நாட்டுக்காக அம்மனிதன் எப்படி பாடுபட்டான்....

மணக்கால் அய்யம்பேட்டை | 11:22 AM | Best Blogger Tips

 May be an image of 2 people

 

நாட்டுக்காக அம்மனிதன் எபப்டி பாடுபட்டான் என்றால் வங்கசிறையில் இருந்து தப்பி ஆப்கானிஸ்தான் சென்று, அங்கிருந்து சோவியத் ரஷ்யா வழியாக ஜெர்மனியினை அடைந்தான்
 
ஓயாத ஓட்டம், ஓயா பயணமென அவன் ஓடி ஓடி பனி,குளிர் வெயில் என எல்லாம் கடந்து ஓடி பல மாதம் விடாமல் ஓடி ஜெர்மனியினை அடைந்தான்
 
 Nethaji subash chandra bose history in Tamil | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்  வாழ்க்கை வரலாறு
அங்கிருந்து ஒரு நீர்மூழ்கியில் ஜப்பானுக்கு சென்றான், அது அக்கால டீசல் நீர்மூழ்கி பெரும் புகை, மூச்சு முட்டல் மொத்தமே 6 பேர்தான் இருக்கமுடியும் எனும் அளவு சிக்கலான அக்கால நீர்மூழ்கி அந்த டீசல் புகையில் ஜெர்மனில் இருந்து கிள்பி தென்பாப்ரிக்கா வந்து, பின் இலங்கைக்கு தெற்கே 800 கிமி தொலைவு சுற்றி மலாக்கா கடந்து ஜப்பானை அடையும் போது எட்டு மாதம் ஆயிற்று
 
எட்டுமாதம் சிறிய நீர்மூழ்கியில் டீசல் புகையில் சிக்கி அவன் பட்ட அவஸ்தை கொஞ்சமல்ல‌
காந்தி ஆஹாகான் மாளிகையிலும், நேரு ஆனந்தபவனிலும் இருந்தது போல் சொகுசு சிறைவாழ்வு அல்ல அவனுடையது, காடு மலை பனி பாலைவனம் கடல் என எல்லாம் கடந்து ஓடி ஓடி உயிர்விட்ட உன்னத தியாகம் அவனுடையது
 Nation remembers Netaji Subhas Chandra Bose on 121st birth anniversary -  The Statesman
ஆம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்பது ஒரு பெயர் அல்ல, ஒரு மனிதன் அல்ல அது நாட்டுக்காக எரிந்த வீர ஜோதி
இன்றும் என்றும் இந்தியரின் இதயத்தில் வாழும் தேச காவலன் அந்த மாவீரன்
 
ஆம், நிச்சயமாக அவர் ஒரு ஒப்பற்ற போராளி, காலத்தை மிக நுட்பமாக கணித்து விடுதலை போராட்டத்தை மாற்றியவர்
அவரது திட்டம் மட்டும் 
 
வெற்றிபெற்றிருக்குமானால் இன்று இந்தியாவின் தலைவிதி மாறி இருக்கும்,ஆனால் ஜப்பானின் அணுகுண்டு தாக்குதலும், ஜெர்மனை வீழ்த்திய ரஷ்ய செஞ்சேனையின் மாபெரும் வெற்றியும் அவரது தலைவிதியினை மாற்றிற்று
அந்தகாலத்திலே கலெக்டருக்கு படித்தவர், 
 Freedom fighters or army deserters?
ஆனால் பட்டத்தினை தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் புகுந்தார். வெள்ளையன் மனதினை மட்டும் அடி, அஹிம்சையால் ஆழ்மனதினை தொடலாம் எனும் காந்தீய இந்திய ஞான மரபெல்லாம் அவருக்கு ஒத்துவரவில்லை,
காந்தி வேறுமாதிரியானர். அவர் போராட்ட வடிவம் வேறு.
 An army formed on foreign soil, fighting for its motherland's freedom,  singing “yeh zindagi hai qaum ki” – here are a few interesting facts you  didn't know about Netaji Subhash Chandra Bose's
பிரிட்டிஷார் இப்படி சிந்தித்தான், “காந்தியால் நமக்கு பெரும் நெருக்கடி இல்லை, ஏதோ இவர் சொன்னால் மொத்த இந்திய மக்களும் கேட்கின்றார்கள், ஆனால் இவரை முடிந்தவரை சமாளித்துவிடலாம்,ஆனால் போஸ் அப்படி அல்ல, துடிப்பானவர், விட்டால் சட்டை காலரை பிடித்து உலுக்குவார், ம்ம்ம் தூக்கிபோடு உள்ளே”.எப்படியோ தப்பினார் போஸ்
ஆனால் உடனே படை திரட்டி, சயனைடை கழுத்தில் கட்டி, பின் வந்தவன் எல்லோர் மேலும் தற்கொலை குண்டுகட்டி ஏவி விடவில்லை. காந்தி மேலும், நேரு மேலும் அப்படியே மவுண்பாட்டன் மேலும் மனித குண்டுகளை அவர் ஏவவில்லை,
“இன‌ துரோகி” என பாருக்கும் பட்டம் கொடுக்கவும் இல்லை
 
அப்படி செய்திருந்தால் இந்தியாவின் ஒவ்வொரு நகரமும் ஜாலியன் வாலாபாக் ஆகியிருக்கும்,அது முட்டாள்களின் வேலை.காந்தி ஒருபக்கம் போராடட்டும், நாம் ஒரு பக்கம் போராடுவோம் என்பதுதான் அவர் வழி.
 
பிரிட்டன் பெரும் ராணுவம், இன்னொரு எதிரியுடன் சேர்ந்துதான் அவர்களை விரட்டவேண்டும் எனும் திட்டத்தோடு களமிறங்கினார், ஜெர்மனிடம் உதவி கோரினார். அக்கால ஜெர்மன் தலைவனை பொறுத்தவரை இந்தியர்கள் தலமைபதவிக்கு தகுதியற்றவர்கள்.
லண்டனை பிடித்தால் இந்தியா எனக்கு, இவர் யார் இடையில் ஆள்வதற்கு என்று கூட ஜெர்மானியர்கள் யோசித்தார்கள்
 Subhash Chandra Bose
கூட்டணிக்காக அவர்கள் சுயநலத்தோடு போஸினை அரவணைத்தார்கள், வரலாறு அதையே சொல்கின்றது
 
ஜெர்மன் ஜப்பான் அவருக்கு ஆதரவளித்து, மலேய முற்றுகையின் போது, பயிற்சியும் அளித்து, கிட்டதட்ட வங்கத்தில் போஸ் படையோடு வந்துவிட்ட நிலையில்தான் அணுகுண்டு விழுந்து, ஜப்பான் ஓடிபோயிற்று,
 
போஸும் ராணுவத்தை கலைத்தார், அதோடு இந்திய சுதந்திர நாளும் நெருங்கிற்று, போஸ் தலைமறைவாக இருந்தார்.சுதந்திர இந்தியா தனக்கு அடைக்கலம் தரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
 5 lines on netaji for kids|Subhash ...
இந்திய சுதந்திரபேச்சுவார்தை படி போஸ் என்பவர் நாசிக்களோடு , ஜப்பானியரோடு சேர்ந்து பிரிட்டனை எதிர்த்த போர் குற்றவாளி, அவரை ஒப்படைக்கவேண்டியது இந்திய கடமை என்ற அறிக்கைகள் வந்த கொஞ்சநாளில் போஸ் தைவானில் விபத்தில் இறந்துவிட்டதாக செய்திகள் வந்ததன,
 
அதிலிருந்து தொடங்கின குழப்பம். உண்மையில் தைவான் பக்கம் அவர் தற்கொலை செய்தார் என ஒரு செய்தி உண்டு
 
அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலுகுள்ளான ஜப்பானும் போஸை ஆதரிக்க தயக்கம் காட்டியது, போஸின் முடிவுக்கு அதுதான் பெரும் காரணம் என்பதும் ஒரு கோணம்
 Netaji Subhas Chandra Bose Jayanti ...
கிழக்காசியாவின் சில இடங்களில் அவர் பயிற்சிகொடுத்த இடங்கள் உண்டு, பார்த்திருக்கின்றோம், அன்று இளைஞர்களாக அவரோடு பழகிய இன்றைய முதியவர்கள் உண்டு அவர்களிடம் அவரை பற்றி கேட்டிருக்கின்றோம்
.அவர்களிடம் கதைகேட்டால் நேதாஜியின் நாட்டுபற்று அற்புதமாக விளங்கும், இப்படிபட்ட தேசஅபிமானியா நேதாஜி என மனம் உருகும்
நிச்சயம் இந்தியாவினை ஆளும் நிலை வந்திருந்தால் தேசபிரிவினை நடந்திருகாது, இந்த காஷ்மீர் போன்ற சர்ச்சைகள் வந்திருக்காது. ஒரே இந்தியாவினை தவிர ஏதும் விரும்பாத உன்னத தலைவன் அவர், சிந்து வங்கம் இப்படி உடைய விட்டிருக்கமட்டார் என்பது மட்டும் உண்மை
இந்தியாவினை ஆளும் தகுதிபடைத்த நபர்களில் போஸ் மகா முக்கியமானவர், முதன்மையானவர்
 Kerala's second tallest Netaji statue ...
லீ குவான் யூ போலவோ, மாவோ போலவோ, ரஷ்ய ஸ்டாலின் போலவோ பெரும் உலக அடையாளமாய் மாறி இருந்திருக்க வேண்டியவர் துரோகத்தாலும் விதியாலும் சரிந்தது இந்த ஆகஸ்டு 18 நேதாஜி விபத்தில் இறந்தார் என்ற சர்ச்சை கிளம்பிய நாள் இது
 
நேதாஜியின் டெல்லி சலோ எனும் ஸ்லோகமும், இந்த நாட்டின் மீது அவருக்கு இருந்த பெரும் தேசபற்றும் எந்நாளும் வணங்கதக்கவை
இந்த ஆகஸ்டு 18 நேதாஜியின் நினைவு நாள் மட்டுமல்ல, இந்தியாவிற்கு பலம் பொருந்திய தலமை கிடைத்துவிட கூடாது என அன்றே உலக கருப்பு சக்திகள் திட்டமிட்ட செயல்படுத்திய நாள்.
 
இந்தியாவுக்கு வலுமிக்க தலைவன் கிடைக்கவே கூடாது என்பது அந்நிய சதி அதற்கு முதல் பலி நேதாஜி பின் சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் என தேசம் சிலரை பலிகொடுத்தது
 Maruthu Mrvn on X: "SALUTE and RESPECT ...
ஆனாலும் நேதாஜி பின்னாளில் மோடிஜியாக வந்தார் நிலைத்தார், இன்று மோடி செய்யும் அனைத்து காரியங்களுக்கும் மோடிக்கு வழிகாட்டியர் நேதாஜி
 
இந்த பாரத தேசத்தின் பிதாமகனான அந்த நேதாஜி
 
நேதாஜிக்கு அந்தமானில் சிலை வைத்ததும், 
 
டெல்லி இந்தியாகேட்டில் சிலை வைத்ததும் அந்த மோடிஜி, நேதாஜி வழியில் தேசத்தை காக்கும் அந்த் மாவீரன் மோடிஜி
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


 
🌷 🌷🌷 🌷

 
 

கோயில்களில் இது போன்ற

மணக்கால் அய்யம்பேட்டை | 10:30 AM | Best Blogger Tips
No photo description available. 
கோயில்களில் இது போன்ற நீளமான கோடு காணப்பட்டால் இதை சாதாரணமாக கடந்து சென்று விடாதீர்கள்.
 
அதற்கு பின் இவ்வளவு விசயம் உள்ளது. (எல்லா கோடுகளையும் கணக்கில் கொள்ள வேண்டாம் சில நேரங்களில் அது அழகுக்காகவும் போடப்பட்டிருக்கலாம்) தொடங்கும் இடத்திலும் முடியும் இடத்திலும் குறுக்கே படத்தில் இருப்பதைப் போல் ஒரு கோடு இருக்கும்.
 
இது நில அளவைக்காக ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சோழர்களால் பயன்படுத்தப்பட்ட அளவைக் கோல். அதாவது ஒவ்வொரு கோயிலுக்கும் நிலங்கள் தானமாக அன்றைக்கு அளிக்கப்பட்டது. அப்படி தானமளிக்கப்பட்டது எத்தனை குழி, அந்த நிலம் ஊரில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதும் தெளிவாக கல்வெட்டில் குறிக்கப்படும்.
 
வடக்கு,தெற்கு என நான்கு திசைகளும் குறிக்கப்பட்டு இந்த திசையில் இந்த இடத்தோடு முடிவடைகிறது என்று அருகில் இருக்கும் ஒரு அடையாளமும் தெரிவிக்கப்பட்டிருக்கும். கோயில் சுவற்றில் இருக்கும் இந்த கோலின் அளவைக் கொண்டு தான் நிலத்தை அளந்தோம் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்கும், நாளை கோயில் நிலத்தில் ஏதேனும் சிக்கல் வந்தால்
மீண்டும் இந்த பொறிக்கப்பட்டுள்ள.
 
கோலின் அளவைக் கொண்டு கணக்கிடலாம் என்பதற்கும் அதை கோயில் சுவற்றில் நிரந்தரமாக பதித்தனர். இந்த கோல் ஒவ்வொரு மன்னர் காலத்திலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்பட்டது. இது முன்னரே பழக்கத்தில் இருந்தாலும். இராஜராஜன் தான் முதல் முதலாக சோழ நாடு முழுவதையும் நஞ்சையும், புஞ்சையும் தனித்தனியாக அளந்தார்.
 
சோழ நாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவர் தலைமையில் இராசராச சோழன் ஒரு குழு அமைத்தார். இக்குழு தனது பணியைக் சிறப்பாக செய்து முடித்துள்ளது. 
இதனால் இராஜராஜன் "உலகளந்தான்" என்ற பட்டமும் பெற்றார்.
 
அப்படி அவர் காலத்தில் அளக்கப்பட்ட கோலிற்கு பெயர் "உலகளந்தான் கோல்" என்பதாகும். அது பதினாறு சாண் நீளமுடையதாக இருந்துள்ளது. எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு மாபெரும் பணி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
 
ஒரு அரசு எப்படியெல்லாம் சிறப்பாக இயங்கியுள்ளது என்பதற்கு இதுவெல்லாம் நமக்கு கிடைக்கும் சாட்சி.
 

குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:05 AM | Best Blogger Tips

May be an image of shoes 


 
நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள்ளன. இந்த 2 எலும்புகளுக்கிடையே உள்ள சப்தேலார் என்ற இணைப்பில் ஏற்படும் பிரச்னைகளால் குதிகால் வலி ஏற்படலாம்.
பாதத்தில் பிளான்றார் பேசியா எனப்படும் மெல்லிய சவ்வு உள்ளது. இது பாதத்தின் முன் பகுதியையும் பின்பகுதியில் உள்ள கேல்கேனியம் எலும்பையும் இணைத்து பாதத்தில் உள்ள வளைவுகளை (ஆர்ச்) தாங்குகிறது.
 
நாம் உட்கார்ந்து அல்லது படுத்திருக்கும் நிலையில் பாத வளைவுகளும் பிளன்றார் பேசியாவும் குறுகிய நிலையில் இருக்கும். நாம் எழுந்து நிற்கும் போது, உடல் பருமனாலோ அல்லது தவறான பாதணிகளை அணிவதாலோ பாதத்தில் உள்ள வளைவுகள் இழுக்கபடுகிறது. இவ்வாறு அது இழுக்க படுவதால் அதனை தாங்கும் பிளான்றார் பேசியா என்ற சவ்வானது அது இணைக்கபட்டுள்ள கேல்கேனியம் எலும்பிலிருந்து அறுக்கபடுகிறது. இவ்வாறு அறுக்கப்பட்ட சவ்வை இணைக்கும் நோக்கத்தில் நமது உடலானது கால்சியத்தை அதன்மீது படிய செய்கிறது.
 
இவ்வாறு அதிகமாக படிந்த கால்சியத்தால் அங்கு வீக்கம் ஏற்பட்டு நரம்புகள் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. இந்த பிரச்னையில் குதிகாலின் அடிபகுதியில் வலி உணரபடுகிறது. எக்ஸ்ரேவில் இவ்வாறு அதிகமாக படிந்த கால்சியத்தை ‘கேல்கேனியல் ஸ்பர்’ என குறிப்பிடுவர். சில வேளைகளில் ‘ஸ்கையாட்டிகா’ போன்ற இடுப்பு பிரச்னைகளிலும் குதிகால் நரம்புகள் அழுத்தப்பட்டு குதிகால் வலி ஏற்படுகிறது.
 
இதற்கு முதலில் இடுப்பு பிரச்னையை சரிசெய்தல் அவசியம். குதிகால் வலி இடுப்பு பிரச்னையால் ஏற்படுகிறதா? அல்லது குதிகால் பிரச்னையால் ஏற்படுகிறதா என்பதை சில எளிய ஆய்வுகள் மூலம் கண்டறியலாம்.
 
குதி காலில் வலி நீங்க என்ன வழி?
 
குதிகாலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டடுள்ளதாக என்பதை எக்ஸ்ரே மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும். உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது.
 
 குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும்.
இவை வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்னும் காலையல் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் அவசியம்.
 
சஹசராதி தைலம் 100 மி.லி.யும் கர்ப்பூராதி தைலம் 100 மி.லி.யும் கலந்து ஒரு இரும்புக் கரண்டியில் சிறிது எண்ணெயை (10 M .L.) . சூடு செய்து இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு, குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்து (20 நிமிடங்கள் வரை ) வெந்நீர் நிரப்பிய பாத்திரத்தில் கால் முழ்குமளவு 5-10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலைத் துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும. காலையில் குளிப்பதற்கு முன்பும் இதுபோலச் செய்யலாம்.
 
கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபேயாகிக்கவும். கால்களைத் தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதைத் தவிர்த்து மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
 
திராட்சைப் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடென்டுகள் காணப்படுகின்றன. வலி ஏற்படும் போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும்.
 
சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.
 
முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை.
 
பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.
 
குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குணமாகும்.
 
பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத் தடுக்கலாம்.
 
அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வரக் காரணமாகின்றது.ஹை ஹீல்ஸ் குதிகாலின் “லும்பார்” முள்ளெலும்பில் அழுத்தம் எற்படுத்தி, உங்கள் கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாகுகிறது.
 
 
உடல் எடையைக் குறைக்க என்ன வழி?
 
நீங்கள்உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.
 
வராதி(Varadi) என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவை 200 M .L அளவில் கிடைக்கும். 3 ஸ்பூன் மருந்து + 12 ஸ்பூன் (60 M .L) கொதித்து ஆறிய தண்ணீர் + கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலையில் மருந்தைச் சாப்பிட்டதும் அரை மணி நேரம் இடது பக்கமாகச் சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாகத் தண்ணீரைக் குடிக்கவும். உடல் பருமனைக் குறைக்க இது நல்ல கஷாயம்.
 
ஆயுர்வேத மருந்துக் கடைகளில் லோத்ராஸவம் (Lodhrasavam) எனும் மருந்து 450 M .L அளவில் கிடைக்கும். அதை 5 ஸ்பூன் அதாவது 25 M .L – 30 M .L வரை உணவிற்குப் பிறகு காலை, இரவு சாப்பிடவும்.
 
தயிரைத் தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும்.
தேன் கால் ஸ்பூன் சிறிது தண்ணீரில் கலந்து அல்லது ‘திரிபலா’ எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 ஸ்பூன் (5 கிராம்) 80 M .L தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறிய பிறகு, கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்குப் பிறகு உடனே அருந்த வேண்டும். அதன் பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.
 
உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.
 
சில ஆசனங்களால் நிவாரணம்:
 
வஜ்ராசனம்
உஷட்டிராசனம்
சர்வாங்காசனம்
ஹலாசனம் மற்றும்
 
சிரசாசனமும் வலி குறைக்கும்.
 
கோடைக் காலத்தின் சூடு தணிந்த பிறகு, கொள்ளு தானியத்தை நன்கு கழுவி உலர்த்தி மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளித்த மோரைச் சிறிது சூடாக்கி 70-100 கிராம் வரை கொள்ளு மாவை அதில் குழைத்து உடலில் கூடுதல் சதை உள்ள இடங்களில் கீழிருந்து மேலாக சூடு பறக்கத் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பிறகு சுடு தண்ணீரில் குளிக்கவும். கொள்ளு சதையை உருக்கிவிடும். 
 
சோப்புக்கு பதிலாக ‘ஏலாதி சூர்ணம்’ கடையில் கிடைக்கும், அதை வெந்நீருடன் குழைத்து மேல் தேய்த்துக் குளிக்க நல்ல நிறத்தைப் பெறவும், உடல் எடையைக் குறைக்கவும் முடியும். ‘இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு’ என்பது பழமொழி.
 
புலால் உணவை முழுவதுமாக நிறுத்தி விடவும். குடலைச் சுத்தமாக வைத்திருத்தல் மிக அவசியம். திரிபலா சூர்ணம் 1 ஸ்பூன் அளவில் இரவில் படுக்கும் முன் தேனுடன் குழைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்ல் இல்லாமல் குடல் சுத்தமாக இருக்கும்.
 
அனுபவத்தில் சில:
 
தவிடும் உப்பும் வறுத்து ஒத்தடம் தரலாம்.
தினசரி மிதமான வென்னீரில் கல் உப்பு போட்டு கால்களை சிறிது நேரம் அமிழ்த்தி வைத்திருக்கலாம்.
 
வில்வக்காய் கிடைத்தால் அதை சுட்டு நசுக்கி எருக்கிலை பழுப்பை அதன் மேலிட்டு குதிகால்களை ஒத்தடம் கொடுக்கலாம். (வலி தீரும் வரை தினசரி செய்க)
 
மிகு பித்தம் குறைய மைக்கொன்றை இலைகளை காய்ச்சாத பசும் பால் சேர்த்து அரைத்து தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட (சுமார் 48 நாட்கள்) வெகுவாய் வலியற்றுப் போகிறது மாயமாய்.
 
வெற்றிலை நெல்லி ரசம்
 
தேவையானவை:
 
முழு நெல்லிக்காய் – 10, வெற்றிலை – 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை – தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் – 4, பூண்டு – 6 பல், வால் மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.
 
செய்முறை:
 
நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பொடியாக அரிந்த பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு இளவறுப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்துவைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு நீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
 
மருத்துவப் பயன்:
 
குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. எலும்புப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
 
மேற்கண்ட குதிகால் பிரச்னையில் வலியையும், ரணத்தையும் குறைப்பதற்கு சைலீசியா லைக்கோபோடியம் போன்ற ஹோமியோபதி மருந்துகள் மிகுந்த பலனளிக்கிறது.
 
பிஸியோதெரபியில் அல்ட்ராசவுண்ட், ஷாட்வே டைய தெரபி மெழுகு போன்ற சிகிச்சை முறைகள் பயன்படுத்தபடுகிறது. உடல் எடை குதிகாலில் விழுந்து ரணமாவதை தடுக்க மைக்ரோ செல்லுலார் (எம்.சி.ஆர்) ரப்பரால் தயாரிக்கபட்ட காலணிகளை அணிதல் நல்லது. கால் பாதத்தில் உள்ள விளைவுகளை பராமரிக்க பாத தசைகளுக்கான உடற்பயிற்சி செய்வது அவசியம்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!
 
நன்றி:- திரு.கடலூர் அரங்கநாதன்...
 

 

தாத்தா ஒருவரால் தான்.... எங்கே?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:17 AM | Best Blogger Tips

 Baskar - *தாத்தா, பாட்டி.* தாத்தா ஒருவரால் தான் குடும்பத்தில் எல்லோரையும்  மன்னிக்க, கண்டிக்க ஏன்... தண்டிக்கவும் முடியும். வானளாவிய குடும்ப ...தாத்தா ஒருவரால் தான் குடும்பத்தில் எல்லோரையும் மன்னிக்க, கண்டிக்க... ஏன்...  தண்டிக்கவும் முடியும். வானளாவிய குடும்ப அதிகாரம் ...

 

தாத்தா ஒருவரால் தான் குடும்பத்தில் 
 
எல்லோரையும் மன்னிக்க, 
 
கண்டிக்க... ஏன்... 
 
தண்டிக்கவும் முடியும்.
 தாத்தா ஒருவரால் தான் குடும்பத்தில் ...
 வானளாவிய குடும்ப அதிகாரம் படைத்திருந்த தாத்தா இப்போது எங்கே?. 
 
வீட்டிற்கு யாராவது புதிய ஆள் வந்தாலோ, ஆண் குரல் கேட்டாலோ...! யாரு...? என சத்தமாக கர்ஜிக்கும் குரலில் எதிராளி சற்று ஆடித் தான் போவார்.
 தாத்தா ஒருவரால் தான் குடும்பத்தில் எல்லோரையும் மன்னிக்க, கண்டிக்க... ஏன்...  தண்டிக்கவும் முடியும். வானளாவிய குடும்ப அதிகாரம் ...
தாத்தா வீட்டில் இருந்ததால் பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் மது அருந்துவதையும், புகை பிடித்தலையும் தவிர்த்தார்கள்.
 
லேட்டாக வீட்டிற்கு வந்தால், கதவை தட்டியவுடன் முதல் ஆளாய்
கதவை திறந்து
'ஏன்டா லேட்'
என மகனையும், பேரனையும் அதிகாரத்துடன் கேட்கும் உரிமை தாத்தாவிற்கு மட்டும் தான் இருந்தது. 
 தாத்தா ஒருவரால் தான் குடும்பத்தில் ...
அந்த உரிமையை பறித்ததால் இன்று வீட்டிற்கு ஒன்றிரண்டு 'குடிமகன்கள்'முளைத்து விட்டனர்.
 
பாடம் சொல்லி கொடுப்பதாகட்டும், வாத்தியாரிடம் சென்று 'படிக்கலைனா நல்லா அடிங்க' என்று சொல்லிவிட்டு, பேரன் போன பின்பு 'அடிச்சு கிடிச்சுப்புடாதீங்க; 
 
ஒரு பேச்சுக்கு சொன்னேன்,'' என்று மறுநிமிடமே வாத்தியாரிடம் மல்லுகட்டும் அந்த தாத்தாவின் அன்புக்கு ஈடு இணையே இல்லை. 
 
டேய் என்ற தாத்தாவின் கம்பீரக்குரலுக்கு
அப்பா, பெரியப்பா, சித்தப்பா, மாமா, அண்ணன், தம்பி 
 
என அத்தனை பேரும் சர்வ நாடியெல்லாம் அடங்கி பதுங்கி இருந்த காலம் மறக்க முடியாதவை.
 
தாத்தாவின் குரலுக்கு ஆதரவாய் புதிதாய் வந்த மருமகள்களும் இணைந்து போய், கூட்டுக் குடும்ப உறவுகளும், 
 
வரவுகளும் சங்கமிக்கும். 
 
அன்பின் உருவிலேயே கண்டிப்பையும், கோப முகத்துடன் இழுத்து வைத்துச் சாப்பாடு ஊட்டவும், சிரிக்கச் சிரிக்கக் கதை சொல்லவும், 
 
அழுது அழுது கஷ்டங்களைப் புரிய வைக்கவும்
பாட்டியை விட
சிறந்தவர் யார்...
 
பாட்டியின் அன்பு என்றுமே ஒரே பார்வை... ஐந்து வயது பேரனும் இருபது வயது பேரனும் ஒன்றாகவே தெரிவர். இரண்டு பேருக்கும் அதே அன்புதான் .
 தாத்தா ஒருவரால் தான் குடும்பத்தில் ...
பல சமயங்களில் தாத்தாவை எதிர்த்து சண்டை போட்டு குழந்தைகளின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் பாட்டி கில்லாடி.
 
பெற்றோரிடம் அடிவாங்கி அழுத பொழுதுகளில்
அணைத்து மடி சாய்த்து
தேற்றி, தவறுகளை
புரியவைத்து மீட்பதும் பாட்டி தானே...
 
எந்த ஒரு செயலையும் பக்குவமாய் அணுகி தீர்வு சொல்வது அவர்களின் கைவண்ணம். 
 
வயதும், அனுபவமும்
சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் ஏராளம்.
 
குடும்ப உறவுகள் அறுந்து போகாமல், நேசங்களும், பாசங்களும் விரிசல் விடாமல் ஆண்டுதோறும் புதுப்பித்து கொண்டிருந்த ஒரே உறவு தாத்தா பாட்டி தான். 
 
மற்ற குழந்தைகளை விட தாத்தா பாட்டிகளோடு வளரும் குழந்தைகளின் நடத்தைகளும், 
 
செயல்பாடுகளும் மேம்பட்டதாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக சொல்லப்படுகிறது.
 
தாத்தா பாட்டிகளுடன் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் நிறைய வாழ்வியல் விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். 
 
சிக்கலான சூழ்நிலையை கையாளும் திறமையும் அவர்களிடம் இருக்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளையும் அறிந்து கொள்கிறார்கள்.
 
தாத்தா, பாட்டி... இப்போதைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் ஓர் பொக்கிஷமான உறவு.
 
அந்த உறவு தாமரை இலை மேல் தண்ணீர் போல ஒட்டாமல் போனதால் தான் இன்றைய பல குடும்பங்கள் சுக்கு நுாறாய் உடைந்து,
சிதறிப் போயிருக்கின்றன.
 
குடும்ப உறுப்பினர்களின் மூக்கணாங் கயிற்றை அதிகாரமாக கையில் வைத்திருந்த பல முதியவர்கள் இன்று முதியோர் இல்லங்களில் கட்டிப் போடப்பட்டிருக்கின்றனர். 
 
*பாசம், பரிவு, அக்கறை, கலாச்சாரம், 
 
ஆரோக்கியம், வாழ்வியல் முறை* 
 
*என வாழ்க்கைக்கு தேவையான*
 
*அனைத்தையும் செயல் முறையில் கற்பிக்கும்*
 
*பல்கலைகழகங்கள் தான்*
 
*தாத்தா, பாட்டி.*
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

 

தமிழகத்தில் மட்டும் ஏன் கடவுள் எதிர்ப்பு இருக்கிறது?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:05 AM | Best Blogger Tips

No photo description available.

#தமிழகத்தில் மட்டும்  ஏன் கடவுள் எதிர்ப்பு இருக்கிறது?

 எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா?

கொஞ்சம் விவரமாக பார்க்கலாம்
👇👇👇👇👇👇👇

 #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு  
இந்தத் #தமிழ் மண்தான், 

இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. 

அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன? 

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். 

அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும்,
கங்கை கொண்ட சோழபுரமும்தான்.

👉  அப்போது 
வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது👈 

லண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.
தஞ்சைப் பெரியக் கோவில் கோபுரத்தின் நிழல் தென்படாதா ?
தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. 

இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம்  மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப் பட்டது.

500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?
தமிழர் வாணிகம்- கடல் வாணிகம் - Tamil Heritage
எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான்.

 ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. 

ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது.

 அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. 

இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் 
தங்கம் கிடைத்தது.*
அதானி குழுமத்தால் இயக்கப்படும் ...
உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது.

 எங்கும் மூன்று போகம் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை 

 தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும்,
 மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.

பர்மாவிலிருந்து 
தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 
சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. * சுமார்  40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள் ...
ஏன் கோவிலை கட்டினார்கள்?

தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ?

தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் ...

அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை,

 கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?

மக்களுக்கு 
பிரித்து கொடுக்காமல், 

அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ?

*உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ?

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது ...
வரி வசூல் என்ன, 
ஆலயம் – Page 16 – சரவணன் அன்பே சிவம்
அதில் அரசு நடத்த 
அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, 

மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு ...

வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.

இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், 

கட்டுமான பணிக்கு 
அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், 
சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள்,
Modi's Grand Hindu Temple Plan Creates Winners in Stock Market ...
 கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், 

அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, 
Top Temple Construction Services in Madurai near me - Justdial
வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, 
அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு

 அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், 
அதற்கு ஒரு சமூகம், 

இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். 

அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க ...
நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. 
அதற்கு ஒரு சமூகம். 
அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.
30 Decoration for ganpati सुझाव | गणेश, सजावट, उत्सव
மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். 

கூத்து கலைஞர்கள் என, அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை.

மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம்.

அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், 

கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை.
ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், 

கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம்,

 ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, 

தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம், 

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு,

 மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 

ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 

🔥  இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு. 🔥

மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 
👇👇👇👇👇👇👇
இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. 
இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.
👆👆👆👆👆👆👆👆

கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

*எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும்,

 அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, 

அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக 

நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.*

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, 
உடை உடுத்தி கொள்வாரோ,

 தினமும் உணவு உண்பாரோ, 
நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, 

அப்படி  
அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக
ஒரு 
தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே,

 தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது. பைந்தமிழ் நாடு...

👇👇👇👇👇👇👇
இப்பொழுது புரியும் எதற்கு தமிழகத்தில் மட்டுமே 
#ஆரிய எதிர்ப்பு என்ற பெயரில் 
தமிழக கோவில்களில் இருந்த அனைத்து செல்வங்களும் கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டது..

இனியாவது விழித்துக் கொள்ளுங்கள் இந்துக்களே... 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

*சும்மா*== ‌படிச்சி தான் பாருங்களேன்😃😃😃

மணக்கால் அய்யம்பேட்டை | 10:23 AM | Best Blogger Tips

 May be an image of 1 person and text that says "NMLITUA NMI சும்மா வா.."

*சும்மா*== ‌படிச்சி தான் பாருங்களேன்😃😃😃
😃
*அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*. 
 
*அது சரி *சும்மா* *என்றால் என்ன??*
 
*பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!*
 
*"சும்மா"* ======
 
*என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?*
 
*வேறு மொழிகளில்* *இல்லாத சிறப்பினை*
 
*நாம் அடிக்கடி கூறும்* *இந்த*"சும்மா"* *எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்*.
 
*1 . கொஞ்சம்* *"சும்மா"* இருடா?
 
( *அமைதியாக/Quiet*)
 
*2.கொஞ்ச நேரம் *"சும்மா"* *இருந்து விட்டுப் போகலாமே? (*களைப்பாறிக் கொண்டு/Leisurely*)
 
*3.அவரைப் பற்றி *"சும்மா"* *சொல்லக் கூடாது!*
(அருமை/in fact)*
 
*4.இது என்ன *"சும்மா கிடைக்கும்னு*
நினச்சியா*?
(இலவசமாக/Free of cost)
 
*5. *"சும்மா" கதை அளக்காதே?*
(பொய்/Lie)
 
*6. *"சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்* -
(உபயோகமற்று*/Without use)
 
*7. *"சும்மா"* *"சும்மா" கிண்டல் பண்ணுறான்.* (அடிக்கடி/Very often)*
 
*8.இவன் இப்படித்தான்.. *சும்மா* *சொல்லிக்கிட்டு இருப்பான்*.
(எப்போதும்/Always)
 
*9.ஒன்றுமில்லை *"சும்மா" சொல்கின்றேன்*-
(தற்செயலாக/Just)
 
*10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா" தான் இருக்கின்றது*
(காலி/Empty)
 
*11.சொன்னதையே *"சும்மா" சொல்லாதே.*
(மறுபடியும்/Repeat)
 
*12.ஒன்றுமில்லாமல் *"சும்மா" போகக் கூடாது*- (வெறுங் கையோடு/Bare)
 
*13. *"சும்மா"தான் இருக்கின்றோம்*-
(சோம்பேறித் தனமாக/ Lazily)
 
*14.அவன் *"சும்மா" ஏதாவது உளறுவான்* -
(வெட்டியாக/idle)
 
*15.எல்லாமே *"சும்மா" தான் சொன்னேன்*-
(விளையாட்டிற்கு/Just for fun)
 
*நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா"* 
 
*என்கிற ஒரு சொல். நாம் பயன் படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* (என்றால் அது *"சும்மா"* இல்லை!)
 
*உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை*.
 
*ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்*
இவ்வளவு நேரம் படிச்சிட்டு *சும்மா* * போனா எப்பூடி....சும்மா ஒரு லைக்க தட்டிட்டு போலாம்ல😝😝😝😂😂😂

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  🌷 🌷🌷 🌷

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் - விழிப்புணர்வை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:10 PM | Best Blogger Tips

 May be an image of brass and ring

ன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ஒரு பவுன் தங்கசெயினுக்கு 1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!
இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால்
8 கிராம்தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!
 
ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள்.
அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்.
 
இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம்.
ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்.
 
ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். 
 
யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் 
 
ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
 
ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ?
 
நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!
இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ?
 
பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ?
 
கணக்கு போட்டு பாருங்கள்.
 
6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு
அடக்கவிலை-59540+7.2=59547.2/-
 
1 பவுனுக்கு தங்கத்தில் - 73280 - 59540
லாபம்= 13740
 
சேதாரம் 1.5 கிராம் = 13740/-
1 பவுனுக்கு மொத்த லாபம் 26000 மேல்
என்ன தலை சுத்துதா ? 
 
எனக்குள் இது ஆதங்கம். 
 
ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்.