஷ்ய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சும் நிலையில் இருந்த பதவி வெறிபிடித்த பிரதமர் யார்?
📌 நேதாஜியின் புகழைக் கண்டு பயந்துபோய் அவரை அச்சு நாடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் போர்க்குற்றவாளி என்று வர்ணித்து நேசநாடுகளுடன் சேர்ந்து உறவாடிய அரசியல்வாதி யார்?
📌 1950ல் சர்தார் பட்டேல் இறந்தபோது அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளக் கூடாது என்று அனைத்து மந்திரிகள் மற்றும் அரசுச் செயலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது எந்த பிரதமர்?
📌 மேற்கு வங்கத்தையும் பாகிஸ்தானுக்கு தாரைவார்க்கப்பட வேண்டும் என்று சொன்ன எந்த அரசியல் பெரும்புள்ளியின் கோரிக்கையை ஸ்யாமா ப்ரஸாத் முக்கர்ஜீ முறியடித்தார்?
📌 ஸ்ரீநகரில் தன்னுடைய நண்பர் ஷேக் அப்துல்லாவின் உதவியுடன் திரு ஸ்யாமா ப்ரசாத் முக்கர்ஜீயை கொன்றதாக சந்தேகிக்கப்பட்டு, பின்பு அன்னாரின் விபரீத மரணத்தைக் குறித்து விசாரணை ஏதும் நடக்காமல் பார்த்துக்கொண்டது யார்?
📌 மிக உயர்ந்த கல்விமானாக விளங்கிய டாக்டர் அம்பேத்கரைப் பார்த்து பொறாமை கொண்டு, அவரை லோக்சபா தேர்தலில் தோற்கடிக்க யுக்திகள் வகுத்து அவரை பாராளுமன்றம் புகாமல் பார்த்துக்கொண்டது யார்?
📌 டாக்டர் அம்பேத்கர் அவர்களது பரிந்துரையான பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த இந்தியப் பிரதமர் யார்?
📌 இந்திய இறையாண்மைக்கு எதிரானதால் டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தில் புறக்கணித்த ஷரத்து 370யை கோப்பால் ஐயங்கார் என்பவரை நியமித்து, காஷ்மீருக்கு தனிநிலை, தனி அரசியலைப்பு, தனிக் கொடி ஏற்படுத்திக் கொடுத்தது யார்?
📌 படையெடுப்பில் இடிக்கப்பட்ட சோமநாதர் ஆலயத்தை மீண்டும் கட்டமைக்க எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், மதச்சார்பின்மையை காரணம் காட்டி ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தையும் போகக்கூடாது என தடுத்தது யார்?
📌 இந்தியாவிலேயே யார் மிகுந்த இஸ்லாமிய தேசியவாதி என்று சர்தார் பட்டேல் அவர்களை வினவியபோது அவர் யாரைக் குறிப்பிட்டார்?
மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை - ஜவகர்லால் நேரு. அன்னாரின் தாந்தோன்றிதனத்தாலும் எதேச்சாதிகார முடிவுகளாலும் அதற்கான விலையை இந்தியா இன்னமும் கொடுத்துக்கொண்டிருக்கிறது...

நன்றி இணையம்

வழி முகம் கோணாத தர்மமே

மணக்கால் அய்யம்பேட்டை | 10:03 AM | Best Blogger Tips


ஒரு சின்ன கதை இரண்டு நிமிடம் ஒதுக்கி படியுங்கள் நண்பர்களே 👇👇👇
ரெண்டு இட்லி!!
இரக்க குண பெண்மணி ஒருத்தி 
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...
அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.
ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.
அவன் முனகியது, இதுதான்:
"
நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."
தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
'
தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
"
நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,
"
இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
"
ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;
செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.
'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'
நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....
மனம் ஏனோ கலங்கியது;
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.
வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
"
நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;
நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.
அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.
வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.
"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.
இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!
இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!
'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...
கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உன்மைதான் ...
எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...
புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....
*செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்*.
*ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்*.
*வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.
படித்ததில் பிடித்தது!


 நன்றி இணையம்