காளான் மருத்துவ பயன்கள் பற்றிய தகவல்.

மணக்கால் அய்யம்பேட்டை | 3:14 PM | Best Blogger Tips
காளான் மருத்துவ பயன்கள் பற்றிய தகவல்.

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.

மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் நன்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:27 PM | Best Blogger Tips
ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் நன்மைகள்

• இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.
...

• முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.

• உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன.

• உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.

• கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது.

• நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது. மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும்.
See More

தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:45 PM | Best Blogger Tips
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்..!

சத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல, அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அது கூடாது, அதன் மூலம் பல முக்கியமான ஊட்டச்சத்துகளை நீங்கள் இழக்க நேரிடலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சாப்பாட்டு விஷயத்தில் அவர்கள் கூறும் சில ஆலோசனைகள்:

விலங்கு புரதம் வேண்டாம்:

புரதத்துக்காக கால்நடைகளிலிருந்து கிடைக்கும் வெண்ணை, பால், இறைச்சி, பாலாடைக்கட்டி, முட்டை போன்றவற்றை அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. தாவர புரதங்களைப் போலில்லாமல் இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. இவை உங்களுக்கு ஒரு கனமான, வசதியற்ற நிலையை அளிக்கக்கூடும். நிலையை மேலும் மோசமாக்கும் விதத்தில், ஜீரணம் ஆக வேண்டும் என்பதற்காக அமிலவகைப் பானங்களை அருந்தும் வழக்கம் இருக்கிறது (உதாரணத்துக்கு பீட்சா சாப்பிட்ட பிறகு சோடா பருகுவது). அசிட்டிக் உணவுகளான சர்க்கரை, பால், பால் பொருட்கள், செயற்கைக் குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும், ஆல்கலைன் உணவு வகைகளான பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதும் நல்லது என்பதே.

பால்பொருட்களைத் தவிர்க்கலாம்:

உங்களால் தினசரி பால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் சோயா பால் அல்லது பாதாம் பால் சாப்பிடலாம். அதிலும் தற்போது பெரும்பாலும் பால் பொருட்கள் கலப்படமாக வருகின்றன என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.

எண்ணை உண்மை:

நீங்கள் உங்கள் உணவில் எவ்வளவு எண்ணை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பாருங்கள். கொட்டைகள், விதைகளிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் எண்ணை தான் சிறந்ததே தவிர, ரீபைண்ட் ஆயில் அல்ல. அதில் நார்ச்சத்து இழக்கப்பட்டு விடுகிறது.

சமைக்கும் முறையை மாற்றுங்கள்:

எண்ணையில்லாமல், ஆரோக்கியமான முறையில் சமைப்பதற்குச் சற்றுக் கூடுதல் நேரமாகும். ஆனால் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் நன்மையே. கட்லட் போன்றவற்றை நிலக்கடலை மாவு போட்டு ரோஸ்ட் செய்யலாம். அதற்கு சற்று கூடுதல் நேரமானாலும், நிலக்கடலையில் இருந்தே போதுமான எண்ணை கிடைத்து விடும்.

முழுமையாகச் சாப்பிடுங்கள்:

பெரும்பாலான உணவுப் பொருட்களில் சத்துக்களும், மணமும் அவற்றின் தோலில்தான் இருக்கிறது. நீங்கள் தோலை உரிக்கும்போது சத்துகள் அதனுடன் போய்விடுகின்றன. காய்கறிகளுக்கு மணமூட்ட நாம் ஏன் மசாலாவையும், சாஸ்களையும் சேர்க்கிறோம் என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? நீங்கள் தோலை உரிக்கும்போது அதனுடன் மணத்தையும் அகற்றி விடுகிறீர்கள். முழு உணவாக நீங்கள் சமைக்கப் பழகினால் மசாலா சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளலாம். அதேபோல பட்டை தீட்டப்பட்ட பளபள அரிசிக்குப் பதிலாக பட்டை தீட்டப்படாத அரிசி நல்லது. மைதாவுக்குப் பதிலாக ஆட்டாவைப் பயன்படுத்தலாம்.

அதிகமாக அலச வேண்டாம்:

காய்கறிகள், பழங்கள், தானியங்களை தண்ணீ­ரில் அலசுவது நல்லதுதான். ஆனால் அதுவே அதிகமாகிவிட வேண்டாம். அப்படிச் செய்தால் அனைத்துச் சத்துகளையும் இழக்க நேரிடும். காய்கறிகளை தண்­ணீரில் வேகவைப்பதை விட ஆவியில் அவியுங்கள். அதற்குத் தண்­ணீர் குறைவாகத் தேவைப்படும் என்பதுடன், சத்துகளையும் இழக்காது இருக்கலாம். காய்கறிகளை வெட்டியபிறகும் அலச வேண்டாம்.

பழங்களைத் தனியாகச் சாப்பிடுங்கள்:

உணவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது பழங்கள் வேகமாக ஜீரணமாகின்றன. அவை சர்க்கரைத்தன்மையைக் கொண்டுள்ளதால் உங்கள் வயிற்றில் நொதிக்கின்றன. அது பொதுவாக நல்லதுதான். ஆனால் நீங்கள் நிறைய உணவு சாப்பிட்டபின் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது. நீண்ட நேரம் நொதித்தல் நடைபெற்று வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சாறாக இல்லாமல் முழுப் பழமாகச் சாப்பிடுவதும் நல்லது. பழச்சாறில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் பழமாகச் சாப்பிடும்போது அதிக நார்ச்சத்தைப் பெறலாம்.

குரங்கைப் பின்பற்றுங்கள்:

இயற்கையே நமக்குச் சிறந்த ஆசிரியர். அந்த வகையில் நமது நெருங்கிய உறவினரான குரங்கு நமக்கு வழிகாட்டுகிறது. எப்போதாவது குரங்கு ஆப்பிளைத் தோலை உரித்துச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் வாழைப்பழம், ஆரஞ்சு போன்றவற்றை அது நிச்சயமாகத் தோலை உரித்துச் சாப்பிடும். அதே பாணியை நீங்கள் உங்களின் உணவு முறையிலும் பின்பற்றுங்கள். தோல் உரிக்கத் தேவையில்லாத காய்கறிகள், பழங்களைத் தோல் உரிக்காதீர்கள்..!

மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி

மணக்கால் அய்யம்பேட்டை | 5:06 PM | Best Blogger Tips

மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?

மகிழ்ச்சியாய் இருப்பது என்பது நாம் தேடி அடைய வேண்டிய ஒரு இலக்கு அல்ல. இயல்பாகவே நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்கள். இடையில் தான் எங்கோ குழப்பி விட்டீர்கள். குழப்பத்தை விடுங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள். உயர்ந்த குறிக்கோள் தேவைதான். ஆனால் அது நம் நிகழ் காலத்தின் இனிமையைப் பாதித்து விடக் கூடாது.

கொடைக்கானாலும் ஊட்டியும் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் போகும் வழியில் உள்ள மரங்கள், செடிகள், கொடிகள், நீர்நிலைகள், மலைகள் இவற்றைக் காண்பதிலேயே மகிழ்ச்சி தொடங்கக்கூடும் என்பதை நாம் உணர்வதில்லை. வாழ்வின் மகிழ்ச்சி சென்றடைவதில் தான் இருக்கிறது என்பதில்லை. பயணத்திலும் இருக்கிறது.
...

உங்கள் மீது உங்களுக்குள்ள உயர்வான எண்ணங்களும், தன்னம்பிக்கையும் கூட உங்கள் மகிழ்ச்சிக்கு அடிப்படை யாக அமையும். மகிழ்ச்சி சிறு செயல்களில் கூட இருக்கிறது. ''எனக்குத் தலைவலி, காய்ச்சல்,என் உடல் நிலை சரியில்லை,'' என்று நினைத்து வருந்தினால் மகிழ்ச்சி இல்லாமல் போவது சில நாட்கள் தான்.'நானே சரியில்லை,'என்று நினைத்தால் வாழ்நாள் முழுவதுமே மகிழ்ச்சி இல்லாமல் போகும்.

மனநிலை உடல் நிலையைப் பாதிக்கும். உடல்நிலை, மனநிலையில் தெரியும் ஏதாவது சாதனைகள் செய்தால் தான் மகிழ்ச்சி என்பதில்லை. சாலை ஓரத்தில் உள்ள புதர்களையும், காட்டுப் பூக்களையும் பார்த்து ரசிப்பது கூட மகிழ்ச்சி அளிக்கலாம். மழை கூட மகிழ்ச்சிதான். நனைந்துதான் பாருங்களேன்! ஒரு மழையைக்கூட தாங்காதா உங்கள் உடல்?

மகிழ்ச்சியான மனிதன் குற்றங்கள் புரிவதில்லை. மகிழ்ச்சியாய் வாழ பணம் தேவை. ஆனால் மகிழ்ச்சியைக் குறைத்துக் கொண்டு பணம் பண்ணும் போது வாழ்க்கை அடிபட்டுப் போகிறது. மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சியைப் போன்றது. நீங்கள் அதை விரட்ட விரட்ட, அது உங்களை விட்டுப் பறந்து கொண்டே இருக்கும். புல் தரையில் அமைதியாக அமர்ந்தால், அதுவும் உங்கள் கையில் அமர்ந்து கொள்ளும்.
பூங்காக்களுக்கு யாரும் வழி சொல்லியா தெரிய வேண்டும்?


Description: https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/s480x480/62048_454203724629962_1676088915_n.jpg