மகான் சிவானந்தர்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:08 AM | Best Blogger Tips

 No photo description available.

நெல்லை மாவட்டம் பத்தமடை பிறப்பு, அந்தண குலத்தில் குப்புசாமி என 1887ல் பிறந்தார். வறுமையுற்ற குடும்பம் என்றாலும் அவர் படிப்பில் கெட்டிக்காரர், அதனால் அந்நாளைய மருத்துவபடிப்பினை தஞ்சாவூரில் படித்தார்.
அவரின் தந்தையின் மரணம் அவரை வறுமையில் தள்ளி 1915 களில் மலேய நாட்டுக்கு தள்ளிற்று.
 
அது மலேயாவின் ரப்பர் தோட்டம் ஆதிக்கம் செலுத்திய காலம், அந்நாட்டில் பெரும் தொழிலாளர்களை குவித்த வெள்ளையன் அவர்களுக்காக மருத்துவர்களையும் குவித்திருந்தான், ஓயா மழை கொட்டும் ரப்பர் எஸ்டேட்டுகளில் ,காடுகள் நிறைந்த அத்தேசத்தில் நோய் இயல்பானது பல விஷயங்களுக்கு தரமான மருத்துவர்கள் தேவையாய் இருந்த காலமது.
அப்பொழுதுதுதான் குப்புசாமி அங்கு பணியாற்றினார், மலேய தோட்ட தொழிலாளர்களில் இந்தியாவில் பொருளாராதார ரீதியாக ஒடுக்கபட்ட மக்கள் அதிகம்.
 
குப்புசாமி மலேயாவின் மிக சிறந்த மருத்துவராக மின்னினார் அவர், பெரும் பட்டமும் பதக்கமும் அவரை தேடி வந்தது, மிகபெரிய மருத்துவ கலாநிதியாக .
மலேயாவில் எஸ்டேட் கூலிதொழியான பெண்ணின் பிரசவத்தில் உதவி மிக கடினபட்டு தாயினையும் சேயினையும் இருநாட்கள் போராடி காத்தார் அந்த குப்புசாமி.
 
உயிர் பிழைத்த குடும்பம் அவர் காலில் விழுந்து நன்றி சொல்லிற்று, அந்த நன்றியில் தெய்வத்தை உணர்ந்தார் குப்புசாமி.
 
மலேய நாட்டில் ஒரு ஏழை குடும்பத்துக்கே இவ்வளவு உதவி தேவைபட்டால் இந்தியாவில் எவ்வளவு பெரும் உதவி தேவையாயிருக்கும் என எண்ணினார், விளைவு சேவையில் இறைவனை காணலாம் என்ற மனம் அவருக்கு வந்தது.
இன்னும் அவரின் சிந்தனை நீண்டது, மருத்துவம் நோயினை மட்டும் தீர்க்கின்றது ஆனால் மனம் சம்பந்தமான சிக்கலை, வாழ்வியலின் பல தீர்வுகளை அதனால் சொல்லமுடிவதில்லை.
 
ஆன்ம பலமே உண்மையான மருத்துவம் என்பதை அந்நொடியில் தெரிந்து கொண்டார்.
 
அவரின் மனம் ஆன்ம பலம் ,யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கியது.
 
தன் டாக்டர் தொழிலை உதறினார், கோட்டும் ஸ்டெஸ்கோப்பும் அகன்றது காவியும் ருத்திராட்சமும் கழுத்தில் ஏறியது, ஆயினும் மனம் நிலையின்றி தவித்தது.
 
தன் மனதை அடக்க ரிஷிகேஷம் சென்றார் குப்புசாமி அல்லது விதி இழுத்து சென்றது,பல நாள் பட்டினி கிடந்தார், வீதியில் உறங்கினார், பிச்சைகார கோலத்தில் ஞானம் தேடினார்.
 
அந்த தேடலில் மகான் விஸ்வானந்த சரஸ்வதியினை சந்தித்தார், அவர் இவரை எதிர்பார்த்து இருந்தவர் போல அழைத்து தீட்சை கொடுத்து ஞானத்தை ஞானமே அடையாளம் கண்டுகொள்ளும் என்பது போல அந்த விஸ்வானந்தர் இவருக்கு சிவானந்தர் எனும் பட்டமும் கொடுத்து மன்னனிடம் சொல்லி ஒரு காணிநிலமும் கொடுத்து ஆசிரமம் அமைத்தார்
 
அப்படித்தான் சிவானந்தாவின் ஆஸ்ரமம் தொடங்கியது, மெல்ல மெல்ல அவரின் ஆன்மீக மருத்துவ சேவை உள்ளிட்டவை தொடர்ந்தன‌
ஒரு கட்டத்தில் 100 பணியாளர்கள் கொண்ட மருத்துவ ஆஸ்ரமம் எழுந்தது, அதில் தொழுநோயாளி முதல் எல்லா நோயாளிகளும் பராமரிக்கபட்டனர்.
சிவானந்த சுவாமிகளே இந்தியாவில் ஏழை தொழுநோயாளிகளை மருத்துவரீதியாக அரவணைத்த மகான், தெரசா இவருக்கு பின்னால் வந்தவர்.
இந்தியாவின் சொந்த மக்களுக்கான தொழுநோய் மருத்துவமனையினை தொடங்கியது இந்த இந்து சன்யாசிதான்.‌
 
ஒருநாள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணோருத்தி சாமியின் சீடர்களால் காப்பாற்றபட்டு அவரிடம் கொண்டுவரபட்டார்கள், அவள் தொலைதூரத்தில் இருந்து வந்தவள், அவள் சாக துணிந்த காரணம் மணமாகாமல் கர்ப்பம் தரித்தது.
 
சுவாமி அவளை திட்டவில்லை, கர்ப்பம் கலைக்க சொல்லவில்லை, அவளை பெற்றோரிடமும் அனுப்பவில்லை, அனுப்பினால் என்னாகும் என்பது சுவாமிக்கு புரிந்தது.
 
அவள் அங்கேயே தங்க வைக்கபட்டாள் குழந்தை பிறந்ததும் குழந்தை இல்லா தம்பதியிடம் அக்குழந்தையினை ஒப்படைத்துவிட்டு அப்பெண்ணின் வழியில் அவளை போக சொன்னார்.
 
சுவாமியின் காலில் விழுந்து இரு பெண்களும் அழுதனர், சுவாமி நிதானமாக சொன்னார்.
 
"ஒரு உயிரை காத்து இன்னொரு உயிரிடம் ஒப்படைக்க‌ இறைவன் என்னை பயன்படுத்தினான் அவ்வளவுதான்".
 
சிவானந்த சாமியின் புகழும் அவரின் ஞானமும் அது கொடுத்த போதனையும் ஏராளம், ஏகபட்ட புத்தகங்களை எழுதினார், உலகெல்லாம் அவர் மடம் கிளைகளும் திறந்தது.
 
இன்று சுமார் 300 கிளைகளுடன் மிகபெரிய தொண்டு நிறுவணமாக அது வளர்ந்தும் நிற்கின்றது
 
அந்த இளைஞன் 1962ல் ரிஷிகேஷில் விரக்தி நிலையில் இருந்தான், ஒல்லியான உருவமும் குள்ள வடிவமும் கொண்ட அவன் கண்களில் நீர்வழிய சுவாமி முன் நின்றிருந்தான்.
 
அவனையே உற்று நோக்கினார் சுவாமி, அந்த இளைஞன் கண்ணீர் விட்டு சொன்னான், "சுவாமி நான் ஏழை மீணவ வீட்டு மகன், நன்றாக படித்து பைலட்டாக வேண்டுமென கனவு கண்டேன், படித்தும் முடித்தேன்.
 
ஆனால் பைலட் தேர்வில் என்னை நிராகரித்துவிட்டார்கள், நான் அதற்கு தகுதி இல்லையாம், இனி நான் என்னாவேன் என எனக்கே தெரியவில்லை" என மனமுடைந்து நின்றான்.அப்துல் கலாமுக்கு வழிகாட்டிய மகான்! சுவாமி சிவானந்தர் நினைவுதினப் பகிர்வு # Sivananda | Its My Time
 
புன்னகைத்த சுவாமி சொன்னார் "நீ படைக்கப்பட்டது விமான ஓட்டியாவதற்கு அல்ல. வேறு எதற்காகவோ நீ படைக்கப்பட்டிருக்கிறாய். அதை நோக்கிச் செல். காரணங்களின்றி இங்கு எதுவும் நடக்காது".
 
அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிய அந்த இளைஞன் பின் தீவிரமாக உழைத்து ஏவுகனை விஞ்ஞானியாகி பாரதத்தின் குடியரசு தலைவனுமானான்
அவர்தான் அப்துல் கலாம்.
Swami Sivananda-History and Miracles-ஸ்ரீ சுவாமி சிவானந்தர் சரித்திரம்  மற்றும் அற்புதங்கள்-1 - YouTube
 
சிவானந்தர் இந்தியாவின் மிகபெரும் யோகி, அதுவும் விஞ்ஞான கல்வி கற்றுவிட்டு அதெல்லாம் பணம் சம்பாதிக்கும் விஷயம் மட்டுமே, வாழ்க்கைக்கு உண்மையன தேவை ஆத்ம தெளிவு, ஆன்ம பலம் கொடுக்கும் ஆன்மீகம் என உணர்ந்து நின்றவர்.
 
சுருக்கமாக சொன்னால் தன்னை அறிந்தவர்.
எத்தனையோ லட்சம் மக்கள் அவரால் கல்வி, மருத்துவம், ஆன்மீக தெளிவு என பலன் பெற்றனர், இன்னும் பெற்று கொண்டே இருக்கின்றனர்.
 
 
ஒவ்வொருவர் வாழ்வும் அதன் நோக்கில் நல்லபடியாக செல்ல, அவர்கள் பிறந்த கடமையினை சரியாக செய்ய இடையூறுகளை நீக்கி வழிகாட்டினார் சுவாமி, இன்றும் அவரின் ஆஸ்ரமம் அதை தொடர்ந்து செய்கின்றது
அந்த நெல்லை பிறப்பு பாரதி போல தனித்துவம் மிக்கது, தொழுநோயாளிகளை தொட்டு அரவணைத்த உன்னத கரங்கள் அவருடையது.
 
ஆனால் தெரசாவுக்கு இருந்த விளம்பரமும் உலகளாவிய கொண்டாட்டமும் பாரத ரத்னா போன்ற விருதுகளும் ஏன் சுவாமி சிவானந்தாவுக்கு இல்லை.
நெல்லையில் பாரதி தவிர ஏகபட்ட பிம்பங்கள் உண்டு, பொதுநல பித்தர்கள் உண்டு. தன் ஆஸ்தி கொடுத்து பாலம் கட்டிய சுலோச்சன முதலியார் முதல் பெரும் மருத்துவ வாழ்வினை உதறி தள்ளி தொழுநோய் ஆசிரமம் அமைத்த ஞானி சிவானந்தர் வரை பலர் உண்டு.
 
அல்பேனியாவில் இருந்து வந்த தெரசாவினை தெரிந்த அளவு, மானிட நேயத்தில் உண்மையான பாரத மரபில் இங்கு தொழுநோயாளிகளை அரவணைத்த சுவாமி சிவானந்தா பற்றி யாருக்கும் தெரியாது.
 
மகான் சிவானந்தருக்கு பிறந்த நாள்.(26-11-2022)

 


நன்றி இணையம்

மாமன்னன் ராஜேந்திர சோழன்... தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறு

மணக்கால் அய்யம்பேட்டை | 2:42 PM | Best Blogger Tips

 

ராஜேந்திர சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்" - கங்கை கொண்ட  சோழபுரம் மக்கள்

மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்...

இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே..

தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர்.. 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்*.. Rajendra Chola, the uncle of the immortal fame in history | வரலாற்றில்  அழியாத புகழ்கொண்ட மாமன்னன் ராஜேந்திர சோழன்

அவரது போர்ப்படையில் 60,000 யானைகளும், 5 லட்சம் குதிரைகளும் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன..

இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும் ஆகும் தீவன செலவு 200 ரூபாய்.. பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய்.. ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய்.. ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் பால், தயிர் , வெண்ணை, நெய் போன்ற வற்றால் லாபம் ஈட்ட முடியும்...

ஆனால் எந்த லாபத்தையும் வழங்காத 60,000 யானைகளையும் 5 லட்சம் குதிரை களையும், ராஜேந்திர சோழன் பராமரிப்பது எதற்காக ???

போர் புரிவதற்காக மட்டும்தான் !!!

யானைப்படை மற்றும் குதிரைப் படையே இலட்சக் கணக்கில் வைத்திருந்தவனின், காலாட் படை எவ்வளவு இருந்திருக்க வேண்டும்??

தனது பதினேழாம் வயதில், இளவரசனாக இருந்து ராஜேந்திர சோழன் வென்ற போரில் அவனுடன் இருந்த வீரர்களின் எண்ணிக்கை 90,000...

1016 ஆண்டுக்கு பிறகு சோழர் படை முழுவதும் அவன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.. சுமார் 20 லட்சம் வீரர்கள் அவன் படையில் இருந்தனர்... தன் சேனை முழுவதற்கும் நாளொன்றுக்கு ஆகும் சாப்பாட்டு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? பராமரிப்பு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? நிச்சயம் கோடிக்கணக்கில் இருந்திருக்கும்..

அத்துணை பேருக்கும் உணவு வழங்குவதற்கு, அவன் நாட்டை எவ்வளவு செழிப்பாக வைத்திருந்திருப்பான் என்பதை கற்பனை செய்யுங்கள்.. மாதக் கணக்கில் வீரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும் அதற்கான உணவை கையில் எடுத்துச் சென்றிருப்பார்கள் அல்லவா?. தஞ்சை டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தில் உயர்ந்து நின்றதற்கு இராஜேந்திர சோழனே முதன் முதற் காரணம்...

எதிரிகள் தன் நாட்டைத் தாக்கி அழிக்க நேரிட்டால், தஞ்சையின் நெற்களஞ்சியங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக தனது தந்தை ராஜ ராஜ சோழன் ஆட்சி செய்த தஞ்சை மண்ணிலிருந்து ஜெயங்கொண்ட சோழ புரத்திற்கு தனது தலைமை இடத்தை மாற்றினான் ராஜேந்திரசோழன்...

உழவர்களின் மேல் அவ்வளவு வாஞ்சை !!!

ராஜேந்திர சோழன் தன் படைகள் ஓய்வு எடுப்பதற்காக காடுகளை வெட்டி சீர் படுத்தினான் என்பதற்கு இன்றைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள "படை நிலை காடுவெட்டி" என்ற ஊரே சாட்சியம்...

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு நாட்டை, பத்தாயிரம் போர் கப்பலுடன் வெற்றி பெற்றான் என்பது நம் கற்பனைக்கு எட்டாதவை... இந்தியாவை பிடிப்பதற்கு கூட பிரிட்டிஷ், பிரஞ்ச் அரசுகள் அவ்வளவு கப்பலில் வந்ததாகத் தெரியவில்லை...

ஒரு நாட்டைப் பிடிக்க 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் ஆகும் என்பதும், அத்தனை நாட்கள் தனது யானைகள், குதிரைகள், காலாட் படை வீரர்களுக்கான உணவை தன்னுடன் எடுத்துச் சென்றான் என்றால் அவனின் உணவு தானிய உற்பத்தி எவ்வளவு இருந்திருக்க வேண்டும் ???

உப்பு நீர் சூழ்ந்த கடல்களின் இடையே, லட்சக் கணக்கான வீரர்களுக்கும் குதிரைகளுக்கும் மாதக்கணக்கில் தூய்மையான குடிநீரை எவ்வாறு அவன் வழங்கியிருக்க முடியும்?? அசுத்தமான குடிநீரால் அந்த காலத்திலும் காலரா பரவியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.. அப்படியானால், *கடல் நீரை சுத்தப்படுத்தும் அறிவியலை* அறிந்தவனா அவன்??மாமன்னன் ராஜேந்திர சோழன் | எட்டுத்திக்கும் வெற்றி பெற்ற மாவீரன் @v2thamizh  - YouTube

போரில் அடிபட்ட வீரர்களின் காயங்களை ஆற்றுவதற்கு எத்தனை ஆயிரம் மருத்துவர்கள் அவனுடன் சென்று இருக்க வேண்டும்?? மருத்துவத்தில் பிரதிநிதித் துவம் பெற்ற குழுவை அவன் பெற்றிருக்கவில்லை என்றால் 60 ஆண்டுகளாக தொடர் வெற்றி பெற்றிருக்க முடியுமா???

தற்போதைய இந்தோனேஷியா, மலேசியா, சீனா, கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளை கப்பல் படையால் வென்றெடுத்த மாவீரன் அவன்... அதுவும் குறிப்பாக ஸ்ரீவிஜய நாடு பெரும் வணிக நாடாக விளங்கியது.. உலகிலுள்ள பல வணிகர்களும் அங்கு வந்து போவது வழக்கம்.. நாட்டின் பொருளாதாரமான வணிகத்தை காப்பாற்ற எப்பேர்ப்பட்ட போர்வீரர்கள் அவசியம்?? அப்படிப்பட்ட சிறந்த போர்வீரர்களை துவம்சம் செய்து பல நாட்டு வணிகத்தை கைப்பற்றியவன் ராஜேந்திர சோழன்..

தமிழக வாணிப செட்டியார்கள், அவன் காலத்தில்தான் உலகம் முழுவதும் பயணம் செய்து பெரும்பணம் ஈட்டினர்...

நமது அறிவுசார் காப்பியங்களான, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சிவபுராணம், திருக்குறள், மன்னரின் நூல்கள் உள்ளிட்ட பலவற்றையும் பாடசாலைகள் அமைத்து அதன் மூலம் பாதுகாத்தவன் அவன்..

முக்கியமாக, பல்வேறு பொழுது போக்குகள் இருக்கும் இந்த நவயுக காலத்திலேயே நமக்குள் தேவை இல்லாத ஜாதி சண்டைகள் வருகிறது. ஆனால் அந்த காலத்தில் பல ஜாதி பிரிவை உள்ளடக்கிய லட்சக்கணக்கான போர் வீரர்கள் இடையே எந்தவித ஜாதி சண்டையும் வந்ததாக எந்த ஒரு வரலாற்று ஏடுகளும் கூறவில்லை...

ஆம், சமூக நீதியின் படி செம்மையான ஆட்சிபுரிந்த சக்கரவர்த்தி அவன்...

தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் அவன் ஒருவனே!

மாமன்னன் ராஜேந்திர சோழன்...

நம் புத்தகங்கள் மறைத்த உண்மைச் செய்திகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்போம்...

தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாறு.

 


 

நன்றி இணையம்