பெண் பிள்ளையை வைத்திருக்கும் பெற்றோர்களின் கவனத்திற்கு...🤔

மணக்கால் அய்யம்பேட்டை | 12:03 PM | Best Blogger Tips

May be an image of one or more people and people smiling 
------------------------------------
புடவை எப்படி கட்டுறதுன்னு சொல்லி குடுங்க.
செல்லம் குடுக்குறேன்னு சொல்லி ஒன்னும் சொல்லி தரதில்லை. 
 kids saree kattuvathu eppadi in tamil |how to drape perfect saree for kids  |kids sarees style #saree - YouTube
எவ்வளவு நாள் தான் சுடிதார் போட்டுக்கிட்டே சுத்துவாங்க. 
 
பொண்ணுங்களுக்கு புடவை கட்ட தெரியாதுன்னு ஊருக்கே தெரிஞ்சிருக்கு. 
 
அதான் இப்போலாம் ரெடிமேடாவே புடவை வந்துட்டு. ரெண்டு சுத்து சுத்திக்கிட்டா போதும்.
• சமைக்க கத்து குடுங்க. 
 மண் சொப்பு சாமான்கள் குழந்தைகளுக்கு
சமைக்க தெரியாதுன்னு சொல்லுறதை ஏதோ பெருமையா நினைக்குறாங்க
இந்த காலத்து பெண்கள். 
 
ஆயகலைகளில் சமையலும் ஒரு கலைங்க.
எப்படி நடனம் ஆட தெரியும், பாட தெரியும்ன்னு சொல்லுறது பெருமையோ
அதே மாதிரி சமைக்க தெரியும்னு சொல்லுறதும் பெருமையே.
 
• ஆண்களே எல்லாம் செய்யணும்.
 
நான் அப்படி ஒரு மாப்பிள்ளையை திருமணம் செஞ்சிக்குறேன்னு 
 
பேக்கேஜ்ஜாக எல்லா தகுதியும் உடைய ஒருவன் வேணும்னு எதிர்ப்பாக்குறதை ஆதரிக்காதீங்க.
• கஷ்டம்னா என்னன்னு சொல்லி குடுங்க. 
 ♥️♥️♥️🌹பாடல்கள் பலவிதம்🌹♥️♥️♥️ | Facebook
பிரச்சனைகள் வந்தா எப்படி எதிர் கொள்ளணும்னு சொல்லி குடுங்க. 
 
சில வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு மட்டும் ஓவர் செல்லம் குடுப்பாங்க. 
 
எதுவும் தெரியாமல் வளர்த்துடுவாங்க.
அதற்கான பலனை அந்த பெண் பின்னாடி அனுபவிக்கணும்.
 
• உங்க பெண்ணை திருமணம் செய்து குடுத்த உடன் உங்கள் கடமை முடியவில்லை. 
 
அதற்கு பிறகு தான் உங்கள் ஆதரவு அந்த பெண்ணுக்கு அதிகம் தேவை.
 
• அடம் பிடிச்சி காரியம் சாதிக்குறது, அழுது காரியம் சாதிப்பது முக்கியமா பெண் குழந்தையை இப்படி வளர்க்காதீங்க.
 
• கல்யாணத்துக்கு பிறகு எல்லாம் பண்ணிக்கோன்னு பெண் பிள்ளைகளுக்கு சமாதானம் சொல்லாதீங்க. 
 
அதுக்கு முடியாதுன்னு நேரடியாவே சொல்லிடலாம்.
 
• சிறகுகளை உடைக்காதீங்க.
பறக்க விடுங்க. 
மணக்கால் அய்யம்பேட்டை : பெண் பிள்ளையை வைத்திருக்கும் பெற்றோர்களின் 
 
கூண்டுக்கிளிகளாக வளர்க்காதீங்க.
 
• பெண் குழந்தைகளுக்கு தவறான ஆணின் பார்வை எப்படி இருக்கும்னு சொல்லி தரும் போது
அப்படியே எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லைன்னும் சொல்லி தாங்க. 
 
ஆண்களையும் மதிக்க கத்து தாங்க.
 Respect Woman Tamil | TikTok
• பெண்ணை பூமியுடன் ஒப்பிடுவார்கள்
அவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டும் என்று.
 
ஆனால் எல்லா சமயத்திலும் பொறுமையாக இருக்க சொல்லி தராதீங்க.
 
எல்லாத்தையும் பொறுத்துக்கோ
ஏன்னா நீ பெண் என்று காரணம் சொல்லாதீர்கள்.
நீச்சல், தையல், கணினி, வாகன ஓட்டுனர் பயிச்சி சொல்லிக்கொடுங்கள்.
 International Day of the Girl: Riding to independence on scooters - UPI.com
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையான வழிமுறைகளை சொல்லிக்கொடுங்கள்.
 
தன்னம்பிக்கை தைரியத்தை சொல்லிக்கொடுங்கள்.
 5 Ways To Become A Confident And Attractive Woman! | Herzindagi
கோழையாக வளர்க்காதீர்கள்.
பெரியோர்களையும் நல்லவர்களையும் மதித்து நடக்கவும் ஆன்மீக ஈடுபாட்டையும் கற்றுகொடுங்கள்.
 
குழந்தை வளர்ப்பு சொல்லிக்கொடுங்கள்.
வீட்டில் இருந்தே சிறுசிறு சுயதொழில் குறைந்த முதலீட்டில் செய்து வருமானம் ஈட்ட முடியும் என்று சொல்லிக்கொடுங்கள்.
 
வாய்ப்பு இருப்பவர்கள் இசை நடனம் சொல்லிக்கொடுங்கள்.
 இலவசமாக தற்காப்புக் கலை பயிற்சி: 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு  சொல்லித் தந்த விஜயலட்சுமி - BBC News தமிழ்
அப்படியே தற்காப்பு கலையும் சொல்லிக்கொடுங்கள். (அந்த காலத்தில் முறத்தால் புலியவே விரட்டிய வீரதமிழச்சி பரம்பரையாக்கும்)
 
என்றென்றும் அன்புடன்...
சுந்தர்ஜி
பகிர்வு...✍️

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷