எலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:13 PM | Best Blogger Tips

Photo: எலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்! 

வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.

எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.

கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.

இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.

எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.

எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.

இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.

எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.

பாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.

உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.

எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.

ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

ரெசிபி

பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.

பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

ஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

பிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.

டயட்

பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.

சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.

அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.

அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.

மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.

ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.

உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.

உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.
Via FB ஆரோக்கியமான வாழ்வு
 
முடக்கத்தான் கீரை தோசை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:12 PM | Best Blogger Tips
Photo: முடக்கத்தான் கீரை தோசை

என் அம்மா மூட்டு மற்றும் முதுகு வலியினால் ரொம்பவே சிரமப்பட்டார். சின்ன வயதில் எனக்கு அம்மா சொல்லித் தந்திருந்த முடக்கத்தான் கீரை தோசையை வாரத்தில் இரண்டு நாட்கள் அவருக்குச் செய்து தர ஆரம்பித்தேன். வலி குறைந்து இப்போதுஅம்மாவின் உடலில் நல்ல முன்னேற்றம். குழந்தைகளும் இதை 'க்ரீன் தோசை' என்று விரும்பிச் சாப்பிடுகிறார்கள். மருத்துவக் குணமும் சுவையும் நிறைந்த இந்தத் தோசையை வாரம் ஒரு முறை-யாவது சமையலில் சேர்த்துக்-கொண்டால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு நல்லது. 

முடக்கத்தான் தோசை செய்முறை:

தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - அரை கிலோ, உளுந்து & 100 கிராம், வெந்தயம் & 2 ஸ்பூன், முடக்கத்தான் கீரை & 4 கப்.
முதல் நாளே அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஊற வைத்து தோசைமாவுக்கு அரைப்பதுபோல மைய அரைத்து வைக்கவும். நன்றாகக் கழுவி, சுத்தம் செய்த முடக்கத்தான் கீரையை மிக்ஸியில் கூழாக அரைக்கவும். அதை ஏற்கெனவே அரைத்து வைத்த மாவில் கலக்-கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைக்-கவும். மறுநாள் தோசையாக ஊற்றி எடுக்க வேண்டும். கீரை கூடுதலாகச் சேர்த்தால் மிகவும் நல்லது.

இதற்கு தொட்டு சாப்பிட கொத்தமல்லிச் சட்னி நன்றாக இருக்கும். 

கொத்தமல்லிச் சட்னி செய்முறை:

மிளகாய் 8, ஒரு கைப்பிடி கொத்தமல்லி, உரித்த பூண்டு நான்கைந்து ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்த பின், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சூடான தோசையில் இந்தச் சட்னியை வைத்து அதன் மீது நல்லெண்ணெ ஊற்றிச் சாப்பிட்டால் சுவை சொக்கவைக்கும்; சத்துக்களும் உடலில் சேரும்.

- நாகலக்ஷ்மி லோகநாதன், வேளச்சேரி

சித்த மருத்துவர் ஆர்.கண்ணன்:
கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு 'முடக்கு + அற்றான்' என்று பெயர். இது மருத்துவக் குணங்கள் நிறைந்த, ஓர் அரியவகைக் கீரை. தொடர்ந்து உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நெருங்காது. முதியோர்கள் இதை உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலி குறையும்.என் அம்மா மூட்டு மற்றும் முதுகு வலியினால் ரொம்பவே சிரமப்பட்டார். சின்ன வயதில் எனக்கு அம்மா சொல்லித் தந்திருந்த முடக்கத்தான் கீரை தோசையை வாரத்தில் இரண்டு நாட்கள் அவருக்குச் செய்து தர ஆரம்பித்தேன். வலி குறைந்து இப்போதுஅம்மாவின் உடலில் நல்ல முன்னேற்றம். குழந்தைகளும் இதை 'க்ரீன் தோசை' என்று விரும்பிச் சாப்பிடுகிறார்கள். மருத்துவக் குணமும் சுவையும் நிறைந்த இந்தத் தோசையை வாரம் ஒரு முறை-யாவது சமையலில் சேர்த்துக்-கொண்டால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு நல்லது.

முடக்கத்தான் தோசை செய்முறை:

தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - அரை கிலோ, உளுந்து & 100 கிராம், வெந்தயம் & 2 ஸ்பூன், முடக்கத்தான் கீரை & 4 கப்.
முதல் நாளே அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஊற வைத்து தோசைமாவுக்கு அரைப்பதுபோல மைய அரைத்து வைக்கவும். நன்றாகக் கழுவி, சுத்தம் செய்த முடக்கத்தான் கீரையை மிக்ஸியில் கூழாக அரைக்கவும். அதை ஏற்கெனவே அரைத்து வைத்த மாவில் கலக்-கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைக்-கவும். மறுநாள் தோசையாக ஊற்றி எடுக்க வேண்டும். கீரை கூடுதலாகச் சேர்த்தால் மிகவும் நல்லது.

இதற்கு தொட்டு சாப்பிட கொத்தமல்லிச் சட்னி நன்றாக இருக்கும்.

கொத்தமல்லிச் சட்னி செய்முறை:

மிளகாய் 8, ஒரு கைப்பிடி கொத்தமல்லி, உரித்த பூண்டு நான்கைந்து ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்த பின், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சூடான தோசையில் இந்தச் சட்னியை வைத்து அதன் மீது நல்லெண்ணெ ஊற்றிச் சாப்பிட்டால் சுவை சொக்கவைக்கும்; சத்துக்களும் உடலில் சேரும்.

- நாகலக்ஷ்மி லோகநாதன், வேளச்சேரி

சித்த மருத்துவர் ஆர்.கண்ணன்:

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு 'முடக்கு + அற்றான்' என்று பெயர். இது மருத்துவக் குணங்கள் நிறைந்த, ஓர் அரியவகைக் கீரை. தொடர்ந்து உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நெருங்காது. முதியோர்கள் இதை உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலி குறையும்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

தினசரி காயகல்பம் சாப்பிடுங்க ஆரோக்கியம் மேம்படும்.

மணக்கால் அய்யம்பேட்டை | 12:10 PM | Best Blogger Tips
Photo: தினசரி காயகல்பம் சாப்பிடுங்க ஆரோக்கியம் மேம்படும்.

கடும்பகல் சுக்கு என்பது பகல் உணவில் சுக்கு சேர்ப்பது ஆகும்... தேர்ந்த மாவு சுக்கு என்பது எல்லா ஊர்களிலும் கிடைக்கும். பூச்சி அரிப்பு, சொத்தை, இல்லாத சுக்கு அரைகிலோ வாங்கி வெயிலில் உலர்த்தி மேல் தோலை சீவி- நன்றாக இடித்து பொடி செய்து சலித்து 1 பாட்டிலில்  வைத்துக்கொள்ளவும். 

பகலுணவில் 1பிடி சாதத்துடன் 1ஸ்பூன் மேற்படி சுக்குப் பொடியைக் கலந்து பிசைந்து சாப்பிடலாம். ஒரு மண்டலம் வீதம் சாப்பிட எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.  சுக்கு போலவே கடுக்காயும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதனை 1கிலோ வாங்கி உள்ளிருக்கும் கொட்யை நீக்கிப் பின் உலர்த்தி பொடி செய்து கலந்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

மாரை நேரத்தில் அரை டீஸ்பூன் எடுத்து பசும் பாலுடன் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட்டு வர உடல் நோய் அணுகாமல் கல்பம் போல் இறுகும்.  
நாள்தோறும் சாப்பிட்ட பிறகு இரண்டு நெல்லிக்காய்களை தின்று வாருங்கள். அத்துடன் தினம் ஒரு முறை ஒரு சிட்டிகை கடுக்காய் பொடியையும் சேர்த்து சாப்பிட்டு வர எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். கேழ்வரகு மாவுடன் எள்ளும் சிறிது வெள்ளமும் சேர்த்து இடித்து அடை செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாகும். 

காயகல்பம் சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் காயகல்பத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால், பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.

தலைமுடி உதிர்வதை தடுத்து, அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. பொடுகு, பேன் தொல்லைகளைப்போக்குகிறது. இந்தியாவில் பொதுவாக காயகல்பம் அடங்கிய மூலிகைப் பொடிகளையே தலைக்குத் தேய்த்து இயற்கையான அழகுடன் ஜொலிக்கின்றனர்.

காயகல்பம் காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால், உண்டாகும் வலிகளைப்போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண்எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற
கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது.

ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தாய்மையின் நெகிழ்ச்சி வயிற்றினுள் ஒரு இதயம்..

மணக்கால் அய்யம்பேட்டை | 12:09 PM | Best Blogger Tips
Photo: தாய்மையின் நெகிழ்ச்சி வயிற்றினுள் ஒரு இதயம்..

உருவானது உறுதியானதும்
துவங்கிவிட்டது..
உன்மீதான என் கற்பனைகள்.
உடலைக் கருவாக்கி, உதிரத்தை உணவாக்கி
உன்னை உலகிற்கும், உலகை உனக்கும்
அறிமுகப்படுத்தத் தயாராகிக் கொண்டிருந்தேன்.

உனது பேரிலிருந்து, பெரும் எதிர்காலம் வரை
விரிவடைந்தது எனது சிந்தனைகள்..
உன் ஒவ்வொரு அசைவினையும்
அனுபவிக்க ஆயத்தமானேன்..
உணவு முதல் உறக்கம் வரை
உனக்கேற்றதைப் பழகிக்கொண்டேன்.
உனக்கான பொருட்களை சேகரிப்பதே
என் முழு வேலையாகிப் போனது..
இனிய இசையும் எனது உரையாடல்களையும்
எப்போதும் உனக்குப் பரிசளித்தேன்.

கால்களின் வீக்கம் குறைய பார்லி காஞ்சி குடி
- பாட்டி சொன்னாள்
சூடு தணிக்க விளக்கெண்ணை தடவு
- அம்மா சொன்னாள்
குடல் சுற்றாமல் இருக்க உறங்கும் பயிற்சிகொள்
- அக்கா சொன்னாள்
குனிந்து நிமிர வீட்டுப்பணி செய்
- அத்தை சொன்னாள்
இவற்றோடு நடை பயிற்சியும் செய்
- தோழி சொன்னாள்
மாத்திரைகளை தவறாமல் சாப்பிடு
- இது மருத்துவர்.

அனைத்தும் செய்தேன் உன் ஜனனம் சுகப்பட..
குமட்டல்களும் மயக்கங்களும்
சகித்துக்கொண்டேன் - உன் வளர்ச்சிக்காக.

நிறைமாத வளையல்களின் ஓசை
உனக்குக் கேட்டது போலும்..
உன் பாதங்களை என்னால் உணர முடிந்தது.

இருந்த இடம் சலித்துவிட்டது போல..
நீ முண்டத் தொடங்கினாய்..
கொஞ்சம் கொஞ்சமாக
முதுகுத்தண்டில் ஆரம்பித்த வலி
உடல் நரம்புகளைத் தொற்றியது..
வலிகளைப் பொறுத்துக்கொண்டேன்..
அது உனக்கான வழி என்பதால்.

ஏனோ உனக்கும் எனக்கும் பெரும் போராட்டமே நடந்தது..
இருவருமே அவதிப்பட்டோம்..
உனது பிஞ்சுக் கன்னங்களில்
என் முதல் முத்தம் பதிவதற்கு ஏங்கியிருந்தேன்..
என்னதான் உன்னை வெளியே தள்ளினாலும்
எனக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான்.

முழுநாள் அவதிக்குப்பின்
என் காதில் விழுந்தது..
"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்"
.
.
இந்திராஉருவானது உறுதியானதும்

இந்திரா

வாய்ப் புண் பற்றிய தகவல்களும், வீட்டு வைத்தியமும்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:07 PM | Best Blogger Tips
வாய்ப் புண் பற்றிய தகவல்களும், வீட்டு வைத்தியமும்:-

வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன? 
வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.

யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?
வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்? 
பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.

ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம். உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுகின்றது 

காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.

பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.

இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.

உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.

பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.

மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.

வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது?

வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.

தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.

வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.

தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.

மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.

மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.

Via Fb Karthikeyan Mathan

நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:03 PM | Best Blogger Tips
Photo: நிச்சயம் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

இந்த உலகில் நிறைய அடிமைப்படுத்தும் பழக்கங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஆரோக்கியமானது அல்ல. பொதுவாக ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் அனைத்துமே அடிமைப்படுத்துபவையே. இத்தகைய பழக்கவழக்கங்கள் மிகவும் மோசமானவை. ஏனெனில் இந்த அடிமைப்படுத்தும் பழக்கவழக்கங்கள், அவை இல்லாமல் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாத அளவில் செய்துவிடும். இந்த பழக்கவழக்கங்கள் முற்றிய நிலையிலேயே சிலர் மனநிலை பாதிக்கப்படுகின்றனர். சிலர் இந்த செயல்களால், வெறிப்பிடித்தவர் போல் நடந்து கொள்வார்கள். இத்தகைய ஆரோக்கியமற்ற அடிமைப்படுத்தும் பழக்கவழக்கங்கள் ஆல்கஹால் அருந்துவது, புகைப்பிடிப்பது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது என்பது மட்டுமில்லை. அன்றாடம் நாம் செய்யும் ஒரு சில செயல்களும் தான். அத்தகைய செயல்களைப் பார்த்தால், சாதாரணமாக இருக்கும். ஆனால் அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. இத்தகைய செயல்கள் அனைத்தும் அதனை எந்த நேரமும் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிடும். இப்போது அத்தகைய ஆரோக்கியமற்ற அடிமைப்படுத்தும் மோசமான பழக்கவழக்கங்களும் பெரும்பாலானோர் பின்பற்றும் 10 பழக்கவழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றில் இருந்து விடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமே!!!

ஆல்கஹால் குடிப்பது:

ஆல்கஹால் உடலுக்கு நல்லது தான். ஆனால் அதை மருந்தாக உட்கொள்ளும் போது மட்டுமே தவிர, அதனை அளவுக்கு அதிகமாக பருகத் தொடங்கினால், பின் அதற்கு அடிமையாகும் நிலைமை தான் ஏற்படும். மேலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், இதுவும் பின் உயிரை பறித்துவிடும். இந்த உண்மை அனைவருக்கும் தெரிந்தாலும், பலர் இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் அவர்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, குடும்ப வாழ்க்கையையே சீரழித்துவிடும்.

புகைப்பிடித்தல்:

உலகிலேயே புகைப்பிடிப்பது தான் மிகவும் மோசமான பழக்கவழக்கம். இந்த பழக்கவழக்கமானது ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து, ஒருவித சந்தோஷத்திற்காக செய்ய ஆரம்பித்து தான் பழக்கமாகிவிடுகிறது. இந்த பழக்கம் மோசமான நிலையில் இருந்தால் தான், புற்றுநோய், இதய நோய் போன்றவை சிறுவயதிலேயே வந்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

கஞ்சா:

கஞ்சா மருத்துவத்தில் மிகவும் அரிதாக பயன்படும் ஒரு பொருள். ஆனால் சிலர் இதனை உபயோகித்து, அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். இந்த கஞ்சாவானது மனிதனை முற்றிலும் வெறிப்பிடித்தவன் போல் செய்துவிடும். எனவே இந்த பழக்கத்தை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

இண்டர்நெட்:

இன்றைய காலத்தில் மதுப்பழக்கம், புகைப்பிடிப்பது போன்றவற்றை விட, இண்டர்நெட்டில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை பயன்படுத்துவது தான் மிகவும் கொடியது. மேலும் தற்போது மேற்கொண்ட சர்வே ஒன்றில் கூட, மற்ற பழக்கவழக்கங்களை விட இண்டர்நெட்டிற்கு அடிமைப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தான் அதிகம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் உடல் நலம் மிகவும் மோசமாகிவிடும். குறிப்பாக இண்டர்நெட் பயன்படுத்துவோர், மாய உலகிலேயே எப்போதும் மிதப்பார்கள்.

காப்ஃபைன்:

காப்ஃபைன் என்றதும் பயப்பட வேண்டாம். காபி, டீ மற்றம் இதர காப்ஃபைன் உள்ள பானங்களை அதிகம் சாப்பிட்டால், உடலில் வறட்சி ஏற்படும். எனவே இதனை அளவுக்கு அதிகமாக குடிக்காமல், அவ்வப்போது குடிப்பது நல்லது. இல்லையெனில் சிலசமயங்களில் அவற்றில் உள்ள காப்ஃபைன் பொருளானது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

டிவி:

வீட்டிலேயே டிவி மிகவும் ஆபத்தான பொருள் என்று சொன்னால் நம்பமுடியவில்லை அல்லவா? ஆம், உண்மையில் அந்த சிறிய டிவி பெட்டியானது ஒருவரை அடிமைப்படுத்தும் தன்மை உடையது. எப்படியெனில், அந்த டிவியை அதிகம் பார்த்தால், அதில் வரும் நிகழ்ச்சிகளால், அதிகமாக உணர்ச்சிவசப்படுவது, ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்ப்பதால் உடல் எடை அதிகரிப்பது, கண்களுக்கு பாதிப்பு போன்றவை ஏற்படும்.

ஜங்க் உணவுகள்:

தற்போதைய காலத்தில் எங்கேனும் வெளியே சென்றால், சாப்பிடுவது என்னவென்று பார்த்தால் அது பிட்சா, பர்க்கர் போன்ற ஜங்க் உணவுகளைத் தான். இத்தகைய ஜங்க் உணவுகளை வாரத்திற்கு 4-5 முறை சாப்பிட்டால், உடலில் நிச்சயம் பிரச்சனை ஏற்படும். அதிலும் இதய நோய், உடல் பருமன் போன்றவையே. எனவே இத்தகைய பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

போதைப்பொருள்:

போதைப் பொருட்களில் நிறைய வகைகள் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. குறிப்பாக அவை நரம்பு மண்டலத்தை பாதித்து, குற்றவியல் செயல்களை செய்யத் தூண்டும். சில சமயங்களில் அந்த பொருட்களை பயன்படுத்துவதால், உடனே மரணம் கூட நிகழலாம்.

தூக்க மாத்திரை:

சிலர் இரவில் தூக்கம் வரவில்லை என்பதற்காக தூக்க மாத்திரையைப் பயன்படுத்துகின்றனர். அத்தகைய பழக்கத்தை ஒரு முறை கையாண்டால், பின் அவை இல்லாமல் தூக்கமே வராது. எனவே இவ்வாறு தூக்க மாத்திரையை பயன்படுத்துவதை விட, அதற்கு பதிலாக இயற்கை முறைகளான உடற்பயிற்சி, உணவுகள் போன்றவற்றின் மூலம் தீர்வு காணலாமே!

மொபைல்:

மொபைல் போன் இல்லாதவர்களை தற்போது பார்க்கவே முடியாது. அதிலும் அந்த மொபைல் போன்களை எங்கு சென்றாலும், எடுத்து செல்வர். சொல்லப்போனால் அத்தகைய மொபைலை தூங்கும் போது, குளிக்கும் போது, ஆர்வத்துடன் வேலை செய்யும் போது அருகிலேயே வைத்துக் கொண்டு இருப்பர். சிறிது நேரம் அது இல்லாவிட்டாலும், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது. பித்து பிடித்தது போல் இருப்பர். எனவே மொபைலை தொடர்பு கொள்வதற்கு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள் என்பதை உணர்ந்து, செயல்படுவது நல்லது.

Via FB Gentlegiant Karthikeyan

ஏ.சி. ஒருகணம் யோசி!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:57 AM | Best Blogger Tips
ஏ.சி. ஒருகணம் யோசி!

ஒரு விஷயம் தெரியுமா? இந்தக் கோடையில் ஊட்டியின் பல வீடுகளில் ஏ.சி. பொருத்திவிட்டார்கள். இது ஆச்சர்யத் தகவல் அல்ல; அபாயகரமானத் தகவல். ஏ.சி. இயந்திரங்களின் பெருக்கம் சுற்றுச்சூழலுக்கும் நல்லது அல்ல; வீட்டுச் சூழலுக்கும் நல்லது அல்ல. சரி, வீட்டில் ஏ.சி., காரில் ஏ.சி., அலுவலகத்தில் ஏ.சி. என 24 மணி நேரமும் ஏ.சி-யிலேயே இருந்து பழகியாயிற்று; அதில் என்னதான் பிரச்னை என்கிறீர்களா?

''எப்போதும் ஏ.சி-யிலேயே இருந்தால், உங்கள் உடலின் இயற்கையான தகவமைப்பை நீங்களே சிதைக்கிறீர்கள் என்று அர்த்தம்'' என்கிறார் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குநரான இளங்கோ.

''வெளியே இருக்கும் காற்றை இயந்திரம் உள்வாங்கி அதைக் குளிர்வித்து அறைக்குள் அனுப்பிவிட்டு, உள்ளே இருக்கும் சூடான காற்றையும் தூசுக்களையும் வெளியே அனுப்புவதுதான் ஏர் கண்டிஷனரின் அடிப்படை. ஏர் கண்டிஷனர் என்பதின் அர்த்தம் குளிர்விப்பது என்பது அல்ல. தட்பவெப்ப நிலையை மனித உடலுக்கு ஏற்றவாறு ஆரோக்கியமாக, இதமாக, பாதுகாப்பாக வைத்திருப்பதுதான். இந்தச் சொல் ஹீட்டருக்கும் பொருந்தும்.
பொதுவாக முறையாகப் பயன்படுத்தும் வரை ஏ.சி-யினால் எந்த ஆபத்தும் இல்லை. ஸ்ப்ளிட் வகை ஏ.சி-களைவிட சென்ட்ரலைஸ்டு ஏ.சி-யைக் கூடுதல் கவனம்கொண்டு பராமரிக்க வேண்டும். அப்படிச் சரியாகப் பராமரிக்காமல்விட்டால், அதனுள் சேரும் தூசு, குப்பையால் உள்ளே வரும் காற்று மாசு அடைந்து, இரண்டு வகை பாக்டீரியாக்கள் அறைக்குள் வளர்ந்து பரவும். ஒன்று, லெஜியோனெல்லா நியுமோஃபிலியா      (Legionella pneumophila). இன்னொன்று, ஆக்டினோ மைசெட்ஸ்  (Actino mycetes).  அழற்சிக்கென்றே பிறந்தவை இந்த அழிவு ஜீவன்கள். நீங்கள் ஏ.சி. அறையில் இருக்கும்பட்சத்தில் லேசாகத் தொண்டை அழற்சியில் தொடங்கி அப்புறம் எரிச்சல், புண் ஏற்பட்டு தொடர் வறட்டு இருமல் ஏற்படும். கவனிக்கவில்லை என்றால், முகம் எங்கும் வலி, மூக்கில் சளி ஒழுகுதல், கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் எனக் கடைசியாக நிமோனியா காய்ச்சல் வரை ஏற்பட வாய்ப்பு உண்டு. மிக அதிகக் குளிர்ச்சியில் தொடர்ந்து இருந்தால் தோலில் நீர் வற்றி தோல் வறண்டு அழற்சி வர நிறையவே வாய்ப்பு இருக்கிறது. மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால், நீங்கள் டாக்டரை மட்டும் பார்த்தால் பயன் இல்லை; ஏ.சி. மெக்கானிக்கையும் பார்க்க வேண்டும்.ஒரு விஷயம் தெரியுமா? இந்தக் கோடையில் ஊட்டியின் பல வீடுகளில் ஏ.சி. பொருத்திவிட்டார்கள். இது ஆச்சர்யத் தகவல் அல்ல; அபாயகரமானத் தகவல். ஏ.சி. இயந்திரங்களின் பெருக்கம் சுற்றுச்சூழலுக்கும் நல்லது அல்ல; வீட்டுச் சூழலுக்கும் நல்லது அல்ல. சரி, வீட்டில் ஏ.சி., காரில் ஏ.சி., அலுவலகத்தில் ஏ.சி. என 24 மணி நேரமும் ஏ.சி-யிலேயே இருந்து பழகியாயிற்று; அதில் என்னதான் பிரச்னை என்கிறீர்களா?

''எப்போதும் ஏ.சி-யிலேயே இருந்தால், உங்கள் உடலின் இயற்கையான தகவமைப்பை நீங்களே சிதைக்கிறீர்கள் என்று அர்த்தம்'' என்கிறார் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குநரான இளங்கோ.

''வெளியே இருக்கும் காற்றை இயந்திரம் உள்வாங்கி அதைக் குளிர்வித்து அறைக்குள் அனுப்பிவிட்டு, உள்ளே இருக்கும் சூடான காற்றையும் தூசுக்களையும் வெளியே அனுப்புவதுதான் ஏர் கண்டிஷனரின் அடிப்படை. ஏர் கண்டிஷனர் என்பதின் அர்த்தம் குளிர்விப்பது என்பது அல்ல. தட்பவெப்ப நிலையை மனித உடலுக்கு ஏற்றவாறு ஆரோக்கியமாக, இதமாக, பாதுகாப்பாக வைத்திருப்பதுதான். இந்தச் சொல் ஹீட்டருக்கும் பொருந்தும்.
பொதுவாக முறையாகப் பயன்படுத்தும் வரை ஏ.சி-யினால் எந்த ஆபத்தும் இல்லை. ஸ்ப்ளிட் வகை ஏ.சி-களைவிட சென்ட்ரலைஸ்டு ஏ.சி-யைக் கூடுதல் கவனம்கொண்டு பராமரிக்க வேண்டும். அப்படிச் சரியாகப் பராமரிக்காமல்விட்டால், அதனுள் சேரும் தூசு, குப்பையால் உள்ளே வரும் காற்று மாசு அடைந்து, இரண்டு வகை பாக்டீரியாக்கள் அறைக்குள் வளர்ந்து பரவும். ஒன்று, லெஜியோனெல்லா நியுமோஃபிலியா (Legionella pneumophila). இன்னொன்று, ஆக்டினோ மைசெட்ஸ் (Actino mycetes). அழற்சிக்கென்றே பிறந்தவை இந்த அழிவு ஜீவன்கள். நீங்கள் ஏ.சி. அறையில் இருக்கும்பட்சத்தில் லேசாகத் தொண்டை அழற்சியில் தொடங்கி அப்புறம் எரிச்சல், புண் ஏற்பட்டு தொடர் வறட்டு இருமல் ஏற்படும். கவனிக்கவில்லை என்றால், முகம் எங்கும் வலி, மூக்கில் சளி ஒழுகுதல், கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் எனக் கடைசியாக நிமோனியா காய்ச்சல் வரை ஏற்பட வாய்ப்பு உண்டு. மிக அதிகக் குளிர்ச்சியில் தொடர்ந்து இருந்தால் தோலில் நீர் வற்றி தோல் வறண்டு அழற்சி வர நிறையவே வாய்ப்பு இருக்கிறது. மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தால், நீங்கள் டாக்டரை மட்டும் பார்த்தால் பயன் இல்லை; ஏ.சி. மெக்கானிக்கையும் பார்க்க வேண்டும்.
 
Via Fb ஆரோக்கியமான வாழ்வு
 
கை மற்றும் கால்களை அழகாக்குவதற்கான இரகசியம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:54 AM | Best Blogger Tips
கை மற்றும் கால்களை அழகாக்குவதற்கான இரகசியம்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்காக எத்தனையோ பராமரிப்புக்களை முகத்திற்கு செய்கிறோம். ஆனால் அவ்வாறு உடலில் முகம் மட்டும் நன்கு அழகாக இருந்தால் போதுமா என்ன? இல்லை அல்லவா, எனவே எப்படி முகத்திற்கு அத்தனை பராமரிப்புக்களை மேற்கொள்கிறோமோ, அதைப் போல் அவற்றில் பாதியாவது, உடலின் மற்ற பாகங்களுக்கும் கொடுக்க வேண்டும். முக்கியமாக கை மற்றும் கால்களுக்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் எப்படி முகம் மற்றவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதேப் போல் மற்றவர்களின் கண்களுக்குப் படும்படியான கை மற்றும் கால்களையும் நன்கு அழகாக வைத்துக் கொள்ளவும் வேண்டும். அவ்வாறு சரியாக கவனிக்காவிட்டால், அது பின் சருமத்தில் மற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி, உடலின் அழகையே கெடுத்துவிடும். சரி, இப்போது உடலில் உள்ள கை மற்றும் கால்களை எப்படி, எதை வைத்து பராமரிக்க வேண்டும் என்று பார்ப்போமா!!!

ஆயில் மசாஜ்

கை மற்றும் கால்களில் உள்ள நகங்கள் நன்கு அழகாக பொலிவோடு மின்னுவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது நகங்களில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், நகங்களில் போதிய எண்ணெய் பசையானது கிடைத்து, நகங்கள் வலிமையோடு இருக்கும். வேண்டுமெனில் ஆலிவ் ஆயிலையும் பயன்படுத்தலாம்

சப்பாத்தி மாவு

சப்பாத்தி மாவு பிசைந்த பின்னர் கைகளை கழுவாமல், அப்போது கைகளில் சிறிது பால் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து, கைகளில் சிறிது நேரம் மசாஜ் செய்தால், கைகளில் உள்ள அழுக்குகள் போவதோடு, இது ஒரு சிறந்த மாய்ச்சுரைசராகவும் இருக்கும்.

ஹீல்ஸ் பிரஷ்

வெதுவெதுப்பான நீரில் உப்பு மற்றும் வாஸ்லின் சேர்த்து கலந்து, பாதங்களை அதில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, குதிகாலை சுத்தம் செய்ய உதவும் பிரஷ் அல்லது படிகக்கல்லை வைத்து ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். மேலும் தினமும் படுக்கும் முன் கால்களில் ஹீல்ஸ் க்ரீம்மை தடவி படுத்தால், பாதங்கள் பொலிவோடு இருப்பதோடு, குதிகால் வெடிப்பும் வராமல் இருக்கும்.

எலுமிச்சை சாறு

கைகள் வறட்சியுடன், கடினமாக இருந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், சிறிது சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கைகளை அதில் சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை கால்களில் தடவி, சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கால்கள் நன்கு பொலிவோடு மென்மையாக இருக்கும்.

தேன்

குதிகால் வெடிப்பு இருப்பவர்கள், தேனை குதிகாலில் தினமும் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், குதிகால் வெடிப்பை போக்கலாம். வேண்டுமெனில் தேனிற்கு பதிலாக, தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

ஓட்ஸ்

தேன் மற்றும் பால் ஸ்கரப் கை மற்றும் கால்களுக்கு ஸ்கரப் செய்ய வேண்டுமெனில், அதற்கு ஓட்ஸ், தேன், பால் மற்றும் தண்ணீரை கலந்து, கை மற்றும் கால்களில் தடவி, சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கை மற்றும் கால்களில் உள்ள அழக்குகளில் அனைத்தும் போய்விடும்

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

கண் இமை நோய்களில் இருந்து விடுதலை பெற!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:52 AM | Best Blogger Tips
*கண் இமை நோய்களைத் தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய உணவு முறை குறித்து டயட்டீசியன் சங்கீதா கூறியதாவது: கண் மிக மெல்லிய தோலால் ஆனது. கண் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும்படியான அமைப்பில் உள்ளது. கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல், கண் இமைகளில் கட்டி, கண்கள் வீங்குதல் மற்றும் கண்நோய் போன்ற பிரச்னைகள் வரும். இமை வீக்கத்துக்கு கிருமித் தொற்று முக்கிய காரணம். இதனால் கண்களில் அரிப்பு ஏற்படும். வைரஸ், பாக்டீரியா தொற்றின் காரணமாகவும் இது போன்ற பிரச்னைகள் வரலாம்.

*கண்ணில் பயன்படுத்தப்படும் மேக்கப் சாதன அலர்ஜியால் பிரச்னை வரலாம். இதற்கு கண்களை மூடிக் கொண்டு லேசாக வெப்ப ஒத்தடம் மற்றும் மசாஜ் செய்தால் போதும். வெளியில் சென்று வந்த பின்னர் சுத்தமான தண்ணீரால் கண்களைக் கழுவ வேண்டியதும் அவசியம். பொதுவாக குழந்தைகள், கம்ப்யூட்டர் திரை பார்த்தபடி வேலை பார்ப்பவர்கள், அதிக வெளிச்சம் மற்றும் அழகுக்கலைஞராக இருப்பவர்களுக்கும் இமை வீக்கம் உள்ளிட்ட நோய்கள் வரும்வாய்ப்புகள் உள்ளன. இது போன்ற பாதிப்புகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

*இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க சரிவிகித சத்துணவை பின்பற்ற வேண்டும். அதிகளவில் பழங்கள் சாப்பிட வேண்டும். இதன் மூலம் கண்களின் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் கிடைக்கும். தினமும் ஒரு கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்ச்சியான உணவுகள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மோர், தயிர் தினமும் சேர்க்கவும். அதிக புரதம் உள்ள உணவுகளும் தினமும் அவசியம். சமையலில் அஜினோமோட்டோ பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை கட்டாயம் தவிர்க்கவும்.
 
Via FB Aatika Ashreen
 
“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்”

மணக்கால் அய்யம்பேட்டை | 11:47 AM | Best Blogger Tips

முதன் முதலாகத் தேர்தலை சந்தித்து, தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஆபிரஹாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், “உங்களில் சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள்” என்றார் பாதிரியார்.
எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரஹாம் லிங்கன் மட்டும் பேசாமல் நின்றார். “ஆபிரஹாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?” என பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், “நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்” என்று உறுதியான குரலில் சொன்னார் அபிரஹாம்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்” என புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.

1809ம் வருடம் அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, “தோல்விகளின் செல்லக் குழந்தை” என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப்பட்டு இருந்தாலும் காய்கறி போல மனிதர்கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்கு ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்தும், அவசரமாக தனது 22வது வயதில் ஒரு நகராட்சி தேர்தல் வேட்பாளராக களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதில் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்து போயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாராபுஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள்’. “நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!” என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தைகள்!

இப்போது லிங்கனுக்குத் தன் இலக்குப் புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத்தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச்சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தை சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப்படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு, 1834ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன்பின் நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப்பினர், உபஜனாதிபதி, எனப் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு சில வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்து 1860ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத்தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்!.

இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகள் சிறுவயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந்தது. இத்தனைத் தோல்விகளையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால் தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஆனதும், அதிரடி நடவடிக்கை எடுத்து அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865ல் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.

மணவாழ்க்கை பற்றி லிங்கன் கூறியது - மணவாழ்க்கை லிங்கனுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. பிற்காலத்தில் தம் இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிடும் போது “மண வாழ்க்கை மலர்ப் படுக்கை அல்ல; போர்க்களம்” என்று குறிப்பிட்டார்.

“நீ எதுவாக மாற விரும்புகிறாயோ அதுவாக மாறுவாய்” என்பது ஆபிரஹாம் லிங்கனுக்கு மட்டுமல்ல…
நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாக போராடும் நம்மைப்போன்ற ஒவ்வொருவருக்கும் அது வெற்றி திருமந்திரம்.

Thanks Thanjai Raju Vedachalam