அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டால் குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:18 | Best Blogger Tips

 


வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவில் என்ன நடந்தது பாருங்கள். 1980-ல் புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்கள்சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது; வயதானவர்கள் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டால், குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள்.


** அவர்கள் எச்சரித்தபடியே பொறுப்பும் பாங்கும் அற்ற அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன. அன்புடன் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது. சமையல் கலை மட்டும் அல்ல. குடும்ப கலாச்சாரத்தின் மையப்புள்ளி. சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான். சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன? 1971-ல் மொத்த குடும்பங்களில் கணவனும்-மனைவியும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம். 2020--ல் அது 20 சதவிகிதமாக நலிந்துவிட்டது. அன்று வாழ்ந்த குடும்பங்களாக இருந்தது இன்று தங்கும் வீடுகளாகிவிட்டது. அமெரிக்காவில் இப்போது பெண்கள் தனித்திருக்கும் வீடுகள் 15 சதவிகிதம்; ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள் 12 சதவிகிதம்; 19 சதவிகிதம் வீடுகள் அப்பாவோ, அம்மாவோ மட்டுமே இருக்கும் வீடுகள்; 6 சதவிகிதம் வீடுகள் குடும்பங்கள் ஆண்--பெண் சேர்ந்து தங்குமிடங்கள். இன்று பிறக்கும் மொத்த குழந்தைகளில் 41 சதவிகிதம் திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கின்றன



அதில் பாதி குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளுக்கு.*** இந்த அலங்கோலத்தால் அமெரிக்காவில் 50 சதவிகிதம் முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன; 67 சதவிகிதம் இரண்டாவது திருமணங்களும், 74 சதவிகிதம் மூன்றாவது திருமணங்களும் விவகாரத்தாகின்றன.****. 


படுக்கை அறை மட்டும் குடும்பம் அல்ல. சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால், திருமணம் நிலைகுலைந்துவிடும் என்பதற்கு அமெரிக்கா உதாரணம். அங்குபோல இங்கும் குடும்பங்கள் அழிந்தால் நமது பெண்ணுரிமைவாதிகள் கடைகளில் இனிப்பு வாங்கி வழங்கி கொண்டாடுவார்கள். குடும்பங்கள் அழிந்தால் மனநலமும் உடல் நலமும் சீரழியும். வெளியில் சாப்பிடுவதால் உடல் ஊதிப்போகிறது****ஏராள தொற்று வியாதிகள் வருகின்றன.*****.


சேமிப்பும் குறைகிறது.*எனவே சமையல் அறை, சமையல் என்பது குடும்ப நலனுக்கு மட்டும் ஆதாரம் அல்ல, உடல் நலம் மன நலம் பொருளாதாரத்துக்கு கூட அவசியம். இதிலிருந்து அனைத்து நன்மைக்கும் பெண்கள் இன்றி அமையாத கடவுள் படைப்பு என்பதை ஆண்கள் உணரலாம். பெண்களை, குறிப்பாக மனைவியை, “போஜ்யேஷு மாதா”, உணவூட்டுவதில் தாய், என்கிறது சம்ஸ்க்ருத சுபாஷிதம்.


*https://www.nber.org/system/files/chapters/c11298/c11298.pdf பக்கம் 341

**U.S. Census Bureau, Current Population Survey, Annual Social and Economic Supplement, selected years, 1970 to 2012

***https://www.psychologytoday.com/.../the-high-failure-rate...

****https://www.news-medical.net/.../Obesity-and-Fast-Food.aspx

*****https://www.ishn.com/.../98787-eating-out-can-make-you-sick

 

நன்றி இணையம்