ஜனகரின் அரசபையில் பல்வேறு ரிஷிகள் மத்தியில் பிரம்மத்தை பற்றிய விவாதம்
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. யாக்ஞவல்கியரிடம் பலரும் கேள்விகள் கேட்டு அவரை சோதிக்கிறார்கள்.அவர்களுள் கார்க்கி என்ற பெண் ரிஷியும் ஒருத்தி
--------------
யஜுர்வேதம்----பிருஹதாரணியகோபநி ஷத்
------------------
விதேகதேசத்து மன்னர் ஜனகர் ஒரு யாகத்தை செய்தார்.அதற்கு குருதேசம்,பாஞ்சால தேசம் போன்ற தேசங்களிலிருந்து பிராமணர்கள் (ரிஷிகள்)கூடினார்கள்.இவர்களுள்
யார் பிரம்மஞானத்தில் சிறந்தவர் என அறியவேண்டும் என ஜனகருக்கு விருப்பம்
உண்டாயிற்று.அவர் ஆயிரம் பசுக்களை கூட்டினார்.ஒவ்வொரு பசுவின்
கொம்புகளிலும் பத்துபாதம் தங்கம் வைத்து கட்டப்பட்டது.பிரம்மஞானத்தில்
சிறந்தவர் இந்த பசுக்களையும் தங்கதைதையும் எடுத்துசெல்லாம் என ஆணையிட்டார்
அப்போது யாக்யவல்கியர் என்ற ரிஷி தன் சிஷ்யனை அழைத்து இந்த பசுக்களை ஓட்டிச்செல்லும் படி ஆணையிட்டார்.
அப்போது மற்ற பிராமணர்கள்(ரிஷிகள்) உம்மைசோதிக்க வேண்டும் என்று கூறி அவரிடம் பல கேள்விகளை கேட்கிறார்கள்…….
பலரின் கேள்விகளுக்கு பதிலளித்தபின் ஒருபெண் ரிஷி எழுந்து கேள்விகேட்கிறாள்……
8.1. வாசக்னுவின் புத்திரியான கார்க்கி எழுந்து..”பிராமணர்களே!(ரிஷிகளே !)
நான் இவரை(யாக்ஞவல்கியரை) இரண்டு கேள்விகள் கேட்க அனுமதியுங்கள்.இவர்
இக்கேள்விகளுக்கு விடையளித்துவிட்டால் உங்களில் ஒருவரும் இந்த
பிரம்மவாதியை(யாஞ்யவல்கியரை) ஜயிக்க முடியாது. என்றாள்(பிராமணர்கள்
அவளிடம்) கார்க்கி கேள் என்றார்கள்
8.2. யாஜ்ஞவல்கியரே! எது வானத்திற்கு மேலும்,
பூமிக்கு கீழும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ளதெனவும்,எது இறந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உள்ளதெனவும் கூறப்படுகிறதோ எதில் குறுக்கும் நெடுக்குமாகக் கோர்க்கப்பட்டுள்ளது? என்று கேட்டாள்.
8.7.ஆகாயத்தில் எது குறுக்கும் நெடுக்குமாக கோர்க்கப்பட்டுள்ளது.எதனிடம் ஆகாயம் குறுக்கும் நெடுக்குமாக கோர்க்கப்பட்டுள்ளது?
யாஜ்ஞவல்கியர் பதில் சொன்னார்
8.8.கார்க்கி, பிரம்மஞானிகள் அதை அளிவற்றது(அக்ஷரம்) என்று கூறுகிறார்கள்.அதை கண்களால் காணமுடியாது(ஸ்துலம்அல்ல) அது சூட்சுமஉடல் உடையதும் அல்ல,அது குடைடையமல்ல நெட்டையுமல்ல,அது நெருப்புபோல் சிவந்த்தல்ல,தண்ணீர்போல் ஈரமுள்ளதல்ல,அதற்கு உள்ளுமில்லை புறமுமில்லை,அது ஒன்றையும் உண்வதும் இல்லை ஒன்றால் உண்ணப்படுவதும் இல்லை.
8.9.இந்த அக்ஷரத்தின் கட்டளையாலே சூரியனும் சந்திரனும் த்த்தம் இடங்களில் சுற்றுகின்றன.இந்த அக்ஷரத்தின் கட்டளையாலே வானமும் பூமியும் செயல்படுகின்றன.இந்த அக்ஷரத்தை அறியாமல் பல்லாயிரம் வருஷங்கள் யாகம் செய்தாலும்,ஹோம்ம் செய்தாலும் கிடைக்கும் பலன் முடிவுடைய பலன்.இந்த அக்ஷரத்தை அறியாமல் இந்த உலகைவிட்டு செல்பவன் கிருபணன் எனப்படுவான்.இந்த அக்ஷரத்தை அறிந்துகொண்டு ஒருவன் இவ்வுலகை விட்டு சென்றால் அவன் பிராமணன் எனப்படுவான்.
8.11கார்க்கி இந்த அக்ஷர வஸ்துவினால் தான் ஆகாயம் இவ்வாறு குறுக்கும் நெடுக்குமாக கோர்க்கப்பட்டுள்ளது.
8.12.பெருமை வாய்ந்த பிராமணர்களே! இந்த பிரம்மஞானியை நமஸ்கரியுங்கள்.இவரை ஜெயிக்க்கூடியவர் உங்களில் ஒருவரும் இல்லை என்று கூறி கார்க்கி அமர்ந்தாள்.
--------------
யஜுர்வேதம்----பிருஹதாரணியகோபநி
------------------
விதேகதேசத்து மன்னர் ஜனகர் ஒரு யாகத்தை செய்தார்.அதற்கு குருதேசம்,பாஞ்சால தேசம் போன்ற தேசங்களிலிருந்து பிராமணர்கள் (ரிஷிகள்)கூடினார்கள்.இவர்களுள்
அப்போது யாக்யவல்கியர் என்ற ரிஷி தன் சிஷ்யனை அழைத்து இந்த பசுக்களை ஓட்டிச்செல்லும் படி ஆணையிட்டார்.
அப்போது மற்ற பிராமணர்கள்(ரிஷிகள்) உம்மைசோதிக்க வேண்டும் என்று கூறி அவரிடம் பல கேள்விகளை கேட்கிறார்கள்…….
பலரின் கேள்விகளுக்கு பதிலளித்தபின் ஒருபெண் ரிஷி எழுந்து கேள்விகேட்கிறாள்……
8.1. வாசக்னுவின் புத்திரியான கார்க்கி எழுந்து..”பிராமணர்களே!(ரிஷிகளே