கண்ணன் ஏன் வெண்ணெயைத் திருடித் தின்றான்? அதன் தத்துவார்த்தம் என்னவோ?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:45 AM | Best Blogger Tips
Photo: கண்ணன் ஏன் வெண்ணெயைத் திருடித் தின்றான்? அதன் தத்துவார்த்தம் என்னவோ?

வெண்ணெய் உறியில் உயரமான இடத்தில் இருக்கிறது. கொஞ்சம் வெப்பம் கிடைத்தாலும் உருகி விடுகிறது. மத்தால் கடையும் வரை, தயிரில் மறைந்திருக்கும் வெண்ணெய், கடைந்த பிறகு மோரில் ஒட்டாமல், தனியாக மெலெழுந்து திரள்கிறது. அது போல, பகவானின் திருநாமங்களை உச்சரித்த மாத்திரத்தில், ஒருவனின் மனம், இளகி வெண்ணெய் போல் உருக வேண்டும். உலக ஆசாபாசங்களில் தோய்ந்து கலந்திருக்கும் மனம், அவற்றை எல்லாம் உதறிவிட்டு, பகவானை நோக்கி, உயர வேண்டும். அத்தகைய மனமுடையோரை பகவானே தேடிச் சென்று ஆட்கொள்வான். அத்தகையோரின் உள்ளத்தை பகவானே திருடிக்கொண்டு அனுக்கிரகம் செய்வான் என்பதனையே இந்த வெண்ணெய் விளையாடல் உணர்த்துகிறது.

படிக்க, பகிர, பயன்பெற‌....

Via மெய்ப்பொருள்