
மனித
வாழ்க்கையின்
மிக வலிகள்
நிறைந்த பருவம்
— முதுமை…
அந்தக்
காலத்தில்,
பொருள்
செல்வங்களோ,
புகழோ அல்ல…

ஒரு அன்பான
விசாரணை,
ஒரு
நெருக்கமான
கைப்பிடித்தல்,
ஒரு “எப்படி
இருக்கிறீர்கள்?”
என்ற
வார்த்தைகள் தான் மனதை
உயிர்ப்பிக்கும்…
இறுதி
ஊர்வலத்தில்
எத்தனை பேர்
வந்தார்கள்
என்பது
முக்கியமல்ல…
ஆனால்,
உயிரோடு
இருக்கும்
காலத்தில்,

நண்பர்களும்
உறவுகளும்
வந்து சந்தித்து
மகிழ்விப்பது தான்
உண்மையான நேசம்…
பெற்றோரை
பராமரிக்கும்
மனமுடைய
பிள்ளைகள்
கிடைப்பது
ஒரு வரம்…
வயதாகும் போது,
அவர்களுக்கு
தேவைப்படுவது
மருந்துகளைக்
காட்டிலும் ,
அன்பும்
அரவணைப்பும் தான்…


இறந்த பின் யார்
வந்தால் என்ன?
வராவிட்டால் என்ன?
சென்று போனவர்
திரும்பி வந்து
பார்ப்பதில்லை…
ஆனால்,
உயிரோடு
இருக்கும்
நாள்களில்
சக மனிதனை
மதித்து,
உறவுகளை
பேணி,
பெற்றோரை
காத்து
வாழும் மனிதனே
உண்மையில்
பேறுபெற்றவன்…
இறப்பு என்பது
இன்னும்
விளங்காத மர்மம்…
ஆனால்
ஒரு நிதர்சன
உண்மை
என்னவென்றால் —
உயிர்
பிரிந்த பின்,
அந்த உடலுக்கு
எதுவும்
தேவையில்லை…
ஆகவே,
வாழும்
நாள்களை
அன்பால்
நிரப்புவோம்…

மனிதர்களை
மதித்து
வாழுவோம்…
மகிழ்ச்சியை
பகிர்ந்து வாழுவோம்…
உலகை விட்டு
செல்லும்
நாளில்,
“நன்றாக வாழ்ந்தோம்”
என்ற
மன நிறைவே

மனித
வாழ்க்கையின்
முழுமை… 

🙏🌹 நன்றி இணையம் 🌹🙏

