*இன்றைய மருத்துவ உலகம்.*

மணக்கால் அய்யம்பேட்டை | 9:48 AM | Best Blogger Tips

 


இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு திறமையான இளைஞன்,

அங்குள்ள மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான்.

அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக் கொண்டார்.

குண்டூசி முதல் வானூர்தி வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது.

முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை.

மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது".

இளைஞன், ஒருவருக்கு விற்பனை செய்ததாக சொன்னான்.

முதலாளிக்கு கோபம் வந்து விட்டது.

"இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். விரைவில் உன்னுடைய விற்பனையை அதிகரிக்கா விட்டால்,

உன் வேலை பறி

போய் விடும்"

என்று எச்சரித்தார்.

"சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?"

இளைஞன் சொன்னான்,

"933005 பவுண்டுகள்".

அதிர்ச்சியடைந்த முதலாளி,

"அப்படி என்ன விற்றாய்"

வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்."

"ஆனால், அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?"

இது முதலாளி.

"உண்மைதான். இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்கப் படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால்,

நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஓர் இருபது அடி நீளப்

படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4 x 4 ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன் காரையும் விற்றேன். நடுவே ஓய்வில் அவருக்குத் தங்க இடம் இல்லாததால், மிகப்

பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்"

"அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?" நம்ப முடியாத முதலாளி கேட்டார்.

"இல்லை, அவர், தனக்குத் தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான்,

தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுது போக்கு என்று சொன்னேன்."

முதலாளி கேட்டார்,

"ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?"

"அங்கு தனியார் மருத்துவமனையில் மாஸ்டர் செக்கப் பிரிவு ஆலோசகராக இருந்தேன்,

ஏன் ?"

"இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்தக் கடையைப் பார்த்துக் கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்து விட்டு வருகிறேன்".

படித்ததில் கவர்ந்தது.

இப்படித்தான் இருக்கிறது...

*இன்றைய மருத்துவ உலகம்.*

(சிரிப்பதற்கு மட்டுமன்று... சிந்திப்பதற்கும் !)

பகிர்வு

Via : R M Sivakumar Nadar

 நன்றி இணையம்


ரத்தன் டாடா சொன்ன வரிகள் .

மணக்கால் அய்யம்பேட்டை | 9:45 AM | Best Blogger Tips

 



இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால் தான் உண்டு.

இதேதான் நமக்கும்.

நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம் உறுதியாக நின்றுவிட்டால் எப்பேர்ப்பட்டவனாலும் நம்மை அழித்துவிட முடியாது. எவ்வளவு பெரிய சோதனையாலும் நம்மை வீழ்த்திவிட முடியாது.

நாம் முடங்குவதாகவும், தோற்பதாகவும் உருவாகிற தோற்றங்கள் எல்லாம் தற்காலிகமானவை.எந்த வெற்றியும் நிலையானது இல்லை .

எந்தத் தோல்வியும் நிரந்தரமானது இல்லை. இன்றைக்கு வேண்டுமானால் எதிரியின் கை ஓங்கி இருக்கலாம்.

நம் துக்கத்தின் அளவு உயர்ந்து இருக்கலாம். அது நிரந்தரமான ஓங்குதல் இல்லை. அது வலிமையான துக்கமில்லை. துக்கத்தின் சுவடு நிச்சயமாகக் கரையும்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டது; ப்ரஷர் ஏறிவிட்டது என்று முடங்கிக் கொள்வதற்கும் சிறகுகளைச் சுருக்கிக் கொள்வதற்கும் ஆயிரம் காரணங்களை தேடுகிறவர்களுக்கு இவரைப் போன்றவர்கள்தான் டானிக் பாட்டில்கள்.

என்னதான் ஆகிவிடும்..? ஒரு கை பார்த்துவிடலாம். இங்கு யாருக்குத்தான் பிரச்சினையில்லை? எறும்பிலிருந்து யானை வரைக்கும் அத்தனை உயிரினங்களுக்கும் பிரச்சினைகள் தான்.

மனிதர்கள்தான் எல்லாவற்றையும் மண்டையில் ஏற்றி நாளை எப்படிச் சமாளிப்பது..? நாளைக் கழித்து எப்படிச் சமாளிப்பது..?

அடுத்த ஆண்டு என்ன செய்வது என்று ஆயிரத்தெட்டுக் குழப்பங்களில் சிக்கிச் சின்னாபின்னமாகிறோம்.

எல்லாவற்றையும் சற்றே ஒதுக்கி வைத்துப் பார்ப்போம். இன்றைய கணத்தை வாழ்ந்து பார்க்கலாம்.

இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யலாம். நாளை நடப்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம்.

ஓர் எறும்பைப் பிடித்துத் தண்ணீரில் போட்டால் அது கடைசி மூச்சு வரைக்கும் போராடிப் பார்த்துவிட்டுத்தான் சாகிறது. ஒரு மீனைத் தூக்கி தரையில் வீசினால் அதுவும் கடைசி மூச்சு வரைக்கும் தம் கட்டி பார்த்து விடுகிறது.

நம்பிக்கைதான் வாழ்க்கை. கடைசி வரைக்கும் முயற்சித்துப் பார்த்துவிட்டேன் இனி வாய்ப்பில்லை என்று சொல்வதே கூட அவநம்பிக்கை தான்.

அதை உடைத்து நொறுக்கினால் போதும். அந்தச் சுவருக்கு அப்பால் காத்திருக்கும் வெற்றி நமக்குத்தான்.

படித்ததில் பிடித்தது

 


நன்றி இணையம்

நட்புன்னா என்ன தெரியுமா? நண்பன்னா என்னனு தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 9:42 AM | Best Blogger Tips

 


நட்புன்னா என்ன தெரியுமா? நண்பன்னா என்னனு தெரியுமா?

சில வருடங்களுக்கு முன் மோதிஜி ஒரு பேட்டியில் சொன்னார். டீமானிடைசேஷன் அறிவித்த அன்று, அர்ஜெண்டினா அதிபர் அவரது மனைவியிடம் சொன்னாராம். என் நண்பர் மோதி இனி தன் தூக்கத்தை இழந்து தவிக்கப் போகிறார். அவர் எடுத்த இந்த நடவடிக்கையில் வெற்றி பெறவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்என்று.



அதே போல, QUAD (Quadrilateral Security Dialogue ) என்ற அமைப்பைத் தொடங்கிய பின் அதில் உறுப்பினராக இருந்த ஆஸ்திரேலியா மெதுவாக அன் அஃபிஷியலாகக் கழண்டு கொண்டது. அதன் பிறகு மோதிஜியுடனான நட்பு கிடைத்த பின், QUAD ல் மீண்டும் இணைந்து செயல்படத் தொடங்கியது. (வரும் 24ம் தேதி கூட க்வாட் அமைப்பின் கூட்டம் நடைபெற இருக்கிறது).


சரி இப்ப இந்த ரெண்டு விசயத்திற்கும் நம்ம நாட்டின் வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? நமக்கென்ன லாபம்?

கச்சா எண்ணெய் குறைத்தல், மாசுக்கட்டுப்பாடு, வாகனத் தயாரிப்பு வளர்ச்சி போன்றவற்றில் இனி லித்தியம் பேட்டரிகளின் பங்கு தான் மிக மிக அதிகமாக இருக்கப் போகிறது. நம்மிடம் லித்தியம் தாது என்பது அரவே கிடையாது. நாம் முழுக்க முழுக்க சீன பேட்டரிகளை இறக்குமதியை நம்பியே வாழ வேண்டிய சூழலில் இருந்தோம். நமக்கு லித்தியம் தாதுகளை சப்ளை பண்ண நினைக்கும் நாடுகளை மறைமுகமாக மிரட்டி அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த சீனாவை இப்பொழுது மோதிஜியின் நட்பினால், பிற நாடுகள் உதாசீனம் செய்யத் தொடங்கியிருக்கிறது.

குறிப்பாக அர்ஜெண்டினாவும், ஆஸ்திரேலியாவும் நமக்கு லித்தியம் தாதுக்களை இறக்குமதி செய்ய ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. (பொலிவியா சிலி ஆகிய நாடுகளும்) கடந்த நான்கு வருடங்களில் நான்கு மடங்கு தாதுக்களை இறக்குமதி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளோம்.


இனி வரும் காலங்களில் கச்சா எண்ணெய்க்கு மாற்றாக உலகின் வர்த்தகத்தில் கோலோச்சப் போகும் லித்தியம் தாதுக்களைப் பிரித்தெடுத்தல் மற்றும் பேட்டரி செய்தல் தொழிலில் நாமும் மிகப் பெரிய அளவில் சாதிக்கப் போகிறோம். லித்தியம் பேட்டரி தயாரிப்பின் முன்னோடியான சாம்சங் சீனாவில் தன் கம்பெனியை மூடி விட்டு இந்தியாவில் கம்பெனியைத் தொடங்கியிருப்பது நம் மீது உலக நிறுவனங்களின் நம்பிக்கையை மிக அதிகளவில் உயர்த்தியிருக்கிறது.

ஊர் சுத்தும் மோதி என்று ஊளையிட்ட உள்ளூர் நரிகள் இப்பொழுதே உள்காயங்களுடன் ஒளிந்து கொண்டிருக்கின்றன. மோதிஜி உருவாக்கும் நட்புகள் அவரது சொத்துக்களை வளர்க்க அல்ல! தேசத்தின் மதிப்பு மற்றும் வளர்ச்சியைக் கூட்ட என்பது மக்களுக்கு புரியத் தொடங்கியிருக்கின்றது.

#ஜெய்ஹிந்த்!

நன்றி ; ஆனந்தன் அமிர்தன்

 


ஆரோக்கியத்திற்கு, உடல்நலம்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:42 AM | Best Blogger Tips

 


நம்முடைய வருமானம் குறைவாக இருக்கலாம். ஆரோக்கியத்திற்கு,

மிக சிறந்த உணவை நம்மால் உண்ண முடியும்.

- மருத்துவர் வான்மதி

ராஐேஷ் .

உதாரணமாக--



1. ரெடிமேடாக விற்கும் நெல்லிக்காய் வத்தல். (தினமும்ஒன்று)

2. விஷம் கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை.


3. பிரிட்ஜில் வைக்காத பொருள்கள்.

4. ஒரு கேரட்டுடனும் , (அல்லது)

சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது.

(இது --- கண்ணுக்கும்,

இரத்தம் அதிக மாவதற்கும்,

அறிவிற்கும், ஞாபக சக்திக்கும் நல்லது.)

5. அதிக கெமிக்கல்கள் உள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது.

6. தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாமே.

7. முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே.

8. சாதத்தை வடித்து சாப்பிடலாமே.

9. வடித்த கஞ்சியை பழய சாதம் தயாரிக்க பயன்படுத்தலாமே.

10. இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தை, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக வைத்து பயன் படுத்தலாமே.

11. ஒரு நாளின் எல்லா நேரத்திலும், கீழே கண்டபடி சுவாசித்து பழகலாமே.

வேகமாக தொப்புள் வழியே காற்று உள்ளே வந்து, மெதுவாக உச்சந்தலை வழியே வெளியே செல்வதாக மனதில் நினைத்தபடியே சுவாசிக்கலாமே.

12. காலையில் முதல் வேலையாக அதிக தண்ணீரை குடித்து மலத்தை கழித்துவிடலாமே. (அ) வெதுவெதுப்பான தண்ணீரை பயன் படுத்தலாமே.

(அ) உப்பும் , எலுமிச்சை சாறும் கலந்து குடிக்கலாமே.

ஒரே மாதத்தில் குடல் நார்மலாக செயல் படும் நிலைக்கு வந்து விடுமே.

13. வடக்கு பக்கம் தலைவைத்து படுப்பதை தவிர்க்கலாமே.

14. மாலை வேளைகளில் உடைத்த-கடலை, முளைகட்டிய பயறுகளில் ஏதாவது ஒன்று, வேர்க்கடலை கொய்யா பழம் போன்ற விலை மலிவான பொருட்களை பயன் படுத்தி பழகலாமே.

15. தினமும் சூரியன் நம்மீது 10 to 20 நிமிடம் படும்படி இருக்கலாமே.

பல பல லட்ச ரூபாய் மருத்துவ செலவை குறைக்கலாமே.

16. நமது மகிழ்ச்சி என்பது வெளியில் எந்த பொருளிலும் இல்லை.

நாம் நினைக்கும் நேர் மறை எண்ணத்தில் மட்டுமே இருப்பதை நம்பலாமே.

17. எண்ணெய் குளியல், குடல் சுத்தம்,

போன்றவற்றை கடைபிடிக்கலாமே.

18. மிக சிறந்த உணவையும் சாப்பிடாமல்,

மனக் கட்டுப் பாடலுடன் படையலைப் போட்டு,

அதை பார்த்து ரசித்த படி இருக்கும் போது,

அதன் சத்துகளை உடல் கிறகிப்பதை உணர்ந்த பிறகு,

நிதானமாக சிறிது சாப்பிட்டதுமே

திருப்தி உண்டாவதை உணரலாமே.

19. அடிக்கடி உண்ணா விரதம் இருந்து,

உடல் காற்றின் உதவியுடனும் செயல் படுவதை ரசனையுடன் உணரலாமே.

20. செக்கு எண்ணெய்யின் விலை அதிகமாக இருந்தாலும்

அதையே பயன்படுத்தலாமே.

சுட்ட எண்ணையை மீண்டும் பயன் படுத்துவதை தவிர்க்கலாமே.

21. மைதா பொருட்களை தவிர்க்கலாமே.

22. வெது வெதுப்பான நீரை முதலில் தலையில் ஊற்றியும் ,

சாதாரண நீரை முதலில் காலில் இருந்து ஊற்றியும்

குளிக்கலாமே.

குளிக்கும் போது வாயை மூடி இருக்கலாமே.

பலர் அப்போது வாயால் சுவாசித்து உடல் நலத்தை கெடுத்து கொள்வதை கவனிக்கலாமே.

23. தூக்கம் உடனே வராத மனநிலையில் இருப்பவர்கள்,

கடைசி சொட்டு காற்றையும் வெளியே விட்டு விட்டு,

மூச்சை இழுக்காமல் இருக்கவும்.

அதிகப்படியான காற்றை வேகமாக முடிந்த வரை இழுத்து,

சிறிது நேரத்தில்

மெதுவாக வெளியே விடலாமே.

இவை ஒரு சுற்று சுவாசம்.

இப்படி இருபது சுற்றுவரை

எண்ணுவதற்கு முன்பே நாம் தூங்கி விடுகிறோம்.

24. மிக மிக எளிதான உடற்பயிற்சி: தோப்புக்கரணத்தை முடிந்த வரை போடலாமே.

படிப்படியாக அதிகப் படுத்திக் கொள்ளலாமே.

அப்போது மூச்சை விட்டபடியே உட்கார வேண்டும்.

கைகள் பெருக்கல் குறியை போல காதுகளை பிடித்து இருக்க வேண்டும்.

25. வீட்டில் நேர்மறை சக்தி அதிகமாவதற்கு

வசம்பு,

படிகாரம்,

எலுமிச்சை,

போன்ற பொருள்கள் உதவுகிறது.

விருப்பம் உள்ளவர்கள்

படுக்கை அறைகளில் மறைவாகவும் வைத்து பயனைப் பெறலாமே.

26. உடலில்

நேர்-மறை சக்தி அதிகமாவதற்கு

நல்ல எண்ணம் உள்ளவர்களின் அருகில் இருக்கலாமே.

அல்லது,

கோவில் சுற்றலாமே.

பிரமிடு அமைப்பின் மையத்தில் வைக்க பட்ட கருங்கல்லில் இருந்து வெளிப்படும்

காந்த சக்தியை அருகில் சென்று பெறலாமே.

உச்சரிக்க கடினமான வார்த்தைகளை

நாம் தவறு இல்லாமல் படிக்கலாமே.

நாம் மனம் ஒன்றி படித்தால் மட்டுமே தவறே இல்லாமல் படிக்க முடியும்.

இதுவே மந்திரம்.

உச்சரிக்கவே கடினமான (மந்திர) சப்தத்தம்

வேறு ஒருவரிடம் இருந்து வெளிப்பட்டாலும்

அந்த சப்தம் நமது வாயில் இருந்தே வெளிப்படுவதை போலவே

நாம் மனதால் நினைக்க முடியும்.

ஒருவித காந்த சக்தி நம்முள் வந்து சேர்வதை நம்மால் உணர முடியும்.

27. நாம் நம்பிக்கை வைத்து வணங்கும் அளவுக்கே ,

நமது காந்த அலைவரிசையானது எங்கும் எப்போதுமே செயல் போட்டபடியே உள்ள பிரபஞ்ச காந்த அலைவரிசையுடன் (ஓரளவுக்கு) ஒத்துப் போகும்.

எந்த கடவுளை எந்த பெயரில் வணங்கினாலும்,

நமக்கு இந்த பிரபஞ்சத்தின் காந்த சக்தி கிடைக்கிறது .

நல்ல பலன் கிடைக்கிறது.

28. இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர் இல்லாத வைகளும், உயிர் உள்ள வைகளும்

நாம் ஒவ்வொரு வரும்,

கடவுளின் ஒவ்வொரு துளிகளே.

28. மாதம் ஒரு முறை யாவது சமையல் அறையில் எல்லா பொருட்களையும்

நிரப்பினால் தான்

சமையல் சரியாக இருக்கும்.

இதுபோல-- உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களையும் உடலில் சேர்க்கவே

பண்டிகை காலங்களில் பல தரப்பட்ட உணவு பழக்கவழக்கங்கள் கடைபிடிக்க படுகிறது.

சமூகத்தில் சத்துகுறைவால் வியாதி வருவது தடுக்கப்படுகிறது. சமூக தர்ம பழக்கங்களின் மூலமாக எளிய மனிதர்களுக்கும் நல்லது நடக்கிறது.

எலுமிச்சை+இஞ்சி+பூண்டு மருந்து இதய அடைப்பை நீக்குகிறது.

கருஞ்சீரகம்+ஓமம்+ வெந்தயம் மருந்து மனிதர்களுக்கு வரக்கூடிய 4448 வியாதிகளையும் தடுத்து கட்டுப்படுத்துகிறது.

உடலில் அதிக ஆக்ஸிஜனை சேர்ப்பதன் மூலம் கேன்சரை கட்டுப்படுத்த முடிகிறது.

மேலே குறிப்பிட்டவைகளை கடைபிடித்து வாழ நம் எல்லோராலும் எளிதாக முடியும்.

இந்த உலகிலேயே மிகவும் உயர்ந்த பதவியையும்,

அளவிடவே முடியாத பணத்தையும் வைத்து கொண்டு இருந்தாலும் பயன் இல்லை.

தினமும் பரபரப் பாகவே வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பவர்களே அதிகம்.

எல்லா பழத்திலும் தோலும் கொட்டையும் இருப்பதைத் நினைத்து கவலைபடுபவர்களே அதிகம்.

இதுபோலவே--

அனைவரிடமும் குறைகளை மட்டுமே கவனித்து குறைகளையே பேசி வாழ்பவர்களே அதிகம்.

நாம் நேர்மறை எண்ணத்துடன் வாழும் போது நமது மனம்,

நமது சுவாசத்தை ஆழமாக நிர்வகித்து,

*அதிக நிம்மதியையும்*,

*அதிக திருப்தியையும்*,

*அதிக ஆயுளையும் தருகிறது*!

*

வாழ்த்துக்கள்

*!



*வாழ்க வளமுடன்*!!

நன்றி இணையம்