தெய்வானை
இந்திரனின் மகள்; தேவ அம்சம்; வானவர் உறவு; உயர்ந்த நிலையை அளிக்கும்
தத்துவம். வள்ளி என்பது பூமியின் உறவு. சாதாரணருக்கும் தெய்வ சங்கமம்
கிடைக்கும் நிகழ்வு. கடவுள் தன்மையை உயர் யோக நிலையை மட்டுமல்ல; இவ்வுலக
வாழ்க்கைத் தேவையான பலத்தையும் யோகத்தை மட்டுமல்லாது, போகத்தையும்
அளிப்பவராக இருக்கிறார் கந்தக் கடவுள். விண்ணுலகம் செல்லும் வீடுபேற்றை
மட்டுமல்ல; மண்ணுலக இன்பங்களையும் அளிக்க வல்லவர் வள்ளிமணாளன். இதை
உணர்த்தும் தத்துவமே இருதாரமோடு நிற்கும் நிலை.
தீயவர்களை அசுரர்களை அழித்ததற்கான பரிசாக முருகனுக்கு தெய்வானை கிடைத்தார். தீய குணங்களை அழிக்க அழிக்க தேவநிலை துணைவரும் என்ற செய்தி அதில் ஒளிந்துள்ளது. ஆனால், மண்ணில் வாழ பொருள் வசதி பெருக கஷ்டப்பட வேண்டும்; முயற்சி செய்ய வேண்டும். அதற்கு இறையின் துணையும் வேண்டும். முயற்சியும் இறைத்துணையும் அருகிருந்து போராட வெற்றி கிடைக்கிறது. உலகியல் வாழ்வுக்கான வெற்றியைத் தருபவள் வள்ளி. வள்ளி என்பதன் சூட்சுமம் இதுதான். வள்ளி என்பது இவ்வுலக வெற்றி. தெய்வானை என்பது அவ்வுலக வெற்றி. இரண்டையும் அடைந்து, இரண்டையும் தருபவர் வேலவர்.

Via
மெய்ப்பொருள்