கவனிக்க வேண்டிய 7 வகையான மனிதர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:25 AM | Best Blogger Tips

7 types of people we should avoid!

1. உப்புமூட்டை மனிதர்கள்:
டிவைன் பிளவர் பகுத்தறிவு நாளேடு
இந்த நபர்கள் உங்கள் ஆற்றலை குறைக்கிறார்கள், அதோடு உங்கள் நேரத்தையும் வீணடிப்பவர்கள்.


உங்கள் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் உங்கள் ஆற்றல்,


நேரம் மற்றும் வளங்களை சுரண்டுவோர்.

2. கொசு மனிதர்கள்:
Mantras and Miracles - தவிர்க்க வேண்டிய 7 வகையான மனிதர்கள்: 1. உப்புமூட்டை  மனிதர்கள்: இந்த நபர்கள் உங்கள் ஆற்றலை குறைக்கிறார்கள், அதோடு உங்கள் ...
இந்த நபர்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையைச் செலுத்தினாலும் உங்களிடமிருந்து நன்மைகளைப் பெற விரும்புகிறார்கள். அவர்கள் வழங்குவதற்கு நல்ல விசயம் எதுவும் அவர்களிடம் இருக்காது. ஆனால் எப்போதும் மற்றவர்களிடமிருந்து
என்ன எடுக்க முடியும் என்பதிலேயே முறையாக இருப்பார்கள்.

3. ஆதிக்க மனிதர்கள்:
2. கொசு மனிதர்கள்:
தவிர்க்க வேண்டிய 7 வகையான... - Shanmugaraj satheeshkumar | Facebook
இந்த நபர்கள் பெருமையைத் தேடுபவர்கள் மற்றும் பிறரை கட்டுப்படுத்துபவர்கள். அவர்கள் ஒருமுறை உங்களுக்கு உதவினாலும், உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த விரும்புபவர்கள். அவர்கள் உங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்
உங்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்தவும்  விரும்புபவர்கள்.

4. முதலை மனிதர்கள்:
PaleoLife - தவிர்க்க வேண்டிய 7 வகையான மனிதர்கள்: 1. உப்புமூட்டை மனிதர்கள்: இந்த  நபர்கள் உங்கள் ஆற்றலை குறைக்கிறார்கள், அதோடு உங்கள் ...
இவர்கள் உண்மையான நோக்கங்கள் இல்லாத பாசாங்கு மனிதர்கள்.
அவர்கள் உங்களின்  ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக உங்களுடன் நெருங்கிப் பழகுவார்கள், மேலும் உங்களுக்குள் பிரச்சனை ஏற்படும் போது அந்தத் தகவலை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய கொடியவர்கள்.
அவர்கள் பொய்யர்கள், முதுகில் குத்துபவர்கள்.

5. பச்சோந்தி மனிதர்கள்:
Niram maarum pachondhi Manidhargal - An online Tamil story written by  Pandiselvi | Pratilipi.com
இந்த பொறாமை கொண்ட நபர்கள் உங்களுடன் ஆரோக்கியமற்ற போட்டியில் இருப்பவர்கள். அவர்கள் எதிர்மறையான நோக்கங்களுடன் உங்கள் முன்னேற்றத்தை ரகசியமாக கண்காணித்து, உங்கள் வெற்றிகளை ஆதரிக்காமல் அல்லது கொண்டாடாமல் உங்கள் தவறுகளை பெரிதாக்குபவர்கள்.
கொஞ்சம் அசந்தால் உங்களை குற்ற உணர்வில் தள்ளி விடுவார்கள்.

6. கனவுக் கொலையாளிகள்:
யார் யாருடன் அந்தரங்கமாக இருப்பது போல் கனவு வந்தால் அதற்கு என்னென்ன  அர்த்தம்... மீள்வது எப்படி - causes and psychological factors of most  common intimate dreams in tamil ...இறந்தது போல கனவு கண்டால் என்ன அர்த்தம்? - Lifie.lk Tamil | வாழ்க்கைக்கு....
இந்த வகை மனிதர்கள் உங்கள் கனவுகளைப் பாராட்டவோ அல்லது ஆதரிக்கவோ மாட்டார்கள். அவர்கள் உங்கள் தோல்விகளை
விரும்புபவர்கள். அதை மனதார ரசிப்பவர்கள். எப்போதும் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குபவர்கள். தீர்வுகளுக்குப் பதிலாக அதிக சிக்கல்களை உருவாக்குகிறார்கள்.

7. குப்பை மனிதர்கள்:
தினம் ஒரு விடுகதை
இந்த நபர்கள் எதிர்மறை
மற்றும் கெட்ட செய்திகளைக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் வாழ்க்கை குப்பைகளால் நிரம்பியுள்ளது, அதோடு அவர்கள் உங்கள் ஊக்கத்தை கெடுத்து, மனச்சோர்வை ஏற்படுத்தும் தகவல்களை பரப்புபவர்கள். துரதிர்ஷ்டவசமாக பிறர் இதயத்தை நொறுக்கி, அதை செய்தியாக்கி, அதில் சந்தோசப்பட்டு வளர்கிறார்கள்.

உங்களைச் சுற்றியுள்ள
மனிதர்களை மதிப்பீடு செய்து, நீங்கள் நேர்நிலையான தாக்கங்களால் சூழப்பட்டிருப்பதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு.
நீங்கள் நேர்நிலையான
மனிதர்களுடன் பழகும்போதும், எதிர்மறையானவர்களிடமிருந்து உங்களை துண்டித்துக்கொள்ளும் போதும் உங்கள் வாழ்க்கை வெற்றிக்கான
சரியான திசையில் நகரும்.

இன்பத்தைப்போல துன்பமும் கடவுளின் வரப்பிரசாதமே. அதன் மூலமும் கடவுள் நமக்கு கருணையே புரிகிறார்.

புத்திசாலிகளைப் போல சிந்தியுங்கள் ஆனால் சாதாரண நபர்களைப் போல பேசுங்கள்.
மனம் சோர்வடையும் போது நம்பிக்கையாய் பேசுபவர்களோடு நேரம் செலவிடுங்கள்.
நிச்சயமாக நீங்கள் நம்பக்கூடியவர்கள் வார்த்தையிலேயே உங்களுக்கு வைத்தியம் பார்த்து விடுவார்கள்.
நாட்கள் எல்லாம் அழகாய் பிறக்கிறது. நம் மனநிலை தான் தினமும் தடுமாறுகிறது.
வாழ்க்கையில் எல்லா விஷயமும் நமக்கு பிடிச்ச மாதிரி நடக்காது. சில விஷயம் நடக்கும். சில விஷயம் நாம் தான் நடத்தனும்.

🌷 🌷🌷 🌷   https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNf1WEz8PHItfYz4K6jFKHQYhsgE2Jbq20Ns_XEj6Cc8a9KPMWTwALA0OLW0QiGfhIiVobBVLKZT79fyPfaWADwh5CVpvf0jIPh5Vy3bLAFNi64rX_ry-a0uOUEtnGA6ehf6s-g6PpLQWoSXvEIrwJ6_0dIRVR-wjHZSHmQYdLHAZlV-Ilr9Xp3wcryEG2/s3264/IMG_20231203_123123_428.jpg🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

🌹🌹🌹🌹🌹நேர்மையா வாழணும்னு - அடிமையா வாழணும்னு 🌹🌹🌹🌹🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 10:24 AM | Best Blogger Tips


 

எழுத்தாளர் சுஜாதா வீடு.
 
தயங்கி தயங்கி தன் கணவரிடம் கேட்டார் திருமதி சுஜாதா.
 
"என்னங்க...
 
நான் ஒண்ணு கேட்டா...
 
அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே."
 
மனைவியை திரும்பிப் பார்க்காமலே,
 
"என்ன கேக்கப் போறே ?"
 


 
May be an image of 2 people


"இப்போ நம்ம வீட்டுக்கு வந்துட்டு போனாரே, உங்க நண்பர். அவருக்கு நீங்கதானே அட்வைஸர் ?"
 
"அவருக்கு இல்ல. அவர் கம்பெனிக்கு."
திருமதி மௌனம்.
 
"சரி, என்னமோ கேக்கணும்னு சொன்னியே."
"ஆமா."
 
"சீக்கிரம் கேளு."
 
"ஒண்ணும் இல்ல. அவர் புறப்படும்போது 
 
ஒண்ணு சொல்லிட்டு போனாரே. அதுதான்..."
 
"என்ன சொன்னார் ? எனக்கு ஞாபகம் இல்லையே."
 
சுஜாதா தன்னிடம் போட்டு வாங்குவதை திருமதி புரிந்து கொண்டார்.
 
"அதுதாங்க, அந்த வீடு விஷயம்..."
 
"எந்த வீடு ?"
 
"நம்ம வீட்டுக்கு எதிர்ல இருக்கற அந்த மூணு பெட்ரூம் வீடு."
 
"ம்..."
 
"அந்த வீட்டை அவரே விலை கொடுத்து வாங்கி அதை நம்ம பெயருக்கு முடிச்சு தர்றேன்னு..."
 
"நம்ம வீட்டுக்கு வந்த என்னோட நண்பர் சொல்லிட்டு போனார், அதானே?"
 
"ஆமா."
 
"எதுனாலே அப்படி சொல்லிட்டு போறார் ?"
 
"உங்க மேலே உள்ள அபிமானம்தான்."
 
"சரி. இப்போ நாம இருக்கறது..?"
 
"இது நாம சொந்தமா வாங்கின வீடு."
 
"எத்தனை பெட்ரூம் ?"
 
"மூணு பெட்ரூம் வீடு."
 
"இது வசதியா இல்லையா ?"
 
"இருக்கு...ஆனாலும் அதையும் சேர்த்து வாங்கினா ஆறு பெட்ரூமா இன்னும் வசதியா..."
 
"ம்..."
 
"நாம எதுவும் பணம் செலவு பண்ணப் போறதில்லையே.
 
உங்க நண்பர்தானே பணம் கொடுக்க ..."
சட்டென்று மனைவியை நோக்கி திரும்பினார் சுஜாதா.
 
"இதோ பாரு. நான் அவர் கம்பெனிக்கு அட்வைசர். அதுக்கு மாசாமாசம் சம்பளம் கொடுக்கறார். வாங்கிக்கறேன்.
 
புரியுதா ?"
 
"ம்"
 
"நாம உழைக்கறதுக்கு ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா அதுக்கு பேரு நேர்மை. ஆனா நாம உழைக்காமலே ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா, அந்த நிமிஷத்தில இருந்து
நாம அவருக்கு அடிமை."
 
"ம்."
 
"இப்போ சொல்லு. நீ இந்த உலகத்தில் நேர்மையா வாழணும்னு ஆசைப்படறியா,
 
அல்லது அடிமையா வாழணும்னு ஆசைப்படறியா ?"
 
"நேர்மையாத்தான்..."
 
"அப்போ இனிமே இதைப் பத்தி பேசாதே !"
 
(திருமதி சுஜாதா
அனுபவங்களிலிருந்து)
 

நீங்கள் எல்லாம் காட்டு மிராண்டியாக இருப்பீர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:52 PM | Best Blogger Tips

 


#கிறிஸ்துவர்கள் வரவில்லை என்றால் நீங்கள் எல்லாம் காட்டு மிராண்டியாக இருப்பீர்கள் என்று சொன்னவனுக்கு இந்தப் பதிவு....

1. உலகிலேயே மிகப் பழமையான கோவில் (gobekli tape) துருக்கியில் உள்ளது.... இது ஒரு இந்துக் கோவில். இது கட்டப்பட்டு 11,000 ஆண்டுகள் ஆகிறது..

2. உலகிலேயே பெரிய கோவில் அங்கோர் வாட்( angkur watt) இந்துக் கோவில். இதன் அளவு 402 ஏக்கர்.. கம்போடியாவில் தாய்லாந்து எல்லையருகே உள்ளது

3. உலகிலேயே மிகப் பெரிய குடைவரை கோவில் கைலாசநாதர் கோவில்... இது முழு மலையை மேல் இருந்து குடைந்து உருவாக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே கோவில்... இதை கட்ட 5 லட்சம் டன் பாறையை வெட்டி அகற்றி உள்ளார்கள் 18 ஆண்டுகளில். இன்று உள்ள தொழில்நுட்பத்தை வைத்துக் கூட செய்ய முடியாது...

4. உலகத்திலே பணக்காரக் கோவில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோவில் ..

5. உலகத்திலே தங்கத்தில் கூரை அமைக்கப்பட்ட முதல் கோவில் சிதம்பரம் கோவில்.

6. உலகத்திலே மிகப் பழமையான மொழி தமிழ்....

இப்படி உலகத்திலே பழமையான ,பெரிய, முதல் முறையாக எல்லாவற்றையும் செய்த நாங்கள் காட்டு மிராண்டிகள்...

நீ அங்கு வேட்டையாடித் தின்ற போதே நாங்கள் இங்கு விவசாயம் பார்த்தவர்கள்...

நீ உன் மொழியைக் கண்டுபிடிக்கும் முன்பே நாங்கள் இங்கு பல காவியங்கள் படைத்து விட்டோம்...

எங்களைச் சூது செய்து அடிமைப் படுத்தி எங்கள் வளங்களைத் திருடிச் சென்ற நீங்கள் வரவில்லை என்றால் நாங்கள் காட்டு மிராண்டிகளா இருந்து இருப்போம் என்று வாய் கூசாமல் பேசுகிறீர்கள்...

இதில் இங்கு சிலர் வக்காலத்திற்கு வருவார்கள்...

கஜினி முகமது 18 முறை படை எடுத்து சோம்நாத் கோவிலில் இருந்து அள்ளிச் சென்ற பொக்கிஷங்களைத் திரும்பத் தரச் சொல்....நாங்கள் இதை விடப் பல பொக்கிஷங்களைக் கட்டுவோம்...

இறுதியாக...
 நீங்கள் வரவில்லை என்றால் உலகில் பணக்கார நாடாகத் தான் மாறி இருப்போம்..

இங்கு உள்ளவன் எல்லாம் தமிழன் தான்...

நானும் அதை ஏற்கிறேன்.. கிறிஸ்துவ மதம் தோன்றி 2000 ஆண்டுகள் தான் ஆகிறது,

இஸ்லாம் தோன்றி 1400 ஆண்டுகள் தான் ஆகிறது...

ஆனால் ஹிந்து மதம் தோன்றி 11,11,000 ஆண்டுகள் ஆகிறது ( சரியாக வரையறுக்க வில்லை சான்றுகள் அது வரை தான் கிடைத்துள்ளது...)

அப்போது இரண்டு மதம் தோன்றும் முன்பே இங்கு இருந்தவர் எல்லாம் ஹிந்துக்கள் தான்...

இதில் ஒரு சிலர் தமிழன் இயற்கையைத் தான் வணங்கினான்.. என்று சொல்வார்கள்..

இத்தனை கோவில்களும் அதிசயங்களும் எப்படி வந்தது??

தமிழன் இயற்கையையும் வணங்கினானே தவிர இயற்கையை மட்டும் வணங்கவில்லை..

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷 தமிழன் டா ! தமிழன் டா ! தமிழன் டா !

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

 
🙏✍🏼🌹

 

கழுதையும்... கருத்தும்...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:46 PM | Best Blogger Tips

கழுதையும் கற்று கொடுக்கும்!

அதிகாரத்தில் மற்றும் அவரோடு உள்ளவர்கள் உணர வேண்டிய வாழ்வியல் உண்மை !

"நான் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன்; பணியில்   இருந்தபோது தீபாவளிக்கு பரிசுப் பொருட்களுடன் எனக்கு வாழ்த்து சொல்பவர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பர்.

அவர்கள் பரிசுப் பொருளாக அளித்த பல வகையான  இனிப்புகள், பாதாம் பிஸ்தா பேரீச்சை போன்றவை நிறைந்த பெட்டிகள், இன்னும் பிற பரிசுகள் என, ஒருவர் என என் அறையில் உள்ளே நுழைந்தால் ஏதோ இனிப்பு பரிசு பொருட்கள் விற்கும் கடையைப் போல எனது அறை இருக்கும்.

என்னால் முடிந்தவரை என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கெல்லாம் வந்த பரிசுகளை பங்கிட்டு அளித்த பின்னும் என் வீடு பரிசுப் பொருட்களால்  நிறைந்திருக்கும்.

நான் ஓய்வு பெற்றபின் வந்த முதலாண்டு தீபாவளிக்கு, பணியில் இருந்த நினைவில் எனக்கு ஏராளமானோர் பல பரிசு பொருட்களுடன் வாழ்த்துச் சொல்ல வருவர் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
யாருமே வரவில்லை.

மனம் மருத்துவம் - கழுதையின் தந்திரம். ஒரு நாட்டில் உப்பு வியாபாரி ஒருவன்  இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ...

நான் ஏமாந்து, விரக்தி அடைந்து மனதை வேறு பக்கம் திருப்ப
ஆன்மீக செய்தித்தாள் ஒன்றை படிக்கத் தொடங்கினேன்.

அதில் ஒரு சிறுகதையை அதிர்ஷ்டவசமாகப் பார்த்தேன்.

அக்கதை சுமை தூக்கிச் செல்லப் பயன்படுத்தும் கழுதை பற்றியது.

ஒரு பயணத்தில் அக்கழுதையின் மீது வழிபடும் தெய்வ உருவங்களை ஏற்றிச் செல்லும் பணியை கழுதையின் உரிமையாளர் செய்தார்.

பயணம் தொடக்கத்திலிருந்து முடிவு வரை பல்வேறு இடங்களில் ஏராளமானோர்  கழுதையின் முன்னர் வந்து நின்று பயபக்தியுடன், மரியாதையுடன் வணங்கினர்.

இவ்வாறு தன்னை அனைவரும் வணங்குவதை கண்டு கழுதைக்கு மிகவும் மகிழ்ச்சி.. பெருமை !

தெய்வ வடிவங்களை
உரிய இடத்தில் இறக்கிவிட்டு, திரும்பும் பயணத்தில் காய்கறி மூட்டையை அதன் முதுகில் ஏற்றி பயணத்தைத் தொடர்ந்தார் கழுதையின் உரிமையாளர்.

பயணத்தில் ஆங்காங்கே ஏராளமானோர் வந்து தன்னை மரியாதையுடன் கும்பிடப் போகிறார்கள் என்று எதிர்பார்த்த கழுதைக்கு ஒரே ஆச்சரியம்.யாரும் வந்து கழுதை முன்னின்று வணங்கவில்லை.
வெறுத்துப்போன கழுதை பிறருடைய கவனத்தைக் கவர கத்தத் தொடங்கியது.
கடுப்பான உரிமையாளரும் பக்கத்தில் நின்றவர்களும் கழுதையை அடிக்கத் துவங்கினர்.

அவர்கள் அடிக்கும்படி, அவர்களால் போன பயணத்தில் வணங்கப்பட்ட தான் என்ன செய்துவிட்டேன் என்று கழுதை குழம்பியது !

கழுதையின் கதையைப் படித்த எனக்கு ஞானோதயம் உதித்தது.

நான் உயர் பதவியில் இருந்தபோது  என்னை சந்தித்து வாழ்த்துச் சொல்லிப் பரிசளித்த அனைவரும், கடவுள் விக்கிரகங்களை வணங்கியவர்கள்  தன்னை வணங்கியதாக நினைத்த கழுதை போல, எனக்கு தீபாவளிக்கு வாழ்த்து சொல்லி பரிசு அளித்தவர்கள் அனைவரும், நான் வகித்த பதவியின் அதிகாரத்திற்காகச் செய்தார்களே தவிர எனக்கு இல்லை என்று நான் புரிந்து கொள்ளவில்லை !

இந்தப் புரிதல் வந்தவுடன், பரிசுகளுடன் வாழ்த்து சொல்ல வருபவர்களை எதிர்பார்த்து ஏமாந்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு, என் மனைவியுடன் இணைந்து அவளுக்கு உதவத் தொடங்கினேன்.

அவளிடம் கழுதைக் கதையை படித்து நான் பெற்ற ஞானோதயத்தை பகிர்ந்த
போது அவள் பதில் சொன்னாள்..."அவ்வப்போது உன்னை நான் கழுதை என்று சொன்னபோது நீ என் மீது கோபப்பட்டாய்!  கழுதை கதையைப் படித்த உனக்கு இப்போதாவது உண்மை விளங்கியதே !" 


🌷 🌷🌷 🌷 May be an image of 1 person and smiling  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

 
🙏✍🏼🌹

நல்ல விஷயத்தைக் கெடுக்க ஒருவர்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:42 PM | Best Blogger Tips

 


கழுகு ஒன்று மேகத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. எல்லா மேகங்களும் காற்றின் வேகத்துக்கு ஏற்றபடி நகர்ந்து கொண்டிருக்க, ஒரே ஒரு திரள் மேகம் மட்டும் நகராமல் பிடிவாதமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது.
கழுகு அந்த மேகத்துக்கு அருகே வந்து, ‘‘ஏன் நீ மட்டும் நகராமல் கஷ்டப்பட்டு காற்றை எதிர்த்து இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்?’’ என்று கேட்டது.

‘‘ஓர் உயிருக்கு ஆபத்து. அதனால் கலங்கிப் போய், அதைக் காப்பாற்ற இங்கேயே நிற்கிறேன்’’ என்றது.
‘‘யாருக்கு ஆபத்து? என்னிடம் சொல். நான் உனக்கு உதவி செய்கிறேன்’’ என்றது கழுகு.

கழுகை நம்பிய மேகம் விஷயத்தைச் சொன்னது. ‘‘கீழே தரைப்பகுதியில் எனக்கு நேரே ஒரு சிறு குளம் இருக்கிறது. அதில் நிறைய தாமரை மலர்கள் இருக்கின்றன. அதில் ஒரு இலை நடுவே சிறுதுளி நீர் இருக்கிறது.
தாமரை, தீரா நோய்களை தீர்க்கும் மூலிகை! – Aram Online
அந்த நீரில் ஒரு மீன்குஞ்சு தெரியாமல் விழுந்து விட்டது. அது துள்ளி விளையாடும்போது தெரியாமல் அந்த தாமரை இலை சிறு துளி நீரில் விழுந்து விட்டது. அதற்கு எப்படி மீண்டும் குளத்துக்குள் போவது என்று தெரியவில்லை.

அதன் அம்மா மீனோ, குஞ்சு மீனைக் காணோம் என்று கலங்கி வெளியே வெளியே எட்டிப் பார்க்கிறது. சூரிய வெளிச்சம் பட்டால் தாமரை இலையில் உள்ள சிறிதளவு சூடாகி குஞ்சு மீன் உயிருக்கு ஆபத்தாகிவிடும். அதனால்தான் நான் சூரிய ஒளியை மறைத்துக் கொண்டு நிற்கிறேன்’’ என்றது.

இதைக் கேட்ட கழுகின் புத்தி மாறியது. ‘‘நான் பெரிய மீன் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை குஞ்சு மீன் சாப்பிட்டதில்லை. நல்லவேளை, விஷயத்தைச் சொன்னாய்’’ என்றது.

மேகம் வேதனையடைந்தது. கோபமாக கழுகிடம், ‘‘நீ காப்பாற்றுவேன் என்று சொன்னதால்தான் நான் உண்மையைச் சொன்னேன். இப்போது நீ செய்வது அநியாயம், துரோகம்’’ என்று கத்தியது.

கழுகு அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் குஞ்சு மீனை சாப்பிட தாமரை இலையை நோக்கிப் போக ஆரம்பித்தது.
மேகத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குஞ்சு மீனைக் கொல்வதற்கு கழுகிடம் தானே யோசனை சொல்லிவிட்டோமோ என குற்ற உணர்வு அடைந்தது.

அதை உணர்ந்துகொண்ட காற்று சொன்னது. ‘‘மேகமே! நீ கழுகிடம் சொன்னதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் உனக்கு உதவி செய்கிறேன். கழுகு குஞ்சு மீன் அருகே போகும்போது நான் வேகமாக வீசுகிறேன். நீ சட்டென்று விலகிவிடு. நான் சொல்வதை மட்டும் செய்’’ என்றது.

மேகத்துக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும், காற்று சொன்னதைச் செய்ய நினைத்தது. கழுகு தாமரை இலையில் இருக்கும் குஞ்சு மீன் அருகே போகும்போது காற்றின் வேகத்தில் பட்டென்று விலகியது.

அது விலகியதும் சூரிய ஒளி பளீரென்று அந்த தாமரை நீரில் விழுந்தது. அந்த ஒளி கழுகின் கண்களை கூசச் செய்தது. திடீரென்று அத்தனை ஒளிக் கூச்சத்தை எதிர்பாராத கழுகு, தடுமாறி இலையில் விழுந்தது. விழுந்த நேரத்தில் காற்றும் வேகமாக வீச, தாமரை இலை அசைந்து, அதன் நடுவில் உள்ள நீரோடு குஞ்சு மீன் குளத்தில் விழுந்தது.

அப்போது கழுகின் காதருகே பேசிய காற்று, ‘‘நல்ல விஷயத்தைக் கெடுக்க ஒருவர் வந்தால், உதவி செய்ய ஆயிரம் பேர் வருவார்கள்’’ என்றது. கழுகு தலைகுனிந்து நிற்கும்போது, அங்கே தாய் மீன் குஞ்சு மீனோடு நீந்தி நீந்தி பாதுகாப்பான இடத்தை அடைந்தது. மேகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.🌹

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person and temple 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

 
🙏✍🏼🌹