நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:13 PM | Best Blogger Tips


சப்மெரைன் என்று சொல்லப்படும் நீர்மூழ்கிக் கப்பல் தண்ணீரின் மேல் மிதந்து செல்லவும், அதேசமயம் தண்ணீரின் அடியிலும் கடலின் ஆழமானப் பகுதிகளிலும் பயணம் செய்யும் தன்மையுடைய கப்பலாகும்.

நீர்மூழ்கிக் கப்பல்கள் அதிக அளவில் இராணுவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அதைத் தவிர சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் கடல் ஆராய்ச்சி மற்றும் கடலினுள் போடப்பட்டுள்ள எண்ணெய் குழாய்கள் பராமரிப்பு போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு முன்னோடியாக 1776 - ஆம் ஆண்டு டேவிட் புஷ்நெல் (David Bush nell)என்பவர் டர்டில் (turtle) எனும் நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கினார். இது நீர் உட்புகாதவாறு மரத்தால் செய்யப்பட்டிருந்தது. இந்த கப்பலின் வடிவம் ஆமைத் தோட்டின் வடிவத்தை ஒத்திருந்தது. இந்த கப்பல் இயங்குவதற்கு தேவையான ஆற்றல் காலால் உந்தப்பட்டு பெறப்பட்டது. மேலும், இதில் ஒரு துடுப்பும் பயன்படுத்தப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பால்டன் என்பவர் தண்ணீரின் மேலும்,கீழுமாக பயணம் செய்யும் சப்மெரினைக் கண்டுபிடித்தார். 1798 - ஆம் ஆண்டு அவர் NAUTILUS என்ற சப்மெரைனை உருவாக்கினார்.

அதன் பின்னர் 1864 - ஆம் ஆண்டில் ஹன்லி (Hunley) எனும் பெயருடைய இரும்பினால் ஆன நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டது. இதுவும் மனித ஆற்றலாலே இயங்க கூடியதாக அமைக்கப்பட்டது.

1880 - ஆம் ஆண்டு வில்லியம் ஹார்ட் நீராவி இயந்திரத்தால் செயல்படும் சப்மெரைனைக் கண்டறிந்தார். இதில் ஆவிவெளியேற ஒரு குழாய் இருந்தது. அதை மேலே தூக்கவும், தாழ்த்தவும் வசதி இருந்தது.

1890 ல் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் சப்மெரைன் தயாரிப்பில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தன. 1904 - ல் டீசல் எஞ்சினை பயன்படுத்தி முதன் முதலாக பிரான்ஸ் AIGETTE என்ற சப்மெரைனை உருவாக்கியது.

பின்னர் 1901 - ஆம் ஆண்டு ஹோலேண்ட் (Holland - VI) எனும் நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டது. இது பெட்ரோல் மற்றும் மின்னாற்றல் மூலம் இயங்கியது. அதன் பிறகு 53 ஆண்டுகள் கழித்து முதல் முதலாக அணுஆற்றல் மூலம் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட அந்த கப்பலின் பெயர் US Nautilus ஆகும்.

அணுசக்தியைப் பயன்படுத்தி இயங்கும் சப்மெரைனை இன்று அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகள் இயக்குகின்றன. முதன் முதலில் இந்தியா அணுசக்தியால் இயங்கும் சப்மெரைன் INS Chakra வை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது. பிறகு INS Salk என்ற சப்மெரைனை இந்தியா உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொண்டது.

1986 - ஆம் ஆண்டு அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட (US Alvin)ஆல்வின் எனும் நீர்மூழ்கிக் கப்பல் ஆழ்கடலில் சென்று உடைந்த டைட்டானிக் கப்பலை புகைப்படம் எடுத்தது.

நீர்மூழ்கிக் கப்பல் நீரினுள் மூழ்குவதற்கும் நீரின் மேல் மட்டத்திற்கு வருவதற்கும் பிரத்தியேகமான அமைப்புகள் உள்ளன. கப்பலினைச் சுற்றியுள்ள அறையில் நீர் இல்லாதபோது நீர்மூழ்கிக் கப்பலானது நீரின் மேல் மட்டத்தில் இருக்கும்.

நீர்மூழ்கிக் கப்பலானது நீரினுள் மூழ்கவேண்டுமெனில் வால்வுகள்A,B,C,D யானது திறக்கப்படுகின்றன. வால்வு A,B ன் வழியே நீரானது உள்ளே செல்கிறது. C,D வழியே அறையிலுள்ள காற்று வெளியேற்றப்பட்டு நீர்மூழ்கிக் கப்பலானது நீரினுள் மூழ்குகிறது. மீண்டும் கப்பலானது நீரின் மேல்மட்டத்திற்கு வர வேண்டுமெனில் A,B வால்வுகள் திறக்கப்பட்டு C,Dவால்வுகள் வழியே அதிக அழுத்தத்தில் காற்றானது செலுத்தப்படுகிறது. எனவே, நீரானது வெளியேற்றப்பட்டு கப்பலானது நீரின் மேல் மட்டத்திற்கு வருகின்றது.


Via Karthikeyan Mathan