
செந்தாமரை, செவ்வரளி, பாதிலி முதலிய சிவப்பு நிற பூக்கள், பகல் பூஜைக்குரியவை.
மல்லிகை, முல்லை, தும்பை போன்ற வெள்ளை நிறப்பூக்கள் மாலை மற்றும் அர்த்தஜாம பூஜைக்குரியவை.
பொதுவாக மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிற பூக்கள் பூஜைக்கு உத்தமம்.
துளசி மற்றும் வில்வத்தின் சிறப்பு என்னவென்றால், இரண்டு இலைகளும் அழுகாது.
உலருமே தவிர, அதன் மணம் எப்போதும் குறையாது.
இரண்டு இலைகளும் காய்ந்த போதும்கூட பூஜைக்கு ஏற்றவை.
இது, இந்த இரண்டு இலைகளுக்கும் உள்ள ஆச்சர்யமான ஒற்றுமை!
- பாப்பா