நாட்டின் நலனை கருத்தில் கொண்டு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:50 PM | Best Blogger Tips

 


எண்81

#அரசியல்

கிரண் பேடி என்ற லஞ்சம் வாங்காத நேர்மையான, தைரியமான ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியை இனம் கண்டு அவரை பாண்டிச்சேரியில் துணை நிலை ஆணையராக்கியது பாஜக அரசு. உடனே அவர் சங்கியாகி போனார்...


நாட்டுக்காகவே யோசித்து மதத்தையும் தாண்டி ஒரு நல்ல மனிதராக, நேர்மையாக விளங்கிய, நாட்டின் ஏவுகணையின் தந்தை அப்துல்கலாம் அய்யாவை குடியரசு தலைவராக ஆக்கியது பாஜக. பிற்காலத்தில் அவரும் சங்கியாகி போனார்...

வெளி உறவு செயலாளராக திறமையாக பல நாடுகளில் வேலை செய்தவர். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் தூதரக அதிகாரியாக இந்திய அரசு அலுவலராக வேலை செய்தவர் திரு சுப்ரமணியம் ஜெய்சங்கர். அவரின் திறமையை பார்த்த மோடி அரசு நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அவரையே வெளியுறவு மந்திரி ஆக்கியது. பிற்காலத்தில் அவரும் சங்கியானார்...


மோடியின் தலைமை பண்பை கவனித்து இந்தியாவை மிக நெருங்கிய நட்பு நாடாக மாற்றிய அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூட சங்கி பட்டம் பெற்றார்...




தமிழ்நாட்டில் பிறந்து டில்லியில் பொருளாதாரம் படிப்பில் MPhil முடித்து பின் லண்டனில் வசித்து திரும்பிய நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நிதி அமைச்சர் பதவி. அவரும் இப்பொழுது சங்கிதான்...


விஜயகுமார் என்னும் மிக திறமை வாய்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரியை, மூன்று மாநில போலீஸ் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டு இருந்த வீரப்பனை சாதுரியமாக தூக்கிய காஷ்மீரின் சிறப்பு காவல் படை கண்காணிப்பாளர் ஆக மிக திறமையாக பணியாற்றிய அவரை உள் துறை அமைச்சருக்கு ஆலோசகராக நியமித்தது பாஜக. அவரும் தற்போது சங்கி ஆனார்...


அரசியலுக்காக, ஓட்டுக்காக காங்கிரஸ் அரசு அயோத்தி பிரச்சனையை வேண்டும் என்றே ஒரு முடிவுக்கு கொண்டு வராமல் இழுத்தடித்தது. அதற்கு தைரியமாக முற்றுப்புள்ளி வைத்து பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்த முன்னால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கூட சங்கி என்றே அழைக்கப்பட்டார்...

கர்நாடகாவில் சிங்கம் என்று பெயர் எடுத்த லஞ்சம் வாங்காமல் மக்களுக்காகவே மக்கள் போலீஸ் என்று பெயரெடுத்த அண்ணாமலை என்பவர் அந்த ஐபிஎஸ் வேலையும் தாண்டி மக்களுக்கு நல்லது செய்ய ஒரு கட்சியை தேர்ந்தெடுத்தார். அது மோடி தலைமையிலான பாஜக என்று முடிவெடுத்தார் கடைசியில் அவரும் சங்கி ஆகிப் போனார்...


அமுதா என்ற ஒரு சிறந்த நேர்மையான திறமையான ..எஸ் அதிகாரியை இனம் கண்டு அவரை பிரதம மந்திரி அலுவலகத்துக்கு, டில்லிக்கு மாற்றியது மோடி அரசு. அதாவது நாட்டு நலனுக்கான சட்டங்களை துரிதமாக அமுல்படுத்த ஒரு சுறுசுறுப்பாக வேலை செய்யும் அதிகாரி தேவை என்ற காரணம் தான் அங்கே பணி அமர்த்தப்பட்டார். ஆனால் அவரும் சங்கியாகி போனார்...


சென்னை அண்ணா பல்கலைக் கழகம் தான் தமிழ்நாட்டின் அனைத்து தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளையும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம். அதன் பதவிகளுக்கு கோடிக்கணக்கான பணம் லஞ்சமாக பெறப்பட்டு பணியமர்த்த படுகிறது என்ற தகவல் வர நேர்மையே வாழ்க்கையாகக் கொண்ட லஞ்சம் என்பதைத் தவிர்த்து வாழ்ந்து வந்த சூரப்பா என்பவரை பாஜக அரசு அண்ணா பல்கலை கழகத்திற்கு நியமித்தது. கடைசியில் அவரும் சங்கி ஆகிப் போனார். அவர் மேலேயே ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியது ஊழலுக்கு புரையோடிப்போன திராவிட கட்சிகள்...



இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நல்ல திறமையும் அறிவும் நேர்மையும் தலைமைப் பண்பையும் கொண்ட மனிதர்களை இந்த பாஜக அரசு தேடித்தேடி பதவி வழங்கி அவர்களை மிகச் சிறந்த தலைவர்களாக முன்னெடுத்துச் செல்கிறது...


ஆனால் அவர்கள் அனைவரும் சங்கி என்று நேர்மையில்லாத, காங்கிரஸ் குடும்பம், களவாணி திமுக குடும்பம், பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் குடும்பம், காஷ்மீரின் வளங்களை எல்லாம் ஒரே குடும்பமாக அனுபவிக்கும் பரூக் அப்துல்லா, கொல்கத்தா மமதை மம்தா, டன் கணக்கில் தங்கம் கடத்திய கேரள கம்யூனிஸ்ட் போன்றவர்களால் ஏளனம் செய்யப்படுகிறது...


மேலே சொன்ன யாருமே பாஜக கட்சியின் பிதாமகன் அத்வானியின் குடும்பமோ, மோடியின் குடும்பமோ, வாஜ்பாய் குடும்பமோ, சுஷ்மா சுவராஜின் குடும்பமோ, அறும் ஜெட்லியின் குடும்பமோ அல்லது அமீத்ஷாவின் குடும்பமோ அல்ல. அனைவருமே திறமைசாலிகள், நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் என்ற அந்த ஒற்றைக் காரணம் தான்...


நான் பாஜகவை ஆதரிக்க காரணமே இதுதான். இவர்களுக்கெல்லாம் நாடுதான் முக்கியம். இல்லாவிடில் இன்னேரம் அத்வானி தனிக்கட்சி ஆரம்பித்து பாஜகவை உடைத்திருப்பார். முரளி மனோகர் ஜோஷி மோடி வடகிழக்கு பக்கமே வர முடியாதபடி செய்திருப்பார். பாஜகவில் குடும்பத்தை முன்னிறுத்தி கட்சி இல்லை. நாட்டுக்காக, கொள்கைக்காக குடும்பத்தையே கவனிக்காமல் வந்தவர்கள், இருப்பவர்கள் தான் அதிகம். அவர்களுக்கு பெயர்தான் சங்கி...


நாளை அமீத்ஷாவின் மகன் பிரதம மந்திரி ஆக முடியாது. ஆனால் அமித்ஷா குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத தமிழ் நாட்டின் நிர்மலா சீதாராமன் அல்லது கர்நாடகா வின் தேஜஸ்வி சூரியா அல்லது அண்ணாமலை ஐபிஎஸ் கூட பிரதமர் ஆக முடியும் பாஜக ஜெயித்தால்...

இப்படிப்பட்டவர்களே சங்கி எனும் போது நாமும் உரக்க சொல்வோம்...

சங்கி என்று...🚩

Babu Sabapathi

Courtesy - Kamatchi Thevar Maharajan

 

நன்றி இணையம்