வேப்பம்பூ அதிசயம்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:18 AM | Best Blogger Tips
பங்குனி அதிசயம்..!!

பங்குனி மாசத்து அதிசயம்..? அப்படி என்ன சார் அதிசயம்... பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..? இருக்கு...சார்.. இருக்கு.

வேப்பம் பூ... சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்... அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை... ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்... மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி மாதத்தில்...

இந்த வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம்.. வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும்.. இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை   சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்..

 பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்..

இந்த வேப்பம்பூ ,  ஒரிஜினல் மலைத்தேன்  , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால்  போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான்  இதன் விஷேஷமே..

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன்.. என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்... நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் ஓடிப்போகும்தானே..?

கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி...என்பதெல்லாம் தாண்டி "சுகரு "க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி... நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..

இது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்... பங்குனியில் ரொம்ப அதிகம் ..

எப்படி சாப்பிட ..? ஈ.ஸி.. அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி ... வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவைன்னா ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு... தட்ஸ் ஆல்..

இல்லைன்னா பச்சடி, ரசம் , அவியல்னு ஆயிரம் மெனு "நெட்"டுல இருக்கு.. படிங்க.... எப்படியாச்சும்  சாப்பிடுங்க...

நம்ம பெரியவங்க , இதை நாம சாப்பிட வேண்டும் .. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்... சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..

இந்த ஆண்டிலிருந்து பயங்கரமான ஆஸ்பத்திரி செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம்  பங்குனியில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்க பாஸு....

சொடுக்கு போடற தூரத்துல சுகாதாரம் ...என்ன ..?  லேசா  மெனக்கெடனும்.. அம்புட்டு தான்....


நன்றி இணையம்

வரமா? சாபமா? இந்த 21 நாட்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:32 PM | Best Blogger Tips
 என் கருத்து!

What's in a title? When it comes to 'Doctor,' more than you might ...

படுத்ததும் விடிந்து விட்ட நாட்களை எண்ணி எத்துணை நாள் வருந்தி இருப்போம். விடிந்தும்விடியாமலும் எழுந்து வந்து அடுப்பங்கரையில்  சமைத்துக் கொண்டு இருந்திருப்போம். காலை உணவைக் கூட கால நேரம் தெரியாமல் சாப்பிட்டு தொலைத்திருப்போம். அவதியாகவே கார்ஃ பைக்பேருந்து என ஏதாவது ஒன்றில் விடிந்தும் விடியாத கனவுகளோடு பயணப்பட்டுக் கொண்டு இருந்திருப்போம். கூட்ட நெரிசல் டிராபிக் ஜாம் என அனுதினமும் ஏதாவது ஒன்றிற்காய் காத்துக்கிடந்திருப்போம். எதிர்பாராத விபத்துதிடீர் மரணம் என எதாவது ஒன்றில் மனம் உடைந்து போய் இருப்போம். வேலை முடிந்ததும் வீட்டை நோக்கி ஓடி கொண்டிருப்போம் . குழந்தை,  குடும்பம் பெற்றோர் என கால்கள் ஓய்வு கொள்ளும். இரவு உணவு மீண்டும் வேலை என ஓடிக் கொண்டே இருந்திருக்கும். நீங்களே நினைத்தாலும் கூட கனவிலும் கிடைக்காத வாய்ப்பை காலம் கொடுத்து இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
பெண்கள் - BBC News தமிழ்
அலாரம் வைத்து எழுந்து கொள்ளத் தேவையில்லை,
காலை சூரியன் வந்த பின்பும் அவதி இன்றி அமர்ந்து இருக்கிறோம். சாலைகளில் புகை கக்கும் வாகனம் இல்லை. பகல் வேளையில் நிசப்தம் நிறைந்த சாலைகளை கண்களால் பார்க்க முடிகிறது. அடிதடி வெட்டு குத்து குறைந்து இருக்கிறது. மதுக்கடை மூடிக் கிடைக்கிறது. நகைக் கடைகள் பூட்டியே இருக்கிறது. ஜவுளிக்கடை விளம்பரங்களே செய்வதில்லை. நிரம்பி வடியும் மாநகரப் பேருந்துகள் இல்லை. படியில் தொங்கிப் பயணம் செய்ய யாரும் இல்லை. தெருவெல்லாம் சுத்தமாய் கிடக்கிறது. சாக்கடைகள் தூர்வாரப் பட்டுக்கொண்டே இருக்கிறது. அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைக்கிறார்கள். அடுத்தவன் பொருள் மேல் ஆசை வருவதில்லை.  எது வேண்டும் என்றாலும் வீட்டிலேயே சமைத்து உண்கிறோம். தேவை இல்லாமல் எதையும் வீணடிப்பது இல்லை. 


காவல் துறையை மதிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம். மருத்துவரை தெய்வமாய் பார்க்க முடிந்திருக்கிறது. 
சர்வதேச செவிலியர் தினம்

செவிலியரை சகோதரியாய் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். சுற்றி இருப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறோம். சுத்தமாக இருக்கப் பழகி இருக்கிறோம்.
சிட்டுக்குருவி கூடு கட்டினால் ...
சிட்டு்குருவி சுதந்திரமாய் சுற்றித் திரிகின்றன. பறவைகள் சப்தம் பலமாய் கேட்க முடிகிறது. பொழுது சாயும் போது எந்த இரைச்சலும் இல்லை. நீ எப்படி வருவயோ என்ற பயம் உன் குடும்பத்திற்கு இல்லை. போதை தேடி யாரும் செல்வதே இல்லை. சிகரெட் தீர்ந்தும் தேடி அலைய மனமில்லை.

தெருவில் எட்சில் துப்ப யோசிக்கிறோம். வெளிநாட்டில் இருந்து வந்ததை வெளியில் சொல்ல யோசிக்கிறோம். அகந்தை அழிந்து போய் இருக்கிறது. தான் என்ற கர்வம் தளர்ந்து போய் விட்டது. சிறுவயது நியாபகங்களை அசை போட துவங்கி இருக்கிறோம். தொட்டதிற்கு எல்லாம் மருத்துவமனை போவதை நிறுத்தி இருக்கிறோம். சிரிக்க கற்றுக் கொண்டு இருக்கிறோம். சிந்திக்க பழகி இருக்கிறோம். மற்றவர்கள் வழி புரிந்து இருக்கிறது. மனது நோகாமல் பேச பழகி இருக்கிறோம்.

இது மட்டும் போதாதுஅப்பாவோடு மனம் விட்டுப் பேசுங்கள். அம்மாவின் மடியில் தலை சாய்ந்து உறங்குங்கள். பிள்ளைகளின் தேவை அறிந்து சொல்லிக் கொடுங்கள். மனைவியின் மனதிற்கு நெருக்கமாக இருங்கள்.கணவரின் கைகளை பிடித்து நம்பிக்கை கொடுங்கள். பிரிந்த நண்பர்களின் நம்பர்களை தேடி எடுங்கள். மன்னிப்பு கேட்க நினைத்தவர்களிடம் கேட்டு விடுங்கள். யாரையாவது மன்னிக்க நினைத்தால் மன்னித்தும் விடுங்கள்.

ஒருவேளை இந்த 21 நாட்களோடு உலகம் அழிந்து போவதாய் இருந்தால் உறவுகளை எப்படி நேசித்து இருப்பீர்களோஅப்படி நேசித்து பாருங்கள். பக்கத்து வீட்டுக்காரரிடம் பகை தெரியாது.எதிர் வீட்டுகாரரின் ஏமாற்றம் புலப்படாது. எல்லோரும் நிம்மதியாக இருக்கட்டும் என்று மனம் நினைக்கும். வஞ்சம் தோன்றாது. வாழ வேண்டும் என்ற ஆசை நீண்டு இருக்கும் . வாழ்ந்து காட்ட வாய்ப்பு கிடைத்தது என்று மனம் சொல்லும். மீண்டும் தொடங்குங்கள் எங்கு எந்த தவறை செய்தீர்களோஅதை திருத்திக் கொள்ளுங்கள். வீட்டில் இருப்பதற்கு வெறுப்பாக உள்ளதென்று புலம்பாதிருங்கள்வீடே இல்லாதவர்களை நினைத்து பெருமை கொள்ளுங்கள். 
21 நாட்கள் முழு ஊரடங்கை ...
நீங்கள் யரென்பதை உங்களுக்கே உணர்த்துவதற்காக ஒரு வைரஸ் தேவைப்பட்டு இருக்கிறது. உங்களை யாரும் தனித்து நிற்கச் சொல்லவில்லை. தற்காத்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறார்கள். வாழ நினைத்தால் வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க்கை எல்லோருக்கும் ரி ஸ்டார்ட் ஆப்ஷன் யை கொடுப்பதில்லை. இப்போ சொல்லுங்க இது வரமாசாபமா?

வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே ! 



நன்றி இணையம்

என் கருத்து
வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே ! வரமே ! 

பிறப்பதே சாவதற்கு தான் .. அபிநந்தன்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:37 AM | Best Blogger Tips
Image may contain: 1 person

ஆச்சரியமான புது தகவல் ,

அதாவது அபிநந்தன் விமானம் நொறுங்கி விழுவதற்கு முன்னர், பாக்., விமானத்தை வீழ்த்திவிட்டு குதித்தாராம் ,
Image result for அபிநந்தன்
சவப்பட்டி போல இருக்கும் மொக்கை ஜெட் ஆர் 73 ஏவுகணை மூலம் எப் - 16 விமானத்தை தாக்கினார். பழைய மிக் போர் விமானத்திலிருந்து, அதிநவீன போர் விமானமான எப் -16 விமானத்தை தாக்கியது அரிதிலும் அரிதான சம்பவம் என்று சொல்கிறர்கள் .

விமானம் சுடப்பட்டவுடன் தனது விமானத்திலிருந்து குதித்த அபிநந்தன், காற்றின் காரணமாக ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இறங்கினார். அதேபோலத்தான் பாகிஸ்தான் விமானியும், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இறங்கினார்

இவரை பாகிஸ்தான் பொதுமக்கள் பிடித்து விட்டனர், அடித்தும் துன்புறுத்தினர் , அந்த மூன்று வீடியோ நானும் பார்த்தேன் ...

எத்தனையோ புத்தகங்கள் படித்து கற்றுக்கொள்ளும் அனுபவத்தை நமது அபிநந்தன் மூன்றே மூன்று விடீயோக்களில் சொல்லிவிட்டார்.

எந்த சூழ்நிலையிலும் பதட்டப்படக்கூடாது எதையும், எளிதாக கையாள பழகிக்கொள்ளவேண்டும். கடுமையான சூழலில் அமைதியாக இருக்கவேண்டும் (தரையிறங்கிய பின்ன பாகிஸ்தானியர்கள் வன்முறை தாக்குதல்களில் ஈடுபடும்போதும் கூட ),

அதேபோல் எதிரிகளுக்கு என்ன விஷயம் தெரியவேண்டுமா(பெயர் வேலை எங்கள், வந்த இடம்) அதை மட்டும் கூறுவது மற்றும் என்ன விஷயம் தெரியக்கூடாதோ அதை சொல்லாமல் இருப்பது (பணியின், தன்மை திட்டங்கள், ராணுவ ரகசியங்கள்) என்று பல விஷயங்களை நமக்கு புரியவைத்துவிட்டார் இந்த மாவீரன்....

அந்நிய மண்ணில் பிறந்த ராகுல் போன்ற அரசியல் வியாதிகள் நமது ரபேல் விமானம் பற்றி ஏலம் விட்டது அனைவரும் அறிந்ததே .... அபிநந்தனை பார்த்து திருந்த வேண்டும் ...ராகுல் அல்ல மக்கள் .

வாழ்ந்ததால் இந்த மாவீரனை போல மக்கள் வாழவேண்டும். ஒரு எதிரி நாட்டு ராணுவத்திடம் மாட்டிக்கொண்ட பிறகும் எந்த ஒரு பயமுமின்றி தைரியமாக துணிவாக இப்படி பேசவேண்டுமென்றால் அவர் வாழ்வில் எத்தனை அனுபவங்களை பெற்றிருப்பார் எத்தனை எத்தனை பிரின்சிபல் விஷயங்களை வாழ்வில் வகுத்துக்கொண்டு வாழ்ந்து இருப்பார்.

இவர் நிலையில் ராணுவ வீரராக இல்லாமல் சாதாரண மனிதராக நாம் பாகிஸ்தான் ராணுவத்திடம் இது போன்று மாட்டி இருந்தால் நம் மனம் எப்படி இருந்திருக்கும். ஒரே ஒரு நிமிஷம் யோசித்து பார்க்க வேண்டும்

நம் கருத்துக்களில் என்னவேண்டுமானாலும் அள்ளி வீசி விட முடியும் ஆனால் குறிப்பிட்ட இக்கட்டான சூழ்நிலை என்று வரும்போது உயிரைக் காக்க தடுமாறிப்போய் இருப்போம்........

கூத்தாடிக்கு பால் ஊத்தும் ரசிகர் ரசிகைகளே இவரை பார்த்து திருந்துங்கள். உண்மையான ஹீரோ இவர்தான். நீங்க படத்தில் பார்க்கும் ஹீரோக்கள் எல்லோரும் வெறும் ஸிரோக்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தயவு செய்து கூத்தாடிகள் பின்னாடி அணிவகுக்காதீர்கள். இளைஞர்களே , சீமான் போன்ற தேச துரோகிகள் பேச்சை கேட்காதீர்கள் ...

அபிநந்தன் என்ற மாவீரரை போல வாழுவோம். அபிநந்தன் சார் மூலம் நான் கற்றுக்கொண்ட விஷயம் இதுதான். இந்த உலகில் நான் பிறந்துவிட்டேன் மற்றும் என்வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் மரணம் என்னை ஆட்கொள்ளும் அந்த மரணம் இன்றோ அல்லது பல வருடங்கள் கழித்தோ வரப்போகிறது,
பிறகு ஏன் அந்த மரணத்தை பார்த்து நான் பயப்படவேண்டும்,
Image result for அபிநந்தன்
பிறப்பதே சாவதற்கு தான் ... தற்கொலை செய்து கொல்லும் கோழை கூட மரணத்தை பற்றி பயப்படாத பொழுது நான் ஏன் பயப்பட வேண்டும் ...

வாழும் வரை நேர்மையாக வாழ்ந்துவிட்டு மரணம் வரும்போது அதை வீரமாக எதிர்கொள்ளவேண்டும்.. இதையே என்னை பின்பற்றும் இளைஞர்களுக்கு சொல்லி கொடுப்பேன் ...
Image result for அபிநந்தன்
தளபதிஅபிநந்தன் அவர்களே ,
மாவீரன் என்று சொல்வார்கள் நான் பார்த்ததில்லை நேற்று தான் பார்த்தேன் உன் உருவத்தில் எங்களுக்கு நீ தான் மாவீரன் ..

இவரோடு ஒரே ஒரே செல்பி எடுத்து மற்றவர் கண்ணில் படும் இடத்தில வைக்க வேண்டும் ...

வருங்கால இந்தியார்கள் யார்யார் னு கேட்கட்டும்..
இளைஞர்களே ,

இவர் சென்னை வரும் பொழுது , மொத்த இளைஞர்களும் போக வேண்டும் . அரசியல் வாதிக்கும் கூத்தாடிகளுக்கு கூடும் கூட்டத்தை விட 10 மடங்கு கூடி வரவேற்க வேண்டும் ...

வந்தே மாதரம்

 நன்றி இணையம்