
இன்றைய அரசியல்வாதிகளிடமிருந்து எப்படியெல்லாம் வேறு படுகிறார் பாருங்கள் பெருந்தலைவர் காமராஜர்...
கோட்டையில் காமராஜரை சந்தித்து விட்டு வெளியே வந்த அந்த நிருபருக்கு அழுது கொண்டே நின்றிருந்த அந்த மாணவனை காண நேர்ந்தது. என்ன விசயம் ஏன் அழுகிறாய் என்று கேட்டதற்கு காரணத்தை கூறியபடி மேலும் அழுதான் அந்த மாணவன்..
காரணத்தை கேட்டறிந்த அந்த நிருபர் அவனை அழைத்துக் கொண்டு முதலமைச்சர் அறைக்குள் சென்றார். அழுது கொண்டு நிற்கும் மாணவனை கண்டு பதறிபடி காமராஜரும் என்ன விஷயம்,

எந்த ஊர், என்ன படிக்கிற, என மூன்று கேள்வியை கேட்டு விட்டு அவனை உற்று பார்த்தார். மாணவன் கேவி கேவி அழுதானே தவிர அவனிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை.. மீண்டும் காமராஜர் அவனிடம் ஆறுதலாக எதுவானாலும் அழுகாமல் சொல்லு நான் இருக்கிறேன் என அவனை அருகில் அழைத்து தட்டிக் கொடுத்தார்...
உடனே அந்த நிருபர், ஐயா படிப்பில் சிறந்த இந்த மாணவன் கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதி ஆண்டு பட்ட படிப்பு படிக்கிறான். பிற்பட்டோர் உதவி தொகை Scholarship பெறும் மாணவன், தற்போது இறுதி தேர்வு நடக்க போகிறது நுழைவு சீட்டும் Hall Ticket கல்லூரிக்கு வந்து விட்டது. இப்போது பார்த்து இவன் பிற்பட்ட வகுப்பு என்பதை சரியானபடி பார்க்காது இது நாள்வரை உதவி தொகை வழக்கப்பட்டு விட்டதாகவும் இனி இயலாது..
மேலும் கொடுத்த உதவி தொகையை திரும்ப கட்டவேண்டும் என கல்லூரிக்கு கடிதம் வந்துள்ளதால் மாணவனுக்கு தேர்வு எழுத அனுமதி மறுத்து Hall Ticket தர மறுக்கிறார்கள் என்றார்.
இதை கேட்டதும் சினம் கொண்ட முதல்வரும் இது என்ன அநியாயம் என விசனப்பட்டு, உடனே சம்மந்த பட்ட அதிகாரியை போனில் கூப்பிட்டு உடனே வரசொல்லி சத்தமிட்டார்... வந்த அதிகாரியும் நடந்த தவறை விளக்கி சொல்லி இந்த பையன் சாதி பிற்பட்டோர் பட்டியலில் இல்லை படிப்பு கட்டண உதவி தொகை கொடுக்க வழியில்லை என தன்நிலையை எடுத்துரைத்தார்.
உடனே காமராஜரும் சட்டப்படி முடியாதுன்னு சொல்லுறீங்க.. முதலில் எந்த சட்டத்தை வைத்து உதவி தொகை கொடுத்தீங்க.. மாணவன் படிப்போடு விளையாடுவது எந்த விதத்தில் நியாயம் என அதிகாரியை கடுமையாக சாடினார்.
அதிகாரியும் சாதியில் உள்ள எழுத்து பிழை, ஆதாலால் பிற்பட்ட வகுப்புன்னு தப்பா நினைச்சு கொடுக்க பட்டுள்ளது... இப்பதான் தப்பை கண்டு பிடித்தோம் என்றார்...
உடனே காமராஜர், தப்பை செய்தது நீங்க தண்டிக்க படுவது மாணவனின் படிப்பா.. மாணவனின் எதிர்காலம் என்னவாகும் என கொஞ்சமாவது யோசிச்சுங்களா என கேட்டார்... இது போல இன்னும் எத்தனை மாணவர்கள் பாதிக்க பட்டுள்ளார்கள்... அத்தனை பேர்களுக்கும் உடனடியாக உதவி தொகை வழங்கி ஹால்டிக்கட் கொடுக்க விரைவில் ஏற்பாடு பண்ணுங்க.. நீங்க செய்த தப்பை எண்ணி கவலைப்படாதீங்க.. CM யின் Oral Order படி உதவித்தொகை தொடரட்டும்...
பைல் அனுப்புங்க முன்தேதியிட்டு உதவி தொகை கொடுக்க கையெழுத்து போடுறேன் என்று கூறி அதிகாரியை அனுப்பி வைத்தார்.
இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த மாணவன் கண்ணில் அழுகைக்கு பதிலாக ஆனந்த கண்ணீர் வழிந்தது... அதை கண்ட முதலமைச்சர் காமராஜர், தம்பி கவலைப்படாமல் போய் கல்லூரில் ஹால்டிக்கட் வாங்கிக்க நல்லா தேர்வு எழுதி அதிகமதிப்பெண் பெற்று பாஸாகனும் என கூறி அந்த மாணவனை அனுப்பி வைத்தார்...
அதிகாரியை தண்டிக்காமலும் பாதிக்கபட்ட மாணவனுக்கு உதவி செய்தும் முதலமைச்சருக்குரிய உரிமையை பயன்படுத்தி மாணவன் வாழ்க்கையில் விளக்கெற்றி வைத்த காமராஜரை கல்வி கண் கொடுத்தவர் என கூறுவதும் இதனால்தான்...
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷

.jpeg)