மியான்மர் ல் நடப்பது என்ன

மணக்கால் அய்யம்பேட்டை | 12:21 PM | Best Blogger Tips
Image result for மியான்மர்
வழக்கம் போல குழந்தைகள் படத்தை வெளியிட்டு அனுதாப ஆதரவு மூலம் தப்பிக்க பார்க்கிறார்கள் தீவிரவாதிகள். எப்படி ISIS தங்கள் அட்டுழியம் முடிவுக்கு வரும் போது சிரிய அகதிகள் முகத்தையும் - குழந்தைகள் முகத்தை வெளியிட்டு உலக நாடுகள் ஆதரவை அனுதாபத்தை கொண்டு தப்பிக்க பார்த்தார்களோ அதே பார்முலா இங்கேயும் அரங்கேறுகிறது.
Image result for மியான்மர்
இதை நான் சொல்லவில்லை... அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இன்றைய மியான்மர் அரசின் தலைவர் ஆன் சான் சூ கீ மறைமுகமாக கூறுகிறார். அட இவர் 15வருடம் மேலாக வீட்டு சிறையில் இருந்தவர் - அகிம்சை வழியில் போராடிய பொறுமையாக சிறையில் 15வருடம் இருந்த ஒரு பெண் இந்த ரொஹின்யா முஸ்லிம்கள் விசயத்தில் ஏன் இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக நிற்கிறார் என்று யாரும் யோசிக்கவில்லையே?
முதலில் கண்ணை மூடிக்கொண்டு ஊடகங்களை நம்புவதை நிறுத்துங்கள் அனைவரும்.. இன்றைய காலத்தில் ஊடகங்கள் 1கோடி கொடுத்தால் போதும் விளம்பரம் ஒளிபரப்புவது போல செய்தி ஒளிபரப்ப தயார். Al Jazeera போன்ற செய்தி நிறுவனத்தை எல்லா நாடுகளிலும் தடை செய்ய வேண்டும்.. எனவே நீங்களே நேர்மையாக இந்த விவகாரத்தின் பின் புலம் தேடவும
2014 நவம்பர் மாதம் National Investigation Agency (NIA) ஹைதராபாத் நகரில் கலித் மொஹமத் என்பவனை கைது செய்தது. குற்றம்: சர்வதேச தீவிரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்தது, இந்தியாவில் பங்களாதேஷ் எல்லைகளில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்தான் என்பதால்.
அவரிடம் நடந்த விசாரனையில் தான் தெரிந்தது அவர் இந்தியர் அல்ல, ரொஹின்யா முஸ்லிம். இவன் எப்படி இந்தியன் ஆனான்?
16
அரசு ஆவனங்கள் இவனிடம் இருந்தது. அது எப்படி?
உலகளாவிய நாடுகள் கூட, பிரச்சனை இவர்களை வைத்து கொள்வது கூட அல்ல. ஏன் என்றால் அது ஒரு மனிதாபிமான விசயம். ஆனால் பிரச்சனை எங்கே வருகிறது என்றால் , அப்படி உதவும் நாடுகள் மீதே தாக்குதல்கள் நடத்தபடுவது தான்.
இதை இந்தியா மட்டும் அல்ல.
அதில் கடந்த 7வருடத்தில் ஐரோப்பிய தேசம் முழுவதும் பெரிய அளவு தாக்குதல்களை தினம் தினம் எதிர்கொள்கிறார்கள்.
அதில் பல இந்த அகதிகளாக தஞ்சம் அடைந்த மக்களால் நடத்தபடுவதாக புள்ளிவிவரங்கள் கிடைக்க அந்த நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்?
இதன் காரணமாக தான் அமெரிக்க பெரிய அளவில் அகதிகள் விசயத்தில் கண்டுகொள்ளவில்லை.
இப்போ நீங்கள் சொல்வது போல் பிஜேபி இதில் மதம் பார்க்கவில்லை என்று நன்கு புரிந்து கொள்ளவும் - நம் நாட்டில் 40,000 ஆப்கன் அகதிகள் உள்ளனர். இந்தியா என்றுமே அவர்களை உடனடியாக காலி செய்ய விரும்பவில்லை.
ஶ்ரீலங்கா அகதிகளாக தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள் கூட திருப்பி அனுப்பும் வேலை நடக்கவே செய்கிறது. மண்டபம் முகாம் போய் பாருங்கள் 30,000க்கும் மேல் இலங்கை தமிழர்கள் மீண்டும் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப இந்தியா உதவியுள்ளது.
திபெத்திய அகதிகள் 80,000பேர் இருக்கிறார்கள். இவர்களால் பிரச்சனை இல்லை இன்றுவரை. 1959களில் இருந்து இங்கே தான் இருக்கிறார்கள். ஆனால் இந்திய சட்டத்தை மதித்து நன்றிகடனுடன் நடந்து கொள்கிறார்கள். உண்மையில் திருப்பி அனுப்பும் தேவை எங்கே வருகிறது என்றால் "இவர்கள் இந்த தேசத்திற்கு விசுவாசம் இல்லாத வேலைகளில் இறங்கும் பொது தான்".
எனவே மதம், இனம், நாடு அல்ல விசயம். அவர்களால் இந்த தேசத்திற்கு பிரச்சனை என்றால் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்! தயவு கூர்ந்து அனைத்திலும் மதம் பார்க்காதீர்.
ரெம்ப தூரம் எல்லாம் வேண்டாம் இங்கே நத்தம்- ஆம்பூர் - திண்டுக்கல்- ராமநாதபுரம் செல்லுங்கள் அங்கே வெளிமாநில இஸ்லாமியர் நடமாட்டம் நன்கு தெரியும். போதுமான பாதுகாப்பு இங்கே அவர்களுக்கு கிடைகிறது. 
----------------------
மீண்டும் மியான்மர் விவகாரம் உள்ளே செல்வோம்;
ஏன் மியான்மரில் இந்த பிரச்சனை உருவானது?
மியான்மரில் வட பகுதியில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் இடங்களில் பாக்கிஸ்தான் துணையுடன் ஜிகாத் போராளிகள் முஜாகிதீன்களுக்கும் 1960களில் இருந்தே பிரச்சனை உண்டு. ஆனால் பெரிதாக இது வளரவில்லை.
சவுதி அரபியா என்று பின்லேடன் மூலம் அல்கைதா தீவிரவாத குழுவை ஆரம்பித்து - உலகம் முழுவதும் இந்தியாவில் காஷ்மீர் தொட்டு எங்கு எல்லாம் இஸ்லாமியர் பெரும்பான்மை உள்ளனரோ அங்கு எல்லாம் தனி நாடு கேட்டு போராட்டத்தை தூண்டிய நாள் முதல் இந்த மியான்மரில் ரொஹின்யா பகுதியில் ஒரு கூட்டம் தனி நாடு கோசத்துடன் Rokhine State முன் வைத்து புனித போர் (வழக்கம் போல) என்று மத உணர்வை தூண்டி தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பம் ஆனது.
ஜாஃபர் கவால் என்பவனால் உருவான Rohingya Liberation Party - 1990களில் புனித போருக்கு அழைப்பு விடுத்தனே அப்போ எங்கே இருந்தது இந்த உலக நாடுகள்??? Rohingya Patriotic Front என்று பல குட்டி குட்டி தீவிரவாதி நாய்கள் எல்லாம் சேர்ந்து Rohingya Solidarity Organisation என்று ஒன்று பட்டு இந்த மியான்மர் அரசு ராணுவத்தை எதிர்த்து புனித போர் அறிவித்த போது இவர்களுக்கு ஆதரவு கொடுத்த இஸ்லாமிய நாடுகளை எதிர்த்து எந்த நாடும் வாய் திறக்கவில்லையே??
மிக முக்கியமாக உலக நாடுகள் கவனத்தை எப்போ இந்த ரோஹின்யா முஸ்லிம்கள் பிடித்தார்கள் தெரியுமா? இன்று அல்ல.. 2008களில் தொட்டே இவர்கள் கொஞ்சம் பிரபலம் எதற்கு தெரியுமா ? மனித வெடிகுண்டுக்கு...
ஆப்கனில் நடக்கும் பெரும்பாலான மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்த மியான்மர் முஸ்லிம்கள் தான் என்ற விவரம் வெளிவந்த போது தான் இவர்களை உலகம் முதலில் அறிந்தது.
அதாவது பாருங்க மனித தற்கொலை படைக்கு இந்த அரபிய ஆதரவு கொண்ட தீவிராவாத குழுக்கள் எல்லோருக்கும் தேவையான ஆட்கள் இங்த Rohingya பகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி கூட்டி செல்கிறார்கள் என்ற உண்மை வெளி வந்த நாள் தான் இந்த Rohingya முஸ்லிம்கள் உலக நாடுகள் கவனத்தில் வந்தார்கள்.
இது வேலைவாய்ப்பு முகாம் என்று நான் கேலி செய்வதாக நினைக்க வேண்டாம் - இப்படி போகும் ஜிகாத் போராளிகளுக்கு சம்பளம் மாதம் 175 டாலர் முதல் 500டாலர் வரை கிடைக்கும். இறந்துவிட்டால் அவர்கள் குடும்பத்திற்கு 3லட்சம் முதல் 4லட்சம் வரை நிதி வழங்கபடும். அப்போ இது வேலைவாய்ப்பு முகாம் தானே??? அதான் சும்மா சுற்றி திரிந்த ரவுடி நாய் எல்லாம் புனித போர் என்று ஆப்கனில் போய் அந்த நாட்டை நாசம் செய்தனர்.
வழக்கம் போல இந்த வேலையில் இடைத்தரகராக நம்ம பாகிஸ்தான் ராணுவம் முழு ஆதரவு அளித்தது. ஆதாரம் வேண்டும் என்றால் சுவிடன் பத்திரிக்கையாளர் Bertil Lintner மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கயை முழுமையாக தேடி படிக்கவும். CNN பல ஆதாரங்களை வீடியோவாகவே வெளியிட்டது தாராளமாக தேடுங்கள் இவர்கள் லட்சனம் புரியும்.
இவர்கள் முயற்சிக்கு உலக இஸ்லாமிய நாடுகள் செல்வந்தர்கள் நன்கொடை கிடைக்க Arakan Rohingya Salvation Army புனித போர் அறிவிக்கபட்டது 2016. இவனுக தான் வாங்க போருக்கு என்று மக்களை உணர்வை தூண்டி அழைத்தவர்கள்.. மியான்மர் முழுவதும் நடக்கும் பெரும்பாலான தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் Rohingya Solidarity Organization இயக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் தான்.
புனித போர் என்று கூப்பாடு போடாவேண்டியது - தோல்வி ஆகும் நேரத்தில் மக்கள், அகதிகள் , குழந்தைகள் என்று பரப்பிவிட்டு அனுதாபம் மூலம் தப்பிக்கும் வேலையில் இறங்குவது இந்த மனித தன்மை இல்லாத மானக்கேட்ட ஜிகாத் போராளிகளுக்கு ஒரு பொது பிழைப்பு ஆகிவிட்டது.
அதற்காக ? மொத்த மக்களையும் நாம் தீவிரவாதி என்று கூற முடியுமா???
கட்டயாம் முடியாது தான். ஆனால் ஏன் மியான்மர் புத்த மக்கள் இஸ்லாமிய மக்களை வெறுத்து தாக்குதல் நடத்த வேண்டும்?என்று நாம் சிந்திக்கக் வேண்டும். ஒரு பக்கம் மக்கள் சொல்லும் விஷயத்தை மட்டும் நாம் எடுத்து கொள்ள முடியாது.
மியான்மர் மக்களுக்கு இப்படி தொடர் தீவிரவாத பிரச்சனைகளால் வெறுப்பு இருப்பது உண்மை. ஆனால் அது எங்கே இவர்களை விரட்டி அடிக்கும் அளவுக்கு கோபமாக ஆகிறது என்று நாம் கொஞ்சம் பொறுமையாக தேடி பார்க்கவேண்டும்.
மியான்மர் புத்த மத மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான கலவரமாக காரணம்:
"2016 நவம்பரில் 500க்கும் மேற்பட்ட ரொஹின்யா இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து 2காவல் அதிகாரிகளை அடித்து கொலை செய்தது தான் இது உள்நாட்டு கலவரமாக உருவெடுக்க காரணம்". இதுலாம் சரியா???? 500பேர் சேர்ந்து அடித்து மிதித்து கொலை செய்தால் அந்த கிராமத்தையே தீயில் கொளுத்த வேண்டும் என்று இன்னொரு மதத்தினர் கிளம்புவதை நாம் எப்படி அடக்க முடியும்???? சும்மா இங்கே உக்காந்து கொண்டு வசனம் பேசலாம்.. தியாகிகள் போல பேசலாம் ஆனால் தொடர் நிகழ்வுகளின் வெளிபாடாக உருவாகும் மத கலவரங்களுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை நாம் யோசிக்க வேண்டும்.
நம் காஷ்மீரி கூட சென்ற ஜுன் மாதம் jamia மாசூதி முன் வைத்து ayub pandit என்ற ஒரு போலிஸ் அதிகாரியை 200பேர் முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து அடித்து கொலை செய்தது நியாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். இது எல்லாம் நல்ல விஷயமா???? இது மத கலவரங்களை மக்கள் மனதில் விதைக்கும் வேலை.
ரொஹின்யா முஸ்லிம்கள் மூலம் மியான்மரில் நடந்த எந்த கலவரமும் இன்று விவாதமாக பேசுவது இல்லை. அவர்கள் 24போலிஸ் நிலையங்களை நாசமாக்கி அதில் 72பேர் கொலை செய்த அட்டுழியம் எதுவும் இன்று அப்படியே மறைக்கபடுவது தவறு. நேர்மையாக இருபக்க நியாயதர்மத்தை நாம் கேட்க வேண்டும் தானே... என்னமோ திடீர் என்று இந்த மக்கள் தாக்கபடுவதாக பேசுவது தவறு... அதே நேரம் அப்பாவி மக்கள் காக்கப்படவேண்டும்.
எனவே ஜிகாத் போராளிகளுக்கு ஆதரவு - உள்நாட்டில் தீவிரவாதம்- பிரிவினை கோசம்- முடிவில் மத கலவரமாக ஆவதற்கு முழுக்க முழுக்க ரொஹின்யா முஸ்லிம்கள் தான் தவிர வேறு யாரையும் கைகாட்டுவது கடினம். இவர்கள் ஜிகாத் போராளிகளை நம்பினார்கள் அதனால் வந்த வினை என்று தான் சொல்லவேண்டும்.
---------------------------------------
Related image
பிஜேபி அரசை பொறுத்தவரை - இந்தியாவுக்கு ஆபத்தானவர்கள் என்று தெரிந்தால் கூண்டோடு வெளியேற்றுவது தான் இங்கே இருக்கும் மற்ற அகதிகளுக்கும் ஒரு பாடமாக இருக்கும் நம்புகிறது ஒருபுறம்
ஆனால் இவர்களை கூட்டிவந்து சோறு போட்டு கவனித்து கொள்வது போக - இவர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் போகாமல் கண்காணிக்கவும் வேண்டும் என்று என்ன அப்படி தேவை இருக்கு இந்தியாவுக்கு??? காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கையில் இந்த ரொஹின்யா முஸ்லிம்கள் இருப்பது அசைக்கமுடியாத உண்மை அல்லவா.
பிஜேபி எந்த மதத்தினரையும் special கவனிப்பு கொடுத்து- மாற்று மதத்தினரை திருப்தி படுத்தி நல்ல பெயர் வாங்க அவசியம் இல்லை. புரிந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் புரிய வைப்பது தான் வழி என்று நடந்து கொள்பவர் தான் மோடி".
----------------------------------------
இறுதியாக :
இங்கே சவுதிக்கு வக்காலத்து வாங்க வகாபிசம் பரப்பும் கூட்டம் ஒன்று இருக்கிறது. சவூதி அப்படி நாடு இப்படி நாடு என்று புகழ்ந்து தள்ளும் அவர்கள்
இப்படி கேட்கலாமே:
50,000 குழந்தைகள் சாப்பாடு இல்லாமல் வறுமையில் சாகும் நிலையில் இருக்க - ஏறக்குறைய 29லட்சம் மக்கள் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் வறட்சியில் சிக்கிய போது அமெரிக்க அதன் நேசநாடுகள் தொட்டு இந்திய வரை அனைத்து நாடுகளும் உதவி கரம் நீட்டிய பொது பக்கத்து நாடான சவூதி அரபியா என்ன செய்தது???? ஏன் செய்யவில்லை?
ISIS அதன் துணை ஜிகாத் போராளிகளுக்கு பணத்தை வாரி வழங்கிய இந்த சவூதி அரபியா அதன் கூட்டாளிகள் சிரியா நாட்டில் இருந்து ஏறக்குறைய 1கோடியே 30லட்சம் அகதிகள் வெளியேறிய போது ஒரே ஒரு அகதிக்காது தன் நாட்டில் அனுமதித்ததா இந்த சவூதி அரபியா?????? ஒரே ஒரு அகதியையாது அடைக்கலம் கொடுக்குமா இந்த சவூதி ????ஆனால் பல ஆயிரம் கோடிகளை இந்தியா ஆஸ்திரியா ஐரோப்பா என்று மதம் மாற்றவும் வகாபிசம் பரப்பவும் அனுப்புவதில் என்ன குறைந்த பட்ச நியாயம் இருக்கிறது????
ஒரு டஜன் நாடுகள் இருக்கும் போது- பக்கத்தில் பங்களாதேஷ் பாக்கிஸ்தான் இருக்கும் போது என்ன தேவைக்கு இந்தியா இந்தியா இந்தியா என்று கைகாட்டுகிறார்கள் இந்த ஊடகங்கள்????
ஆம் அந்த குழந்தைகள் வாழ்வு நல்ல இருக்க வேண்டும் என்பது தான் எண்ணம் அதற்காக உதவ தயார் - ஆனால் சாத்தான்களை நாட்டில் அனுமதிக்க முடியாது. இப்போதும் கூறுகிறேன் ஆப்கன் அகதிகள் கூட இஸ்லாமியர்கள் தான் - பிரச்சனை இஸ்லாம் அல்ல தீவிரவாதம். மியான்மர் நாட்டின் உள்விவகாரம் இது. எட்டி நின்று கேட்கும் உதவிகள் செய்தால் மட்டும் போதும்.
Related image
"உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் ; உழைப்புக்கு உரிய மரியாதை; தன்னை விட தன் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும், கொஞ்சம் பொழுதுபோக்கு; அமைதிக்கு கொஞ்சம் கடவுள் வழிபாடு" என்று வாழ விரும்பும் இந்த இந்திய மண்ணில் பெரும்பான்மை ஹிந்து மக்கள் எளிமையாக சட்டத்தை ஏற்று கொள்ளும் போது - அதுலாம் முடியாது எனக்கு என் மதம் தான் முக்கியம் அடுத்து தான் நாடு சட்டம் எல்லாம் என்று பேசி திரிவது யார்???? மனசாட்சியுடன் யோசிக்கவும்.


நன்றி இணையம்