திருவாரூர் தியாகராஜர் கோயில் வரலாறு

மணக்கால் அய்யம்பேட்டை | 4:39 PM | Best Blogger Tips

365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்
திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.
இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர். திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.
அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.
நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்). இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டு மானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.
Image result for திருவாரூர் தியாகராஜர் கோயில்
தல வரலாறு :
ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம்என்ன வேண்டும்?’ என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்.
முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன. இவைசப்தவிடங்கத்தலங்கள்எனப்படுகின்றன. “சப்தம்என்றால் ஏழு.
திருவாரூரில்வீதி விடங்கர்’, திருநள்ளாறில்நகர விடங்கர்’, நாகப்பட்டினத்தில்சுந்தர விடங்கர்’, திருக்குவளையில்அவனி விடங்கர்’, திருவாய்மூரில்நீலவிடங்கர்’, வேதாரண்யத்தில்புவனி விடங்கர்’, திருக்காரவாசலில்ஆதி விடங்கர்என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன. இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியைதியாகராஜர்என்பர்.
வழிபாடு நேரம் :
காலை 6 மணி - திருப்பள்ளி எழுச்சி ,பால் நிவேதனம்
காலை 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம் 
காலை 8 மணி - முதற் கால பூஜை 
மதியம் 11.30 மணி - மரகத லிங்க அபிஷேகம் 
பகல் 12 மணி - உச்சிக்கால பூஜை 
பகல் 12.30 மணி - அன்னதானம் 
மாலை 4 மணி - நடை திறப்பு 
மாலை 6 மணி - சாயரட்சை பூஜை 
இரவு 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம் 
இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை
பிரதான மூர்த்திகள் :
திருவாரூர் ஆலயத்தின் மூலவர் வன்மீகர். அவர் அருகே அன்னை சோமகுலாம்பிகை இருக்கிறாள். இறைவன் சூரிய குலம்; அம்பிகை சந்திர குலம். வன்மீகரின் வலப்பக்கத்தில் - தனிச் சந்நிதியில் ஸ்ரீதியாகராஜர்
நன்றி இணையம்

மார்க்கபந்தீஸ்வரர் கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:39 PM | Best Blogger Tips

கல்யாணம் மற்றும் குழந்தை பேறு உண்டாக்கும் கோயில்
கார்த்திகை கடைசி ஞாயிறு விழா நடைபெறும்
வேலூர் : வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் கார்த்திகை மாதம் திறப்பு தொண்டை மண்டல சிவத்தலங்களில் பிரம்மனுக்கு ஞானோபதேசம் அருளிய தலம் திருவிரிஞ்சை என்று போற்றப்படும் விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோயில். திருவாரூர் தேர் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்பதற்கேற்ப அழகான உயர்ந்த மதில்களை உடைய திருக்கோயில் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில். திருமணதடை, குழந்தைபேறு அளிக்கும் பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது. குறிப்பாக குழந்தை பேறில்லாத தாய்மார்கள் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு விழாவில் முதல்நாள் இரவு அங்குள்ள சிம்மக்குளம், பிரம்மதீர்த்தம், பாலாறு ஆகிய மூன்று தீர்த்தங்களில் நீராடி ஈர சேலையுடன் கோயிலில் கண்ணயர்ந்தால் அவர்கள் கனவில் இறைவன் குழந்தை பேறுக்கு உரிய பழம், மலர் என்று மங்களகரமான பொருட்களை தோன்றி பிரார்த்தனையை நிறைவேற்றுவதாக ஐதீகம்.
மேலும் சிம்மத்தீர்த்தம் உட்பட மூன்று தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வணங்குபவர்களுக்கு தீவினைகள், பில்லி, சூனியம், வலிப்பு, பேய், பிசாசு பிடித்தல் தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்பதும் ஐதீகம். அதற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் இங்கு கூடும் பக்தர்கள் மற்றும் பெண்களின் கூட்டமே இக்கோயிலின் சிறப்பை உணர்த்துகிறது. அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாத கடை ஞாயிறு விழா கடந்த மாதம் 22ம்தேதி முதல் ஞாயிறு அன்று தொடங்கியது. தொடர்ந்து நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணியளவில் சிம்மக்குளத்தை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தா சுவாமிகள் சிறப்பு பூஜைகளுடன் திறந்து வைக்கின்றனர். மறுநாள் ஞாயிறு காலை 6.30 மணிக்கு பிரம்மகுளத்தில் தீர்த்தவாரியும், 9 மணிக்கு பாலகன் பிரம்மனுக்கு சிவ தீட்சை அளித்தலும் நடக்கிறது 
திருவிரிஞ்சை என்று போற்றப்படும் விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோயில். திருவாரூர் தேர் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்பதற்கேற்ப அழகான உயர்ந்த மதில்களை உடைய திருக்கோயில் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில். திருமணதடை, குழந்தைபேறு அளிக்கும் பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது. குறிப்பாக குழந்தை பேறில்லாத தாய்மார்கள் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு விழாவில் முதல்நாள் இரவு அங்குள்ள சிம்மக்குளம், பிரம்மதீர்த்தம், பாலாறு ஆகிய மூன்று தீர்த்தங்களில் நீராடி ஈர சேலையுடன் கோயிலில் கண்ணயர்ந்தால் அவர்கள் கனவில் இறைவன் குழந்தை பேறுக்கு உரிய பழம், மலர் என்று மங்களகரமான பொருட்களை தோன்றி பிரார்த்தனையை நிறைவேற்றுவதாக ஐதீகம்.
மேலும் சிம்மத்தீர்த்தம் உட்பட மூன்று தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வணங்குபவர்களுக்கு தீவினைகள், பில்லி, சூனியம், வலிப்பு, பேய், பிசாசு பிடித்தல் தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்பதும் ஐதீகம். அதற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் இங்கு கூடும் பக்தர்கள் மற்றும் பெண்களின் கூட்டமே இக்கோயிலின் சிறப்பை உணர்த்துகிறது. அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாத கடை ஞாயிறு விழா கடந்த மாதம் 22ம்தேதி முதல் ஞாயிறு அன்று தொடங்கியது. தொடர்ந்து நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணியளவில் சிம்மக்குளத்தை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தா சுவாமிகள் சிறப்பு பூஜைகளுடன் திறந்து வைக்கின்றனர். மறுநாள் ஞாயிறு காலை 6.30 மணிக்கு பிரம்மகுளத்தில் தீர்த்தவாரியும், 9 மணிக்கு பாலகன் பிரம்மனுக்கு சிவ தீட்சை அளித்தலும் நடக்கிறது.

 நன்றி இணையம்

ஆன்மீகத்தில் புறா!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:36 PM | Best Blogger Tips

புறாவிற்கு தன்னுடைய கூட்டில், அடுத்த வேளைக்கென எந்த ஒரு உணவினையும் சேகரித்து வைத்துக் கொள்ளும் பழக்கமே கிடையாதாம். “பேராசைகுணமே இல்லாத அதியற்புத ஜீவன் புறக் குலமாகும். கருப்பண்ண சுவாமியிடம் உள்ள நாய்,குதிரை போன்ற பஞ்ச (ஐந்து) மிருகங்கள், பட்சிகளில் புறாவும் ஒன்றாகும்.
உத்தமனான சிபிச் சக்கரவர்த்தியின் தர்ம குணத்தைச் சோதிப்பதற்காய், அக்னி பகவான் புறா வடிவைத்தானே தேர்ந்தெடுத்தார். ஆனால் தன் பக்தனாம் சிபியின் சதையை அக்னி பகவான் அரிந்து துன்புருத்தியதாய், தர்ம தேவதையின் வருத்தத்தினாலும், தர்மதீபமாம் சிபியைச் சோதித்த காரணத்தால் அக்னி மூர்த்திக்கு ஒரு சாபம் ஏற்ப்பட்டது.
இதனால் அக்னி மூர்த்திக்குப் புறா வடிவில் இருந்து மீண்டு, தன் சுயவடிவை அடைய முடியாமல் போனது. இருந்தாலும் புறா வடிவில் இருக்கும் பொழுது அக்னி மூர்த்தி, “ஆசை அற்ற அருங்குணம்தன்னுள் ஒளிர்ந்து மிளிர்வதை உணர்ந்தார். புறக் குளத்தின் மேன்மையையும், பற்றற்ற அருங்குணத்தையும் போற்றினார்.
பின்பு தன்னுடைய அலகால் பூமியை தோண்டி அதில் காசித் தீர்த்தத்தை வரவழைத்து அலகில் தாங்கி சிவலிங்கத்தை அபிஷேகித்துத் தன் சுய வடிவைப் பெற்றார். தேவாரப் பாடல் பெற்ற இத்தலமே, திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் சிவபூமி, மாயூரம்சீர்காழி அருகே உள்ளது திருக்குருகாவூர்.
தான் புறா வடிவில் வாழ்ந்தமையால் அண்டங்காக்கை போல் பிதுர் லோகங்களுக்குச் சென்று வரும் யோக சக்தியையும் தெய்வங்களுக்கு வாகனமாகும் பேற்றையும் அக்னி மூர்த்தி புறக் குலத்திற்கு வரமாகத் தந்த புனிதத் தலம் துரவிக்காடு ஆகும்.
தினமும் புறாவிற்கு உணவிட்டு வந்தால் வாழ்வில் திருப்தி, மன அமைதி, ஆசையற்ற அருங்குணம் கிடைக்கும். 🔜
[19/06 2:01 pm] +91 94433 22124:
தினமும் புறாவிற்கு உணவிட்டு வந்தால் வாழ்வில் திருப்தி, மன அமைதி, ஆசையற்ற அருங்குணம் கிடைக்கும். பிறரிடம் பொறாமை உண்டாகாது. மேலும் புறக் குளத்தின் பற்றற்ற தர்மகுண சாங்கியத்தால்உஞ்சவ்ருத்தி தர்மபட்சிஎன்றும் போற்றப்படுகிறது.ஆன்மீக பயணத்தில் ரமேஷ்🔚🔴

 நன்றி இணையம்