தைராய்டு பற்றிய தகவல்கள் ..!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:52 AM | Best Blogger Tips

தைராய்டு சுரப்பி எங்குள்ளது அதன் பணிகள் என்ன?


கழுத்துப்பகுதியில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளுள் ஒன்று. இது அதிகம் அல்லது குறைந்து வேலை செய்தால் சிக்கல்தான். இதிலிருந்து சுரக்கிற தைராக்ஸின் என்ற ஹார்மோன் நீர் நமது உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கிறது. ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறவும் இதுதான் உதவுகிறது.

தைராய்டு நோய்க்கு என்ன காரணம்?

நிறைய காரணங்கள் இருக்கிறது. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாகின்றன. நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்த நோய் இருந்தால் அதுவும் நம்மைத் தொடர்ந்து தாக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வதுபோல இதையும் பரிசோதித்து தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இளம் வயதில் புற்றுநோய் தாக்கி கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்தால் நாளடைவில் தைராய்டு பாதிப்புகள் வரலாம். குறிப்பாக நம் உணவில் அயோடின் குறைவைக்கூட ஒரு காரணமாகச் சொல்லலாம்.

காரணமில்லாமல் கோபம் வருவது ஏன் டாக்டர்? அதற்கும் தைராய்டு பாதிப்பிற்கும் என்ன தொடர்பு?

ஹைபர் தைராய்டு என்கின்ற தைராய்டு அதிகமாக சுரப்பதால்தான் காரணம் இல்லாத கோபம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தைராய்டுக்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயை குணப்படுத்தி விடலாம்.

தைராய்டு பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தானே?

தைராய்டு பிரச்சினை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் அதிக அளவில் பெண்களுக்கே வரும். சிறுமி முதல் மூதாட்டி வரை வர வாய்ப்புண்டு. தைராய்டு பாதிப்பிற்கு இதுதான் காரணமென்று துல்லியமாக இதுவரை கண்டறியப் படவில்லை. எனினும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருப்பது, பரம்பரையாக வருவது, சிலவகை தொற்று நோய் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பெண்கள் மட்டும் இந்தப் பாதிப்பு அதிகம் தாக்க அவர்களின் உடல் அமைப்பும் பெண்களுக்கு மட்டும் சுரக்கின்ற பிரத்தியேகமான சில ஹார்மோன்கள்தான் காரணம்.

தைராய்டு சுரப்பி குறைபாடுகளினால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்?

தைராய்டு சுரப்பியில் இரண்டு வகையான குறைபாடுகள் ஏற்படலாம்.

1. குறைவாக தைராய்டு சுரப்பது. இதற்கு ஹைபோ தைராய்டு என்று பெயர்.
2. அதிகமாக தைராய்டு சுரப்பது இதற்கு ஹைபர் தைராய்டு என்று பெயர்.

ஹைபோ தைராய்டு காரணமாக காய்ட்டர் என்றழைக்கப்படுகின்ற வீக்கம் ஏற்படும். முடி கொட்டுதல், பசியின்மை, எடை அதிகரித்தல், கர்ப்பம் தரிக்க முடியாமை, உடலில் அசாத்தியமான சோர்வு, அசதி, மந்த நிலை போன்றவை இருக்கும்.

ஹைபர் தைராய்டு காரணமாக படபடப்பு, நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். கை காலில் நடுக்கம், டயரியா, லூஸ் மோஷன், மாதவிலக்கு தொந்தரவு, கால் வீக்கம், ஞாபக சக்தி குறைதல், கடுமையான பசி, கோபம் வருதல், முடி கொட்டுதல், கர்ப்பம் தரிக்க முடியாமை, அளவிற்கு அதிகமான உடம்பு வலி போன்றவை இருக்கும். இரண்டு வகை தைராய்டு கோளாறுகளில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற குறைபாடுதான் மிக அதிக அளவில் மக்களிடம் உள்ளது.

உணவில் உள்ள உப்பிற்கும் தைராய்டு குறைபாட்டிற்கும் என்ன தொடர்பு?

பொதுவாக நம் நாட்டில் மலை அடிவாரம், கடல் இல்லாத பகுதிகளில் உள்ள தண்ணீரில் உணவில் உள்ள உப்பில் அயோடைஸ்டு குறைவாகத்தான் இருக்கும். எனவே இப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அதிக அளவில் தைராய்டு பாதிப்பு வர வாய்ப்புண்டு. இதனை கருத்தில் கொண்டுதான் இந்திய அரசாங்கம் எல்லா இடங்களிலும் அயோடைஸ்டு கலந்த உப்பு விநியோகிக்க ஏற்பாடு செய்தது. இன்றைக்கு கடைகளில் விற்கப்படுகின்ற அனைத்து உப்புகளும் அயோடைஸ்டு கலந்த உப்புதான்.

தைராய்டு பாதிப்பிற்கு என்ன மாதிரியான சிகிச்சைகளை செய்கிறீர்கள்?

குறை தைராய்டு (ஹைபோ) பிரச்சினைக்கு பரிசோதனை முடிவினை பார்த்து மருந்து, மாத்திரை மூலமாகவே குணப்படுத்தி விடலாம். எந்த நிலையிலும் இதற்கு இதுதான் சிகிச்சை. அதிக தைராய்டு (ஹைபர்) பிரச்சினைக்கு மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.

1. மருந்து மாத்திரைகள் மூலமாக குணப்படுத்துவது, 2. அணுக்கதிர் தன்மை கொண்ட சொட்டு மருந்து, 3. அறுவை சிகிச்சை. தைராய்டு அதிகமாக சுரக்கின்ற நோயாளிக்கு மருந்து மாத்திரையே நிரந்தரமான தீர்வாக அமையாது. 6 முதல் 12 மாதம் வரை மருந்து சாப்பிட்டு பார்த்து குணமாகவில்லை என்றால் அணுத்தன்மை உள்ள சொட்டு மருந்தோ அல்லது அறுவை சிகிச்சையோ செய்து குணப்படுத்தி விடலாம்.

அணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சை பற்றி சொல்லுங்களேன்?

இன்று வேகமாக வளர்ந்து வரும் அணுக்கதிர் மருத்துவத்தில் இத்தகைய தைராய்டு பாதிப்புகளை கண்டுபிடிப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் ஐசோடோப் எனப்படும் அணுக்கதிர் மருந்து உபயோகிக்கப்படுகிறது. கதிர் இயக்கத் தன்மை உடைய இந்த மருந்தை நோயாளிக்கு வாய் வழியாகவோ அல்லது ஊசி வழியாகவோ செலுத்தப்படும். உடலில் எல்லா உறுப்புகளிலும் ஏற்படும் புற்றுநோய்களையும் குறிப்பாக மூளை, கல்லீரல், சிறுநீரகம், தைராய்டு ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களை கண்டுபிடிக்க முடியும். இந்த மருந்து பாபா அணுக்கதிர் ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப் பட்டு இந்தியா முழுதும் அனுப்பப் படுகிறது. கழுத்தில் ஏதேனும் கட்டி இருந்தால் குழந்தைகள் படிப்பிலும், வளர்ச்சியிலும் மந்தமாக காணப் பட்டால், சுரப்பிகளில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.

இந்த அணுக்கதிர் சொட்டு மருந்து சிகிச்சையினை பெற்ற நோயாளி அன்றைக்கே வீட்டுக்குப் போய்விடலாம். மருத்துவமனையில் தங்க வேண்டாம். ரத்த இழப்பும் இருக்காது. நோகாமல் தைராய்டு நோயை அகற்றுகின்ற அற்புதமான அதிநவீன மருத்துவம் இது.

சில குழந்தைகள் மந்தமாக இருப்பதற்கு தைராய்டு பாதிப்பு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே?

பெரும்பாலும் குழந்தைகளுக்கு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற பாதிப்புதான் வரும். பொதுவாக தாயின் வயிற்றில் கரு உண்டானதிலிருந்து பிறந்து 3 வயது வரைக்கும் மூளை வளர்ச்சியின் வேகம் அதிகமாகவே இருக்கும்.

இந்த மூளை வளர்ச்சி நிலையில் குறை தைராய்டு (ஹைபோ) இருந்து அதனை கண்டுகொள்ளாமல் எந்தவிதமான சிகிச்சையும் எடுக்காமல் விட்டு விட்டால் குழந்தையின் அறிவுத்திறன், அறிவு நுட்பம் (ஐக்யூ) குறைந்து விடும்.

படிப்பு, நடப்பது, பேசுவது, எழுதுவது, நடை, உடை, பாவனை அனைத்திலும் அந்தக் குழந்தை மிக மிக மந்தமாகிவிடும். இதுபோன்று ஒரு குழந்தை மந்த நிலையில் இருந்தால் ஒரு தைராய்டு ஹார்மோன் பிளட் டெஸ்டை செய்தால் தெரிந்து விடும். அப்போதே அலட்சியப்படுத்தாமல் குழந்தைக்குச் கிகிச்சை அளித்தால் பூரணமாக குணப்படுத்தி மந்த நிலையை போக்கி விடலாம்.

தைராய்டில் புற்றுநோய் வருமா?

தைராய்டு சுரப்பியிலே புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்.

1. தைராய்டு சுரப்பி வீங்கி விடும்.
2. குரலில் மாற்றம் ஏற்படும்.
3. கழுத்து புறங்களில் சின்னச் சின்ன வீக்கமாக ஏற்படும்.
4. தைராய்டு பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருப்பது போன்றவை ஆகும்.

பெரும்பான்மையான தைராய்டு புற்று நோயை ஆபரேஷனுக்குப் பிறகு அணுக்கதிர் சொட்டு மருந்தினை கொடுத்தே குணப்படுத்தி விடலாம்

கேன்சரை கட்டு படுத்தும் கடு அத்தா பழம் பற்றிய தகவல் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:51 AM | Best Blogger Tips

இந்த பழம் பெரும் அளவு நமது அண்டை நாடான ஸ்ரீ லங்காவில் கிடைகிறது !!! (Sour sop fruit )


...
நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்' என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.

பல வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது பெரும்பாலான உறுப்புகளை தாக்குவதாக உள்ளது. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.

புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் இயற்கையான உணவுப் பொருட்களிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் கொடுத்துள்ளான். அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்த புற்றுநோய் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.

சகோதர நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில் கேரளாவிலும் "ஆத்தச்சக்கா" (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை.

இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது. அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.



இதன் பலனை அனைவரும் அடைந்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில், என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை: "காட்டு ஆத்தா" (சில வட்டாரங்களில் "அன்னமுன்னா பழம்" அல்லது "அண்ணவண்ணா பழம்" என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)
ஆங்கிலம்: "Soursop", "Prickly Custard Apple", "Soursapi"
மலையாளம்: "Aatha Chakka"
பிரெஞ்ச்: "Corossol", "Cachiman Epineux"
அரபி: "سورسوب"
ஸ்பானிஷ்: "Guanábana ", "Anona"
ஜெர்மன்: "Sauersack", "Stachelannone", "Flashendaum"
இந்தோனேஷியா: "Sirsak" & "nangka landak"
பிரேசில்: "Graviola"
மலேஷியா: "Durian Belanda"
கிழக்கு மலேஷியா: "Lampun"
தென் வியட்நாம்: "Mãng cầu Xiêm"
வட வியட்நாம்: "Quả Na"
கம்போடியா: "Tearb Barung" ("Western Custard-apple fruit")
போர்த்துகல்: "Curassol", "GraviolaSee

பிபி-யை கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:50 AM | Best Blogger Tips
இன்றைய அவசர காலத்தில் விரைவிலேயேஅனைவருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு முதற்காரணம், சுவைக்காக உணவில் அதிகமான அளவு உப்பை சேர்க்கின்றனர். ஏனெனில் உப்பில் சோடியம் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பொருள் உடலில் அதிகம் சேர்வதால், இரத்தத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் இரத்த அழுத்தம் இருக்கும் போது, மேலும் மேலும் உப்பை சேர்த்தால், உடல் மற்றும் உயிருக்கு தான் பாதிப்பு ஏற்படும். அதிலும் தற்போது உடலில் எல்லா நோய்களுமே அழையா விருந்தாளிகளைப் போல வந்துவிடுகிறது. அதில் முதலில் வருவது தான் இரத்த அழுத்தம்.

பிபி-யை கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள்!!!1/6

எலுமிச்சை

உணவின் சுவையை கூட்டுவதில் சிறந்த பொருள் தான் எலுமிச்சை. இந்த எலுமிச்சை உப்பு சுவையோடு இருக்காது. ஆனால் அதில் உள்ள புளிப்புத்தன்மை உப்பு சுவையை மறக்க வைக்கும். அதிலும் வீட்டில் செய்யும் சாலட், உணவுகளில் அதிகமாக உப்பை சேர்க்காமல், அதில் எலுமிச்சை சாற்றை பிளிந்து சாப்பிட்டால், நன்கு சுவையோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

எனவே சோடியம் அதிகம் உள்ள உப்பை பயன்படுத்துவதை விட, ஒரு சில உப்பை சுவையை மறக்க வைக்கும் உணவுப் பொருட்களை சமையலில் பயன்படுத்தலாம். இப்போது எந்த பொருளை சமைக்கும் போதோ, சாப்பிடும் போதோ எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போமா!!!

* மிளகுத்தூள் - மிளகு உணவுக்கு மிகவும் சுவையை அதிகமூட்டும் பொருட்களில் ஒன்று. இந்த மிளகை அரைத்து, பொடி செய்து உண்ணும் உணவுகளில் சேர்த்து வந்தால், அதன் சுவைக்கும் மணத்திற்கும், உப்பு பற்றிய எண்ணமே இல்லாமல் போய்விடும். ஆகவே எப்போது உணவில் சுவை, காரம் குறைவாக இருந்தாலும், அப்போது மிளகுத்தூளை தூவி சாப்பிடலாம்.

* எலுமிச்சை - உணவின் சுவையை கூட்டுவதில் சிறந்த பொருள் தான் எலுமிச்சை. இந்த எலுமிச்சை உப்பு சுவையோடு இருக்காது. ஆனால் அதில் உள்ள புளிப்புத்தன்மை உப்பு சுவையை மறக்க வைக்கும். அதிலும் வீட்டில் செய்யும் சாலட், உணவுகளில் அதிகமாக உப்பை சேர்க்காமல், அதில் எலுமிச்சை சாற்றை பிளிந்து சாப்பிட்டால், நன்கு சுவையோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

* சோயா சாஸ் - அனைவரும் சோயா சாஸில் அதிகமாக சோடியம் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏனெனில் சோயா சாஸில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று அதிக சோடியம் இருப்பது, மற்றொன்று குறைந்த சோடியம் இருப்பது. ஆனால் உண்மையில் சோயா சாஸ் ஒருவிதத்தில் சுத்தமான உப்பு வகையை சேர்ந்தது. அதனால் தான், ஒரு சில உணவுகளில் உப்பிற்கு பதிலாக சோயா சாஸை பயன்படுத்துகிறார்கள். அதிலும் தற்போது கடைகளில் குறைவாக சோடியம் இருக்கும் சோயா சாஸ்களும் விற்கப்படுகிறது. ஆகவே அதிக இரத்த அழுத்தம் இருப்பவர்கள், இத்தகைய சோயா சாஸை பயன்படுத்துவது சிறந்தது.

* பூண்டுப் பொடி - கடைகளில் பூண்டு பவுடரை வாங்கியும் பயன்படுத்தலாம், அல்லது பூண்டை வாங்கி அதனை வறுத்து, அரைத்தும் பயன்படுத்தலாம். ஏனெனில் இந்த பவுடர் உணவில் நல்ல சுவை மற்றும் மணத்தை தருகிறது. இது ஒரு சிறந்த உப்பை உணவில் சேர்க்காமல், சுவையைக் கூட்டும் பொருள்.

* சாட் மசாலா - இந்த மசாலாவில் அனைத்து வகையான காரமான சுவைகளும் கலந்திருக்கும். இதனை பொதுவாக சாட்ஸ் உணவுகளான பானி பூரி, பேல் பூரி போன்றவற்றிகலும் மற்றும் சாலட்டிலும் கலந்து சாப்பிடுவார்கள். வேண்டுமென்றால் இதனை வீட்டில் சமைக்கும் உணவுகளில் கலந்து சமைத்து சாப்பிட்டால், உப்பு போடாமலேயே உப்பு போட்ட சுவை கிடைக்கும். ஆனால் உண்மையில் இதில் உப்பு இல்லை.

* வினிகர் - சாப்பிடும் சாலட் மற்றும் சூப்பில் உப்பை சேர்ப்பதற்கு பதிலாக, சிறிது வினிகரை தெளித்தால், அந்த உணவுப் பொருள் மிகவும் அருமையான சுவையில் இருக்கும். முக்கியமாக வினிகர் வாங்கும் போது, உப்பில்லாத வினிகரை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

மேற்கூறியவற்றையெல்லாம் உண்ணும் உணவுகளில் உப்பிற்கு பதிலாக சேர்த்து வந்தால், உப்பின் சுவை கிடைப்பதோடு, உணவும் சுவையானதாக இருக்கும்.