மார்க்கபந்தீஸ்வரர் கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:39 PM | Best Blogger Tips

கல்யாணம் மற்றும் குழந்தை பேறு உண்டாக்கும் கோயில்
கார்த்திகை கடைசி ஞாயிறு விழா நடைபெறும்
வேலூர் : வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் கார்த்திகை மாதம் திறப்பு தொண்டை மண்டல சிவத்தலங்களில் பிரம்மனுக்கு ஞானோபதேசம் அருளிய தலம் திருவிரிஞ்சை என்று போற்றப்படும் விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோயில். திருவாரூர் தேர் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்பதற்கேற்ப அழகான உயர்ந்த மதில்களை உடைய திருக்கோயில் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில். திருமணதடை, குழந்தைபேறு அளிக்கும் பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது. குறிப்பாக குழந்தை பேறில்லாத தாய்மார்கள் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு விழாவில் முதல்நாள் இரவு அங்குள்ள சிம்மக்குளம், பிரம்மதீர்த்தம், பாலாறு ஆகிய மூன்று தீர்த்தங்களில் நீராடி ஈர சேலையுடன் கோயிலில் கண்ணயர்ந்தால் அவர்கள் கனவில் இறைவன் குழந்தை பேறுக்கு உரிய பழம், மலர் என்று மங்களகரமான பொருட்களை தோன்றி பிரார்த்தனையை நிறைவேற்றுவதாக ஐதீகம்.
மேலும் சிம்மத்தீர்த்தம் உட்பட மூன்று தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வணங்குபவர்களுக்கு தீவினைகள், பில்லி, சூனியம், வலிப்பு, பேய், பிசாசு பிடித்தல் தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்பதும் ஐதீகம். அதற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் இங்கு கூடும் பக்தர்கள் மற்றும் பெண்களின் கூட்டமே இக்கோயிலின் சிறப்பை உணர்த்துகிறது. அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாத கடை ஞாயிறு விழா கடந்த மாதம் 22ம்தேதி முதல் ஞாயிறு அன்று தொடங்கியது. தொடர்ந்து நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணியளவில் சிம்மக்குளத்தை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தா சுவாமிகள் சிறப்பு பூஜைகளுடன் திறந்து வைக்கின்றனர். மறுநாள் ஞாயிறு காலை 6.30 மணிக்கு பிரம்மகுளத்தில் தீர்த்தவாரியும், 9 மணிக்கு பாலகன் பிரம்மனுக்கு சிவ தீட்சை அளித்தலும் நடக்கிறது 
திருவிரிஞ்சை என்று போற்றப்படும் விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோயில். திருவாரூர் தேர் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்பதற்கேற்ப அழகான உயர்ந்த மதில்களை உடைய திருக்கோயில் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில். திருமணதடை, குழந்தைபேறு அளிக்கும் பிரார்த்தனை தலமாகவும் இது விளங்குகிறது. குறிப்பாக குழந்தை பேறில்லாத தாய்மார்கள் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு விழாவில் முதல்நாள் இரவு அங்குள்ள சிம்மக்குளம், பிரம்மதீர்த்தம், பாலாறு ஆகிய மூன்று தீர்த்தங்களில் நீராடி ஈர சேலையுடன் கோயிலில் கண்ணயர்ந்தால் அவர்கள் கனவில் இறைவன் குழந்தை பேறுக்கு உரிய பழம், மலர் என்று மங்களகரமான பொருட்களை தோன்றி பிரார்த்தனையை நிறைவேற்றுவதாக ஐதீகம்.
மேலும் சிம்மத்தீர்த்தம் உட்பட மூன்று தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வணங்குபவர்களுக்கு தீவினைகள், பில்லி, சூனியம், வலிப்பு, பேய், பிசாசு பிடித்தல் தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்பதும் ஐதீகம். அதற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் இங்கு கூடும் பக்தர்கள் மற்றும் பெண்களின் கூட்டமே இக்கோயிலின் சிறப்பை உணர்த்துகிறது. அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாத கடை ஞாயிறு விழா கடந்த மாதம் 22ம்தேதி முதல் ஞாயிறு அன்று தொடங்கியது. தொடர்ந்து நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணியளவில் சிம்மக்குளத்தை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தா சுவாமிகள் சிறப்பு பூஜைகளுடன் திறந்து வைக்கின்றனர். மறுநாள் ஞாயிறு காலை 6.30 மணிக்கு பிரம்மகுளத்தில் தீர்த்தவாரியும், 9 மணிக்கு பாலகன் பிரம்மனுக்கு சிவ தீட்சை அளித்தலும் நடக்கிறது.

 நன்றி இணையம்