*சும்மா*== ‌படிச்சி தான் பாருங்களேன்😃😃😃

மணக்கால் அய்யம்பேட்டை | 10:23 AM | Best Blogger Tips

 May be an image of 1 person and text that says "NMLITUA NMI சும்மா வா.."

*சும்மா*== ‌படிச்சி தான் பாருங்களேன்😃😃😃
😃
*அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*. 
 
*அது சரி *சும்மா* *என்றால் என்ன??*
 
*பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!*
 
*"சும்மா"* ======
 
*என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?*
 
*வேறு மொழிகளில்* *இல்லாத சிறப்பினை*
 
*நாம் அடிக்கடி கூறும்* *இந்த*"சும்மா"* *எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்*.
 
*1 . கொஞ்சம்* *"சும்மா"* இருடா?
 
( *அமைதியாக/Quiet*)
 
*2.கொஞ்ச நேரம் *"சும்மா"* *இருந்து விட்டுப் போகலாமே? (*களைப்பாறிக் கொண்டு/Leisurely*)
 
*3.அவரைப் பற்றி *"சும்மா"* *சொல்லக் கூடாது!*
(அருமை/in fact)*
 
*4.இது என்ன *"சும்மா கிடைக்கும்னு*
நினச்சியா*?
(இலவசமாக/Free of cost)
 
*5. *"சும்மா" கதை அளக்காதே?*
(பொய்/Lie)
 
*6. *"சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்* -
(உபயோகமற்று*/Without use)
 
*7. *"சும்மா"* *"சும்மா" கிண்டல் பண்ணுறான்.* (அடிக்கடி/Very often)*
 
*8.இவன் இப்படித்தான்.. *சும்மா* *சொல்லிக்கிட்டு இருப்பான்*.
(எப்போதும்/Always)
 
*9.ஒன்றுமில்லை *"சும்மா" சொல்கின்றேன்*-
(தற்செயலாக/Just)
 
*10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா" தான் இருக்கின்றது*
(காலி/Empty)
 
*11.சொன்னதையே *"சும்மா" சொல்லாதே.*
(மறுபடியும்/Repeat)
 
*12.ஒன்றுமில்லாமல் *"சும்மா" போகக் கூடாது*- (வெறுங் கையோடு/Bare)
 
*13. *"சும்மா"தான் இருக்கின்றோம்*-
(சோம்பேறித் தனமாக/ Lazily)
 
*14.அவன் *"சும்மா" ஏதாவது உளறுவான்* -
(வெட்டியாக/idle)
 
*15.எல்லாமே *"சும்மா" தான் சொன்னேன்*-
(விளையாட்டிற்கு/Just for fun)
 
*நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா"* 
 
*என்கிற ஒரு சொல். நாம் பயன் படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* (என்றால் அது *"சும்மா"* இல்லை!)
 
*உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை*.
 
*ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்*
இவ்வளவு நேரம் படிச்சிட்டு *சும்மா* * போனா எப்பூடி....சும்மா ஒரு லைக்க தட்டிட்டு போலாம்ல😝😝😝😂😂😂

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  🌷 🌷🌷 🌷