தியானம் என்பது கண்கள் மூடி அமர்ந்திருப்பதில்லை; மனம் மூடி அமர்ந்திருப்பது என பலருக்கு தெரிவதில்லை.
தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்தது) சிறியதாக ஒரு வெள்ளை நிறத்திலான தரைவிரிப்பை விரித்து அதன் மீது அமர்ந்து கொள்தல் வேண்டும். எதிரே ஒரு சிறிய விளக்கையோ அல்லது சிறு மெழுகுவர்த்தியையோ ஏற்றினால் உசிதம். வெண்மை நிறம் பொதுவாகவே தூய்மை, சமாதானம் என்பதைக் குறிப்பதால் பெரியோர்களான நம் முன்னோர் வெண்ணிற விரிப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். இல்லாவிட்டாலும் வெளிர் நிறங்களுடன் எந்த வண்ணத்திலான விரிப்பையும் அவரவர் வசதிக்கேற்ப உபயோகிக்கலாம். நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது.
எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் தாங்கள் சார்ந்த அல்லது அதிகம் வழிபடக்கூடிய கடவுளிடத்தில் பக்தி கொண்டவர்களாக இருப்பார்களேயானால், கடவுளை நினைத்து தினந்தோறும் குறைந்தது 15 நிமிட நேரமாவது தியானம் மேற்கொள்ளலாம்.
வீடுகளில் தியானம் செய்வதற்கு மிருகங்களின் தோல் தேவையில்லை. சாதாரணமாக அமர்ந்து உங்களுக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள அகல் விளக்கை நோக்கி ஒரு 5 நிமிடம் வேறு எந்த புற தடங்கல்களையும் சிந்திக்காமல் இருக்கவும். இஷ்ட தெய்வங்களையோ அல்லது ஒருநிலைப்படுத்த தேவையான சிந்தனையையோ நோக்கி கண்களை மெதுவாக மூட வேண்டும். அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் மற்ற ஒலிகள் உங்கள் சிந்தனையை பாதிக்க வாய்ப்பில்லை. ஒரு சில நிமிடங்களில் உங்களுக்குள்ளாகவே இருக்கும் ஞானத்தை, மனோரீதியிலான தத்துவத்தை உணரத் தொடங்குவீர்கள்.
தொடக்கத்தில் ஒரு சில தினங்களுக்கு சிந்தனை ஒருநிலைப்படத் தவறினாலும் கவலை வேண்டாம். அடுத்தடுத்த நாட்களில் இதேபான்ற நிலையைக் கடைபிடித்தால், காலப்போக்கில் சிந்தனை உங்கள் கட்டுப்பாட்டில் வரும்.
இதற்கான வழிகள் பல. ஓர் ஒலியில் மனதை குவியச்செய்யலாம். இதற்கு மந்திரம் என்னும் ஒலி [ஓம், ரீம் போல] உதவுகிறது. அல்லது ஒரு பிம்பத்தில் பார்வையைக் குவிக்கலாம். அல்லது இரண்டையும் செய்யலாம்.
இன்னும் எளிய முறை உங்கள் சுவாசத்தை கவனித்து அதன் மீது மனதை செலுத்த, மனம் ஒருமுகப்படும். இது ஆரம்ப நிலையல் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்தது.
இந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. அதில் சில குறிப்பிட்ட நன்மைகளை கீழே கொடுத்துள்ளேன்.
தியானத்தின் பலன்கள்:
கர்ம வினை கழியும் (மந்திரம் உச்சரிபோருக்கு அதனை பொருத்து பலன் மாறுபடும் )
விரும்பிய நல்ல விளைவுகளை நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்ளலாம்
மனம் தெளிவடையும் அமைதியடையும்
ஆத்ம பலம் அதிகரிக்கும்
மூளையின் செயல் திறன் /அறிவு திறன் அதிகரிக்கும்
செய்யும் செயலில் முழு ஆற்றலுடன் செயல்பட முடியும்
கிரகிக்கும்/ புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்
ஞாபக சக்தி அதிகரிக்கும்
ஆக்க பூர்வமான அறிவு மேலோங்கும்
மனோவியாதி சீராகும்
பயம் , கவலை , குழப்பம் , மன உளைச்சல் நீங்குகிறது
ஆளுமை திறன் ஓங்குகிறது
உடல் அளவில்:
ஆழ்நிலை தியானம் தொடர்ந்து செய்து வருவதனால்
புகை பிடித்தல் , போதை பழக்கம் படிபடியாக குறைந்து வருகிறது
தூக்கமின்மை சீராகிறது
மூளைக்கும் உடலுக்கும் ஆழ்ந்த ஓய்வு கிடைக்கிறது
களைப்பு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்
பதட்டம் , படபடப்பு குறைகிறது
நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது
ரத்த அழுத்தம் சீராகிறது
ஆஸ்துமா , தலைவலி குணமாகிறது
இதய நோய் , மாரடைப்பு தடுக்கபடுகிறது
வயிற்று கோளாறு குறைகிறது
தோலின் எதிப்பு சக்தி கூடுகிறது
அனுபவ பலனோடு ஒப்பிடும் பொது இவையெல்லாம் மிக மிக சொற்பமே....தியானத்தில் மூளையின் செயல் மற்றும் பலன் - ஒரு மருத்துவ மற்றும் அறிவியல் சான்ற, அடுத்த பதிவில்...

Via
மெய்ப்பொருள்