*சனாதனத்தை புரிந்து கொள்ள யாராலும் முடியாது புரிந்தது போல் ஒருவர் அதனை இகழலாம் அல்லது புகழலாம்...
*ஆனால் அது முதலும் முடிவும் அற்றது அதுவே இந்து மதம்
*அதை இகழ்பவனும் , புகழ்பவனும் அதனுள்ளே அடக்கம்
இந்த உலகிற்கு நிகர் அன்னையும் தந்தையும் என தெரிவித்தவர் : *விநாயகர்*
ஒருவர் சிரசினை மற்றொருவருக்கு பொருத்தும் இக்கால விஞ்ஞான முயற்சியின் ஆரம்பம் :
*விநாயகர்*
அக்கால அணுகுண்டு : *பிரம்மாஸ்திரம்*
கலப்பு திருமணம் :*முருகன்*
அன்றே பெண்ணுக்கு சம உரிமை :
*அர்த்தநாதீஸ்வரர்*
கணவன் சொல்லை மீறியதன் விளைவு :
*தாட்சாயிணி*
எல்லை தாண்டியதன் விளைவு : *சீதா*
கடவுளுக்கு பக்தியின் மிகுதியில் எச்சில் பழங்களை தந்தவர் : *சபரி*
தான் அணிந்த மாலையை தந்தவர் : *ஆண்டாள்*
அறுசுவை அற்ற உணவை அளித்தவர் : *விதுரர்*
அதையும் விரும்பி உண்டவர் : *பார்த்த சாரதி*
ஓர் சத்ரியன் சாமியார் ஆகலாம் : *விஸ்வாமித்திரர்*
ஓர் பிராமணன் ஆயுதம் ஏந்தி போர்க்களம் புகலாம் :
*பரசுராமர்*
தந்தை கூறியதால் ஏன் என்று மறுகேள்வி கேட்காமல் தாயின் தலை கொய்தவர் : *பரசுராமர்*
ஓர் பட்டியலினத்தவர் மிகச்சிறந்த நாயன்மார் ஆகலாம் : *நந்தனார்*
ஓர் வேடுவனும் நாயன்மார் ஆகலாம் : *கண்ணப்ப நாயனார்*
*ஓர் திருடனும் இதிகாசம் எழுதலாம் : *வால்மீகி*
அடுத்தவர் மனைவியின் மீது ஆசை கொண்டால் அது விலங்கானலும் , மனிதரானாலும், இராட்சசனானாலும் ஏன் தேவாதி தேவரே ஆனாலும் தண்டனை உண்டு : *வாலி, துட்சாதணன், இராவணன், இந்திரன்*
கொடுத்த வாக்கை காப்பாற்ற இறுதிவரை பிரம்மச்சரியம் : *பீஷ்மர்*
செஞ்சோற்று கடன் தீர்க்க தம்பிகள் என்று தெரிந்த பிறகும் அதே நிலையில் தொடர்வது : *கர்ணன்*
தர்மத்தை காக்க சாரதியாகவும் : *கண்ணன்*
கண்ணனும் , இராமனும் ஒருவரே என்று தெரிந்தாலும் என் பிரபு இராமர் மட்டுமே என்று பக்தி
பிடிவாதமாக : *ஹனுமன்*
தாயின் வாக்கை காப்பாற்ற அதே பிரபுவை எதிர்ப்பது : *ஹனுமன்*
வேடுவனும் , விலங்கும் எனது தம்பிகள் என்று பாராபட்சம் காணதிருப்பது : *இராமன்*
தனது அண்ணனுக்காக தான் கட்டிய மனைவியை பிரிந்து 14 ஆண்டுகள் துயிலடையா நிலை மேற்கொண்டது. : *இலட்சுமணன்*
இந்த பரதத்தை விட என் பரந்தாமனின் பாதசுவடுகளே எனக்கு முக்கியம் : *பரதன்*
தன் கணவன் காணாததை தானும் கான விரும்பேல் : *காந்தாரி*
பக்தியால் பரந்தாமனை கட்டுற செய்தவன் : *சகாதேவன்*
பக்தியால் பிரபுவை எதிர்த்து நின்றவன் : *ஹனுமன்*
தன் அண்ணன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டி வெளியேறிவன் : *விபீஷணன்*
தன் அண்ணன் செய்வது தவறே ஆனாலும் இறுதிவரை உடன் நின்றவன். : *கும்பகர்ணன்*
நண்பணின் மனைவியினை அபகரித்து சென்றவனை தாக்கியவன். : *ஜடாயு*
தன் மனைவியை அபகரித்து சென்றவன் நிராயுதபாணியாக நிற்கும் பொழுது இன்று போய் நாளை வா என்று கூறிவன். : *இராமன்*
தன்னை நூறு முறை வஞ்சிக்க அனுமதி தந்தவன் : *கண்ணன்*
பக்தனின் ஹரி நாராயண எனும் ஒரு குரலுக்கு ஓடோடி வந்தவன்: *நரசிம்மன்*
அன்றைய TEST TUBE BABY : *தோரோணாச்சாரியார்*
அன்றைய incubator : *கமண்டலம்*
வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் சீடன் மகாபலியை காப்பாற்ற முயற்சித்தார் : *கிருபாச்சாரியார்*
வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் வாக்கை காப்பாற்ற தானம் செய்தவன் : *கர்ணன்*
தன் மனைவியும் தன் நண்பனும் பழகுவதை எள்ளளவும் சந்தேக நோக்கோடு பார்த்ததில்லை : *துரியோதனன்*
கருவறையில் போர் அறிவு பெற்றவன் : *அபிமன்யு*
எதிரியே ஆனாலும் தன் தொழிலில் நேர்மை தவறாதவன் : *சகாதேவன்*
உலகை காப்பவனே ஆனாலும் தன் திருமணத்திற்காக கடன் வாங்கியவன் : *சீனீவாசன்*
கடவுளுக்கே கடன் தந்தவன் : *குபேரன்*
தன் திறமையை நிருபிக்க பறவையின் கண்ணை கொய்தவன் : *அர்ஜுனன்*
மாலை நேரம் பறவையின் வாயில் உணவு உள்ளது அது நிச்சயம் தன் குஞ்சுகளுக்கு உணவினை எடுத்து செல்வதாக தோன்றுவதால் என்னால் தாக்கயிலாது : *கர்ணன்*
அன்றைய அதி நவீன போர் விமானம் : புஷ்பக விமானம்
அடுத்தவர் மண் மீது ஆசை பட்டால் : *மகாபாரதம்*
அடுத்தவர் பெண் மீது மோகம் கொண்டால் : *இராமாயணம்*
முற்றிலும் உண்மை,,,
வாழ்க வளமுடன் நலமுடன்
மகிழ்வித்து மகிழ்வோம்
காளி மாதா கீ ஜெய்
Thanks & Copy from Web