இறைவன் மீது தூய பக்தி !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:41 PM | Best Blogger Tips
நம்மில் பெரும்பாலோருக்கு ஜாதகத்தில் நம்பிக்கை அதிகம். பிறந்தவுடன் ஜாதகம். வளர வளர ஜாதகம்.நன்கு படிப்பானா பிள்ளை என்று அறிய ஜாதகம். படித்தவுடன் என்ன வேலை செய்வான் அந்த வேலையே எப்போது செய்வான்.. அதில் வெற்றி பெறுவானா என்று  அறியவும் ஜாதகம்.பெண்ணுக்கு எப்பொழுது கல்யாணம், மாப்பிளை எப்படிபட்டவன்.. பத்து பொருத்தங்கள் இருக்கிறதா, இருந்தால் கல்யாணம் இல்லையென்றால் இல்லை.. இதற்கும் ஜாதகம். வீடு வாங்க ஜாதகம். கார் வாங்க ஜாதகம். பணம் சம்பாதிக்க ஜாதகம், பொங்கு சனி, மங்கு சனி, ஏழரை சனி, குரு பார்வை, நாக தோஷம், மாங்கல்ய தோஷம் ராகு கேது தோஷம்..இன்னும் அனைத்துக்கும் ஜாதகம் பார்க்கிறார்கள்.அப்படி தோஷங்கள் இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்.. தோஷங்களை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று  கோவில் கோவிலாக அலைகிறார்கள் அப்பப்பா... இந்த ஒன்பது நவகிரங்கள் மீது மனிதனுக்கு எவ்வளவு பயம்.! ஆனால்,இதையெல்லாம் மூட நம்பிக்க என்று நான் சொல்ல வரவே மாட்டேன். எனக்கும் இவைகளில் நம்பிக்கை உண்டு. 

ஆனால், ஆயிரம் தோஷங்கள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய ஆயிரம் பரிகாரங்கள் செய்தாலும்.. அனைத்து பரிகாரங்களுக்கும் மிக பெரிய சிறந்த பரிகாரம் ஒன்று உள்ளது.. உண்மையில் இறைவன் மீது தூய பக்தி கொண்டவர்கள்.. அவனிடம் குட்டி பூனை தன தாய் பூனை வாயில் தன்னை ஒப்படைப்பது போல ஒப்படைப்பவர்களால் மட்டும் இதை செய்ய முடியும். தன்னை முழுதும் அவனிடம் தந்து அவன் திருப்பாதங்களில் சரணடைபவர்களால் மட்டும் இதை செய்ய முடியும்.

--------------------------------------------------------------------------------------------------

அன்னையிடம்  ஞான பால் உண்ட திருஞான சம்பந்தரும், நற்றுணையாவது நமச்சிவாயமே என்று பாடிய திருநாவுகரசரும் சந்தித்து ஈசனின் பெருமையை பேசி கொண்டு இருகின்றனர்.

அப்போது,அடியார் ஒருவர் குறிக்கிட்டு, 'பெருமானே. மதுரையில் இருந்து மகாராணி மங்கையர்கரசியாரிடமிருந்தும் அமைச்சர் குலச்சிறையாரிடமிருந்தும் செய்தி வந்துள்ளது', என்று கூறி ஒரு ஓலையை சம்பந்தரிடம் தருகிறார். 

ஓலையை படித்த ஞான குழந்தை திருநாவுகரசரிடம், அப்பர் பெருமானே.. பாண்டிய தேசத்து மகாராணியார்  எம்மை மதுரையாம்பதிக்கு வந்து ஆலவாய் அரசனை தரிசிக்க வேண்டுகோள் இட்டுள்ளார் என்று சொல்ல , திருநாவுகரசரின் முகம் வாடுகிறது. 

திருஞான சம்பந்தர், முகம் வாடுவதன் காரணம் வினவ.. அதற்கு , திருநாவுகரசர்... அடியாரே.. பாண்டிய மன்ன சமணனாக மாறிவிட்டான். பாண்டிய தேசத்தில் சமணர் கொட்டம் தலை விரித்து ஆடுகிறது.. இந்த நேரத்தில் நீங்கள் மதுரைக்கு சென்றால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து சமணரால் ஏற்படலாம் என்று தாயுள்ளத்துடன் கூறுகிறார். 

அப்போது, திருவாய் மலர்கிறார் ஞான குழந்தை. அன்று பிறந்ததுதான் கோளறு பதிகம். 

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் 
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!

மூங்கிலை ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில் பங்கு கொடுத்திருக்கும் ஐயன்.தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால் தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை வள்ளல்.மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு, களங்கமற்ற பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு ,அவனாகவே அவன் அருளை முன்னிட்டு என் உள்ளத்தில் புகுந்து நிறைந்ததனால், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்னும் ஒன்பது கோள்களும் (பாம்பு இரண்டு ராகுவும் கேதுவும்),  ஒரு குற்றமும் இல்லாதவை. அவையெல்லாம் ஈசன் அடியவர்க்கு மிக மிக நல்லவையாகும்.

இப்படியாக பத்து பதிகம் பாடி..ஈசனை என்றும் மனதால் நினைத்து அவனுக்கு பக்தி செய்பவரை எந்த வித தோஷங்களும்அண்டாது நவக்ரகங்களால்  எவ்வித ஆபத்தும் உண்டாகாது என்கிறார். 

நம்மில் பெரும்பாலருக்கு இந்த பதிகம் தெரியும். ஆனால், எத்தனை பேர் இந்த ஞான குழந்தை பாடியதை நம்புகிறார்கள்? எத்தனை பேர், ஈசனை அன்றாடம் மனதால் துதித்து பக்தி செய்து , நவகிரகங்கள் பயத்திலிருந்து விடுபடுகிறார்கள்? தோஷங்கள் நீங்கி வாழ்கிறார்கள்? அப்படி இல்லவே இல்லை. ....!

அடுத்து......

ஊரின்  பெயர் மழிசை. ஒரு குடிலுக்கு வெளியே பத்மாசனம் போட்டு அமர்ந்து உள்ளார் ஒரு மாபெரும் யோகி.. வானத்தில் ஈசனும் உமையாளும். அன்னை கேட்க்கிறார் அப்பனிடம். .யார் இந்த யோகி.. 
அப்பன் சொல்கிறார். இவர் பூர்வத்தில் எமது பக்தனாக இருந்தவர். இப்போது ஹரியே சர்வ காரணன் என அறிந்து அவர் திருவடி பணிந்து அவருக்கு பக்தி செய்கிறார்.திருமழிசை ஆழ்வார்  என்று திருநாமம் தரித்தவர் என்கிறார்.

ஸ்ரீமன் நாராயாணனின் அடியவரா.. அப்படியென்றால் நாம் இவருக்கு எதாவது வரம் தந்துதான் ஆக வேண்டும் என்கிறாள் அன்னை. அதற்கு ஈசனார் , ஆசைகளை  கடந்தவர்..நாம் அருளும் வரங்கள் அவருக்கு துச்சம். ஆழ்வான் அதை விரும்புவதில்லை என்று மறுக்கிறார்.. பிடிவாதம் பெண்களின் குணம் அல்லவா...இல்லை.. அவருக்கு நீங்கள் வரம் தந்துதான் ஆக வேண்டும் என்கிறார் அன்னை. 

அன்னையின் பிடிவாதம் உணர்ந்த ஈசன்.. ஆழ்வானின் பெருமை உலகம் அறிய செய்ய ஒரு நாடகம் நடத்துவோம் என்றெண்ணி.. மறந்தும் புறன் தோழா மழிசை பிரான் முன் காட்சி  கொடுக்கிறார். அப்போது ஒரு கந்தல் துணியை தைத்து கொண்டு இருந்தாராம் ஆழ்வார். தன முன் அந்த பரமசிவனாரே காட்சி கொடுப்பதை கண்டும்.. அதை கவனிக்காமல்  துணியை தைப்பதில் கவனம் செலுத்தினார் மழிசை பிரான்.

கோடானு  கோடி வருடங்கள் தவம் இருந்து என்னை காண துடிக்கிறார்கள் யோகிகள்.. இங்கு நானே உம்முன் காட்சி கொடுக்க இப்படி பாராய் முகமாய் இருப்பது சரியாகுமோ என்கிறார்  ஈசன். 

உம்மால்  ஆக போவது எனக்கு ஒன்றும் இல்லை. அதனால், பாராய் முகமாய் இருந்தேன் என்கிறார் ஆழ்வார். நான் வந்தது வீணாக கூடாது .வேண்டிய வரத்தை கேளும் என்று அரண் கேட்க.. எதுவும் வேண்டாம் என்று ஆழ்வான் மறுக்க.. ஈசன் மீண்டும் தூண்ட....

சரி.. எமக்கு வீடு பேரு தா.. என்று கேட்கிறார் ஆழ்வான்.. முக்தியை அளிக்க முகுந்த ஒருவனால்தான் முடியும்.. எம்மால் முடியாது.. வேறு ஒன்றை கேளும்.. என்கிறார் சிவனார். அப்படியெனில்..முக்தியை அடைய நீண்ட சாதனம் புரிய வேண்டும். அதற்கு  எமக்கு நீண்ட ஆயுளை தாரும்.. என்கிறார் ஆழ்வான். ஆயுள் என்பது, ஒருவனின் கர்மவினைபடி வருவது.. அதையும் எம்மால் அளிக்க முடியாது என்கிறார் நீலகண்டன்.. உடனே.. ஆழ்வான்.. அப்படியெனில்,இந்த கந்தல் துணியை நான் தைக்க வேண்டும். இந்த நூல்  ஊசியின் ஊடே வரவழைக்கவாவது உமக்கு சக்தி உண்டா என்று பரமசிவனை பரிகாசிக்கிறார்.

ஆழ்வானின் பரிகாசத்தை கேட்ட ஈசன்.. வெகுண்டு, உடம்பெல்லாம் ஆணவம் கொண்ட உன்னை எரித்து சாம்பல் ஆக்குகிறேன் என்று ஆவேசம் கொண்டு.. தன நெற்றி கண் திறந்து பிரளய காலத்தில் மூவுலகை எரிக்கும் ஊழி தீயை உண்டாக்கி, ஆழ்வாரை எரித்து சாம்பலாக முனைகிறார்.. 

மறந்தும் புறந்தொழா  மாந்தர் அல்லவா .. எங்கள் ஆழ்வான்! மன்மதன் அல்லவே..  எம்பெருமானின் அடியவனை எவரால் சாம்பலாக்க முடியும்?

பரமசிவனாரின் நெற்றிக்கண் ஊழி தீயை கண்டு சிறிதும் அசையாமல்.. தன் பாதத்தின் கட்டை விரலில் இருந்து பெரும் தீயை உண்டாக்கினார்.. அந்த தீ.. சிவனாரின் நெற்றிக்கண் தீயை தகித்து, அவரையும் தகிக்க ஆரம்பித்தது..எம்பெருமானின் திருக்கையில் இருக்கும் பிரபஞ்சத்தை அழிக்கும் திருசக்கரத்தின் அம்சம் அல்லவா எங்கள் ஆழ்வான்.!

ஆழ்வான் பாதத்தில் தோன்றிய தீயை அணைக்க, சிவனார் பிரளய வெள்ளத்தை உண்டாக்க.. அந்த பெருவெள்ளம் எங்கும் பரவி.. ஆழ்வானை மூழ்கடிக்க ஆரம்பித்தது..இதை கண்டும் அஞ்சாமால், அமர்ந்து எம்ப்ருமானை மனதில் தியானிக்க ஆரம்பித்தார் திருமழிசை பிரான். 

ஆழ்வாரின் தளராத பக்தியை கண்டு மேலும் அவரை சோதிக்க விருப்பம் இல்லாமல், . பக்திசாரர் என்று அவருக்கு திருநாமம் அளித்து, அவர் புகழ் உலகம் அறிய செய்து, தன் தேவியுடன் கயிலாயம் திரும்பினார் ஈசன். 

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் என்று பதிகம் பாடி.. ஈசனை தொழுதால்..அவன் அடி பணிந்தால்  எந்நாளும் நல்ல நாளே.. எந்த கோளும் நல்ல கோளே , என்கிறார் ஞான குழந்தை சம்பந்தர்.

அந்த ஈசனையே தகிக்க வைத்தார் எங்கள் மறந்தும் புறந்தொழா ஆழ்வான். 

பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,

எதிர்வன் அவனெனக்கு நேரான், - அதிரும்

கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்

தொழக்காதல் பூண்டேன் தொழில்

கண்ணபிரானையே எந்நாளும் தொழும்படியாக ஆசைப்படுவதையே நித்ய கருமமாக ஏற்றுக்கொண்டிருக்கிற நான் (விஷயாந்தரங்களிற் புகுந்து) விகாரப்படும் நெஞ்சுடையேனல்லேன்.ஞானத்தில்) பரமசிவனோடு ஒத்திருப்பேன் (என்னலாமாயினும்).அந்த ருத்ரன் (நித்ய தாஸனான) என்னோடு ஒவ்வான்.! (ஒன்பதாம் திருமொழி நான்காம் பாடல்)

ஆழ்வானுக்கு  எப்படி இது சாத்தியாமாயிற்று? அணுவுக்கும் அணுவாகவும் மகத்துக்கும் மகத்தாகவும் எங்கும் நிறைந்தவனும் எல்லையற்றவனுமாகிய. ஜகத் காரணன்.. ஸ்ரீமன் நாராயணனான கண்ணனிடம் , அவன் திரு பாதங்களிடம்  தன்னை முழுதும் ஒப்படைத்தால் மட்டுமே  இது சாத்திய மாயிற்று.

இப்போது சொல்லுங்கள்.. பரமசிவனாரையே தகிக்க வல்ல அந்த திருப்பாதங்கள், நம்மை இந்த சாதாரண கோள்களில் இருந்து காப்பாற்றாதா என்ன? 

அந்த திருபாதங்களே நாம் உய்ய ஒரே வழி. 
அது ஒன்றே பரிகாரம். 
அதுவே தோஷங்களை போக்கும்.
அதுவே சத்தியம். 

ஓம் பகவதே வாசுதேவாய!

Via Hindu Madurai