தேவையான பொருட்கள்:
சீரகம் — 1 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் — 1 1/2 கப் (நீளமாக நறுக்கியது)
நெய் — 1/2 கப்
முந்திரி பருப்பு — 25 என்னம் (பாதியாக உடைத்துக்கொள்ளவும்)
அரிசி — 1 1/2 கப்
அரைக்க : கொத்தமல்லி தழை — 1 கட்டு பூண்டு — 5 என்னம் உப்பு — ருசிக்கேற்ப பச்சை மிளகாய் — காரத்திற்கேற்ப
அரிசியை முதலில் சாதமாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய்யை ஊற்றி சீரகத்தை தாளித்து பின் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.
அரைக்க கொடுத்தவற்றை அரைக்கவும். அரைத்த மசாலாவை வாணலியில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
நெய் அப்படியே மேலே வரும்… இதனிடையே மீதி உள்ள நெய்யில் எல்லா முந்திரிகளையும் வறுக்கவும்.
வறுத்தவைகளில் பாதியை சாதத்துடன் கலந்து வைக்கவும்
.
இதனை மசாலாவுடன் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
.
இதனை மசாலாவுடன் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
பின் மீதி உள்ள முந்திரியை மேலே தூவி பறிமாறவும். ரிச்சான கொத்தமல்லி சாதம் ரெடி.
நன்றி இணையம்