வாழத் தகுதியற்ற நாடுகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 9:37 AM | Best Blogger Tips

 



வாழத் தகுதியற்ற நாடுகள்!

--------------------------------------------

அமெரிக்கா! வல்லரசு!

அதுவும் உலகின்

முதல்நிலை வல்லரசு!

தனிநபர் வருமானம்

(PER CAPITA INCOME) மிகவும் அதிகம்.

அறிவியல் வளர்ச்சியில்

உச்சம் தொட்ட நாடு.

ஆனால் கொரோனா வந்தபோது

என்ன நடந்தது?

வாழத் தகுதியற்ற நாடு

அமெரிக்கா என்பது

நிரூபணம் ஆனது.

அமெரிக்க ஜனத்தொகை

33 கோடிதான்.

ஆனால்

கொரோனா மரணம்

அங்கு உலகிலேயே

அதிகம்.

கொரோனா மரணத்தில் உலகில்

முதல் இடம் அமெரிக்காவுக்கு.

அங்கு கொரோனா

மரணம் 7 லட்சம்.

கொரோனாவை வெல்ல முடியாமல்

மண்ணில் வீழ்ந்தது அமெரிக்கா!


இன்றும் தினமும் அங்கே ஆயிரக்கணக்கான மரணங்கள் கொரோனாவில் நிகழ்கிறது.

என்ன மண்ணாங்கட்டி வல்லரசு?

என்ன பணக்கார நாடு?

கொரோனா அமெரிக்காவை அடித்துத்

துவைத்துக் காயப்போட்டு விட்டதே!

இப்போது சொல்லுங்கள்,

அமெரிக்கா வாழத்

தகுதியான நாடா? இல்லை!

பிரேசில்!

இது ஒரு தென்னமெரிக்க நாடு.

ஜனத்தொகை 19 கோடி.

ஆனால் கொரோனா

மரணத்தில்

உலகிலேயே இரண்டாம் இடம்!

6 லட்சம் பேர் கொரோனாவால் மரணம்.

கொஞ்ச நஞ்சமல்ல!

ஆறு லட்சம் பிணங்கள்!

பிரேசிலில் எங்கு பார்த்தாலும்

போதை மருந்து!

போதை மருந்து சாப்பிடாதவன்

அங்கு இல்லை.

விளைவு கொரோனாவில்

ஆறு லட்சம் பிணங்கள்.

இந்தியாவுடன் ஒப்பீடு செய்து பார்ப்போம்.

அமெரிக்கா பணக்கார நாடு.

இந்தியா ஏழை நாடு.

BPL கூட்டம் இந்தியாவில் மிக அதிகம்.

ஆனால் அமெரிக்காவில் ஏது BPL?

(BPL = Below the Poverty Line)

இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடி.

இங்கு கொரோனா மரணம் 4.5 லட்சம்.

33 கோடி மக்கள்தொகை

உள்ள அமெரிக்காவில்

கொரோனா மரணம் 7 லட்சத்து

ஆயிரம் (7,01,000).

ஆனால் 139 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் கொரோனாவுக்கு மரண அடி கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் கொரோனா

மரணம் 4.5 லட்சம் என்று

கட்டுக்குள் உள்ளது.

அமெரிக்காவில் வெற்றிக் கொடி

நாட்டிய டொனால்டு

டிரம்ப்பையு ம் ஜோ பைடனையும்

நார் நாராகக்

கிழித்துப் போட்டு விட்டது கொரோனா.

சரி, கொரோனாவை விட்டுத் தள்ளுங்கள்!

வேறு parametersஐ எடுத்துக் கொள்வோம்.

நமது அண்டை நாடுகளைப் பாருங்கள்!

ஸ்ரீலங்கா! அதாவது இலங்கை! சிங்களப் பெண்கள்,

பணக்கார ஆண்களிடம்சோரம்

போய் தாங்கள் பெற்ற குழந்தைகளின் பாலுக்கு வழி செய்யும் அவலம்

அங்கு இயல்பு.

இலங்கையில் பொருளாதார

நெருக்கடி நிலை

பிறப்பிக்கப் பட்டுள்ளது.

உணவு தானியங்கள் பதுக்கல்! விலைவாசி

விண்ணைத் தொடுகிறது.

ஒரு கிலோ சர்க்கரை

ரூ 200. ஒரு சிங்கிள் தேநீர் ரூ 100. பெருவாரியான

ஸ்வீட் கடைகள் மூடப்பட்டு விட்டன.

பெரும் பணக்காரன் தன் குழந்தைக்கு ரூ 150 கொடுத்து

ஒரு லட்டு வாங்கிக் கொடுக்கிறான்.

இன்னொரு அண்டை நாடு ஆப்கானிஸ்தான்.

தலிபான்களின் ஆட்சி.

மக்கள் நாட்டை விட்டு

ஓடிக் கொண்டு இருக்கின்றனர்.

பாகிஸ்தான் உலகின் பிச்சைக்கார நாடு.

நமது அண்டை நாடு.

எந்த நேரமும் ராணுவம்

ஆட்சியைக் கைப்பற்றும்

அபாயம் உள்ள நாடு.

பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாடு.

பெட்ரோல் டீசல் கிடைக்காமல்

மக்கள் அவதி.

சீனாவில் மின்சார வெட்டு.

ஒரு நாளைக்கு 9 மணி நேர மின்வெட்டு.

ஆக இத்தனை நாடுகளைப் பார்த்தோம்.

அவை வாழத் தகுதியான

நாடுகள் அல்ல.

இந்தியா மட்டுமே

வாழத் தகுதியான நாடு.


இந்தியாவை விட மற்ற நாடுகள் வாழத்

தகுதியான நாடுகள் என்று கருதுவோர்

தாராளமாக அங்கேயே சென்று வாழலாம்.

-------------------------------------நன்றி

 


*திருவாரூர்* *CentralUniversity*

மணக்கால் அய்யம்பேட்டை | 9:30 AM | Best Blogger Tips

 


*திருவாரூர்*

*CentralUniversity*

நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை நானுமே அறிந்திராத விசயம். இன்று இப்பொழுது நண்பரொருவரிடம் பேசும் பொழுது அவருக்குமே தெரியவில்லே என்றும் தெரிய வந்தது.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன.

இது போக, அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம், பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி, காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

இதையெல்லாம் ஏன் இப்போது சொல்ல வருகிறேன் என்று கேட்டால்...

மீண்டும் ஒரு முறை இந்தப் பதிவின் முதல் பாராவை படியுங்கள்.


பொதுவாக இந்த பல்கலைகழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை. *தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே இருக்கிறது*. இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கானஅட்மிஷன் தருகிறது. *Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA EXONOMICS. இது போக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸூகளும் எம்பிஏ கோர்ஸுகளும் பிஎச்டி கோர்ஸுகளும்* தனித்தனியே நடத்தப்படுகின்றன.

இங்கே படிக்கும் மாணவர்களில் பேர் பாதி பேர் கேரளாவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மீதிப்பேரில் மற்ற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாடு உட்பட.

ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால் *முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள்* வருகிறது. இது போக ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது. *ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவே.*

ஆனால் *இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர்களுக்கு மாணாக்கர்களுக்கு தெரியவே இல்லை* என்பது வருத்தத்துக்குரிய விசயம்.

சரி.

எப்படி இந்த பல்கலை கழகங்களில் சேர்ந்து படிப்பது...

18 மத்திய பல்கலை கழகங்ளில் எந்த பல்கலைகழகத்திலும் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்க ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு தான் நடத்தப்படுகின்றது. cucetexam. Central University common entrance exam.

*+2 முடித்து அறுபது சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது*. நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு கவுன்ஸிலிங் மூலம் மாணாக்கர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றன.

*நேற்று முதல் இந்த தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்*.

www.cucetexam.nic.in

மேலும் எல்லா விவரங்களும் இந்த தளத்தில் இருக்கின்றன. எந்தெந்த பல்கலை கழகங்களில் என்னென்ன கோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்பதை அறிய அந்தந்த பல்கலை கழகத்தின் இணைய தளத்தில் சென்று பார்க்கலாம். பல்கலை கழகங்களின் பெயர்களும் இணைய தள முகவரியுடன் மேற் சொன்ன தளத்திலேயே விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.

தமிழ்நாட்டிலேயே வெறும் 05 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து *Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்...*

சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், *ஆகமொத்தம் ஒரு வருடத்திற்கு ரூ. 65,000/- உதவித் தொகை கிடைக்கும்.*

அக்ரி(விவசாயம்)பாடம் பயில விரும்புபவர்கள் திருச்சி அருகிலுள்ள கல்லூரிகளில் சேரமுயல்வதுநன்மையளிக்கும். *ஏனெனில், இக்கல்லூரிகளில் டொனேஷன் கிடையாது....*

திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம் (Central University) உள்ளது. இதில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு. மேலும், *இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை...*

படியுங்கள்....பகிருங்கள் ..

*தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...*

மாணவ,மாணவியர்க்கு...

CUCETEXAM.NIC.IN

www.cucetexam.nic.in

 

நன்றி இணையம்

இப்படிப்பட்டவர்களே சங்கி எனும் போது

மணக்கால் அய்யம்பேட்டை | 9:29 AM | Best Blogger Tips

 


கிரண் பேடி என்ற லஞ்சம் வாங்காத நேர்மையான, தைரியமான ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியை இனம் கண்டு அவரை பாண்டிச்சேரியில் துணை நிலை ஆணையராக்கியது பாஜக அரசு. உடனே அவர் சங்கியாகி போனார்...

நாட்டுக்காகவே யோசித்து மதத்தையும் தாண்டி ஒரு நல்ல மனிதராக, நேர்மையாக விளங்கிய, நாட்டின் ஏவுகணையின் தந்தை அப்துல்கலாம் அய்யாவை குடியரசு தலைவராக ஆக்கியது பாஜக. பிற்காலத்தில் அவரும் சங்கியாகி போனார்...

வெளி உறவு செயலாளராக திறமையாக பல நாடுகளில் வேலை செய்தவர். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் தூதரக அதிகாரியாக இந்திய அரசு அலுவலராக வேலை செய்தவர் திரு சுப்ரமணியம் ஜெய்சங்கர். அவரின் திறமையை பார்த்த மோடி அரசு நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அவரையே வெளியுறவு மந்திரி ஆக்கியது. பிற்காலத்தில் அவரும் சங்கியானார்...


மோடியின் தலைமை பண்பை கவனித்து இந்தியாவை மிக நெருங்கிய நட்பு நாடாக மாற்றிய அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூட சங்கி பட்டம் பெற்றார்...

தமிழ்நாட்டில் பிறந்து டில்லியில் பொருளாதாரம் படிப்பில் MPhil முடித்து பின் லண்டனில் வசித்து திரும்பிய நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நிதி அமைச்சர் பதவி. அவரும் இப்பொழுது சங்கிதான்...

விஜயகுமார் என்னும் மிக திறமை வாய்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரியை, மூன்று மாநில போலீஸ் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டு இருந்த வீரப்பனை சாதுரியமாக தூக்கிய காஷ்மீரின் சிறப்பு காவல் படை கண்காணிப்பாளர் ஆக மிக திறமையாக பணியாற்றிய அவரை உள் துறை அமைச்சருக்கு ஆலோசகராக நியமித்தது பாஜக. அவரும் தற்போது சங்கி ஆனார்...


அரசியலுக்காக, ஓட்டுக்காக காங்கிரஸ் அரசு அயோத்தி பிரச்சனையை வேண்டும் என்றே ஒரு முடிவுக்கு கொண்டு வராமல் இழுத்தடித்தது. அதற்கு தைரியமாக முற்றுப்புள்ளி வைத்து பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்த முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கூட சங்கி என்றே அழைக்கப்பட்டார்...

கர்நாடகாவில் சிங்கம் என்று பெயர் எடுத்த லஞ்சம் வாங்காமல் மக்களுக்காகவே மக்கள் போலீஸ் என்று பெயரெடுத்த அண்ணாமலை என்பவர் அந்த ஐபிஎஸ் வேலையும் தாண்டி மக்களுக்கு நல்லது செய்ய ஒரு கட்சியை தேர்ந்தெடுத்தார். அது மோடி தலைமையிலான பாஜக என்று முடிவெடுத்தார் கடைசியில் அவரும் சங்கி ஆகிப் போனார்...


அமுதா என்ற ஒரு சிறந்த நேர்மையான திறமையான ஐ.ஏ.எஸ் அதிகாரியை இனம் கண்டு அவரை பிரதம மந்திரி அலுவலகத்துக்கு, டில்லிக்கு மாற்றியது மோடி அரசு. அதாவது நாட்டு நலனுக்கான சட்டங்களை துரிதமாக அமுல்படுத்த ஒரு சுறுசுறுப்பாக வேலை செய்யும் அதிகாரி தேவை என்ற காரணம் தான் அங்கே பணி அமர்த்தப்பட்டார். ஆனால், அவரும் சங்கியாகி போனார்...

சென்னை அண்ணா பல்கலைக் கழகம் தான் தமிழ்நாட்டின் அனைத்து தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளையும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம். அதன் பதவிகளுக்கு கோடிக்கணக்கான பணம் லஞ்சமாக பெறப்பட்டு பணியமர்த்த படுகிறது என்ற தகவல் வர நேர்மையே வாழ்க்கையாகக் கொண்ட லஞ்சம் என்பதைத் தவிர்த்து வாழ்ந்து வந்த சூரப்பா என்பவரை பாஜக அரசு அண்ணா பல்கலை கழகத்திற்கு நியமித்தது. கடைசியில் அவரும் சங்கி ஆகிப் போனார். அவர் மேலேயே, ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியது ஊழலுக்கு புரையோடிப்போன திராவிட கட்சிகள்...

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நல்ல திறமையும், அறிவும் ,நேர்மையும், தலைமைப் பண்பையும் கொண்ட மனிதர்களை இந்த பாஜக அரசு தேடித்தேடி பதவி வழங்கி அவர்களை மிகச் சிறந்த தலைவர்களாக முன்னெடுத்துச் செல்கிறது...

ஆனால், அவர்கள் அனைவரும் சங்கி என்று நேர்மையில்லாத, காங்கிரஸ் குடும்பம், களவாணி திமுக குடும்பம், பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் குடும்பம், காஷ்மீரின் வளங்களை எல்லாம் ஒரே குடும்பமாக அனுபவிக்கும் பரூக் அப்துல்லா, கொல்கத்தா மமதை மம்தா, டன் கணக்கில் தங்கம் கடத்திய கேரள கம்யூனிஸ்ட் போன்றவர்களால் ஏளனம் செய்யப்படுகிறது...

மேலே சொன்ன யாருமே பாஜக கட்சியின் பிதாமகன் அத்வானியின் குடும்பமோ, மோடியின் குடும்பமோ, வாஜ்பாய் குடும்பமோ, சுஷ்மா சுவராஜின் குடும்பமோ, அரும் ஜெட்லியின் குடும்பமோ அல்லது அமீத்ஷாவின் குடும்பமோ அல்ல. அனைவருமே திறமைசாலிகள், நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் என்ற அந்த ஒற்றைக் காரணம் தான்...

நான் பாஜகவை ஆதரிக்க காரணமே இதுதான். இவர்களுக்கெல்லாம் நாடுதான் முக்கியம். இல்லாவிடில் இன்னேரம் அத்வானி தனிக்கட்சி ஆரம்பித்து பாஜகவை உடைத்திருப்பார். முரளி மனோகர் ஜோஷி மோடி வட கிழக்கு பக்கமே வர முடியாதபடி செய்திருப்பார். பாஜகவில் குடும்பத்தை முன்னிறுத்தி கட்சி இல்லை. நாட்டுக்காக, கொள்கைக்காக குடும்பத்தையே கவனிக்காமல் வந்தவர்கள், இருப்பவர்கள் தான் அதிகம். அவர்களுக்கு பெயர் தான் சங்கி...

நாளை அமீத்ஷாவின் மகன் பிரதம மந்திரி ஆக முடியாது. ஆனால், அமித்ஷா குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத தமிழ் நாட்டின் நிர்மலா சீதாராமன் அல்லது கர்நாடகா வின் தேஜஸ்வி சூரியா அல்லது அண்ணாமலை ஐபிஎஸ் கூட பிரதமர் ஆக முடியும் பாஜக ஜெயித்தால்...

இப்படிப்பட்டவர்களே சங்கி எனும் போது நாமும் உரக்க சொல்வோம்...

சங்கி என்று...🚩

Jai Hind!

நன்றி இணையம்

 


அர்ச்சகர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:23 AM | Best Blogger Tips

 


ஒரு கோயில் என்றால், அங்கே ஐந்து நிலையில் அர்ச்சகர்கள் இருப்பார்கள்.

இந்த ஐந்து நிலையில்,

சிவாலயம் என்றால் சிவாச்சாரியார் மரபினரும்,

வைணவ ஆலயம் என்றால் பட்டாச்சாரியர் மரபினரும் இருப்பார்கள்.

1) ஆச்சார்யர் ( தலைமை சிவாச்சாரியார்).

2)அர்ச்சகர்

3)ஸாதகர்.

4)அலங்கிருதர்

5)வாசகர்

இதில்,



1) #ஆச்சார்யர்

என்ற தலைமை சிவாச்சாரியர் ,அவ்வாலயத்தின் காலபூஜைகளில் மட்டு பங்கு கொள்வார். இவருக்கென்று கோயிலும் தனி பீடம், சன்னதி உண்டு. கால பூஜை பூர்த்தி பெற்ற பின்பு இவர் தமது பீடத்துக்கு சென்று அங்கிருந்தே பக்தர்களை வரவழைத்து ஆசி வழங்கவேண்டும். விபூதி பிரசாதம் வழங்குவார்.

இவருக்கென தனி பல்லாக்கு, தீவட்டி, பீடம், கொடை மரியாதை உண்டு.

இவருக்கு துணையாக உதவி ஆச்சார்யர் என ஒருவர் இருப்பார்.

சம்பந்தபட்ட கோயிலின் ஆகம விசயம், பூஜை விசயம், விழா விசயம் எதுவாகிலும் இவரது முடிவே இறுதி தீர்ப்பாகும்.

இக்காலத்தில் உள்ளோருக்கு புரியவேண்டும் என்றால், சபரிமலையில் உள்ள மேல்சாந்தி, கீழ்சாந்தி போன்று.....

திருவண்ணாமலையில் கூட பெரிய பட்டம், சின்ன பட்டம் என சிவாச்சாரியார்கள் இன்று விளங்குகிறார்கள்.

இதுபோல் பெரிய சிவாலயம் அனைத்திலும் இப்படியான ஆச்சார்யர் இருந்தார் ஒரு காலத்தில்.

இவர்கள் மடாதிபதிகள் போல் பேற்றப்படவேண்டியவர்கள்...

2) அர்ச்சகர் :

இவரும் சிவாச்சார்ய மரபினர்தான். ஆனால் தலமை சிவாச்சாரியார் கால பூஜையை முடித்து தந்த பின்பு, நித்ய பூஜை, பக்தர்களை கவனிப்பது இவரது பணியாகும்.

3) ஸாதகர் :

அதாவது முதன்மை சிவாச்சாரியாருக்கு துணையாக இருப்பவர். பூஜைக்கு தேவையான திரவ்யங்களை, பொருட்களை எடுத்து தந்து உதவியாக இருப்பவர்.

4)அலங்கிருதர் - நித்யபடி, விசேஷகாலங்களில் அலங்காரம் செய்திடும் சிவாச்சாரியார்.

5) வாசகர் :

வேத ஆகமம் ஓதும் சிவாச்சாரியார்.

இந்த ஒவ்வொரு நிலைக்கும் கீழே கோயில் திட்டம் சார்ந்து, சிலரோ பலரோ இந்த பணியை செய்வார்கள்.

2,3,4,5 ஆகிய நான்கு நிலைகளில் உள்ளவர்கள், முதல் நபராக உள்ள தலைமை சிவாச்சாரியாருக்கு உதவிடவே. அதாவது அவரது நோக்கம் அறிந்து செயல்படுபவர்கள். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள்.தலைமை சிவாச்சாரியாருக்கு இவர்கள் அங்கம்.

இப்படியாக ஆலய பூஜை கட்டமைப்பு உள்ளது. இதில் எப்படி எல்லா அர்ச்சகர்களும், எல்லா நேரங்களும் இருக்கமுடியும்...

கலெக்டர், Dro, rdo தாசில்தார் என ரேங்க் உள்ளது அல்லவா?

தாசில்தார் இருக்கும் நேரத்தில் அவ்விடம் கலெக்டர் இருக்கமுடியுமா?

பொதுவாகவே என்று அர்ச்சகர்கள் #ஊழியமானியங்களை விட்டுக்கொடுத்து, கையெழுத்திட்டு ஒரு ரூபாய் சம்பளமாவது பெற ஆரம்பித்தார்களோ, அன்றே கோயில்களில் அர்ச்சகர்களின் கம்பீரம், உரிமை, கௌரவம் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டது.

பலமுறை கூறியுள்ளேன் சம்பளம் வாங்குவது மாபெரும் தவறு. அதற்க்கு பதில் அவர்களது ஊழியநிலங்களை மீட்டுத்தரவே நம்மோர் போராடவேண்டும். துணை நிற்க்கவேண்டும்.

காரணம், ஆலய சிவாச்சாரியார்கள் ,சுய ஆச்சார்ய புருஷர்கள். இவர்களுக்கென தனிமடமோ, வேறு இடத்தில் தீக்ஷை வாங்குவது, வேறு சந்நியாசிகளை வணங்குவது என அனைத்தும் விலக்கப்பட்டது.

இவர்களுக்கு தாங்கள் பூஜிக்கும் ஸ்வாமியே முதற்தெய்வம். தனது தந்தை அல்லது தனது மரபில் வந்த உத்தம ஆச்சார்யரே குருநாதர்.

இவர்கள் தங்கள் சம்பிரதாய விசயங்களில், பூஜை விசயங்களில் எவருக்கும் கட்டுப்பட்டு இருக்கவேண்டியதில்லை.

கோயில் நிர்வாகம் என்பது தனி.

இப்படியான இவர்களின் கம்பீர சுயத்துவத்தை உடைக்கவே, பல காலமாக முயற்ச்சிக்கப்பட்டது.

1) முதலில் தலைமை சிவாச்சாரியார் என்ற நிலை அழிக்கப்பட்டு, பீடம், கொடை, தீவட்டி ஆகியன பறிக்கப்பட்டது.

2) இவர்களுக்கான ஊழிய நிலைங்கள் பறிக்கப்பட்டு, மாயவார்த்தைகள் பல கூறி ஒரு ரூபாய் சம்பளமாவது வழங்கப்பட்டு, கையெப்பம் இடவைத்தை நீ எனக்கு அடிமை என அறிவுறுத்தப்பட்டது.

3) இவர்களுக்கான குரு காணிக்கை நிறுத்தப்பட்டு, அதன்வழி இவர்கள் வாழ்வாதாரத்தை போராட்டமாக்கி, ஒற்றை வேஷ்டிக்கு அலையவிட்டு, அதனால் இவர்களுக்குள்ளையே கலகம், சண்டை என்ற பிரித்தாளும் சூழ்ச்சி செய்து, பிழைக்க இவர்கள் பணம் என வாய் திறந்து கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டது..

4) அர்ச்சககுடிகளாகிய சிவாச்சாரியார், பட்டாச்சாரியார் தனித்துவ அடையாளத்தை, சிறுக சிறுக ஊடுருவி அழித்தது, வரலாற்றை திரித்தது பரப்பியது என,

பசுவின் நான்கு கால்களை ஒடைப்பது போல் ,இவர்களை நிலையை உடைத்து,

இன்று தன் வரலாறும் தெரியாமல், தன் சுயத்துவமும் உணராமல், கம்பீரத்தை காட்டவும் முடியாமல் பலரது ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகியும், அதையும் கடந்துபோகும் ஒரு மறத்து போன நிலைக்கு வந்துவிட்டார்கள்.

இன்றைய நிலையில் இவையெல்லாம் பழங்கதையே. பேசி பிரயோஜனம் இல்லை.

தலைக்கு மேல் வெள்ளம் என நிலை....

இருந்தாலும் ஒரு சிலராவது கோயில்களில் அர்ச்சகர் நிலை ஒரு காலத்தில் எவ்வாறு இருந்தது என தெரிந்துகொள்ளட்டும்.

இனி வரும்காலத்தில் அர்ச்சகர்கள் ஒற்றைத்தலைமை, ஒற்றை சிவாச்சாரியார் மடம் கீழ், என ஒருங்கினைந்தால்தான் வரும் காலத்தை ஓரளவேனும் சமாளிக்கமுடியும்.

சிவார்ப்பணம்.

நன்றி  தில்லை கார்த்திகேயசிவம்.