ஆன்மீகத்தில் புறா!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:36 | Best Blogger Tips

புறாவிற்கு தன்னுடைய கூட்டில், அடுத்த வேளைக்கென எந்த ஒரு உணவினையும் சேகரித்து வைத்துக் கொள்ளும் பழக்கமே கிடையாதாம். “பேராசைகுணமே இல்லாத அதியற்புத ஜீவன் புறக் குலமாகும். கருப்பண்ண சுவாமியிடம் உள்ள நாய்,குதிரை போன்ற பஞ்ச (ஐந்து) மிருகங்கள், பட்சிகளில் புறாவும் ஒன்றாகும்.
உத்தமனான சிபிச் சக்கரவர்த்தியின் தர்ம குணத்தைச் சோதிப்பதற்காய், அக்னி பகவான் புறா வடிவைத்தானே தேர்ந்தெடுத்தார். ஆனால் தன் பக்தனாம் சிபியின் சதையை அக்னி பகவான் அரிந்து துன்புருத்தியதாய், தர்ம தேவதையின் வருத்தத்தினாலும், தர்மதீபமாம் சிபியைச் சோதித்த காரணத்தால் அக்னி மூர்த்திக்கு ஒரு சாபம் ஏற்ப்பட்டது.
இதனால் அக்னி மூர்த்திக்குப் புறா வடிவில் இருந்து மீண்டு, தன் சுயவடிவை அடைய முடியாமல் போனது. இருந்தாலும் புறா வடிவில் இருக்கும் பொழுது அக்னி மூர்த்தி, “ஆசை அற்ற அருங்குணம்தன்னுள் ஒளிர்ந்து மிளிர்வதை உணர்ந்தார். புறக் குளத்தின் மேன்மையையும், பற்றற்ற அருங்குணத்தையும் போற்றினார்.
பின்பு தன்னுடைய அலகால் பூமியை தோண்டி அதில் காசித் தீர்த்தத்தை வரவழைத்து அலகில் தாங்கி சிவலிங்கத்தை அபிஷேகித்துத் தன் சுய வடிவைப் பெற்றார். தேவாரப் பாடல் பெற்ற இத்தலமே, திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் சிவபூமி, மாயூரம்சீர்காழி அருகே உள்ளது திருக்குருகாவூர்.
தான் புறா வடிவில் வாழ்ந்தமையால் அண்டங்காக்கை போல் பிதுர் லோகங்களுக்குச் சென்று வரும் யோக சக்தியையும் தெய்வங்களுக்கு வாகனமாகும் பேற்றையும் அக்னி மூர்த்தி புறக் குலத்திற்கு வரமாகத் தந்த புனிதத் தலம் துரவிக்காடு ஆகும்.
தினமும் புறாவிற்கு உணவிட்டு வந்தால் வாழ்வில் திருப்தி, மன அமைதி, ஆசையற்ற அருங்குணம் கிடைக்கும். 🔜
[19/06 2:01 pm] +91 94433 22124:
தினமும் புறாவிற்கு உணவிட்டு வந்தால் வாழ்வில் திருப்தி, மன அமைதி, ஆசையற்ற அருங்குணம் கிடைக்கும். பிறரிடம் பொறாமை உண்டாகாது. மேலும் புறக் குளத்தின் பற்றற்ற தர்மகுண சாங்கியத்தால்உஞ்சவ்ருத்தி தர்மபட்சிஎன்றும் போற்றப்படுகிறது.ஆன்மீக பயணத்தில் ரமேஷ்🔚🔴

 நன்றி இணையம்