வேல் – ஞானம் & வெற்றி

மணக்கால் அய்யம்பேட்டை | AM 1:32 | Best Blogger Tips

Photo: வேல் – ஞானம் & வெற்றி

வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக இருக்க வேண்டும். அவ்வறிவைத் தருபவன் வாலறிவனாகிய இறைவனே. இதையே திருவள்ளுவர், “கற்றதனால் ஆயபயன் என்கொல் வால்அறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” என்கிறார்.
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே – சிவபுராணம் ௩௫ (35)

ஆழ்ந்த அகன்ற நுண்ணறிவினை உயிர்களுக்கு இறைவன் தரக்கூடியவன் என்பதனாலேயே முருகனின் திருக்கையில் வேலினை நமது முன்னோர்கள் அமைத்து வைத்தனர். 

எல்லாவற்றையும் கடந்தும் உள்ளும் இருக்கின்ற சிவம் என்கின்ற பரம்பொருள் தனது சிறப்பு நிலையிலிருந்து பொதுநிலைக்கு உயிர்களுக்கு அருள் புரிவதற்கு எடுத்து வந்த இன்னொரு வடிவமே முருகனின் வடிவம் என்று சைவம் குறிப்பிடும். அச்சிவம் ஓசை வடிவமாக, பிரணவ வடிவமாக, ‘ஓம்’ வடிவமாக வந்தபோது விநாயகர் என்று கூறப்படுகிறது. அதேபோன்று, அச்சிவம் அறிவு வடிவமாக, ஒளி வடிவாக வருகின்றபோது அதை முருகன் அல்லது ஞானபண்டிதன் என்கிறோம். எனவேதான் முருகனுக்கு அருவுருவமாக ஆழ்ந்து அகன்று நுண்ணியதாக இருக்கின்ற வேலைச் சமமாகச் சொல்கின்றோம்.
வேல் – பெயர்க்காரணம்:
வெல் = வேல்!
‘வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ‘வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது!
ஆகவே, வேல் = வெற்றி!
வேல் என்ற ஞானத்தின் வடிவம் நமக்கு பல அரிய உண்மைகளை உணர்த்துவதாய் உள்ளது. அதாவது

உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக இறைவன் உயிர்களை அன்பாகவும் தண்டித்தும் அருள் புரிகிறான் என்று சைவம் குறிப்பிடும். இதனை முறையே அறக்கருணை என்றும் மறக்கருணை என்றும் குறிப்பிடும். நல்லொழுக்கமும் நற்பண்பும் இறைநெறியும் உள்ளவர்களையும் இறைவன் அமைந்த கரத்தைக் காட்டி, “யாமிருக்க பயமேன்” என்று அறக்கருணை புரிவதாயும் தீயஒழுக்கம், தீயநெறி, தீயபண்புகள் உடையவர்களை இறைவன் வாள், வேல், அங்குசம், குலிசம், மழு, தீ போன்ற படைக்கருவிகளால் தண்டித்து மறக்கருணை புரிவார் என்பதையும் விளக்குகின்றது. எனவேதான் நம் இறைவன் திருவுருவங்களில் இறைவன் திருக்கரங்கள் போர்க்கருவிகள் உடையவனவாகவும் அருள்பாலிக்கின்ற அமைந்த கரங்கள் உடையவனவாகவும் உள்ளன. இறைவன் மறக்கருணையை நிகரில் மறக்கருணையென்று குறிப்பிடப் பட்டுள்ளது. மருத்துவர் நோயாளியின் நலம் கருதி நோயாளியை வாளால் அவன் நோகும்படி அறுத்துக் குணப்படுத்துவது போன்று இறைவன் நம் வாழ்வில் இன்ப துன்ப நுகர்ச்சிகளைக் கொடுத்து, பல்வேறு பிறவிகளில் பிறந்து இறந்து அநுபவம் பெறச் செய்து நம்மைத் திருத்தச் செய்கிறான் என்பதை உணர்த்துவதாய் உள்ளது.

Tnks to Omtamil.com 

Follow us on:    http://www.facebook.com/Meipporulவேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக இருக்க வேண்டும். அவ்வறிவைத் தருபவன் வாலறிவனாகிய இறைவனே. இதையே திருவள்ளுவர், “கற்றதனால் ஆயபயன் என்கொல் வால்அறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” என்கிறார்.