*தலையாட்டி பொம்மையும்... தஞ்சை பெரியகோவிலும்...*

மணக்கால் அய்யம்பேட்டை | 12:00 PM | Best Blogger Tips
Image result for தலையாட்டி பொம்மையும்... தஞ்சை பெரியகோவிலும்Image result for தலையாட்டி பொம்மையும்... தஞ்சை பெரியகோவிலும்

தஞ்சாவூர்ல அந்த பொம்மை தயாரிக்கப்படுதுங்குறத விட வேற என்ன தொடர்பு ?
இருக்கு... இந்த சாதாரண தலையாட்டி பொம்மைக்குள்ள ஒரு தத்துவத்தையே ஒளிச்சு வச்சிருக்காங்க !
களிமண்ணை வைத்து செய்யப்படும் இந்த தஞ்சாவூர் பொம்மைகள் மிகவும் பாரம்பரியமானவை !
கொட்டங்கச்சி எனப்படும் தேங்காயின் பாதி சிரட்டையின் மேல் களிமண்ணால் செய்யப்பட்ட ராஜா ராணியின் உருவ பொம்மைகளை வைத்து செய்யப்படுகிறது
அந்த பொம்மையோட அடிப்பகுதி கொட்டாங்கச்சியால் செய்யப்பட்டு களிமண்ணால் நிரப்பியிருப்பார்கள் 
அப்படி செய்யப்பட்டுள்ள பொம்மையை தரையில் வைத்து எந்த பக்கம் சாய்த்தாலும் அது திரும்பவும் ஆடி ஆடி கடைசியாக நேராகிவிடும். !
Related image
இதுக்கும் பெரிய கோவிலுக்கும் என்ன சம்மந்தம் தெரியுமா.!
நம்ம பெரிய கோவிலில் சமீபத்தில் தண்ணீர் பற்றாக்குறைக்காக போர் போடுவதற்க்க்காக ஆழ்துளை கிணறு தோண்டிருக்காங்க...!
தோண்ட தோண்ட களிமண்ணோ, செம்மண்னோ வரவில்லை ஒருவகையான மணல் வந்திருக்கிறது. 
அந்த மணல் காட்டாறுகளில் காணப்பட கூடிய மணல். சாதரண ஆற்று மணலுக்கும் அந்த மணலுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு.
சாதாரண ஆற்று மணலை விட , காட்டாறுகளில் காணப்படும் மணல் பாறைத்துகள்கள் அதிகம் நிறைந்தது, மேலும் சாதாரண மணலை காட்டிலும் கடினமானது.
கோவிலை கட்டுவதற்குமுன் அந்த மணலை அடியில் நிரப்பியிருக்கிறார்கள். 
 
இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் போர் போடும் வேலையை நிறுத்திவிட்டார்கள் !
Image result for தலையாட்டி பொம்மையும்... தஞ்சை பெரியகோவிலும்
ஏனென்றால் ஆயிரம் வருடங்களாக இந்த பூமியில் ஏற்படும் அழுத்தங்களை தாங்கி நாற்புறமும் அகழிகளால் சூழப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் அந்த உலக அதிசயத்தின் அஸ்திவாரமே அதுதான் !
அகழிகளால் சூழப்பட்டுள்ள தீவுபோன்ற அமைப்பில் காட்டாற்று மணல் அஸ்திவாரம் அமைக்கப்பட்டிருக்கும் அந்த மாபெரும் கற்றளியானது எத்தகைய பூகம்பங்கள் வந்தாலும் அந்த மணல்பரப்பின் மீது அமைக்கப்பட்டிருப்பதால் தன்னுடைய நிலை தடுமாறினாலும் தானே தன்னை நேராகிக்கொள்ளும் ஆற்றலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது !
Image result for தலையாட்டி பொம்மையும்... தஞ்சை பெரியகோவிலும்Image result for தலையாட்டி பொம்மையும்... தஞ்சை பெரியகோவிலும்
இப்போது அந்த தலையாட்டி பொம்மையை நினைவில் கொள்ளுங்கள்.
அந்த பொம்மையை சாய்த்துவிட்டால் எப்படி கீழே உள்ள கனமான அடிப்பரப்பால் ஆடி ஆடி நேராகி விடுகிறதோ அதே போல பெரிய கோவிலும் எவ்வளவு பெரிய பூகம்பத்தால் அசைய நேரிட்டாலும் தானாகவே சமநிலைக்கு வந்துவிடும் !
சோழ தேசப் பொறியாளர்கள்கள் உலகில் வேறு எவருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு இதுவும் சான்று...! 🤗

நன்றி  !
--
வை.நாராயணன்.
பம்மல்.